பாடம் 26 கணினி – ஓர் அறிமுகம்
கணினி – ஓர் அறிமுகம் வினா விடை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. தரவு மற்றும் தகவல்களைச் சேமிக்கும் சாதனம் எது?
- குழலிப்பெருக்கி
- தொலைக்காட்சி
- கணினி
- வானாெலி
விடை: கணினி
2. கணினியின் நான்காம் தலைமுறைக் கணினி எது?
- நுண்செயலி
- செயற்கை நுண்செயலி
- அபாகஸ்
- மின்மயப்பெருக்கி
விடை: நுண்செயலி
3. தரவு செயலாக்கத்தின் – படிநிலைகள்
- 7
- 4
- 6
- 8
விடை: 6
4. கூற்று 1. ஆபாகஸ் கணினியின் முதல் படிநிலை
கூற்று 2. இராணுவப் பயன்பாட்டிற்காக ENIAC பயன்படுத்தப்பட்டது.
- இரண்டும் சரி
- கூற்று 1 தவறு, 2 சரி
- கூற்று 1 சரி, 2 தவறு
- இரண்டும் தவறு
விடை: கூற்று 1 தவறு, 2 சரி
II. பொருத்துக
1. கணினியின் 3-ஆம் தலைமுறை | தொகுப்புச் சுற்று |
2. எழுத்து, எண் | தகவல் |
3. மின்மயப்பெருக்கி | கணினியின் தந்தை |
4. நேரடியாகப் பயன்படுபவது | தரவு |
5. சார்லஸ் பாபேஜ் | II தலைமுறை |
Ans : 1 – அ, 2 – ஈ, 3 – உ, 4 – ஆ, 5 – இ |
III. சிறுவினாக்கள்
1. கணினி – வரையறு
கணினி என்பது கட்டளைத் தொகுதிகள் அல்லது நிரல்களின் மூலம் தரவு மற்றும்
தகவல்களைச் சேமித்துக் கையாளுகின்ற ஒரு மின்னனுக்கருவி
2. தரவு – தகவல் வேறுபடுத்துக
தரவு | தகவல் |
1. தரமான மற்றும் அளவு மாறுபாடுகளின் மதிப்புகளின் தொகுப்பு | செயல்படுத்தப்பட்ட தரவு |
2. நேரடியாக பயன்படுத்த முடியாது | நேரடியாக பயன்படுத்தலாம் |
3. தரவு செயலாக்கம் என்றால் என்ன?
தரவு செயலாக்கம் என்பது தரவுகளைச் சேகரித்துத் தேவைக்கேற்ப தகவல்களை மாற்றும் நிகழ்றவக் குறிப்பிடுவதாகும்.
IV. விரிவாக விடையளிக்க
1. தரவு தசயலாக்கத்தின் பல்வேறு படிநிலைகள் யாவை?
- தரவு சேகரிப்பு (Data Collection)
- தரவு சேமித்தல் (Storage of data)
- தரவு வரிசைப்படுத்துதல் (Sorting of data)
- தரவு செயலாக்கம் (Processing of data)
- தரவு பகுப்பாய்வு (Data analysis)
- தரவு விளக்கமும் முடிவுகளும் (Data presentation and conclusions)
2. கணினியின் தலைமுறைகளை அட்டவணைப்படுத்து
காலம் | தலைமுறை | மின்னணு உறுப்புகள் |
1940 – 1956 | முதல் தலைமுறை | வெற்றிடக் குழாய்கள் |
1956 – 1963 | இரண்டாம் தலைமுறை | மின்மயப்பெருக்கி (டிரான்சிஸ்டர்) |
1964 – 1971 | மூன்றாம் தலைமுறை | ஒருங்கிணைந்த சுற்று |
1972 – 2010 | நான்காம் தலைமுறை | நுண்செயலி |
2010க்கு பின் | ஐந்தாம் தலைமுறை | செயற்கை நுண்ணறிவு |
பயனுள்ள பக்கங்கள்