பாடம் 2.4. வெட்டுக்கிளியும் சருகுமானும்
நூல்வெளி
மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ் ஆகியோர் காடர்களின் கதைகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர். அவற்றை யானையாடு பேசுதல் என்னும் தலைப்பில் கீதா தமிழாக்கம் செய்துள்ளார். |
மதிப்பீடு
‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையைச் சுருக்கி எழுதுக.
முன்னுரை
காடர்கள், பழங்குடியின மக்கள், காடுகள், செடி கொடிகள், விலங்குகள் தொடர்பான் கதைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும் சொல்லி வந்தனர். அத்தகைய கதைகளுள் ஒன்றுதான் “வெட்டுக்கிளியும் சருகுமானும்” ஆகும்.
வெட்டுக்கிளியும் சருகுமானும்
குறிஞ்சிப் புதரின் தாழப் படர்ந்திருந்த கிளையில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு வாயாடி.
ஒரு மாலை நேரம் கூரன் என்ற பெண் சருகுமானை வெட்டுக்கிளி பார்த்தது. என்ன கூரன், பாரத்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாட்கள் எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்குமாய் வேகமாக ஓடுகிறாய்? அதற்கு சருகுமான், “காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன். இப்பொழுது உன்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்திக் கொண்டு வருகிறது.
விழுந்து கிடந்த மரத்தைப் பார்த்ததும் அதன் அடியில் கூரன் ஒளிந்து கொண்டது. தலையை மட்டும் தூக்கி வெட்டுக்கிளையை எச்சரித்தது. பித்தகண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே என்றது.
வெட்டுக்கிளியும் பித்தகண்ணும்
கூரனைத் தேடிக்கொண்டு பித்தகண்ணும் ஓடைப்பக்கம் வந்தது. வெட்டுக்கிளி அதன் கண்ணில் பட்டதும் அதைப்பார்த்து உறுமியது. “கூரன் இங்கு வந்தாளா?” என்றது. வெட்டுக்கிளிக்கு உற்சாகம் தலைக்கு ஏறியது. பித்தக்கண்ணுவை இவ்வளவு பக்கத்தில் பார்ப்பது இதுதான் முதல்முறை. பித்தக்கண்ணுவைப் பார்த்தால் ஏற்பட்ட பரவசத்தை அடக்க இயலாமல் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது.
அதைக்கண்ட பித்தக்கண்ணு, கூரன் பதுங்கி இருந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. அங்கு புனுகுப் பூனையின் துர்நாற்றமே எட்டியது. அதனால் உறுமிக் கொண்டே அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வேறு பக்கம் சென்றது.
உயிர் பிழைத்த கூரன்
கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தை ஏறக்குறையக் காட்டிக் கொடுத்தற்காக வெட்டுக்கிளி மீது அதற்குக் கோபமான கோபம். அதற்கு ஒரு பாடம் கற்றித்தாக வேண்டும் என்று எண்ணியது. “இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் கால்களால் மிதித்து நசுக்கிவிடுவேன்” என்று கூறிக் காட்டுக்குள் ஓடியது.
முடிவுரை
அன்றிலிருந்து கூரனின் கூர்ப்பாதங்கள் எங்கே தன்மீது பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே வெட்டுக்கிளி வாழ்ந்து வருகிறது. இதனால் தான் இன்றும் கூட வெட்டுக்கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன.
கூடுதல் வினாக்கள்
I.கோடிட்ட இடத்தை நிரப்புக
1. ________, ________ போன்ற பகுதிகள் தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைக்கு அருகேயுள்ள அமைந்துள்ளன
விடை: பரம்பிக்குளம், ஆனைமலை
2. பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதிகளில் _______ வாழ்ந்து வருகின்றனர்.
விடை: காடர்கள்
3. ________, ________ ஆகியோர் காடர்களின் கதைகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர்
விடை: மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்
4. யானையோடு பேசுதல் என்பதை தமிழாக்கம் செய்தவர் _______
விடை: வ.கீதா
II. சிறுவினா
1. காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்த பகுதிகள் யாவை?
தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைக்கு அருகேயுள்ள பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதிகளில் காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.
2. ஆல்அலப்பு பேசும் மொழி இனமக்கள் யார்?
ஆல்அலப்பு பேசும் மொழி இனமக்கள் காடர்கள் ஆவர்.
3. காடர்கள் கதைகளை தொகுத்தவர்கள் எவர்?
மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்
4. கீதா தமிழாக்கம் செய்த நூல் யாது?
யானையாடு பேசுதல்
சில பயனுள்ள பக்கங்கள்