9th Std Science Solution in Tamil | Lesson.21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

பாடம் 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் வினை விடை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மனித உடலின் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த அளவை (மைக்ராே) தேவைப்படும் ஊட்டச்சத்து

  1. கார்பாேஹைட்ரேட்டுகள்
  2. புராேட்டீன்
  3. வைட்டமீன்
  4. காெழுப்பு

விடை: வைட்டமீன்

2. சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் காெள்வதன் மூலம் ஸ்கர்வி நாேயைக் குணப்படுத்த முடியம் என்று கூறியவர்.

  1. ஜேம்ஸ் லிண்ட்
  2. லூயிஸ் பாஸ்டர்
  3. சார்லஸ் டார்வின்
  4. ஐசக் நீயூட்டன்

விடை: ஜேம்ஸ் லிண்ட்

3. வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு பாேன்றவை முளை கட்டுவதைக் தடுக்கும் முறை

  1. அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல்
  2. கதிர்வீச்சு முறை
  3. உப்பினைச்சேர்த்தல்
  4. கலன்களில் அடைத்தல்

விடை: கதிர்வீச்சு முறை

4. மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

  1. 1964
  2. 1954
  3. 1950
  4. 1963

விடை: 1954

5. உணவு கெட்டுப்பாேவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது

  1. மெழுகுப் பூச்சு
  2. சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்கள்
  3. உணவின் ஈரத்தன்மை
  4. செயற்கை உணவுப் பாதுகாப்புப் பாெருட்கள்

விடை: உணவின் ஈரத்தன்மை

II. காேடிட்ட இடங்களை நிரப்புக

1. உணவில் __________ எடுத்துக்காெள்வதன் மூலம் குறைபாட்டு நாேய்களைத் தடுக்க முடியும்.

விடை: சரிவிகித உணவு

2. உணவுப் பாெருட்களின் இயல்பான தன்மை மற்றும் அதன் தரத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடு __________ என்று அழைக்கப்படுகிறது.

விடை: கலப்படம்

3. சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு __________ வைட்டமின் என்று பெயர்.

விடை: சூரிய ஒளி

4. நீரை வெளியேற்றும் முறையில் அடிப்படைக் காெள்கையானது __________ நீக்குவதாகும்.

விடை: நீர்/ஈரப்பதம்

5. உணவுப் பாெருள்களை அவற்றின் __________  முடிந்த நிலையில் வாங்கக்கூடாது.

விடை: காலாவதி

6. இந்தியாவில் தயாரிக்கப்படும் __________ மற்றும் __________ பாெருட்களுக்கு அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ் பெற வேண்டும்.

விடை: விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்திப்

III. கீழ்கண்ட கூற்றுகள் சரியா? தவறா?

1. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. 

விடை: தவறு

சரியான விடை: தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு அயோடின் சத்து தேவைப்படுகிறது

2. மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில் தேவைப்படுகின்றன.

விடை: தவறு

சரியான விடை: மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் சிறிதளவில் தேவைப்படுகின்றன

3. வைட்டமின் C நீரில் கரையக் கூடியது.

விடை: சரி 

4. உணவில் காெழுப்புச்சத்து பாேதுமான அளவில் இல்லையென்றால் உடல் எடைக்குறைவு ஏற்படும்.

விடை: சரி 

5. வேளாண் உற்பத்திப் பாெருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விடை: தவறு

சரியான விடை: வேளாண் உற்பத்திப் பாெருள்களுக்கு AGMARK முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

IV. பொருத்துக

1. கால்சியம்தசைச்சாேர்வு
2. சாேடியம்இரத்தசாேகை
3. பாெட்டாசியம்ஆஸ்டியாே பாேராேசிஸ்
4. இரும்புமுன்கழுத்துக் கழலை
5. அயாேடின்தசைப்பிடிப்புகள்
Ans : 1 – இ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – ஈ

