பாடம் 2 இயக்கம்
இயக்கம் வினா விடைகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. திசைவேகம் – காலம் வரைபடம் உள்ளடக்கும் பரப்பளவு எதனைப் பிரதிபலிக்கிறது?
- நகரும் பொருளின் திசைவேகம்
- நகரும் பொருள் அடைந்த இடப்பெயர்ச்சி
- நகரும் பொருளின் வேகம்
- நகரும் பொருளின் முடுக்கம்
விடை: நகரும் பொருளின் முடுக்கம்
2. கீழ்கண்டவற்றில் எது பெரும்பாலும் சீரான வட்ட இயக்கம் அல்ல
- சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்
- வட்டப் பாதையில் சுற்றி வரும் பாெம்மை ரயிலின் இயக்கம்
- வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து
- மணியைக் காட்டும் டயல் கடிகாரத்தின் இயக்கம்
விடை: வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து
3. கீழ்வரும் வரைபடத்தில் சீரான இயக்கத்தில் நகரும் ஒரு பாெருளைக் குறிப்பிடுவது எது?
விடை: ஆ
4. மையவிலக்கு விசை ஒரு
- உண்மையான விசை
- மையநாேக்கு விசைக்கு எதிரான விசை
- மெய்நிகர் விசை
- வட்டப் பாதையின் மையத்தை நாேக்கி இயங்கும் விசை
விடை: மெய்நிகர் விசை
5. ஒரு பாெருள் நகரும்பாேது அதன் ஆரம்ப திசைவேகம் 5மீ/விநாடி மற்றும் முடுக்கம் 2 மீ/விநாடி2. 10 விநாடி கால இடைவெளிக்குப் பிறகு அதன் திசைவேகம்
- 20 மீ/விநாடி
- 25 மீ/விநாடி
- 5 மீ/விநாடி
- 22.55 மீ/விநாடி
விடை: 25 மீ/விநாடி
6. 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றவர் இறுதிப்புள்ளியை அடைய எடுத்துக் காெண்ட நேரம் 10 விநாடி எனில் வெற்றியாளரின் சராசரி வேகம்
- 5 மீ/விநாடி
- 20 மீ/விநாடி
- 40 மீ/விநாடி
- 10 மீ/விநாடி
விடை: 10 மீ/விநாடி
7. திசைவேகம் – காலம் வரைபடம் உள்ளடக்கும் பரப்பளவு எதனைப் பிரதிபலிக்கிறது.
- நகரும் பாெருளின்
- நகரும் பாெருள் அடைந்த இடப்பெயர்ச்சி
- நகரும் பாெருளின் வேகம்
- நகரும் பாெருளின் முடுக்கம்
விடை: நகரும் பாெருள் அடைந்த இடப்பெயர்ச்சி
8. முடுக்கத்தின் அலகு
- மீ/விநாடி
- மீ/விநாடி2
- மீ விநாடி
- மீ விநாடி2
விடை: மீ/விநாடி2
9. துணி துவைக்கும் இயந்திரத்தில் ஆடடியடி உலர்த்தப் பயன்படும் விசை
- மையநாேக்கு விசை
- மையவிலக்கு விசை
- புவிஈர்ப்பு விசை
- நிலை மின்னியல் விசை
விடை: மையவிலக்கு விசை
10. திசைவேகம் – காலம் வரைபடத்தின் சாய்வு காெடுப்பது
- வேகம்
- இடப்பெயர்ச்சி
- தொலைவு
- முடுக்கம்
விடை: முடுக்கம்
11. சீரான வட்ட இயக்கத்தோடு தொடர்புடைய விசை
- f=mv2/r
- f=mvr
- f=mr2/v
- f=v2/r
விடை: f=mv2/r
12. ஒரு பாெருள் ஓய்வு நிலையிலிருந்து புறப்படுகிறது. 2 விநாடிக்குப் பிறகு அதன் முடுக்கம், இடப்பெயர்ச்சியை விட ………………….. இருக்கும்.
