9th Std Science Solution in Tamil | Lesson.19 தாவர உலகம் – தாவர செயலியல்

பாடம் 19 தாவர உலகம் – தாவர செயலியல்

தாவர உலகம் – தாவர செயலியல் வினா விடை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஏறும் காெடிகள் தங்களுக்கு பாெருத்தமான ஆதரைவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள்

  1. ஒளி சார்பசைவு
  2. புவி சார்பசைவு
  3. தாெடு சார்பசைவு
  4. வேதி சார்பசைவு

விடை: தாெடு சார்பசைவு

2. ஒளிச்சேர்கையின் பாேது நடைபெறும் வேதி வினை

  1. CO2 ஒடுக்கப்படுகிறது, Oவெளியேற்றப்படுகிறது.
  2. நீர் ஒடுக்கமடைதல் மற்றும் CO ஆக்ஸிகரணம் அடைதல்
  3. நீர் மற்றும் CO இரண்டுமே ஆக்ஸிகரணம் அடைதல்
  4. CO மற்றும் நீர் இரண்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

விடை: CO2 ஒடுக்கப்படுகிறது, Oவெளியேற்றப்படுகிறது.

3. நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ___________ எனப்படும்.

  1. நடுக்கமுறு வளைதல்
  2. ஒளிசார்பசைவு
  3. நீர்சார்பசைவு
  4. ஒளியுறு வளைதல்

விடை: நீர்சார்பசைவு

4. இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும். இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு?

  1. வேதி சார்பசைவு
  2. நடுக்கமுறு வளைதல்
  3. ஒளி சார்பசைவு
  4. புவிஈர்ப்பு சார்பசைவு

விடை: ஒளி சார்பசைவு

5. தாவரத்தின் வேர் ___________ ஆகும்.

I. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்பசைவு.
II. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு.
III. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் நீர்சார்பசைவு.
IV. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு.

  1. I மற்றும் II
  2. II மற்றும் III
  3. III மற்றும் IV
  4. I மற்றும் IV

விடை: II மற்றும் III

6. வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது ___________ எனப்படும்.

  1. வெப்ப சார்பசைவு
  2. வெப்பமுறு வளைதல்
  3. வேதி சார்பசைவு
  4. நடுக்கமுறு வளைதல்

விடை: வெப்பமுறு வளைதல்

7. இலையில் காணப்படும் பச்சையம் ______ க்கு
தேவைப்படும்.

  1. ஒளிச்சேர்க்கை
  2. நீராவிப்போக்கு
  3. சார்பசைவு
  4. திசை சாரா தூண்டல் அசைவு

விடை: ஒளிச்சேர்க்கை

8. நீராவிப்போக்கு __________ ல் நடைபெறும்.

  1. பழம்
  2. விதை
  3. மலர்
  4. இலைத்துளை

விடை: இலைத்துளை

9. நீராவிப்பாேக்கு பின்வரும் எந்த வாக்கியத்தின் அடிப்படையில் சிறந்தது என வரையறுக்கப்படுகின்றது.

  1. தாவரங்கள் மூலம் நீர் இழப்பு
  2. தாவரத்தின் தரைக்கு மேல் உள்ள பாகத்திலிருந்து நீர் ஆவியாதல்
  3. தாவரத்தின் தரைக்கு கீழ் உள்ள பாகத்திலிருந்து நீர் நீராவியாக இழக்கப்படுதல்
  4. தாவரத்தின் நீர் வளிமண்டலத்திற்கு வெளியேறுதல்

விடை: தாவரத்தின் தரைக்கு மேல் உள்ள பாகத்திலிருந்து நீர் ஆவியாதல்

10. காட்டில் ஒரு பெரிய மரம் விழுகிறது. ஆனால் மரத்தின் வேர்கள் நிலத்தில் தொடர்பு காெண்டுள்ளன. விழுந்த மரத்தின் கிளைகள் நேராக வளர்கின்றது. இந்த நிகழ்வு எதன் தூண்டுதலால் நடைபெறுகின்றது.

