பாடம் 1.3. பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. எம்.ஜி.ஆர் _____ என்னும் ஊரில் கல்வி பயின்றார்.
- கண்டி
- கும்பகோணம்
- சென்னை
- மதுரை
விடை : கும்பகோணம்
2. எம்.ஜி.ஆர். படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் _____ .
- நடிப்பு ஆர்வம்
- பள்ளி இல்லாமை
- குடும்ப வறுமை
- படிப்பில் ஆர்வமில்லாமை
விடை : குடும்ப வறுமை
3. இந்திய அரசு சிறந்த நடிகருக்கான _____ எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது.
- புரட்சித் தலைவர்
- பாரத்
- பாரத மாமணி
- புரட்சி நடிகர்
விடை : பாரத்
4. ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் _____
- திருச்சி
- சென்னை
- மதுரை
- கோவை
விடை : மதுரை
5. எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் _____.
- மதிய உணவுத்திட்டம்
- வீட்டு வசதித் திட்டம்
- மகளிர் நலன் திட்டம்
- இலவசக் காலணித் திட்டம்
விடை : சத்துணவுத்திட்டம்
II. குறுவினா
1. எம்.ஜி.ஆர். நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் என்ன?
எம்.ஜி.ஆர். தன் குடும்ப வறுமை காரணமாக நாடகத்துறையில் ஈடுபட்டார்
2. திரைத்துறையில் எம்.ஜி.ஆரின் பன்முகத் திறமைகள் யாவை?
திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமைகளை எம்.ஜி.ஆரின் பெற்றிருந்தார்.
3. எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்டங்களுள் நான்கனை எழுதுக.
- ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டம்
- ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித் திட்டம்
- தாய் சேய் நல இல்லங்கள்
- பற்பொடி வழங்கும் திட்டம்
III. சிறு வினா
1. பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த நிகழ்வை எழுதுக.
எம்.ஐி.ஆரும் அவரது மனைவியும் ஒரு முறை வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது மூதாட்டி ஒருவரும், பத்து வயதுச் சிறுமி ஒருத்தியும் காலில் காலணி இல்லாமல் தலையில் புல் கட்டுக்களைச் சுமந்தவாறு சென்று கொண்டிருந்தனர். சாலையின் சூடு தாங்காமல் மரநிழலில் நிற்பதும், ஒடுவதுமாக இருந்தனர். உடனே எம்.ஜி.ஆர் தமது மனைவியாரின் காலணியையும் உறவினப் பெண்ணின் காலணியையும் அவர்களுக்குக் கொடுத்துப் பணம் கொடுத்தார். இந்த நிகழ்ச்சி அவரது மனதில் ஆழமாகப் பதிந்தது. அதனால், பின்னர் பள்ளிக்குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். |
2. தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் யாவை?
தந்தைப் பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்தி தமிழ் எழுத்து முறையை எளிமைப்படுத்தினார். மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார். தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவினார் |
IV. நெடு வினா
எம்.ஜி.ஆரின் பண்பு நலன்களை விளக்கி எழுதுக.
திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமைகளை எம்.ஜி.ஆரின் பெற்றிருந்தார். தாம் நடித்த திரைப்படங்களின் பாடல்கள் மூலம் உயரிய கருத்துக்களை மக்களிடம் விதைத்தார். வாழ்வின் உயர்நிலையை அடைந்த பின்னரும் எளிமையாக வாழ வேண்டம் என்பதைத் தன் பாடல்களில் கூறினார். அப்பாடலுக்கு ஏற்ப தாமும் வாழ்ந்தார். ஏழை மக்கள் காலணி இல்லாமல் நடந்து செல்லும் நிகழ்ச்சி அவரது மனதை ஆழமாகப் பாதித்தது. அதனால் பின்னர் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு இலவச காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அரும்பாடுபட்டார். உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டம், ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித் திட்டம், முதியோர் உதவித் தொகை வழங்கும் திட்டம் முதலிய எண்ணற்ற திட்டங்களை ஏழைகளுக்காக கொண்டு வந்தார். |
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. எம்.ஜி.ஆரின் பெற்றோர் ___________________ சேர்ந்தவர்கள்
விடை : கேரள மாநிலத்தைத்
2. எம்.ஜி.ஆர் பிறந்த இடம் _________
விடை : கண்டி
3. எம்.ஜி.ஆர் பிறந்த ஆண்டு _________
விடை : 1917
4. காமராஜர் அறிமுகப்படுத்திய _________ விரிவுபடுத்தியவர் எம்.ஜி.ஆர்
விடை : மதிய உணவுத்திட்டத்தை
5. சென்னை பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆருக்கு _________ வழங்கியது
விடை : டாக்டர் பட்டம்
6. _________ தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
விடை : தஞ்சாவூரில்
7. தமிழக அரசு எம்.ஜி.ஆரின் நினைவினை போற்றும் வகையில் _________ நிறுவியுள்ளது.