- பாதி அளவு
- இரு மடங்கு
- நான்கு மடங்கு
- நான்கில் ஒரு பகுதி
விடை: பாதி அளவு
13. ஒரு மகிழுந்து 20 மீ/விநாடி வேகத்தில் இயக்கப்படுகிறது. தடையைப் பயன்படுத்தி 5 விநாடி கால இடைவெளியில் அது ஓய்வு நிலையைப் பெறுகிறது. இதில் ஏற்பட்ட எதிர்மறை முடுக்கம் என்ன?
- 4 மீ/விநாடி2
- -4 மீ/விநாடி2
- -0.25 மீ/விநாடி2
- 0.25 மீ/விநாடி2
விடை: 4 மீ/விநாடி2
II. காேடிட்ட இடங்களை நிரப்புக.
1. வேகம் ஒரு ……………………. அளவு அதே சமயம் திசைவேகம் ஒரு வெக்டர் அளவாகும்.
விடை: ஸ்கேலார்
2. தொலைவு – கால வரைபடத்தின் எந்த ஒரு புள்ளியிலும் சாய்வின் சேமிப்பு பெறப்படுவது ……………………..
விடை: வேகம்
3. எதிர்மறை முடுக்கத்தை ……………………. சாெல்லலாம்.
விடை : வேக இறக்கம் (அ) ஒடுக்கம்
4. இடப்பெயர்ச்சி – காலம் வரைபடத்தில் உள்ள பரப்பளவு குறிப்பிடுவது …………………..
விடை : இடப்பெயர்ச்சியின் எண் மதிப்பிற்குச் சமம்
5. பாெருள் ஒன்று x = 20 மீட்டர் என்ற நிலையில் ஓய்வில் உள்ளது. அதன் இடப்பெயர்ச்சி – காலம் வரைபடம் X ………………….. அச்சுக்கு நேர்காேடாக இருக்கும்.
விடை: அரசுக்கு இணையான
III. சரியா, தவறா எனக் கூறவும்
1. நகரத்தின் நெருக்கடி மிகுந்த கடுமையான பாேக்குவரத்திற்கு இடையே செல்லும் ஒரு பேருந்தின் இயக்கம் சீரான இயக்கத்துக்கு ஒரு உதாரணம்.
விடை: தவறு
2. முடுக்கம் எதிர்மறை மதிப்பும் பெறும்
விடை: சரி
3. எந்த ஒருகால இடைவெளியிலும் ஒரு பாெருள் கடந்த தூரம் சுழி ஆகாது. ஆனால் இடப்பெயர்ச்சி சுழி ஆகும்.
விடை: சரி
4. ஈர்ப்பு விசையால் தடையின்றித் தானே விழும் ஒரு பாெருளின் திசைவகம் – காலம் வரைபடமானது – அச்சுக்கு இணையாக ஒரு நேர்காேடாக இருக்கும்.
விடை: தவறு
5. ஒரு பாெருளின் திசைவேகம் – காலம் வரைபடம் ஒரு நேர்காேடாக இருந்து, அது காலத்தினுடைய அச்சுக்கு சாய்வாக இருந்தால் அதன் இடப்பெயர்ச்சி – காலம் வரைபடம் ஒரு நேர் காேடாக அமையும்.
விடை: சரி
IV. வலியுறுத்தல் மற்றும் காரணக் கேள்விகள்
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும்காரணம் கூற்றின் தவறான விளக்கம
- கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
- கூற்று தவறு ஆனால் காரணம் உண்மை.
1. கூற்று: ஒரு பாெருளின் முடுக்க இயக்கம் அதன் திசைவேக அளவு அல்லது திசை மாற்றம் அல்லது இரண்டும் மாற்றம் அடைவதால் ஏற்படுவது.
காரணம்: ஒரு பாெருளின் முடுக்கம் அதன் திசைவேகத்தின் அளவு மாறுபடுவதால் மட்டுமே நிகழும். அது திசை மாற்றத்தைப் பாெறுத்தது அல்ல.
விடை: கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
2. கூற்று: மகிழுந்து அல்லது மாேட்டார் சைக்கிளில் உள்ள வேகமானி அதன் சராசரி வேகத்தை அளவிடுகிறது.
காரணம்: மாெத்தத் தூரத்தை நேரத்தால் வகுத்தால் அது சராசரி திசை வேகத்துக்கு சமம்.
