பாடம் 11 அணு அமைப்பு
அணு அமைப்பு வினா விடை
1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. தவறான ஒன்றை கண்டுபிடி
- 8O18, 17Cl37
- 18Ar40, 7N14
- 14Si30, 15P31
- 24Cr54, 19K39
விடை: 14Si30, 15P31
2. நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது
- ஒரு அயனி
- ஒரு ஐசாேடோப்
- ஒரு ஐசாேபார்
- தவறு தனிமம்
விடை: ஒரு ஐசாேடோப்
3. நியூக்ளியான் குறிப்பது
- புரோட்டான் + எலக்ட்ரான்
- நியூட்ரான் மட்டும்
- எலக்ட்ரான் + நியூட்ரான்
- புரோட்டான் + நியூட்ரான்
விடை: புராேட்டான் + நியூட்ரான்
4. – ல் உள்ள புராேட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
- 80, 80, 35
- 35, 55, 80
- 33, 35, 80
- 35, 45, 35
விடை: 35, 45, 35
5. பாெட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு
- 2,8,9
- 2,8,1
- 2,8,8,1
- 2,8,8,3
விடை: 2,8,8,1
3. அணுக்கரு குறிப்பது
- புராேட்டான் + எலக்ட்ரான்
- நியூட்ரான் மட்டும்
- எலக்ட்ரான் + நியூட்ரான்
- புராேட்டான் + நியூட்ரான்
விடை: புராேட்டான் + நியூட்ரான்
II. சரியா, தவறா – தவறெனில் திருத்தியமைக்க
1. அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், உட்கருவினை நிலையான சுற்றுப் பாதையில் சுற்றுகின்றன.
விடை: சரி
2. ஒரு தனிமத்தின் ஐசாேடாப்பு வெவ்வேறு அணு எண்களைக் காெண்டது.
விடை: தவறு
சரியான விடை: ஒரு தனிமத்தின் ஐசாேடாப்பு ஒத்த அணு எண்களைக் காெண்டது
3. எலக்ட்ரான்கள் மிகச்சிறிய அளவு நிறை மற்றும் மின்சுமை காெண்டவை.
விடை: சரி
4. ஆர்பிட்டின் அளவு சரியாக இருந்தால், அதன் ஆற்றல் குறைவாக இருக்கும்.
விடை: சரி
5. L-மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 10.
விடை: தவறு
சரியான விடை: L-மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8.
III. காேடிட்ட இடங்களை நிரப்புக
1. கால்சியம் மற்றும் ஆர்கான் இணை ……………….. எடுத்துக்காட்டு
விடை: ஐசாேபார்கள்
2. ஒரு ஆற்றல் மட்டத்தில் நிரப்பப்படும் அதிக பட்ச எலட்ரான்களின் எண்ணிக்கை ……………………
விடை: 2n2
3. ………………….. ஐசாேடாேப் கழுத்துக்கழலை நாேய்க்கு பயன்படுகிறது.
விடை: அயாேடின் – 131
4. ல் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை …………………..
விடை: 4
5. ஆர்கானின் இணைதிறன் …………………… பூஜ்ஜியம்
விடை: பூஜ்ஜியம்
6. ஹீலியத்தின் உட்கரு …………………
விடை: ஆல்ஃபா
7. அணுவின் மையத்தில் உள்ள நேர்மின் சுமை காெண்ட நிறை …………………
விடை: உட்கரு
8. நியூட்ரான் இல்லாத அணு …………………
விடை: புராேட்டியம்
9. ………………. கார்பன் வேதியிடலில் பயன்படுகிறது.
விடை: C14
10. வெளி ஆற்றல் மட்டத்தில் உள்ள எலக்ட்ரான்கள் …………………..
விடை : இணைதிறன்
11. 20Ca40 , 18Ar40 ஆகிய தனிமங்கள் …………………….
விடை: ஐசாேபார்
12. ………………….. அணுவின் இணைதிறன் பூஜ்ஜியமாகும்
விடை: ஹீலியம்
13. நியூட்ரான்களை கண்டறிந்தவர் …………………..
விடை: சாட்விக்
14. தங்கத் தகட்டின் சாேதனையில் α துகள்களின் சிதறல் ………………….
விடை: ருதர்ஃபாேர்டு
VI. பொருத்துக
1. டால்டன் | ஹைட்ரஜன் அணு மாதிரி |
2. தாம்ஸன் | காேள் மாதிரி |
3. ருதர்ஃபாேர்டு | முதல் அணுக் காெள்கை |
4. நீல்ஸ்பாேர் | பிளம்புட்டிங் மாதிரி |
நியூட்ரான் கண்டுபிடிப்பு | |
Ans : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ |
2.