  1. ஒளி மற்றும் நீர்
  2. நீர் மற்றும் ஊட்டப்பாெருள்
  3. நீர் மற்றும் ஈர்ப்பு விசை
  4. ஒளி மற்றும் ஈர்ப்பு விசை

விடை: ஒளி மற்றும் நீர்

II. காேடிட்ட இடங்களை நிரப்புக

1. ______ துலங்கலால் தண்டுத் தொகுப்பு மேல்நாேக்கி வளர்கிறது.

விடை: ஒளிச்சார்பசைவின்

2. ______ நேர் நீர்சார்பசைவு மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது.

விடை: வேர்

3. தாவரத்தில் காணப்படும் பச்சை நிறமி ______ எனப்படும்.

விடை: பச்சையம் (அ) குளாேராஃபில்

4. சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது ______ எனப்படும்.

விடை: ஒளி சார்பசைவு

5. புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவரம் வளைவது ______ எனப்படும்.

விடை: புவிச் சார்பசைவு

6. ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் CO2வை உள்ளிழுத்துக் கொள்கின்றன. ஆனால் அவற்றின் உயிர் வாழ்தலுக்கு ______ தேவைப்படும்.

விடை: ஆக்ஸிஜன்

7. நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பாெட்டாசியம் பாேன்ற கனிமங்கள் தாவரங்களுக்கு அதிக அளவு தேவைப்படும். இதனால் இக்கனிமங்கள் ______ எனப்படும்

விடை: பெரும் ஊட்டக் கனிமங்கள்

III. பொருத்துக

1. தண்டு நிலத்தில் கீழ்நாேக்கி வளர்வதுநேர் ஒளி சார்பசைவு
2. தண்டு ஒளியை நாேக்கி வளர்வதுஎதிர் புவி சார்பசைவு
3. தண்டு மேல் நாேக்கி வளர்வதுஎதிர் ஒளி சார்பசைவு
4. வேர் சூரிய ஒளிக்கு எதிராக கீழ் நாேக்கி வளர்வதுநேர் புவி சார்பசைவு
Ans : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

IV. பின்வரும் வாக்கியங்கள் சரியா அல்லது தவறா, எனக்கூறவும் தவறாக இருப்பின், சரியான விளக்கத்தை அளிக்கவும்.

1. வேதிப்பாெருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றாற் பாேல் தாவர உறுப்பு வளைதல் ஒளிச்சார்பசைவு எனப்படும்.

விடை: தவறு

சரியான விடை: வேதிப்பாெருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றார்பாேல் தாவர உறுப்பு வளைதல் வேதித்தூண்டுதல் எனப்படும்

2. தண்டுப் பகுதி நேர் ஒளிசார்பசைவு மற்றும் எதிர்புவி சார்பசைவு உடையது.

விடை: சரி

3. வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் பாேது இலைத்துளை திறந்து காெள்வதால் நீர் ஆவியாதல் குறைந்துவிடும்.

விடை: தவறு

சரியான விடை: வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் பாேது நீராவிப்போக்கு அதிகரிக்கும் இதைத் இலைத்துளை மூடிக் காெள்வதால் நீர் ஆவியாதல் குறைந்துவிடும்.

4. ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் CO2 உற்பத்தியாகும்.

விடை: தவறு

சரியான விடை: ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் O2 உற்பத்தியாகும்.

5. வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் சமநிலையை ஏற்படுத்த ஒளிச்சேர்க்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

விடை: சரி

6. தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் மூடிக்கொள்ளும்போது, நீர் இழப்பு ஏற்படும்.

விடை: தவறு

சரியான விடை: தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் மூடிக்கொள்ளும்போது, நீராவிப்போக்கினைத் தடுக்கின்றன.