விடை : எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தை
8. _________ மதுரை மாநகரில் எம்.ஜி.ஆர் சிறப்பாக நடத்தினார்.
விடை : ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை
9. எம்.ஜி.ஆருக்கு _________ பட்டத்தை மத்திய அரசு வழங்கியது
விடை : பாரத்
10. பள்ளிக்குழந்தைகளுக்கு காலணிகள் வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியவர் _________
விடை : எம்.ஜி.ஆர்.
11. எம்.ஜி.ஆர்-க்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு _________
விடை : 1988
II. சிறு வினா
1. யார் மக்கள் மனதில் தலைவர்களாக வாழ்கிறார்கள்?
தான் எடுத்துக்கொண்ட செயலில் வெற்றியாளராக விளங்கிட வேண்டும் என்று எண்ணி, எண்ணியதை எண்ணியவாறே செய்து முடிக்கும் வல்லமை கொண்டவரே மக்கள் மனதில் தலைவர்களாக வாழ்கிறார்கள்.
2. எம்.ஜி.ஆர் எங்கு எப்போது பிறந்தார்?
எம்.ஜி.ஆர் இலங்கையில் உள்ள கண்டியில் 17.01.1917-ல் பிறந்தார்
3. எம்.ஜி.ஆரின் பெற்றோர் யார்?
எம்.ஜி.ஆரின் பெற்றோர் கோபாலன் – சத்தியபாமா ஆவார்கள்
4. பாரத ரத்னா விருது எம்.ஜி.ஆருக்கு எப்போது வழங்கப்பட்டது?
1988-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அவர்களின் இறப்பிற்கு பின்பு இந்திய அரசு பாரதரத்னா விருதினை வழங்கியது.
5. எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ள பேருந்து நிலையங்கள் எவை?
சென்னை, மதுரை, திருநெல்வேலி
6. எம்.ஜி.ஆரின் சிறப்பு பெயர்கள் யாவை?
புரட்சி நடிகர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர்
7. இந்திய அரசு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மாற்றம் செய்த பெயர் என்ன?
புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் ரயில் நிலையம்
8. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எப்போது தமிழக அரசால் கொண்டாடப்பட்டது?
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா 2017 – 2018 தமிழக அரசால் கொண்டாடப்பட்டது.
IV. குறு வினா
1. எம்.ஜி.ஆருக்கு அரசு வழங்கிய சிறப்புகள் யாவை?
- சென்னை பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆரின் பணிகளை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது
- தமிழக அரசு அவர் நினைவைப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.
- சென்னை கடற்கரையில் இவருக்கு எழிலார்ந்த நினைவிடம் அமைத்துள்ளது.
- 1988-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அவர்களின் இறப்பிற்கு பின்பு இந்திய அரசு பாரதரத்னா விருதினை வழங்கியது.
2. எம்.ஜி.ஆரின் தமிழகத்திற்கு செயல்படுத்திய சமுக நலத்திட்டங்களை கூறுக
எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அரும்பாடுபட்டார்.
போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார். |
சில பயனுள்ள பக்கங்கள்