Tamil Nadu 8th Standard Tamil Book Term 2 புத்தியைத் தீட்டு Solution | Lesson 1.2

பாடம் 1.2. புத்தியைத் தீட்டு

புத்தியைத் தீட்டு – பாடல்

கத்தியைத் தீட்டாதே – உந்தன்
புத்தியைத் தீட்டு
கண்ணியம் தவறாதே – அதிலே
திறமையைக் காட்டு!ஆத்திரம் கண்ணை
மறைத்திடும் போது
அறிவுக்கு வேலை கொடு – உன்னை
அழித்திட வந்த
பகைவன் என்றாலும்
அன்புக்குப் பாதை விடு!

(கத்தியைத்)

மன்னிக்கத் தெரிந்த
மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கோயிலப்பா – இதை
மறந்தவன் வாழ்வு
தடம் தெரியாமல்
மறைந்தே போகுமப்பா!

(கத்தியைத்)

இங்கே இருப்பது சில காலம்
இதற்குள் ஏனோ அகம்பாவம்
இதனால் உண்டோ ஒரு லாபம் – இதை
எண்ணிப்பாரு தெளிவாகும்!

(கத்தியைத்)

– ஆலங்குடி சோமு

நூல்வெளி

ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராக புகழ் பெற்றவர்.

சிவகங்கை மாவட்டத்திலுள் ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

இவரது திரையிசைப் பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

I. சொல்லும் பொருளும்

  • தடம் – அடையாளம்
  • அகம்பாவம் – செருக்கு
  • புத்தி – அறிவு
  • பாதை – வழி
  • உள்ளம் – மனம்
  • லாபம் – பலன்
  • எண்ணி – நினை

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _____ இன்றி வாழ்ந்தார்.

  1. சோம்பல்
  2. அகம்பாவம்
  3. வருத்தம்
  4. வெகுளி

விடை : அகம்பாவம்

2. கோயிலப்பா என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. கோ + அப்பா
  2. கோயில் + லப்பா
  3. கோயில் + அப்பா
  4. கோ + இல்லப்பா

விடை : கோயில் + அப்பா

3. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கி்டைக்கும் சொல் _____.

  1. பகைவென்றாலும்
  2. பகைவனென்றாலும்
  3. பகைவன்வென்றாலும்
  4. பகைவனின்றாலும்

விடை : பகைவனென்றாலும்

III. குறு வினா

1. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?

மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது ஆகும்

2. பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?

பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை அன்பு காட்டுவது ஆகும்

IV. சிறு வினா

புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்.

ஆத்திரம் கண்ணை மறைந்து விடும் என்பதால் அறிவுக்கு வேலை கொடுத்து அமைதி காக்க வேண்டும்.

பகைவன் அடிக்க வந்தாலும், அவரிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும்.

மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கல் போன்றது.

இதனை மறந்து வாழ்பவன் வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.

வாழும் வாழ்க்கை சில காலமே! அதற்குள் ஏன் அகம்பாவம்? இதனால் இலாபமும் கிடைக்காது. எனவே, அகம்பாவத்தைக் காட்டாமல் வாழ வேண்டும்.

இவற்றை எண்ணிப் பார்த்தால் வாழ்க்கை தெளிவாகும்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதினை பெற்றவர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. ஆலங்குடி சோமு
  4. வாணிதாசன்

விடை : ஆலங்குடி சோமு

2. பகைவனிடம் _________ காட்ட வேண்டும்.

  1. பரிவு
  2. அன்பு
  3. பாசம்
  4. ஊக்கம்

விடை : அன்பு

3. தடம் என்னும் சொல்லின் பொருள் ________

  1. பரிவு
  2. பாசம்
  3. ஊக்கம்
  4. அடையாளம்

விடை : அடையாளம்

4. லாபம் என்னும் சொல்லின் பொருள் ________

  1. பரிவு
  2. தெளிவு
  3. ஊக்கம்
  4. பலன்

விடை : பலன்

விடை :

II. பிரித்து எழுதுக

  1. எண்ணிப்பாரு = எண்ணி + பாரு
  2. தெளிவாகும் = தெளிவு + ஆகும்
  3. கோயிலப்பா = கோயில் + அப்பா
  4. போகுமப்பா = போகும் + அப்பா

III. புத்தியைத் தீட்டு பாடல் பகுதியில் உள்ள எதுகை மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

மோனைச் சொற்கள் :-

  • தீட்டாதே – தீட்டு
  • றிவு – ழித்திட
  • ன்னிக்க – னிதனின்
  • ங்கே – ருப்பது
  • தற்குள் – தனால்

எதுகைச் சொற்கள் :-

  • தீட்டாதே – தீட்டு
  • த்தியை – புத்தியை
  • ன்றாலும் – அன்புக்கு
  • ற்குள் – இனால்

IV. குறு வினா

1. எவ்வாறு தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்?

கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்.

2. எதற்காக அறிவுக்கு வேலை கொடுத்து அமைதி காக்க வேண்டும்?

ஆத்திரம் கண்ணை மறைந்து விடும் என்பதால் அறிவுக்கு வேலை கொடுத்து அமைதி காக்க வேண்டும்.

3. யாருடைய வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும்?

மன்னிக்க மறந்து வாழ்பவன் வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.

4. எவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும்?

பூமியல் வாழ்வது சில காலமம். அதற்குள் ஏன் அகம்பாவம்? அகம்பாவத்தால் இலாபமும் கிடைக்காது. எனவே இவற்றை மனிதர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

5. நமக்குப் பெருமை என்பது எது?

அறிவினாலும் அன்பினாலும் பிறரை வெல்லும் வெற்றியே நமக்குப் பெருமை ஆகும்

6. எது சரியான செயலன்று?

வன்முறையால் பிறரை வெல்வது சரியான செயலன்று.

7. எவையெல்லாம் ஒரு மனிதனை வாழ்வில் உயரச் செய்யும்?

அறிவும் உழைப்புமே ஒரு மனிதனை வாழ்வில் உயரச் செய்யும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்