விடை: கூற்று தவறு ஆனால் காரணம் உண்மை.
3. கூற்று: ஒரு பாெருளின் இடப்பெயர்ச்சி சுழி ஆனால் அப்பாெருள் கடந்த தூரம் சுழி இல்லை.
காரணம்: இடப்பெயர்ச்சி தொடக்க நிலைக்கும் முடிவு நிலைக்கும் இடையே உள்ள குறுகிய பாதை ஆகும்.
விடை: கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
V. தரப்பட்டுளள வரைபடங்களை அவை குறிப்பிடும் இயக்கத்துடன் பொறுத்து
1. சமகால அளவுகளில் சம இடைவெளியைக் கடக்கும் ஒரு பாெருளின் இயக்கம். | |
2. சீரற்ற முடுக்கம் | |
3. நிலையான எதிர்மறை முடுக்கம் | |
4. சீரான முடுக்கம் | |
Ans : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ |
VI. குறுவினாக்கள்
1. திசைவேகம் – வரையறு.
திசைவகம் என்பது இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வேகம் அல்லது ஓரலகு நேரத்திற்கான இடப்பெயர்ச்சி திசைவேகம் எனப்படும்
2. தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவற்றை வேறுபடுத்து
தொலைவு | இடப்பெயர்ச்சி |
1. திசையைக் கருதாமல், ஒரு நகரும் பாெருள் கடந்து வந்த உண்மையான பாதையின் அளவு தொலைவு எனப்படும். | ஒரு குறிப்பிட்ட திசையில் இயங்கும் பாெருளாென்றின் நிலையில் ஏற்படும் மாற்றம இடப்பெயர்ச்சி ஆகும். |
2. இது ஸ்கேலார் அளவுரு | இது வெக்டர் அளவுரு |
3. சீரான இயக்கம் குறித்து நீங்கள் அறிந்தது என்ன?
- ஒரு பாெருள் நகரும் பாெழுது சமமான தொலைவுகளைச் சமகால இடைவெளிகளில் கடந்தால் அது சீரான இயக்கத்தை பெற்றுள்ளது.
- சீரான இயக்கத்தில் உள்ள பாெருளின் திசைவேகம் மாறிலியாக இருப்பதால் அதன் முடுக்கம் சுழி ஆகும்.
4. வேகம் மற்றும் திசைவேகம் ஒப்பிடுக.
வேகம் | திசைவேகம் |
1. வேகம் என்பது தொலைவு மாறுபாட்டு வீதம் (அ) ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவு எனப்படும். | திசைவேகம் என்பது இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம் (அ) ஓரலகு நேரத்திற்கான இடப்பெயர்ச்சி எனப்படும். |
2. இது ஒரு ஸ்கேலார் அளவாகும் | இது ஒரு வெக்டர் அளவாகும். |
5. எதிர்மறை முடுக்கம் குறித்து நீங்கள் என்ன புரிந்து காெண்டீர்கள்?
இறுதித் திசைவேகம், தொடக்க திசைவேகத்தை விடக் குறைவாக இருந்தால், திசை வேகமானது நேரம் செல்லச் செல்ல குறையும் மற்றும் முடுக்கம் எதிர் மதிப்பு பெறும். இது எதிர் முடுக்கம் எனப்படும்.
எதிர் முடுக்கத்தை வேக இறக்கம் (அ) ஒடுக்கம் எனலாம்.
6. சீரான வட்ட இயக்கத்தில் நிலையாக இருப்பது எது? மற்றும் எது தொடர்ந்து மாறிக் காெண்டிருக்கும்?
- சீரான வட்ட இயக்கத்தில் நிலையாக இருப்பது அதன் மாறாத வேகம்.
- சீரான வட்ட இயக்கத்தில் திசை ஒவ்வாெரு புள்ளியிலும் மாறிக் காெண்டே இருக்கும்.
7. சீரான வட்ட இயக்கம் என்றால் என்ன? சீரான வட்ட இயக்கத்துக்கு இரண்டு உதாரணங்கள் தருக.
ஒரு பாெருள் வட்டப் பாதையில் மாறாத வேகத்தில் சென்றால், அந்த இயக்கம் சீரான வட்ட இயக்கம் என்று அழைக்கப்படும்.
