பாடம் 1.1. படை வேழம்
படை வேழம் – பாடல்
கலிங்கப் படையின் நடுக்கம் எதுகொல் இது மாயை ஒன்றுகொல் கலிங்கர் தோற்றுச் சிதைந்தோடல் வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர் மழைகள் அதிர்வன போல் உடன்றன – செயங்கொண்டார் |
நூல்வெளி
செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர். முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராக திகழந்தவர். பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாத புலவர் புகழ்ந்துள்ளார். 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சாரந்த நூல் இதுவே தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி நூல் இது முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியை பேசுகிறது. இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார். கலித்தாழிசையால் பாடப் பெற்றது. 599 தாழிசைகள் கொண்டது போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும். |
I. சொல்லும் பொருளும்
- மறலி – காலன்
- வழிவர் – நழுவி ஓடுவர்
- கரி – யானை
- பிலம் – மலைக்குகை
- தூறு – புதர்
- மண்டுதல் – நெருங்குதல்
- அருவர் – தமிழர்
- இறைஞ்சினர் – வணங்கினர்
- உடன்றன – சினந்து எழுந்தன
- முழை – மலைக்குகை
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. சிங்கம் __________யில் வாழும்.
- மாயை
- ஊழி
- முழை
- அலை
விடை : முழை
2. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு __________.
- வீரம்
- அச்சம்
- நாணம்
- மகிழ்ச்சி
விடை : அச்சம்
3. வெங்கரி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.
- வெம் + கரி
- வெம்மை + கரி
- வெண் + கரி
- வெங் + கரி
விடை : வெம்மை + கரி
4. என்றிருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.
- என் + இருள்
- எட்டு + இருள்
- என்ற + இருள்
- என்று + இருள்
விடை : என்று + இருள்
5. போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- போன்றன
- போலன்றன
- போலுடன்றன
- போல்உடன்றன
விடை : போலுடன்றன
III. குறுவினா
1. சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் எவ்வாறு நடுங்கினர்?
தங்கள் உயிர்களை பறிக்க வந்த எமனோ என்று சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் நடுங்கினர்
2. கலிங்க வீரர்கள் எவ்வாறு அஞ்சி ஓடினர்?
கலிங்க வீரர்கள் தம்மை அழிக்க வந்த தீயோ என்று அஞ்சி ஓடினர்?
3. சோழனின் யானைப் படையைக் கண்ட வீரர்களின் செயல்கள் யாவை?
படைக்கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். கடலில் தாவிக் குதித்துத் தப்பினர் யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர். எந்தத் திசையில் செல்வது என்று தெரியாமல் மலைக் குகை மற்றம் புதருக்குள் தப்பி ஒளிந்து கொண்டனர். |
IV. சிறு வினா
சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப் படை வீரர்களின் செயல்களாகக் கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை?
கலிங்க வீரர்கள் “இது என்ன மாய வித்தையோ” என்று வியந்தனர். தம்மை அழிக்க வந்த தீயோ? உயிரை பறிக்க வந்த எமனோ? என்று அஞ்சினர். படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். யானைகள் பின்னே மறைந்து கொண்டனர். எந்த திசையில் செல்வது எனத் தெரியாமல், மலைக் குகை மற்றும் புதர்களில் ஓடி ஒளிந்தனர். ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தன்னுடைய நிழலைக் கூட எதிரிகள் துரத்தி வருவதாக எண்ணிப் பயந்தனர். யானை பிளிறியதைக் கேட்டு பயந்த வீரர்கள் குகைக்குள் சென்று மறைந்தனர். புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனர். |
கூடுதல் வினாக்கள்
I. சேர்த்து எழுதுக
- சிதைந்து + ஓடல் = சிதைந்தோடல்
- என்று + இருள் = என்றிருள்
- போல் + உடன்றன = போலுடன்றன
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. தமிழர்கள் வீரமும், போர் அறமும் ________ வாய்ந்தவை.
விடை : தனிச்சிறப்பு
2. செயங்கொண்டார் ________ என்னும் ஊரினைச் சேர்ந்தவர்.
விடை : தீபங்குடி
3. கலிங்கத்துப்பரணி ________ பாடப் பெற்றது.
விடை : கலித்தாழிசையால்
4. கலிகத்துப்பரணி ________ தாழிசைகள் கொண்டது.
விடை : 599
5. கலிங்கத்துப்பரணி ________ வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று
விடை : 96
6. தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று கலிங்கத்துப்பரணியைப் புகழந்தவர் ________
விடை : ஒட்டக்கூத்தர்
III. பொருத்துக
1. மறலி | அ. நெருங்குதல் |
2. இறைஞ்சினர் | ஆ. நழுவி ஓடுவர் |
3. வழிவர் | இ. வணங்கினர் |
4. மண்டுதல் | ஈ. காலன் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ |
IV. பொருந்தாதை தேர்க
- கரி – காலன்
- தூறு – புதர்
- உடன்றன – சினந்து எழுந்தன
- முழை – மலைக்குகை
விடை : கரி – காலன்
V. சிறு வினா
1. தமிழர்கள் எதனை தமது உடைமைகளாகக் கொண்டவர்கள்?
தமிழர்கள் அறத்தையும் வீரத்தையும் தமது உடைமைகளாகக் கொண்டவர்கள்.
2. தமிழரின் மாண்பினை நமக்கு உணர்த்துவன எவை?
பகைவரை அஞ்சச் செய்யும் வீரமும், அஞ்சியோடும் பகைவரைத் துன்புறுத்தாத அறமும் தமிழரின் மாண்பினை நமக்கு உணர்த்துவன.
3. கலிகத்துப்பரணி எதனை பற்றி பேசுகிறது
கலிகத்துப்பரணி கலிங்கப்போர் வெற்றியை பற்றி பேசுகிறது.
4. பரணி இலக்கியம் என்றால் என்ன?
போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
V. குறு வினா
1. செயங்கொண்டார் சிறுகுறிப்பு வரைக
செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர். முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவர் பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாத புலவரால் புகழப்பட்டவர் |
2. கலிகத்துப்பரணி பற்றி குறிப்பு வரைக
96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சாரந்த நூல் இதுவே தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி நூல் இது முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியை பேசுகிறது. இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார். கலித்தாழிசையால் பாடப் பெற்றது. 599 தாழிசைகள் கொண்டது |
சில பயனுள்ள பக்கங்கள்