பாடம் 2.1. ஒன்றே குலம்
ஒன்றே குலம் – பாடல்
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் – திருமூலர் |
நூல்வெளி
திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர். இவர் இயற்றிய திருமந்திரம் 3000 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தமிழ் மூவாயிரம் என்பர் இது பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. திருமந்திரம் என்னும் நூலிலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்படுள்ளன. |
I. சொல்லும் பொருளும்
- நமன் – எமன்
- நாணாமே – கூசாமல்
- சித்தம் – உள்ளம்
- உய்ம்மின் – ஈடேறுங்கள்
- நம்பர் – அடியார்
- ஈயில் – வழங்கினால்
- படமாடக்கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் _____ க் கண்டு அஞ்சமாட்டார்கள்.
- புலன்
- அறனை
- நமனை
- பலனை
விடை : நமனை
2. ஒன்றே _____ என்று கருதி வாழ்வபதை மனிதைப் பண்பாகும்.
- குலம்
- குளம்
- குணம்
- குடம்
விடை : குலம்
3. நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- நம் + இல்லை
- நமது + இல்லை
- நமன் + நில்லை
- நமன் + இல்லை
விடை : நமன் + இல்லை
4. நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- நம்பரங்கு
- நம்மார்க்கு
- நம்பர்க்கங்கு
- நம்பங்கு
விடை : நம்பர்க்கங்கு
III. குறு வினா
1. யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?
மனிதர் அனைவரும் ஒரே இனம். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே என்பதை மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் தேவை |
2. மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்ய வேண்டியது யாது?
மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர்
ஆகியவற்றை செய்ய வேண்டும் |
IV. சிறு வினா
மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவது யாது?
படங்கள் அமைந்த கோயிலில் இருக்கக்கூடிய இறைவனுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால், அப்பொருள் நடமாடும் கோயில் ஆகிய உடம்பை உடைய அடியார்களுக்கு சேராது ஆகையால் அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கு கொடுப்பதை போன்றதாகும். |
கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல்
- திருக்குறள்
- திருமந்திரம்
- திருப்பாவை
- திருவெம்பாவை
விடை : திருமந்திரம்
2. ஒன்றே குலம் எனும் கவிதைப்பாடல் அமைந்துள்ள நூல்
- திருக்குறள்
- திருப்பாவை
- திருவெம்பாவை
- திருமந்திரம்
விடை : திருமந்திரம்
3. நம்பர் என்பதன் பொருள்
- எமன்
- கூசாமல்
- உள்ளம்
- அடியார்
விடை : அடியார்
4. ஈயில் என்பதன் பொருள்
- எமன்
- உள்ளம்
- வழங்கினால்
- அடியார்
விடை : வழங்கினால்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. நாயன்மார்கள் _________
விடை : அறுபத்து மூன்று
2. மக்கள் அனைவரும் ஒரே __________
விடை : இனத்தினர்
3. நமன் என்ற சொல்லிற்கு _________ என்று பொருள்
விடை : எமன்
4. ஒன்றே குலம் ஒருவனே __________
விடை : தேவன்
5. உலகமக்கள் அனைவரையும் ________ கருதி அன்புகாட்ட வேண்டும்.
விடை : உடன் பிறந்தவராகக்
III. ஒன்றே குலம் பாடலில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
மோனைச் சொற்கள்:-
- ஒன்றே – ஒருவேன
- நன்றே – நமனில்லை
- நின்றே – நிலைபெற
- படமாடக் – பகவற்கு
- நடமாடக் – நம்பர்க்கு
எதுகைச் சொற்கள்:
- ஒன்றே – நன்றே
- சென்றே – நின்றே
- படமாடக் – நடமாடக்
- கோயில் – ஈயில்
IV. சிறு வினா
1. எதனை பாராட்டுவது தவறானது?
மனிதர்களிடையே பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டுவது தவறானது.
2. எவ்வாறு அன்பு காட்ட வேண்டும்?
உலகமக்கள் அனைவரையும் உடன் பிறந்தாராகக் கருதி அன்புகாட்ட வேண்டும்.
3. எது இறைத் தொண்டாகும்?
பிறருக்கு ஏற்படும் பசி முதலிய துன்பங்களைத் தமக்கு ஏற்பட்டதாகக் கருதி அவற்றைப்போக்க முயல்வதே மனிதர்களின் சிறந்த கடமையாகும். அதுவே இறைத் தொண்டாகும்.
4. திருமந்திரம் நூலின் வேறுபெயர் என்ன
தமிழ் மூவாயிரம்
5. நடமாடும் கோயில் என்று திருமூலர் யாரைக் கூறுகிறார்?
நடமாடும் கோயில் என்று திருமூலர் அடியார்களாகிய மக்களை கூறுகிறார்
IV. குறு வினா
1. திருமூலர் பற்றிய குறிப்பு வரைக
- திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்
- பதினெண் சித்தர்களில் ஒருவர்
- திருமந்திரம் என்ற நூலை எழுதியுள்ளார்
2. திருமந்திரம் குறிப்பு வரைக
- திருமந்திரத்தை இயற்றியவர் திருமூலர்
- 3000 பாடல்களைக் கொண்ட நூல் இது
- பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை நூல்
சில பயனுள்ள பக்கங்கள்