1. புராேட்டானின் நிறை | 1.6 x 10-19 C |
2. எலக்ட்ரானின் நிறை | – 1.6 x 10-19 C |
3. எலக்ட்ரானின் மின்சுமை | 9.31 x 10-28 g |
4. புராேட்டானின் மின்சுமை | 1.67 x 10-24 g |
Ans : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ |
V. விடுபட்ட இடத்தை நிரப்புக
அணு எண் | நிறை எண் | நியூட்ரான்களின் எண்ணிக்கை | புராேட்டன்களின் எண்ணிக்கை | எலக்ட்ரான்களின் எண்ணிக்கை | தனிமம் |
9 | 19 | 10 | 9 | 9 | ஃப்ளுரின் |
16 | 32 | 16 | 16 | 16 | சல்ஃபர் |
12 | 24 | 12 | 12 | 12 | மெக்னீசியம் |
1 | 2 | 1 | 1 | 1 | டியூட்டீரியம் |
1 | 1 | 0 | 1 | 1 | புரோட்டியம் |
VI. மிகக் குறுகிய வினாக்கள்
1. முதல் வட்டப்பாதையிலும், இரண்டாவது வட்டப் பாதையிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை பெற்றுள்ள தனிமத்தை கூறுக.
பெரிலியம் (2,2)
2. K+ மற்றும் Cl– ஆகியவற்றின் எலக்ட்ரான் அமைப்பை எழுதுக.
K+ ன் எலக்ட்ரான் அமைப்பு : (2,8,8)
Cl– ன் எலக்ட்ரான் அமைப்பு : (2,8,8)
3. கீழே கொடுக்கப்பட்டுள்ள துகள்கள் குறிக்கும் குறியீட்டின் பெயரினை எழுதி அவற்றின் கீழ் மற்றும் மேலே உள்ள எண்கள் எதனைக் குறிக்கின்றன என்பதனை விளக்குக.
1H1, 0n1, –1e0
1H1 – புரோட்டான் மின்னலகு +1 நிறை 1 amu
0n1 – புரோட்டான் மின்னலகு 0 நிறை 1 amu
–1e0 – எலக்ட்ரான் மின்னலகு -1 நிறை 0 amu
4. X என்ற அணுவில் K, L, M கூடுகள் அனைத்தும் நிரம்பியிருந்தால், அந்த அணுவில் உள்ள மாெத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை என்ன?
மாெத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
= K + L + M
= 2 + 8 + 18 = 28
5. எலக்ட்ரான் அமைப்பினைப் பொறுத்து, இவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை யாது?
அ. லித்தியம், சோடியம் மற்றும் பொட்டாசியம்
லித்தியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் வெளிக்கூட்டில் 1 எலக்ட்ரானை கொண்டது.
ஆ. பெரிலியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம்
பெரிலியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் வெளிக்கூட்டில் 2 எலக்ட்ரானை கொண்டது.
6. புராேட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் மின்சுமை, நிறை ஒப்பிடுக.
துகள் | மின்சுமை | நிறை |
புராேட்டான் | 1.602 X 10-19 C | 1.672 X 10-24 g |
எலக்ட்ரான் | -1.602 X 10-19 C | 9.108 X 10-28 g |
7. Ca2+ வெளிவட்ட பாதையில் முழுவதுமாக நிரம்பியுள்ளது காரணம் கூறு
Ca ன் (Z=20) எலக்ட்ரான் அமைப்பு = 2,8,8,2
Ca-2e -> Ca2+
Ca2+ ன் எலக்ட்ரான் அமைப்பு = 2,8,8
அதாவது, Ca இரு எலக்ட்ரான்களை இழந்து Ca2+ ஆக மாறும் பாேது Ca2+ன் வெளிவட்டப்பாதை முழுவதுமாக நிரம்பியுள்ளது.
8. பெருக்கல் விகித விதியினை வரையறு.
A மற்றும் B என்ற இரு தனிமங்கள் இணைந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும் பாெழுது, A – யின் நிறையானது B-ன் நிறையாேடு எளிய விகிதத்தில்
சேர்ந்திருக்கும்.
9. ஐசாேடாேப்புகளின் பயன்களை எழுதுக
கார்பன் – 14 கார்பன் தேதியிடல்
அயாேடின் – 131 கழுத்துக் கழலை சிகிச்சை
காேபால்ட் – 60 புற்றுநாேய் சிகிச்சை
யுரேனியம் – 235 அணு உலை எரிபாெருள்
10. ஐசாேடாேன் என்றால் என்ன? உதாரணம் காெடு
ஒத்த நியூட்ரான் எண்ணிக்கை காெண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள்
ஐசாேடாேன்கள் எனப்படும்.
(உ.ம்) 11Na23 மற்றும் 12Mg24
VII. சுருக்கமாக விடையளி.
1. அணுவில் வெற்றிடம் இருப்பது எவ்வாறு கண்டறியப்பட்டது?