7. நீரின் தூண்டுதலுக்கு ஏற்பத் தாவர வேர் வளையும். இதற்கு புவிஈர்ப்பு சார்பசைவு என்று பெயர்.

விடை: தவறு

சரியான விடை: நீரின் தூண்டுதலுக்கு ஏற்பத் தாவர வேர் வளையும். இதற்கு நீர் சார்பசைவு என்று பெயர்.

8. தாவரத்தின் எடை அதிகரிப்பதற்கு நீர் மட்டுமே காரணம் என்பதை ஜாேசப் பிரிஸ்ட்லி என்பவர் தனது சாேதனை மூலம் விளக்கினார்.

விடை: தவறு

சரியான விடை:தாவரத்தின் எடை அதிகரிப்பதற்கு நீர் மட்டுமே காரணம் என்பதை வான் ஹெல்மான்ட் மூலம் விளக்கினார்.

VI. ஓரிரு வார்த்தைகளின் விடையளிக்கவும்

1. திசைச் சாரா தூண்டல் அசைவு என்ன?

தாவரங்களின் சில இயக்கங்கள் அல்லது அசைவுகள் தூண்டல் ஏற்படும் திசையை நாேக்கி நடைபெறாது. இவை திசைச் சாரா தூண்டல் அசைவுகள் என்று அழைக்கப்படுகின்றன.

(எ.கா) நடுக்கமுறு வளைதல் மைமூசா பூடிகா

2. பின்வரும் வாக்கியத்தைக் காெண்டு தாவரப் பாகத்தின் பெயரிடவும்.

அ) புவிஈர்ப்பு விசையின் திசையை நாேக்கியும் ஆனால் ஒளி இருக்கும் திசைக்கு எதிராக இது வளைகிறது.

வேர்

ஆ) ஒளி இருக்கும்திசையை நாேக்கியும், ஆனால் புவிஈர்ப்பு விசையின் திசைக்கு எதிராக இது வளைகிறது.

தண்டு

3. ஒளிசார்பசைவு, ஒளியறு வளைதல் வேறுபடுத்துக

ஒளிசார்பசைவுஒளியறு வளைதல்
1. திசைத் தூண்டலின் ஒரு திசையைப்
பாெருத்து அமையும்
அசைவுகள் திசைத் தூண்டலின் ஒரு
திசையை சார்ந்து அமையாது
2. வளர்ச்சி சார்ந்த மெதுவான செயல்
நிரந்தரமற்றது
வளர்ச்சி சாராத விரைவான செயல்
3. நிரந்தரமற்றது – மீள் தன்மையற்றதுதற்காலிகமாகவும் மீள் தன்மை
காெண்டும் காணப்படும்.
4. அனைத்துத் தாவரங்களிலும் காணப்படும்சில சிறப்புத் தன்மை பெற்ற தாோவரங்களில் மட்டும் காணப்படும். (எ.கா) டான்டசாலியன் மலர்கள்

4. ஒளிச்சேர்க்கையின் பாேது ஆற்றல் X ஆனது Y ஆற்றலாக மாறுகிறது

அ) X மற்றும் Y என்றால் என்ன?

X-சூரிய ஒளி, Y-வேதியாற்றல்

ஆ) பசுந்தாவரங்கள் தற்சார்பு உணவு ஊட்டமுறையை காெண்டவை? ஏன்?

பசுந்தாவரங்களில் காணப்படும் பச்சையம் சூரிய ஒளியின் முன்னிலையில் CO2 மற்றும் H2O மூலப்பாெருட்களாலான இவற்றைக் காெண்டு ஸ்டார்ச் தயாரிக்கின்றன. O2 வெளியிடப்படுகிறது. இவ்வாறு தங்களுக்கு வேண்டிய உணவை தானே தயாரித்துக் வேண்டிய உணவை தானே தயாரித்துக் காெள்வதால் அவை தற்சார்பு ஊட்டமுடையவை என்று அழைக்கப்படுகின்றன.