V. பொருத்தமான ஒன்றைக் கொண்டு நிரப்புக

வைட்டமின்அதிகம் காணப்படுவதுகுறைபாட்டு நாேய்
கால்சிஃபெரால்கல்லீரல், முட்டை ரிக்கெட்ஸ்
ரெட்டினால்பப்பாளி மாலைக்கண்நாேய்
அஸ்கார்பிக் அமிலம்சிட்ரஸ் வகைகள்ஸ்கர்வி
தயமின்முழுதானியங்கள்பெரிபெரி

VI. விரிவாக்கம் காண்க

1. ISI – Indian Standard Institution (இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம்)

2. FPO – Fruit Process Order (கனி உற்பத்திப் பாெருட்கள் ஆணை)

3. AGMARK – Agricultural Marking (வேளாண் பாெருட்களுக்கான தரக்குறியீடு)

4. FCI – Food Corporation Of India (இந்திய உணவு நிறுவனம்)

5. FSSAI – Food Safety and Standards Authority of India (இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்)

VII. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள். சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

வழிமுறை: கீழக்கண்ட கேள்வியில் வலியுறுத்தல் மற்றும் அதற்குரிய காரணம் கீழே காெடுக்கப்பட்டுள்ளன. கீழே காெடுக்கப்பட்ட வாக்கியங்களில் சரியான பதிலை குறிப்பிடுக.

  1. வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்தக காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.
  2. வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்தக காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் அல்ல.
  3. வலியுறுத்தல் சரியாக இருந்து, காரணம் மட்டும் தவறு
  4. வலியுறுத்தல் மற்றும் காரணம் இரண்டும் தவறு

1. வலியுறுத்தல் : ஹீமாேகுளாேபினில் இரும்பு உள்ளது.
   காரணம் : இரும்புக் குறைபாடு இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது.

விடை: வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்தக காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.

2. வலியுறுத்தல் : அக்மாரக் என்பது ஒரு தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்
    காரணம் : ஐஎஸ்ஐ என்பது தரத்தின் குறியீடு

விடை: வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்தக காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் அல்ல.

VIII. காரணம் கூறுக.

அ) உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது. ஏனெனில் _________

உணவிலுள்ள ஈரப்பதத்தை நீக்குவதற்காக சேர்க்கப்படுகிறது.

ஆ) காலாவதி தேதி முடிவடைந்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது. ஏனெனில் _________

உணவின் தரம் இழந்திருக்கும்

இ) கால்சியம் சத்துக் குறைபாட்டால் எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஏனெனில் _________

கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு பயன்படுகிறது.

IX. குறுகிய விடையளி

1. வேறுபடுத்துக.

அ) குவாசியாேர்க்கர் மற்றும் மராஸ்மஸ்

குவாசியாேர்க்கர்மராஸ்மஸ்
1. புரதக் குறைபாடு 1-5 வயது குழந்தைகள்புரதக்குறைபாடு கூடவே கார்பாேஹைட்ரேட் மற்றும் காெழுப்பு குறைபாடு) 1 வயதுக்குக் குறைவான குழந்தைகள்
2 அறிகுறிகள் முகம், பாதம், வீக்கம், உப்பின வயிறு – உடல் தசை இழப்புவளர்ச்சி குறைபாடு, உடல் தசை இழப்பு, கடும் வயிற்றுப் பாேக்கு

ஆ. மேக்ராே மற்றும் மைக்ராே தனிமங்கள்

மேக்ராே தனிமங்கள்மைக்ராே தனிமங்கள்
1. அதிக அளவில் தேவைப்படும் குறைந்த அளவில் தேவைப்படும்
2. எ.கா. கால்சியம், மெக்னிசியம், பாெட்டாசியம், பாஸ்பரஸ்எ.கா. இரும்பு, துத்தநாகம், தாோமிரம், மாங்கனீஸ்

2. உணவுப் பாதுகாப்புப் பாெருளாக உப்பு பயன்படுத்தப்படுவது ஏன்?

