பாடம் 3.5. புணர்ச்சி
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. விகாரப் புணர்ச்சி _____ வகைப்படும்.
- ஐந்து
- நான்கு
- மூன்று
- இரண்டு
விடை : மூன்று
2. பாலாடை இச்சொல்லுக்குரிய புணர்ச்சி _____
- இயல்பு
- தோன்றல்
- திரிதல்
- கெடுதல்
விடை : இயல்பு
II. பொருத்துக
1. மட்பாண்டம் | அ. தோன்றல் விகாரம் |
2. மரவேர் | ஆ. இயல்புப் புணர்ச்சி |
3. மணிமுடி | இ. கெடுதல் விகாரம் |
4. கடைத்தெரு | ஈ. திரிதல் விகாரம் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ |
III. சிறு வினா
1. இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
நிலைமொழியும் வரும் மொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும் சான்று : தாய் மொழி தாய் + மொழி = தாய் மொழிக இரு சொற்களிலும் எந்த மாற்றமும் நிகழவில்லை. எனவே இது இயல்பு புணர்ச்சி |
2. மரக்கட்டில் – இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.
மரம் + கட்டில் – திரில் விகாரப்புணர்ச்சியின் படி “ம்” என்பது “க்” ஆகத் திரிந்து மரக்கட்டில் எனப் புணர்ந்து, இரண்டு சொற்கள் இணையும் போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வது உண்டு. கெடுதல் விகாரத்தின்படி நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்து தோன்றல் விகாரத்தின் படி “க்” என்ற மெய்யெழுத்து தோன்றியது. |
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. தமிழ் அமுதம் என்பதில் தமிழ் _______ மொழி
விடை: நிலை
2. சிலை அழகு என்பது _______ புணர்ச்சிக்கு சான்றாகும்
விடை: உயிரீற்று
3. தமிழ்த்தாய் என்பது _______ புணர்ச்சிக்கு சான்றாகும்
விடை: தோன்றல் விகாரம்
4. விற்கொடி என்பது _______ புணர்ச்சிக்கு சான்றாகும்
விடை: திரிதல் விகாரம்
5. மனமகிழ் என்பது _______ புணர்ச்சிக்கு சான்றாகும்
விடை: கெடுதல் விகாரம்
6. நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது புதிதாக ஒர் எழுத்து தோன்றுவது _______ விகாரம் ஆகும்.
விடை: தோன்றல்
II. சிறு வினா
1. புணர்ச்சி என்றால் என்ன?
நிலை மொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் இணைவதைப் புணர்ச்சி ஆகும்.
2. உயிரீற்றுப் புணர்ச்சி என்றால் என்ன?
நிலை மொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தா ல் அஃது உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும். (எ.கா.) சிலை + அழகு = சிலை யழகு (லை =ல்+ஐ)
3. மெய்யீற்றுப் புணர்ச்சி என்றால் என்ன?
நிலை மொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது மெய்யீற்றுப் புணர்ச்சி எனப்படும். (எ.கா.) மண் + அழகு = மண்ணழகு
4. உயிர் முதல் புணர்ச்சி என்றால் என்ன?
வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது உயிர் முதல் புணர்ச்சி எனப்படும். (எ.கா.) பொன் + உண்டு = பொன்னுண்டு
5. மெய் முதல் புணர்ச்சி என்றால் என்ன?
வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது மெய் முதல் புணர்ச்சி எனப்படும். (எ.கா.) பொன் + சிலை = பொற்சிலை (சி = ச்+ இ)
6. விகாரப் புணர்ச்சி என்றால் என்ன?
இரண்டு சொற்கள் இணையும் போது நிலை மொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழுமாயின், அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.
7. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
விகாரப் புணர்ச்சி தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும்.
8. தோன்றல் விகாரம் என்றால் என்ன?
நிலை மொழியும் வருமொழியும் இணையும் போது புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது தோன்றல் விகாரம் ஆகும்.
(எ.கா.) தமிழ் + தாய் = தமிழ்த்தாய்
9. திரிதல் விகாரம் என்றால் என்ன?
நிலை மொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது திரிதல் விகாரம் ஆகும்.
(எ,கா.) வில் + கொடி = விற்கொடி
10. கெடுதல் விகாரம் என்றால் என்ன?
நிலை மொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து மறைவது கெடுதல் விகாரம் ஆகும்.
(எ.கா.) மனம் + மகிழ்ச்சி = மனமகிழ்ச்சி
மொழியை ஆள்வோம்!
I. மரபுத்தொடர்களைப் பொருளோடு பொருத்துக.
1. ஆயிரங்காலத்துப் பயிர் | அ. இயலாத செயல். |
2. கல்லில் நார் உரித்தல் | ஆ. ஆராய்ந்து பாராமல். |
3. கம்பி நீட்டுதல் | இ. இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது. |
4. கானல்நீர் | ஈ. நீண்டகாலமாக இருப்பது. |
5. கண்ணை மூடிக்கொண்டு | உ. விரைந்து வெளியேறுதல் |
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – இ, 5 – ஆ |
II. பின்வரும் மரபுத்தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக
1. வாழையடி வாழையாக
- வாழையடி வாழையாக நம் முன்னோர்கள் விவசாயம் செய்து வந்தனர்.
2. முதலைக்கண்ணீர்
- காவலரிடம் மாட்டிக்கொண்ட திருடன் தான் திருடவில்லை என்று முதலைக்கண்ணீர் வடித்தான்.
3. எடுப்பார் கைப்பிள்ளை
- நாம் சுயமாக யோசிக்காமல் எடுப்பார் கைப்பிள்ளை போலச் செயல்படடக்கூடாது.
மொழியோடு விளையாடு
ஊர்களையும் அவற்றின் சிறப்புகளையும் அறிவோம்!
இடமிருந்து வலம் :-
1. சிவகாசி
- பட்டாசு
5. திருபாச்சி
- அரிவாள்
7. திருநெல்வேலி
- அல்வா
12. கோவில்பட்டி
- கடலைமிட்டாய்
வலமிருந்து இடம் :-
3. மதுரை
- மல்லிகை
4. பண்ருட்டி
- பலாப்பழம்
9. தஞ்சாவூர்
- தலையாட்டி பொம்மை
10. மணப்பாறை
- முறுக்கு
மேலிருந்து கீழ் :-
1. காஞ்சிபுரம்
- பட்டுப்புடவை
2. சேலம்
- மாம்பழம்
4. பழனி
- பஞ்சாமிர்தம்
கீழிருந்து மேல் :-
6. தூத்துக்குடி
- உப்பு
8. ஸ்ரீவில்லிப்புத்தூர்
- பால்கோவா
11. திண்டுக்கல்
- பூட்டு
நிற்க அதற்குத் தக…
கலைச்சொல் அறிவோம்.
- நூல் – Thread
- தையல் – Stitch
- தறி – Loom
- ஆலை – Factory
- பால்பண்ணை – Dairy farm
- சாயம் ஏற்றுதல் – Dyeing
- தோல் பதனிடுதல் – Tanning
- ஆயத்த ஆடை – Readymade Dress
சில பயனுள்ள பக்கங்கள்