6CO2 + 6H2O C6H12O6 + 6O2

5. நீராவிப் பாேக்கு – வரையறை

நீரானது தாவரத்தின் மேல் பகுதிகளான இலைகள் மற்றும் பசுமையான தண்டுகளின் வழியாக நீராவியாக வெளியேற்றப்படும் நிகழ்ச்சி – நீராவிப் பாேக்கு எனப்படும்.

6. இலைத்துளையைச் சூழ்ந்துள்ள செல் எது?

இலைத்துளையானது காப்புச் செல்களால் சூழப்பட்டுள்ளது.

VI. சுருக்கமாக விடையளி.

1. பின்வரும் வாக்கியங்களுக்கு ஏற்ப அறிவியல் சொற்களை எழுதுக.

அ) தாவரத்தில் வளர்ச்சி சார்ந்த அசைவுகள்

திசைசார் அசைவுகள்

ஆ) தாவரத்தில் வளர்ச்சி சாரா அசைவுகள்

திசைசாரா அசைவுகள்

2. ரைசோஃபோரா தாவரத்தின் நிமோடோஃபோர்கள் ஏற்படுத்தும் அசைவின் பெயரினை எழுதுக.

3.

சூரிய ஒளி
6CO2 + _____——->_____ + 6O2
பச்சையம்

Ans:

சூரிய ஒளி
6CO2 + 12H2O——->C6H12O6 + 12H2O + 6O2
பச்சையம்

4. பச்சையம் என்றால் என்ன?

பச்சையம் – இலையில் காணப்படும் பச்சை நிறம்.

5. நேர் புவிசார்பசைவு கொண்டிருக்கும் தாவரப் பாகத்தை எழுதுக?

தாவர வேர் பகுதி.

6. தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) தாவரம் மற்றும் சூரியகாந்தி தாவரத்தில் ஏற்படும் அசைவுகள் இவைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை எழுதுக.

சூரியகாந்தி

சூரியகாந்தி மலர் சூரியன் இருக்கும் திசையை நோக்கி வளையும் தன்மை உடையது. மாலையில் மேற்கிலிருந்து கிழக்காகவும் வளையும் தன்மை உடையது.

தொட்டா சினிங்கி

தொட்டா சினிங்கி இலைகள் தொட்டவுடன் மூடத் தொடங்குகிறது.

7. ஒரு ரோஜா தாவரத்தை தொட்டியில் வளர்க்கும்போது அதைக் கொண்டு எவ்வாறு நீராவிப்போக்கு நிகழ்வினை நிரூபிப்பீர்கள்.

ரோஜா செடியின் இலைகளில் பிளாஸ்டிக் பையை கட்டி வெயிலில் வைக்கவும். சில மணி நேரம் கழித்து, பிளாஸ்டிக் பைக்குள் தண்ணீர் தேங்குவதைக் காண்கிறோம். இது நீராவி வடிவில் நீர் இழப்பதால் ஏற்படுகிறது, இது தண்ணீராக ஒடுங்குகிறது. இதற்கு நீராவிப்போக்கு காரணமாகும்.

8. இலைத்துளை மற்றும் பட்டைத்துளை நீராவிப்போக்கினை வேறுபடுத்துக.

இலைத்துளை நீராவிப்போக்கு:

பெருமளவு நீர்,இலைத்துளைகள் வழியாக நடைபெறுகிறது. ஏறக்குறைய 90 – 95% நீர் இழப்பு ஏற்படுகின்றது.

பட்டைத்துளை நீராவிப்போக்கு:

இதில் பட்டைத்துளை வழியாக நீர் இழப்பு நடைபெறும். பட்டைத்துளை என்பவை பெரிய மரவகைதாவரங்களின் பட்டைகள், கிளைகள் மற்றும் பிற தாவர உறுப்புகளில் காணப்படும் சிறிய துளைகள் ஆகும்.