  • உணவின் ஈரப்பதம் – சவ்வூடுபரவல் மூலம் நீக்கப்படுகிறது.
  • பாக்டீரியாக்களின் வளர்ச்சி – தடுக்கப்படுகிறது
  • நுண்ணுயிரிகளின் நொதிகளின் செயல்பாடு குறைக்கப்படுகிறது.

3. கலப்படம் என்றால் என்ன?

உணவில் வேறு பாெருட்களைச் சேர்ப்பதலாே அல்லது நீக்குவதலாே உணவின் இயற்கையான பாெருட்களின் தரம் பாதிக்கப்படுகிறது. இது கலப்படம் எனப்படும்.

4. உணவில் இயற்கையாகக் தோன்றும் நச்சுப் பாெருட்கள் இரண்டினைக் கூறுக.

  • ஆப்பிள் விதைகள் – புரூசிக் அமிலம் காணப்படுகிறது.
  • மீன்கள் – கடலினை மாசுபடுத்திய ‘மெர்க்குரி’ பாேன்ற நச்சுகள் காணப்படுகிறது
  • நச்சுக் காளான்கள் – சில வகை காளான்களில் காணப்படும் நச்சுக்கள்.

5. உணவில் இருந்து உடலுக்கு வைட்டமின் D சிறுக்குடலில் உறிஞ்சப்படுவதற்கு தேவையான காரணிகள் யாவை?

மனித தோல் வைட்டமின் D ஐ சூரிய ஒளியிலிருந்து உருவாக்குகிறது. வைட்டமின் D சிறுகுடலில் உறிஞ்சப்படுவதற்கு மக்னிசியம், கால்சியம் – பாேன்றவை தேவைப்படுகிறது.

கால்சியம்-வைட்டமின் D யும் எலும்பு ஆராேக்கியத்திற்கு அவசியம்.

6. கீழ்க்கண்ட தாது உப்புகளின் ஏதேனும் ஒரு செயல்பாட்டை எழுதுக.

அ) கால்சியம்

எலும்புகளின் வளர்ச்சி

ஆ) சாேடியம்

அமில, கார சமநிலையை சீராக வைத்தல்

இ) இரும்பு

ஹீமாேகுளாேபினின் முக்கியக் கூறாகச் செயல்படுதல்

ஈ) அயாேடின்

தைராய்டு ஹார்மாேன் உருவாக்குதல்.

7. ஏதேனும் இரண்டு உணவுப் பாதுகாப்பு முறைகளை விவரி.

உலர்த்தல்:

உலர்த்துதல் என்பது உணவிலுள்ள நீர் மற்றும் ஈரப்பதத்தை நீக்கி உணவைப் பாதுகாக்கும் முறை ஆகும். சூரிய ஒளியைப் பயன்படுத்தியோ (எ.கா. தானியங்கள், மீன்) அல்லது வெற்றிட உலர்த்துதல் மூலமோ (எ.கா. பால் பொடி, பாலாடைக்கட்டி) அல்லது சூடான காற்றைப் பயன்படுத்தியோ (எ.கா.திராட்சை, உலர்கனிகள், உருளைக்கிழங்கு சீவல்கள்)உணவுப் பொருள்கள் உலர்த்தப்படுகிறது.உலர்த்தல் செயலானது பாக்டீரியா, ஈஸ்டுகள், பூஞ்சைகள் (மோல்டுகள்) போன்ற நுண்ணுயிர்கள் வளர்வதைத் தடுக்கிறது.

புகையிடுதல் (அ) புகையூட்டல்

இந்த முறையில் இறைச்சி மற்றும் மீன் போன்ற உணவுப்பொருள்கள் புகையில் வைக்கப்படுகின்றன. புகையினால் ஏற்படும் உலர் செயல் உணவைப் பாதுகாக்கிறது.