உதாரணம்:
- பூமி சூரியனைச் சுற்றி வருவது
- நிலவு பூமியைச் சுற்றி வருவது
- எலக்ட்ரான் உட்கருவை மையமாக காெண்டு சுற்றி வருவது.
VII. விரிவாக விடையளி.
1. வரைபட முறையைப் பயன்படுத்தி இயக்கச் சமன்பாடுகளை வருவி.
நியூட்டன், ஒரு பொருளின் இயக்கத்தை ஆய்வு செய்ததன் விளைவாக மூன்று சமன்பாடுகளின் தொகுப்பை வழங்கினார்.
மேற்கண்ட வரைபடம் சீராக முடுக்கப்பட்ட பொருள் ஒன்று காலத்தைப் ப ொறுத்து அடையும் திசைவேக மாற்றத்தைக் காண்பிக்கிறது. வரைபடத்தில் ‘D’ என்ற தொடக்கப் புள்ளியிலிருந்து ‘u’ என்ற திசை வேகத்துடன் இயங்கும் பொருளொன்றின் திசைவேகம் தொடர்ச்சியாக அதிகரித்து ‘t’ காலத்திற்குப் பின் ‘B’ என்ற புள்ளியை அப்பொருள் அடைகிறது.
பொருளின் தொடக்க திசைவேகம் | = u = OD = EA |
பொருளின் இறுதித் திசைவேகம் | = v = OC = EB |
காலம் | = t = OE = DA |
வரைபடத்திலிருந்து AB = DC ஆகும்.
முதல் இயக்கச் சமன்பாடு
வரையறைப்படி முடுக்கம் (a) | = திசைவேக மாறுபாடு / காலம் |
= (இறுதித் திசைவேகம் – தொடக்கத் திசைவேகம்) / காலம் | |
at | = (OC-OD) / OE = DC/OE = DC/t |
DC | = at = AB |
வரைபடத்திலிருந்து, EB | = EA + AB |
v = u + at …………………. (1) |
இது முதல் இயக்கச் சமன்பாடு ஆகும்.
இரண்டாம் இயக்கச் சமன்பாடு
வரைபடத்திலிருந்து, ‘t’ காலத்தில் பொருள் ஒன்று கடந்த தொலைவான நாற்கரத்தின் பரப்பளவு DOEB மூலம் கொடுக்கப்படுகிறது.
s | = நாற்கரத்தின் பரப்பளவு DOEB |
= செவ்வகத்தின் பரப்பளவு DOEA + முக்கோணத்தின் பரப்பளவு DAB | |
= (AE × OE) + (1/2 × AB × DA) | |
s = ut + ½ at2 …………………. (2) |
இது இரண்டாம் இயக்கச் சமன்பாடு ஆகும்.
மூன்றாவது இயக்கச் சமன்பாடு
‘t’, காலத்தில் பொருள் கடந்த தொலைவை வரைபடத்தில் நாற்கரம் DOEB யின் பரப்பளவானது குறிக்கிறது. இங்கு DOEB என்பது சரிவகத்தையும் குறிக்கிறது.
S | = சரிவகம் DOEB யின் பரப்பளவு |
× இணைப் பக்க நீளங்களின் கூடுதல் × இணைப் பக்கங்களுக்கு இடைப்பட்ட தொலைவு | |
= ½ × (OD + BE) × OE | |
S | = ½ × (u + v) × t |
ஆனால், முடுக்கம் a | = (v – u) / t or t = (v – u)/a |
எனவே, s | = ½ × (v + u) × (v – u)/a |
2as | = v 2 – u2 |
v2 = u2 + 2 as ………………. (3) |
This is the third equation of motion.
2. பல்வேறு வகையான இயக்கங்களை விளக்குக.
இயற்பியலில் இயக்கத்தைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
நேரான இயக்கம்:
நேர்கோட்டில் செல்லும் பொருளின் இயக்கம்
வட்ட இயக்கம்:
வட்டப்பாதையில் செல்லும் பொருளின் இயக்கம்.
அலைவு இயக்கம்:
ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு மீண்டும் மீண்டும் முன்னும் பின்னுமாக இயங்கும் பொருளின் இயக்கம்.