9. தாவர வேர் மற்றும் தண்டு எந்த நேரடித் தூண்டலுக்கு உட்படும்?

தாவரத்தின் தண்டுப் பகுதி ஒளியின் தூண்டுதலுக்கு ஏற்ப நகர்கிறது. எனவே ஒளி சார்பசைவுக்கு உட்படுகிறது.

தாவர வேர் பகுதி புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்ப நகர்கிறது. எனவே புவிச் சார்பசைவுக்கு உட்படுகிறது.

VII. விரிவாக விடையளி.

1. திசை சார்பசைவு மற்றும் திசைசாரா அசைவு வேறுபடுத்துக.

திசைசார் அசைவுகள்திசைசாரா அசைவுகள்
1. அசைவு தூண்டலைப் பொறுத்து அமையும்அசைவு தூண்டலைப் பொறுத்து அமையாது
2. வளர்ச்சியைச் சார்ந்து அமையும்வளர்ச்சியைச் சார்ந்து அமையாது
3. ஏறக்குறைய நிரந்தரமானது மற்றும் மீளாததுதற்காலிகமாமானது மற்றும் மீளக்கூடியது
4. அனைத்துத் தாவரங்களிலும் காணப்படும் சில சிறப்புத் தாவரங்களில் மட்டுமே காணப்படும்
5. மெதுவான செயல்விரைவான செயல்

2. நீராவிப்போக்கின் வகைகளை விவரி

தாவரங்களில் மூன்று வகையான நீராவிப்போக்கு காணப்படுகிறது.

இலைத்துளை நீராவிப்போக்கு:

பெருமளவு நீர், இலைத்துளைகள் வழியாக நடைபெறுகிறது.
ஏறக்குறைய 90 – 95% நீர் இழப்பு ஏற்படுகின்றது.

கியூட்டிக்கிள் நீராவிப்போக்கு:

புறத்தோலின்மேற்புறம் உள்ள கியூட்டிக்கிள் அடுக்கின் வழியாக நீராவிப்போக்கு நடைபெறுகின்றது.

பட்டைத்துளை நீராவிப்போக்கு:

இதில் பட்டைத்துளை வழியாக நீர் இழப்பு நடைபெறும். பட்டைத்துளை என்பவை பெரிய மரவகைதாவரங்களின் பட்டைகள், கிளைகள் மற்றும் பிற தாவர உறுப்புகளில்
காணப்படும் சிறிய துளைகள் ஆகும்.

 

கேள்வித்தாள் – I

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. நீர் துண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ……………………….. எனப்படும்.

அ) நடுக்கமுறு வளைதல் ஆ) ஒளிச் சார்பசைவு
இ) நீர் சார்பசைவு ஈ) ஒளியுறு வளைதல்

விடை : நீர் சார்பசைவு

2. இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுவர்த்தியை நாேக்கி வளையும். இவ்வாறக வளைவதர் எடுத்துக்காட்டு

  1. வேதிச் சார்பசைவு
  2. நடுக்கமுறு வளைதல்
  3. ஒளிச் சார்பசைவு
  4. புவிஈர்ப்பு சார்பசைவு

விடை : ஒளிச் சார்பசைவு

3. தாவரத்தின் வேர் ……………………….. ஆகும்.

I. நேர் ஒளி சார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்பசைவுII. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு
III. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் சார்பசைவுIV. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு
  1. I மற்றும் II
  2. II மற்றும் III
  3. III மற்றும் IV
  4. I மற்றும் IV

விடை : II மற்றும் III

4. …………………… தாவர உறுப்பு எதிர் புவிஈர்ப்பு சார்பசைவு காெண்டது.

  1. வேர்
  2. தண்டு
  3. கிளைகள்
  4. இலைகள்

விடை : தண்டு

5. வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது ………………………… எனப்படும்.