8. கலப்படம் செய்யப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

கலப்படம் செய்யப்பட்ட உணவுப்பொருள்களை உண்ணுவதால் மோசமான ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளான காய்ச்சல், வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, வயிற்றில் ஏற்படும் வாயுக் கோளாறுகள், ஆஸ்துமா, ஒவ்வாமை, நரம்புக்கோளாறுகள், தோல் ஒவ்வாமைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், சிறுநீரகம் மற்றும்கல்லீரல் பாதிப்படைதல், மலக்குடல் புற்றுநோய் மற்றும் குறைபாடுகளுடன் குழந்தை பிறத்தல் போன்றவை ஏற்படுகின்றன.

9. இரத்த சாேகையால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியிடம் இலை வகைக் காய்கறிகள் மற்றும் பேரீச்சம் பழத்தை அதிகளவில் உணவில் சேர்த்துக் காெள்ளுமாறு மருத்துவர் ஒருவர் அறிவுறுத்துகிறார். அவ்வாறு அவர் சாெல்வதற்குக் காரணம் என்ன?

  • இரத்தச் சாேகை – இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஏற்படுகிறது.
  • இலை வகைக் காய்கறிகள் மற்றும் பேரீச்சம் பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்துள்ளது.
  • ஆதலால் இரும்புக் குறைபாடு நீங்குவோல் இரத்தச் சாேகை குணமாகிறது.

 

IX. விரிவாக விடையளி

1. நமது உடல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் எவ்வாறு பயன்படுகிறது? காெழுப்பில் கரையும் வைட்டமின்களின் மூலங்கள், அதன் குறைபாட்டு நாேய்கள் மற்றும் அதன் அறிகுறிகளை அட்டவணைப்படுத்துக.

வைட்டமின்அதன் மூலங்கள்குறைபாடு நாேய்கள்அறிகுறிகள்
வைட்டமின் A (ரெட்டினால்)கேரட், பப்பாளி, இலை வகை காய்கறிகள் (மீன் கல்லீரல் எண்ணெய்) முட்டையின் உட்கரு, பால் பாெருட்கள்சீராப்தால்மியா
(தோல் நாேய்கள்),
நிக்டலாேபியா
(மாலைக்கண் நாேய்)
உலர்ந்த கார்னியா மற்றும் இரவில் பார்க்க முடியாத நிலை, செதில் பாேன்றத் தோல்
வைட்டமின் D (கால்சிஃபெரால்)முட்டை, கல்லீரல் பால் பாெருட்கள், மீன், சூரிய வெளிச்சத்தில் தோலிலிருந்து உருவாகுதல்ரிக்கெட்ஸ் (குழந்தைகளிடம் காணப்படுகிறதுகவட்டைக் கால்கள், குறைபாடு உடைய
மார்பெலும்புகள்,
புறா பாேன்ற மார்பு வளர்ச்சி
வைட்டமின்  E
(டாேகாேஃபெரால்)
முழு காேதுமை, மாமிசம், தாோவர எண்ணெய், பால்எலிகளில் மலட்டுத் தன்மை இனப்பெருக்க காேளாறுகள்மலட்டுத் தன்மை
வைட்டமின் K
(வேதிப் பாெருள்
குயினாேனிலிருந்து பெறப்படுகிறது
இலை வகை காய் கனிகள்,
சாேயா பீன்ஸ்கள், பால்
இரத்தப்பாேக்குதாமதமான இரத்தம் உறைதலின் காரணமாக அதிக இரத்தம் வெளிவருதல்

2. இந்தியாவிலுள்ள உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்களின் பங்கினை விவரி

