Tamil Nadu 8th Standard Tamil Book Term 2 திருக்குறள் Solution | Lesson 2.6

பாடம் 2.6. திருக்குறள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அரசரை அவரது _____ காப்பாற்றும்.

  1. செங்கோல்
  2. வெண்கொற்றக்குடை
  3. குற்றமற்ற ஆட்சி
  4. படை வலிமை

விடை : குற்றமற்ற ஆட்சி

2. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _____ தகுதி அறிந்து பேச வேண்டும்.

  1. சொல்லின்
  2. அவையின்
  3. பொருளின்
  4. பாடலின்

விடை : அவையின்

3. கண்ணோடாது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. கண் + ஓடாது
  2. கண் + ணோடாது
  3. க + ஓடாது
  4. கண்ணோ + ஆடாது

விடை : கண் + ஓடாது

4. கசடற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. கச + டற
  2. கசட + அற
  3. கசடு + உற
  4. கசடு + அற

விடை : கசடு + அற

5. என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. என்றாய்ந்து
  2. என்றுஆய்ந்து
  3. என்றய்ந்து
  4. என்ஆய்ந்த

விடை : என்றாய்ந்து

II. குறு வினா

1. நன்மையைத் தரும் செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழி யாது?

இச்செயலை இந்தவகையால் இவர் செய்துமுடிப்பார் என்று ஆராய்ந்து அச்செயலை அவரிடம் ஒப்படைக்கவேண்டும

2. சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?

எதையும் நன்கு ஆராய்ந்து ஒருபக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்.

3. அரசன் தண்டிக்கும் முறை யாது?

ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும்.

4. சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?

கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.

III. பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

பள்ளி ஆண்டுவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலைக்குழுத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று பேசப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளி மாணவர் தலைவன் செழியனை பரிந்துரைத்தனர். தலைமை ஆசிரியர் ‘செழியன் மாணவர் தலைவனாக இருக்கிறான். ஆனால் இது கலைக் குழுவிற்கான தலைவர் பதவி. நடனம், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வமுள்ள ஒருவரே இதற்குத் தகுதியானவர். எனவே என்னுடைய தேர்வு கலையரசன்’ என்று நன்கு ஆராய்ந்து கூறினார். ஆசிரியர்கள் அனைவரும் ‘சிறந்த தேர்வு’ என்று மகிழ்ந்தனர்.

1. அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
    தொகைஅறிந்த தூய்மை யவர்.

2. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
    அதனை அவன்கண் விடல்.

3. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை..

 

விடை :-

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ___________ நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்

விடை : நடுவுநிலைமை

2. வையகம் என்பதற்கு ___________ என்பது பொருள்

விடை : உலகம்

3. இறை என்னும் சொல்லின் பொருள் ___________

விடை : அரசர்

4. உலகத்து உயிர்களை எல்லாம் ___________  காப்பாற்றுவார்

விடை : அரசர்

II. பிரித்து எழுதுக

  1. ஒத்தாங்கு = ஒத்து + ஆங்கு
  2. இன்னச்சொல் = இன்னா + சொல்
  3. கேளாரும் = கேள் +ஆரும்
  4. தூய்மையவர் = தூய்மை + அவர்
  5. கற்றறிந்தார் = கற்று + அறிந்தார்
  6. தொகையறிந்த = தொகை + அறிந்த

III. எதிர்ச்சொல் அறிக

  1. சாயாது x சாய்ந்து
  2. பெருமை x சிறுமை
  3. விரைவில் x மெதுவாக
  4. கடுமை x எளிமை

IV. சிறு வினா

1. செயலை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்?

செயலாற்றும் திறன் உடையவரையும் செய்ய வேண்டிய செயலையும் செய்வதற்குரிய காலத்தையும் ஆராய்ந்து அச்செயலை நிறைவேற்ற வேண்டும்.

2. அரசரின் ஆட்சியை எது காப்பாற்றும்?

உலகத்து உயிர்களை எல்லாம் அரசர் காப்பாற்றுவார். அரசரை அவரது குற்றமற்ற ஆட்சி காப்பாற்றும்.

3. அரசனின் கடமை என்ன?

ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும்.

4. சிறந்த சொல்லாற்றலின் இயல் என்ன?

கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.

5. கற்றவரின் கல்வி எப்போது பெருமையடையும்?

சொற்களை ஆராயும் அறிஞர் நிறைந்த அவையில் பேசும்போதுதான் கற்றவரின் கல்வி பெருமையடையும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்