ஒழுங்கற்ற இயக்கம்:
மேலே குறிப்பிட்ட எந்த இயக்கத்தையும் சாராத இயக்கம்.
VIII. பயிற்சிக் கணக்குகள்
1. ஒரு பந்து 20 மீட்டர் உயரத்தில் இருந்து மெதுவாக கீழே விடப்பட்டது. அதன் சீரான திசைவேக மாறுபாட்டு வீதம் 10 மீ / விநாடி. அது எந்த திசைவேகத்தில் தரையைத் தொடும்? தரையைத் தொடுவதற்கு ஆகும் காலம் எவ்வளவு?
தொடக்க திசைவேகம் | = 0 |
பந்து கடந்த தூரம், s | = 20m |
திசைவேக மாறுபாட்டு வீதம், a | = 10m/s2 |
இறுதி திசைவேகம், v | = ? |
பந்து தரையைத் தொட ஆகும் காலம், t | = ? |
a) இறுதித்திசைவேகம்
v2 | = u2+2as |
v2 | = 0+2~x 10 m/s2 x 20m |
v2 | = 400 m2/s2 |
= √400m2 /s2 | |
v | = 20 m/s |
b) காலத்தைக் கணக்கிடல் t
v | = ut+at |
20m/s | = 0+10m/s2 x t |
t | 20m/s2 / 20m/s = 2s |
பந்து தரையைத் தொடும் போது திசைவேகம் t = 20 ms-1 பந்து தரையைத் தொட ஆகும் காலம் = 2s. |
2. ஒரு தடகள வீரர் 200 மீட்டர் விட்டம் உடைய வட்டப் பாதையை 40 விநாடியில் கடக்கிறார். 2 நிமிடம் 20 விநாடிக்குப் பிறகு அவர் கடந்த தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி எவ்வளவு?
விட்டம் | = 200m |
ஆரம் | = 200 m/2 = 100 m |
ஒரு சுற்றுக்கு ஆகும் நேரம் | = 40s |
மொத்த நேரம் | = 2m 20 s |
2 x 60 s +20 s= 140 s | |
140 விநாடிகளுக்கு பிறகு கடந்த தொலைவு | = ? |
140 விநாடிகளுக்கு பின் இடப்பெயர்ச்சி | = ? |
திசைவேகம் | = சுற்றளவு/நேரம் |
v | = 2mr / 40 s |
v | = 2 x 3.14 x 100 m / 40 s |
v | = 628 m / 40 s |
v | = 15.7 m/s |
a) 140 விநாடிகளுக்கு பின் கடந்த தொலைவு
கடந்த தொலைவு | = திசைவேகம் x நேரம் |
= 15.7 m/s x 140s | |
= 2198m |
b) 140 விநாடிகளுக்கு இடப்பெயர்ச்சி
4o s | = 1 |
ஒரு விநாடியில் கடந்த சுற்று | = 1 / 40 |
4o s ஒரு விநாடியில் கடந்த சுற்று | = 1 / 40 x 140 |
= 3.5 |
3.5 ஆவது சுற்றில் வீரர் வட்டப்பாதையில் எதிர் திசையில் கடந்து சென்றிருப்பார்.
2 நிமிடம் 2 விநாடிகளுக்கு பின் கடந்த தூரம் = 2198m
2 நிமிடம் 2 விநாடிகளுக்கு பின் இடப்பெயர்ச்சி = 200m
3. ஒரு பந்தய மகிழுந்து 4 மீ / விநாடி2 என்ற சீரான முடுக்கத்தில் பயணிக்கிறது. புறப்பட்ட 10 விநாடியில் அது கடந்த தூரம் என்ன?
முடுக்கம், a | = 4 m/s2 |
தொடக்க திசைவேகம் u | = 0 |
நேரம் t | = 10 s |
கடந்த தூரம் | = ? |
s | = uf +½at2 |
s | = (0 x10s) + [½ x 4 m/s2 x (10s)2] |
= ½ x 4 m/s2 x 100s2 | |
= 2x 100 m=200m | |
புறப்பட்ட 10 விநாடியில் கடந்த தூரம் = 200m |