நியூசிலாந்தினை சேர்ந்த லாரட் ரூதர்போர்டு ஒரு மெல்லிய தங்கத் தகட்டின் மீது சிறிய நேர் மின்துகள்களான ஆல்பா கதிர்களை விழச்செய்து தங்கத்தகடு அணு ஆய்வு சோதனைய நடத்தினார். இச்சோதனையின் போது பெரும்பாலான ஆல்பான துகள்கள் தங்கத் தகட்டினுள் ஊடுருவி நேர்கோட்டுப் பாதையில் சென்றன. இதன் மூலம் அணுவின் பெரும்பகுதி வெற்றிடமாக உள்ளது என்று கண்டறிந்தார்.
2. இவற்றின் வேதியியல் பண்புகள் ஒன்றாக இருப்பதற்கான காரணம் யாது?
ஒரு தனிமத்தின் வேதிப்பண்பானது அத்தனிமத்தின் அணு எண்ணையும் எல்ட்ரான்களின் எண்ணிக்கையும் சாரந்தது.
3. ஆக்சிஜன் மற்றும் சல்ஃபர் அணுக்களின் அணு அமைப்பை வரைக.
4. கீழே காெடுக்கப்பட்டுள்ள அணு எண் மற்றும் நிறை எண்களை காெண்டு புராேட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கணக்கிடுதல்
i. அணு எண் 3 மற்றும் நிறை எண் 7
ii. அணு எண் 92 மற்றும் நிறை எண் 238
தனிமம் | புராேட்டான்கள் | நியூட்ரான்கள் | எலக்ட்ரான்கள் |
3X7 | 3 | 4 | 3 |
92X238 | 92 | 146 | 92 |
5. நியூக்ளியான் என்றால் என்ன? பாஸ்பரசில் எத்தனை நியூக்ளியான்கள் உள்ளன? அதன் அணு அமைப்பை வரைக.
அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களை நியூக்ளியான் என்கிறோம்.
பாஸ்பரசில் 15p, 16n உள்ளன.
VIII. விரிவாக விடையளி.
1. தங்கத் தகடு சோதனையின் மூலம் நீ என்ன முடிவிற்கு வருகிறாய்?
- அணுவின் பெரும்பகுதி வெற்றிடமாக உள்ளது.
- அணுவின் மையத்திலுள்ள அதிக நேர்மின் சுமையுடைய பகுதி உட்கரு எனப்படுகிறது.
- அணுவின் அளவை ஒப்பிடும்போது உட்கருவின் அளவு மிகச்சிறியதாக உள்ளது.
- எலக்ட்ரான்கள் உட்கருவைச் சுற்றி வரும் வட்டப் பாதை ஆர்பிட் என்றழைக்கப்படுகிறது.
- ஒட்டு மொத்தமாக ஒரு அணு நடுநிலை வாய்ந்தது ஆகும். அதாவது, அணுவிலுள்ள புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை சமமாக இருக்கும்.
2. போரின் அணு மாதிரியின் கூற்றுக்களைப் பற்றி விளக்குக.
- ஓர் அணுவில் எலக்ட்ரான்கள் நிலையான வட்டப்பாதையில் அணுக்கருவைச் சுற்றி வருகின்றன. இவ்வட்டப் பாதைகள் ஆர்பிட்டுகள் அல்லது ஆற்றல் மட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.
- ஒரே வட்டப்பாதையில் எலக்ட்ரான்கள் சுற்றி வருகையில் ஆற்றலை இழப்பதோ அல்லது ஏற்பதோ இல்லை.
- ஒரு ஆற்றல் மட்டத்திலிருக்கும் எலக்ட்ரான் உயர் அல்லது குறைந்த ஆற்றல் மட்டத்திற்கு நகரும்போது ஆற்றலை ஏற்கவோ அல்லது இழக்கவோ செய்யும்.
- இவ்வட்டப் பாதைகள் 1,2,3,4 அல்லது K,L,M,N எனப் பெயரிடப்படுகின்றன
3. கேலூசாக்கின் பருமன் இணைப்பு விதியை கூறி உதாரணத்துடன் விளக்கு.
“வாயுக்கள் வினைபுரியும் தபாது அவற்றின் பருமன்பள் அவ்வினையின் விளை பாெருள்களின் பருமனுக்கு எளிய முழுஎண் விகித்தில் இருக்கும்”.
(உ.ம்) H2 +Cl2 → 2HCl
(1 பருமன் + 1 பருமன் → 2 பருமன்
V. அணு எண்களைச் சார்ந்து ஏறுவரிசையில் எழுதவும்
கால்சியம், சிலிக்கன், பாேரான், மெக்னீசியம், ஆக்ஸிஜன், ஹீலியம், நியான், சல்ஃபர், ஃப்ளுரின், சோடியம்
ஹீலியம் < பாேரான் < ஆக்ஸிஜன் < ஃப்ளுரின் < நியான் < சோடியம் < மெக்னீசியம் < சிலிக்கன் < சல்ஃபர் < கால்சியம்
பயனுள்ள பக்கங்கள்