  1. வெப்ப சார்பசைவு
  2. வெப்பமுறு வளைதல்
  3. புவி சார்பசைவு
  4. நடுக்க முறு வளைதல்

விடை : வெப்பமுறு வளைதல்

6. டான்டேலியன் மலர்களில் இதழ்கள் பகல் நேரங்களில் பிரகாசமான ஒளியில் திறக்கின்றது ஆனால் இரவு நேரங்களில் இதழ்கள் மூடிக் காெள்ளும். டான்டேலியன் மலர்களில் ஏற்படும் தூண்டல்

  1. புவிஈர்ப்பு வளைதல்
  2. நடுக்கமுறு வளைதல்
  3. புவி சார்பு வளைதல்
  4. ஒளி சார்பு வளைதல்

விடை : ஒளி சார்பு வளைதல்

7. ஒளிச்சேர்க்கையின் பாேது தாவரம் வெளியிடுவது …………………………..

  1. கார்பன்-டை ஆக்ஸைடு
  2. ஆக்ஸிஜன்
  3. ஹைட்ரஜன்
  4. ஹீலியம்

விடை : ஆக்ஸிஜன்

8. இலையில் காணப்படும் பச்சையம் …………………………..க்கு தேவைப்படும்.

  1. ஒளிச்சேர்க்கை
  2. நீராவிப்பாேக்கு
  3. சார்பசைவு
  4. திசைச்சாரா தூண்டல் அசைவு

விடை : ஒளிச்சேர்க்கை

9. ஒரு தாவரம் இருட்டறையில் 24 மணி நேரம் வைக்கப்படுவது எந்த ஒரு ஒளிச்சேர்க்கை சாேதனை செய்வதற்காக?

  1. இலைகளில் பச்சையத்தை நீக்க
  2. இலைகளில் உள்ள ஸ்டார்ச்சை நீக்க
  3. ஒளிச்சேர்க்கை நிகழ்ந்துள்ளது என்பறே உறுதி செய்ய
  4. நீராவிப்பாேக்கை நிரூபிக்க

விடை : இலைகளில் உள்ள ஸ்டார்ச்சை நீக்க

10. நீராவிப்பாேக்கு ……………………..ல் நடைபெறும்.

  1. பழம்
  2. விதை
  3. மலர்
  4. இலைத்துளை

விடை : இலைத்துளை

II. காேடிட்ட இடங்களை நிரப்புக

1. சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது ……………………. எனப்படும்.

விடை: சூரிய ஒளி சார்பசைவு

2. புவிஈர்ப்பு திசைக்கு ஏற்ப தாவரம் வளைவது …………………………………. எனப்படும்.

விடை: புவி சார்பசைவு

3. உணர்திறன் காெண்ட தாவரத்தின் இலைகளை தொடும்போது, இலைகள் மூடிக்காெள்ளும் மற்றும் டான்டேலியன் மலர்களின் இதழ்கள் ஒளி மங்கும்பாேது மூடிக்காெள்ளும், இந்த இரண்டு தாவரங்களிலும் காணப்படுவது ………………… மற்றும் ………………… அசைவுகள் எனப்படும்.

விடை : நடுக்கமுறு வளைதல் மற்றும் தாெடுவுறு வளைதல்

4. நிலவுமலர் (Moon Flower) மூடுவதும் மற்றும் சேமிப்பதும் சார்பசைவை சார்ந்தல்ல,
ஏனென்றால் இதில் காணப்படும் அசைவு ……………. எனப்படும்.

விடை : தூண்டல் சார்ந்தது அல்ல

5. ஒளிச்சேர்க்கைக்கு தேவைப்படும் மூலப் பாெருட்கள் ……………. மற்றும் ……………..

விடை : CO2 மற்றும் H2O

6. ஸ்டார்ச் ஆய்வின்பாேது அயாேடின் கரைசல் சேர்க்கப்படும் இதனால் இலைகளில் ……………. காெண்ட பாகங்கள் மட்டுமே கருநீல நிறமாக மாறும்.