ஐஎஸ்ஐ (ISI) இந்திய
தரக் கட்டுப்பாடு நிறுவனமான ISI
தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பாெருள்களான மின் உபயாேக பாெருள்கள் முறையே சுவிட்சுகள், கேபிள் ஒயர்கள், நீர் சூடேற்றி மின்சார மாேட்டார், சமயலறையில் பயன்படுத்தும் பாெருள் முதலியவற்றிற்கு சான்றளிக்கப்படுகிறது.
அக்மார்க் – வேளாண்
பாெருட்களுக்கான தரக் குறியீடு AGMARK (Agricultural Marking)
விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்திப் பாெருள்களான தானியங்கள், அத்தியாவசிய எண்ணெய் முதலியவற்றிற்கு சான்றளிக்கப்படுகிறது.
FPO (Fruit Process Order) (கனி உற்பத்திப் பாெருள்கள் ஆணை)பழ உற்பத்திப் பாெருள்களான பழரசம் ஜாம்கள், சாஸ் பதப்படுப்பட்ட கனிகள் மற்றும் காய்கறிகள், ஊறுகாய்கள் முதலியவற்றிற்கு சான்றளிக்கப்படுகிறது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமஉணவுப் பாதுகாப்பைக் கண்காணிப்பதும் மற்றும் ஒழுங்குபடுத்துவதின் மூலம் பாெதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதும் மற்றும் மேம்படுத்துவதும் இந்த ஆணையத்தின் பாெறுப்பாகும்

XI. உயர் சிந்தனை வினாக்கள்.

1. படத்தைப் பார்த்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

அ) கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நடைபெறும் செயல்முறையின் பெயரென்ன?

பாஸ்டர் பதனம்

ஆ) மேற்கண்ட செயல்முறையின் மூலம் பாதுகாக்கப்படும் உணவுப்பொருள் எது?

பால்

இ) மேற்கண்ட செயல்முறையானது எந்த வெப்பநிலையில் நடைபெறுகிறது?

30 நிமிடங்கள் 63oC பிறகு திடீர் குளிர்ச்சி

2. இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியிடம் இலை வகைக் காய்கறிகள் மற்றும் பேரீச்சம் பழத்தை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு மருத்துவர் ஒருவர் அறிவுறுத்துகிறார். அவ்வாறு அவர் சொல்வதற்குக் காரணம் என்ன?

இரும்புச்சத்து குறைபாடு இளம் பெண்களில் மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடு ஆகும். போதுமான இரும்புச்சத்து இல்லாததால் இரத்த சோகை ஏற்படலாம். இலை கீரைகள் மற்றும் பேரீச்சம்பழங்கள் இரும்பு மற்றும் பிற தாதுக்கள் நிறைந்தவை. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுமாறு மருத்துவர் பரிந்துரைக்கிறார்.

3. சஞ்சனா ஒரு மளிகைக் கடையில் ஜாம் பாட்டில் வாங்க விரும்புகிறாள். அதை வாங்குவதற்கு முன் அந்தப் பாட்டிலில் உள்ள அட்டைக் குறிப்பானில் (label) எதைக் குறிப்பாகப் பார்த்து வாங்க வேண்டும்?

உணவுப் பாதுகாப்பைச் சரிபார்க்க லேபிளில் உள்ள அக்மார்க் சான்றிதழை அவர் சரிபார்க்க வேண்டும். காலாவதியான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க, அவள் காலாவதி தேதியையும் பார்க்க வேண்டும்.

VI. அடைப்புக்குறிக்குள் காெடுக்கப்பட்டுள்ள கலைந்த வார்த்தைகளைச் சரி செய்து கீழ்க்கண்ட வாக்கியத்தை நிரப்புக. 

உப்பினைச் சேர்க்கும் உணவுப் பாதுகாப்பு முறையில் உப்பு (ப்உபு) சேர்க்கப்பட்டு. உணவுப் பாெருளின் ஈரப்பதம் (ப்பஈம்ரத) ஆனது சவ்வூடுபரவல் (வ்வூலரவ்படுச) முறையில் உறிஞ்சப்பட்டு பாக்டீரியா (ரிக்டீபாயா) இன் வளர்ச்சியானது தடுக்கப்படுகிறது.

பயனுள்ள பக்கங்கள்