பாடம் 3.4. காலம் உடன் வரும்
நூல்வெளி
கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கன்னிவாடியில் பிறந்தவர். சிறந்த சிறுகதை, புதின எழுத்தாளர், நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்றவர். கன்னிவாடி, குணச்சித்திரங்கள், உப்புகடலைக் குடிக்கும் பூனை முதலிய நூல்களை எழுதியுள்ளார். |
மதிப்பீடு
காலம் உடன் வரும் கதையைச் சுருக்கி எழுதுக
முன்னுரை
காலம் உடன் வரும் எனும் சிறுகதையை எழுதியவர் கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் ஆவார். நெசவுத் தொழிலில் ஏற்படும் இன்னல்களையும் நெசவாளர்களின் ஏழ்மை நிலையினையும் காட்டுவதாக இக்கதை அமைகிறது.
சுப்பிரமணியத்தின் கவலை
அனந்திகா நிறுவனத்திற்கு வழக்கமாக வெள்ளக்கோயில் தினேஷ் துணியகத்திலிருந்து ஏற்றுமதிக்காகத் துணிகளை அனுப்பி வைப்பார்கள். ஒரு நாள் துணி அனுப்புவது தாமதமாகிறது. தறி நெய்ய ஆள் கிடைப்பதில்லை. அதனால் துணி நெய்ய தாமதமாகிறது என்று எவ்வளவு சொல்லியும் அனந்திகா நிறுவனம் நாளைக்குள் கட்டாயம் துணிகள் அனுப்பி வைக்க வேண்டும் என்கிறது. வழக்கமாகப் பாவு இணைக்கும் ரங்கன் ஊருக்கு சென்று விட்டதால், அங்கு யாரும் இல்லை. மாணிக்கம் ஓட்டு ஒர ஒரு தறியில் தான் பாவு இருக்கிறது. அந்த பாவும் சற்று நேரத்தில் தீர்ந்துவிடும். என்ன செய்வது என்று தெரியாமல் சுப்ரமணியம் மிகவும் கலங்கிப் போனார்.
நண்பன் ரகுவின் உதவி
நண்பர் ரகு துணியகத்தில் கட்டாயமாகப் பாவு இணைப்பவர் யாராவது இருப்பார்கள் அங்கே போய் பார்க்கலாம் என்று ரகுவினுடைய தறிபட்டறைக்கு செல்கிறார். பதற்றத்துடன் வந்த சுப்பிரமணியத்தை ரகு நெருங்கினார். அதற்கு சுப்பிரணமியன் பாவு இணைக்க ஆள் வேண்டும். உடனடியாக யாரையாவது அனுப்பி உதவுங்கள் என்றார். அதற்கு ரகு மாயழகுவின் மனைவி ஒச்சம்மா பாவு இணைக்கும் வேலையை நன்கு செய்வாள். ஆனால் இந்த இரவில் அவன் எப்படி அனுப்புவான் என்கிறார். இரட்டைச் சம்பளம் தருகிறேன் என்றார். ரகு தான் சொன்னதாக சொல்லி ஒச்சம்மாவை அழைத்துச் செல் என்கிறார். சுப்பிரமணி மாயழகு வீட்டிற்கு செல்கிறார்.
மாயழகும் ஒச்சம்மாவும்
ஒச்சம்மா உசிலம்பட்டி பக்கம் கிருஷ்ணாபுரம் மாயழகு வெள்ளி மலை அடிவாரத்தில் கோம்பைத் தொழுவு திருமணமான பிறகு நிலையாக ஓரிடத்தல் வாழ வேண்டும் என்பதற்காக வெள்ளக்கோயில் வந்தனர். தன் குழந்தைகளைப் படிக்க வைக்க தறி ஓட்டுவதைத் தவிர பிற தறி வேலைகள் அனைத்தையும் கற்றாள்
பாவு பிணைத்தல்
ரகு அனுப்பியதாகவும் தன் பிரச்சனையையும் சுப்பிரமணியம் எடுத்துரைக்கிறார். மாயழகு தன் மனைவி ஒச்சம்மாவை அவருடன் அனுப்புகிறார். தூங்கி கொண்டு இருக்கும் தன் கைக்குழந்தையுடன் செல்கிறாள். ஒச்சம்மா வர மாணிக்கத்தின் பாவு தீர்ந்து விடுகிறது. அங்கிருந்த பாவினை சரி செய்து இருக்கும் வேளையில் குழந்தை விழித்துக் கொள்கிறது. குழந்தையைத் தூங்க வைத்தபடியே பாவை இணைக்கிறாள். வேலை முடிந்தது இரட்டைச் சம்பளத்தோடு சுப்பிரமணியம் அவளின் வீட்டிற்குக் கொண்டுபோய் சேர்க்கிறார்.
முடிவுரை
இரவு பகல் பார்க்காமல் தன் வறுமையின் காரணமாகத் தறி பட்டறையில் வேலை செய்பவர்கள் வேலை செய்கின்றனர் என்பதை கதை மூலம் அறிய முடிகிறது.
கூடுதல் வினாக்கள்
1. கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் _________ மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
விடை: திருப்பூர்
2. சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்றவர் _________
விடை: கன்னிவாடி சீரங்கராயன்
3. உப்புகடலைக் குடிக்கும் பூனை நூலினை எழுதியவர் _________
விடை: கன்னிவாடி சீரங்கராயன்
II. குறு வினா
1. எவையெல்லாம் பழந்தமிழர் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை?
உழவுத் தொழில், நெசவுத் தொழில்
2. உழவு எதனைப் போக்குகிறது?
உழவு மக்களின் பசியைப் போக்குகிறது.
3. நெசவு எதனைப் காக்கிறது?
நெசவு மக்களின் மானம் காக்கிறது.
4. இரவு, பகல் என்ற பேதமின்றி உழைக்கக் கூடியவர்கள் எவர்?
நெசவுத் தொழிலாளர்கள் இரவு, பகல் என்ற பேதமின்றி உழைக்கக் கூடியவர்கள்.
5. கன்னிவாடி சீரங்கராயன் எழுதிய நூல்கள் சிலவற்றை கூறுக
- கன்னிவாடி
- குணச்சித்திரங்கள்
- உப்புகடலைக் குடிக்கும் பூனை
சில பயனுள்ள பக்கங்கள்