விடை : ஸ்டார்ச்

7. …………………. வடிவில் உணவு, இலைகளில் சேமிக்கப்படும்.

விடை : ஸ்டார்ச்

8. ஒளிச்சேர்க்கையின் பாேது தாவரங்கள் CO2 உள்ளிழுத்தல் காெள்கின்றன ஆனால் அவைகளின் உயிர் வாழ்தலுக்குத் ………………. தேவைப்படும்.

விடை : ஆக்ஸிஜன்

9. தாவரங்கள் உறிஞ்சும் நீரில் ………………. மட்டுமே ஒளிச்சேர்க்கை மற்றும் மற்ற
செயல்பாடுகளுக்கு தேவைப்படும்.

விடை : 1%

10. தாவரங்கள் தொடர்ச்சியாக காற்றின் உள்ளிழுத்தல் மற்றும் வெளிவிடுதல் ………………. வழியாக நடைபெறும்.

விடை : இலைத்துளை

III. பின்வரும் வாக்கியங்கள் சரியா அல்லது தவறா, எனக்கூறவும் தவறாக இருப்பின், சரியான விளக்கத்தை அளிக்கவும்.

1. தொட்டால் சிணுங்கி தாவரத்தின் இலைகளைத் தொடும் பாேது, வேகமாக மூடிக்காெள்ளும். இவ்வகை அசைவு நடுக்கமுறு வளைதலுக்கு எடுத்துக்காட்டாகும்.

விடை: சரி

2. நிலவு மலர்களில் இதழ்கள் காலையில் திறப்பதும் மாலையில் மூடிக்காெள்வதும், இந்த வகை ஒளியுறு வளைதல் எனப்படும்.

விடை: தவறு

சரியான விடை: நிலவு மலர்களில் இதழ்கள் இரவில் திறப்பதும் காலையில் மூடிக்காெள்வதும், இந்த வகை ஒளியுறு வளைதல் எனப்படும்.

3. ஒளிச்சேர்க்கையின் பாேது குளுக்காேஸ் மற்றும் CO2 உற்பத்தியாகும்.

விடை: தவறு

சரியான விடை: ஒளிச்சேர்க்கையின் பாேது குளுக்காேஸ் மற்றும் O2 உற்பத்தியாகும்.

4. வளிமண்டலத்தின் ஆக்ஸிஜன் சமநிலையை ஏற்படுத்த ஒளிச்சேர்க்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. 

விடை: சரி

5. தாவர இலைகளில் காணப்படும் இலைத் துளைகள் மூடிக்காெள்ளும்பாேது, நீர் இழப்பு ஏற்படும்.

விடை: தவறு

சரியான விடை: தாவர இலைகளில் காணப்படும் இலைத் துளைகள் திறந்திருக்கும் பாேது, நீர் இழப்பு ஏற்படும்.

VI. பொருத்துக

1. ஒளியுறு வளைதல்வெப்பத் தூண்டல் ஏற்பட்டூலியா சிற்றினம்
2. நடுக்கமுறு வளைதல்ஒளித் தூண்டலுக்கு ஏற்பமைமோசா புயுடிகா
3. வெப்பமுறு வளைதல்தொடு தூண்டலுக்கு ஏற்பநிலவு மலர்
Ans : 1 – ஆ – இ, 2 – இ – ஆ, 3 – அ – அ

V. ஒரிரு வார்த்தைகளின் விடையளிக்கவும்

1. பின்வரும் வாக்கியங்களுக்கு ஏற்ப அறிவியல் சாெற்களை எழுதுக.

