Tamil Nadu 8th Standard Tamil Book Term 3 மெய்ஞ்ஞான ஒளி Solution | Lesson 2.2

பாடம் 2.2. மெய்ஞ்ஞான ஒளி

மெய்ஞ்ஞான ஒளி – பாடல்

கருத்துகளைக் கட்டோடு அறுத்தவருக்கு
உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே!

காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத
ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே!

அறிவை அறிவோருக்கு ஆனந்த வெள்ளமதாய்க்
கரையறவே பொங்கும் கடலே பராபரமே!

அடக்கத் தாம்மாய ஐம்பொறியைக் கட்டிப்
படிக்கப் படிப்பு எனக்குப் பகராய் பராபரமே!

– குணங்குடி மஸ்தான் சாகிபு

நூல்வெளி

குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர்.

இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார்.

சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப் பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார்.

எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார்.

நம் பாடப்பகுதி குணங்குடியார் பாடற்கோவை என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

I. சொல்லும் பொருளும்

  1. பகராய் – தருவாய்
  2. பராபரம் – மேலான பொருள்
  3. ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு
  4. அறுத்தவருக்கு – நீக்கியவர்க்கு

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மனிதர்கள் தம் _____ தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.

  1. ஐந்திணைகளை
  2. அறுசுவைகளை
  3. நாற்றிசைகளை
  4. ஐம்பொறிகளை

விடை : ஐம்பொறிகளை

2. ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் _____.

  1. பகர்ந்தனர்
  2. நுகர்ந்தனர்
  3. சிறந்தனர்
  4. துறந்தனர்

விடை : பகர்ந்தனர்

3. ஆனந்தவெள்ளம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. ஆனந்த + வெள்ளம்
  2. ஆனந்தன் + வெள்ளம்
  3. ஆனந்தம் + வெள்ளம்
  4. ஆனந்தர் + வெள்ளம்

விடை : ஆனந்தம் + வெள்ளம்

4. உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. உள்ளேயிருக்கும்
  2. உள்ளிருக்கும்
  3. உளிருக்கும்
  4. உளருக்கும்

விடை : உள்ளிருக்கும்

III. குறு வினா

1. உண்மை அறிவை உணர்ந்தோர் உள்ளத்தில் நிகழ்வது யாது?

உண்மை அறிவை உணர்ந்தோர் உள்ளத்தில் இன்பப் பெருக்காய்க் கரை கடந்து பொங்கிடும் கடலாக, மேலான பரம் பொருள் விளங்குகின்றது.

2. மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைவது யாது?

மேலான பொருளின் மீது பற்று வைக்காமல் பணத்தின் மீது ஆசை வைத்தால் மனிதனின் மனம் கலங்கும்

IV. சிறு வினா

குணங்குடியார் பாரபரத்திடம் வேண்டுவன யாவை?

மேலான பொருளையும் தம் தீய எண்ணங்களையும் அடியோடு அழித்தவர்கள், மனதில் உள்ளே இருக்கும் உண்மையான அறிவு ஒளி ஆனவனே!

உன் திருவடிகளின் மேல் பற்று வைக்காமல் பணத்தின் மீது ஆசை வைத்தால் நான் மனம் கலங்கி அலைகின்றேன்.

நீ உண்மை அறிவினை உணர்ந்தவர்களின் உள்ளத்திற்குள் இன்பப்பொருக்காய் கரை கடந்து பொங்கும் கடலாக விளங்கி நிற்கின்றாள்

மேலானபொருளே! ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரியசெயலாகும். அப்பொறிகளின் இயல்பை உணர்ந்து நல்வழிப்படுத்தும் அறிவினை எனக்குத் தந்து அருள்செய்வாயாக.

கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. எப்படியும் வாழலாம் என்பது __________களின் இயல்பு ஆகும்.

  1. மனிதர்
  2. விலங்கு
  3. மரங்கள்
  4. தாவரங்கள்

விடை : விலங்கு

2. __________ மீது பற்று வைக்க வேண்டும்

  1. மேலான பொருள்
  2. பணம்
  3. பொருள்
  4. போதை

விடை : மேலான பொருள்

3. ____________ அடக்கி ஆள வேண்டும்

  1. ஐம்பொறிகள்
  2. மனம்
  3. தீய எண்ணங்கள்
  4. ஆசை

விடை : ஐம்பொறிகள்

4. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர்

  1. சுல்தான் அப்துல்காதர்
  2. பாரதி
  3. சுரதா
  4. பாரதிதாசன்

விடை : சுல்தான் அப்துல்காதர்

5. இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தவர்

  1. பாரதி
  2. சுரதா
  3. பாரதிதாசன்
  4. குணங்குடி மஸ்தான் சாகிபு

விடை : குணங்குடி மஸ்தான் சாகிபு

5. குணங்குடி மஸ்தான் சாகிபு தவம் இயற்றி ஞானம் பெற்ற மலைகளில் பொருந்தாதது

  1. சதுரகிரி
  2. பொதிய மலை
  3. புறாமலை
  4. நாகமலை

விடை : பொதிய மலை

6. எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலிய நூல்களை படைத்தவர்

  1. பாரதி
  2. சுரதா
  3. பாரதிதாசன்
  4. குணங்குடி மஸ்தான் சாகிபு

விடை : குணங்குடி மஸ்தான் சாகிபு

7. அறுத்தவருக்கு என்பதன் பொருள்

  1. நீக்கியவர்க்கு
  2. தருவாய்
  3. மேலான பொருள்
  4. இன்பப்பெருக்கு

விடை : நீக்கியவர்க்கு

II. சிறு வினா

1. எப்படியும் வாழலாம் என்பது எவற்றின் இயல்பு?

எப்படியும் வாழலாம் என்பது விலங்குகளின் இயல்பு ஆகும்.

2. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது யாரின் இயல்பு?

இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனிதப் பண்பு.

4. வாழ்வாங்கு வாழ என்ன செய்ய வேண்டும்?

ஐம்பொறிகளின் ஆசையை அடக்கி, அறிவின் வழியில் சென்றால் வாழ்வாங்கு வாழலாம்.

5. குணங்குடியார் எந்தெந்த மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார்?

குணங்குடியார் சாகிபு சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார்

6. குணங்குடியார் இயற்றியுள்ள நூல்கள் எவை?

  • எக்காளக் கண்ணி
  • மனோன்மணிக் கண்ணி
  • நந்தீசுவரக் கண்ணி

III. குறு வினா

குணங்குடி மஸ்தான் சாகிபு குறிப்பு வரைக

குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர்.

இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார்.

சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார்.

எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்