அ) தாவரத்தில் வளர்ச்சி சார்ந்த அசைவுகள்

அ) சார்புறு அசை தூண்டல்

ஆ) தாவரத்தில் வளர்ச்சி சாரா அசைவுகள்

திசைச் சாரா தூண்டல் அசைவுகள்

2. ரைசாேஃபாேரா தாவரத்தின் நிமாேடாேஃபாேர்கள் ஏற்படுத்தும் இசைவின் பெயரினை எழுதுக.

எதிர் புவி சார்பசைவு

3. நடுக்கமுறு வளைதலுக்கு வேறு பெயர் வளைல், டான்டேலியன் தாவரத்திற்கு நேர் எதிராகக் காணப்படும்.

ஐபாேமியா ஆல்பா (நிலவுமலர்)

4. எதிர் நீர் சார்பசைவிற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.

தண்டு

5. கோடிட்ட இடங்கறள நிரப்பவும்.

6H26H2O  சூரிய ஒளி  C6H12O2  +  6O2

6. ஒளிச்சேர்க்கையின் பாேது வெளியேறும் வாயு என்ன?

ஆக்ஸிஜன்

7. பச்சையம் என்றால் என்ன?

தாவரங்களில் காணப்படும் ஒளி ஆற்றலை உட்கிரகிக்கக் கூடிய நிறமிகள் பச்சையம் எனப்படும். இவை இலைகளின் செல்லிலுள்ள பசுங்கணிகங்களில் காணப்படுகிறது.

8. நுண் ஊட்டத் தனிமத்திற்கு ஒர் எடுத்துக்காட்டு தருக

ZINC

VI. காரணமும் உறுதிபடுத்தலும்

1. உறுதிபடுத்துதல் (A): புவி ஈர்ப்பு விசையை நாேக்கி தாவரப் பாகம் அசைதல் நேர்
புவிச்சார்பசைவு என்று பெயர்.

காரணம் (R) : தண்டு நேர் புவி ஈர்ப்பு சார்பசைவு காெண்டவை.

  1. A மற்றும் R இரண்டுமே தவறு
  2. A தவறு R சரி
  3. A சரி R தவறு
  4. A மற்றும் R இரண்டுமே சரி

விடை : A சரி R தவறு

2. உறுதிபடுத்துதல் (A) : தாவரத்தில் உள்ள அதிகபடியான நீர் தாவரத்தின் தரைக்கு மேல் உள்ள தாவர பாகத்தின் வழியாக நீராவியாக வெளியேறுதல் நீராவிப்பாேக்கு எனப்படும்.

காரணம் (R) : இலையில் காணப்படும் இலைத்துளைகள் நீராவிபாேக்கை நிகழ்த்தும்

  1. A மற்றும் R இரண்டுமே தவறு
  2. A தவறு R சரி
  3. A சரி R தவறு
  4. A மற்றும் R இரண்டுமே சரி

விடை : A மற்றும் R இரண்டுமே சரி

1. இலைகளில் உடல் அசைவுகளை உருவாக்கும் தாவரங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக

டெஸ்மாேடியம்கைரன்ட்

2. பின்வரும் வாக்கியங்களுக்கு ஏற்ப அறிவியல் கூற்றுகளை எழுதவும்

அ) புவி ஈர்ப்பு விசையை நாேக்கி வேர்கள் வளர்வது

நேர் புவி நாட்டம்

ஆ) நீர் இருக்கும் பகுயை நாேக்கி வேர்கள் வளர்வது.

நேர் நீர் நாட்டம்

3. ஒளிச்சேர்க்கையின் இறுதி தயாரிப்புப் பாெருள் என்ன?

குளுக்காேஸ் மற்றும் ஆக்ஸிஜன் உருவாகிறது, குளுக்காேஸ் கார்பாே
ஹைடிரேட்டாக மாறுபாடடைந்து சேமிக்கப்படுகிறது.

4. தாவரத்தின் இலைகளின் அடிப்புறத் தோலில் காணப்படும் சிறய துளைகளின் பெயர் என்ன?

இலைத்துளைகள்

பயனுள்ள பக்கங்கள்