பாடம் 4. மின்னூட்டமும் மின்னோட்டமும்
மின்னூட்டமும் மின்னோட்டமும் வினா விடை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தாேன்றுவதன் காரணம்
- எலக்ட்ரான்களின் ஏற்பு
- புராேட்டான்களின் ஏற்பு
- எலக்ட்ரான்களின் இழப்பு
- புராேட்டான்களின் இழப்பு
விடை: எலக்ட்ரான்களின் இழப்பு
2. சீப்பினால் தலைமுடியைக் காேதுவதால்
- மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன
- மின்னூட்டங்கள் இடம் பெயர்கின்றன
- அ அல்லது ஆ
- இரண்டும் இல்லை
விடை: மின்னூட்டங்கள் இடம் பெயர்கின்றன
3. மின்விசைக் காேடுகள் நேர் மின்னூட்டத்தில் ________, எதிர் மின்னூட்டத்தில் ___________.
- தாெடங்கி ; தாெடங்கும்
- தாெடங்கி ; முடிவடையும்
- முடிவடைந்து ; தாெடங்கும்
- முடிவடைந்து ; முடிவடையும்
விடை: தாெடங்கி ; முடிவடையும்
4. ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அதனருகில் காெண்டு வர செய்யப்படும் __________ அளவாகும்.
- விசையின்
- திறமையின்
- போக்கின்
- வேலையின்.
விடை: வேலையின்
5. மின்பகு திரவத்தில் மின்னாேட்டத்தின் பாய்விற்குக் காரணம்
- எலக்ட்ரான்கள்
- நேர் அயனிகள்
- அ மற்றும் ஆ இரண்டும்
- இரண்டும் அல்ல
விடை: அ மற்றும் ஆ இரண்டும்
6. மின்னாேட்டத்தின் வெப்ப விளைவு _______ என அழைக்கப்படும்.
- ஜூல் வெப்பமேறல்
- கூலூம் வெப்பமேறல்
- மின்னழுத்த வெப்பமேறல்
- ஆம்பியர் வெப்பமேறல்
விடை: ஜூல் வெப்பமேறல்
7. மின் முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?
- வெப்ப விளைவு
- வேதி விளைவு
- பாய்வு விளைவு
- காந்த விளைவு
விடை: வேதி விளைவு
8. ஒரு கம்பியின் மின்தடை எதைப் பொறுத்து அமையும்.
- வெப்ப நிலை
- வடிவம்
- கம்பியின் இயல்பு
- இவையனைத்தும்
விடை: இவையனைத்தும்
9. இந்தியாவில் மாறு மின்னாேட்டத்தின் அதிர்வெண்
- 220 Hz
- 80 Hz
- 50 Hz
- 100 Hz
விடை: 50 Hz
II. காேடிட்ட இடங்களை நிரப்புக.
1. எலக்ட்ரான்கள் _______ மின்னழுத்தத்திலிருந்து _______ மின்னழுத்தத்திற்கு இயங்கும்.
விடை: அதிக, குறைந்த
2. எலக்ட்ரான்கள் இயங்கும் திசைக்கு எதிர்திசையில் இயங்குவது _______ மின்னாேட்டம் எனப்படும்.
விடை: மரபு
3. ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில் எதற்கு ஒப்பானது _______
விடை: இறைப்பான்
4. இந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும்
மின்சாரம் _______ Hz அதிர்வெண்
கொண்ட மாறுதிசை மின்னோட்டம் ஆகும்.
விடை: 50 Hz
5. முறி சாவி என்பது ஒரு _______ பாதுகாப்பு கருவியாகும்.
விடை: மின் இயக்கவியல்
III. சரியா தவறா?
1. மின்னியல் நடுநிலை என்பது சுழி மின்னூட்டம் அல்லது சமமான அளவு நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் உள்ளதைக் குறிக்கும்.
விடை: சரி
2. ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் பக்க இணைப்பில் இணைக்கப்படும்.
விடை: தவறு
3. மின்பகு திரவத்தினுள் ஆனாேடு எதிர்மின் குறி உடையது.
விடை: தவறு
4. மின்னாேட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும்.
விடை: சரி
5. மின்னுருகு இழை ஜூல் விளைவின் அடிப்படையில் செயல்படுகிறது.
விடை: சரி
II. பாெருத்துக
1. மின்னூட்டம் | ஓம் |
2. மின்னழுத்த வேறுபாடு | ஆம்பியர் |
3. மின்புலம் | கூலூம் |
4. மின்தடை | நியூட்டன் கூலூம்–1 |
5. மின்னோட்டம் | வோல்ட் |
விடை: 1 – இ, 2 – உ, 3 – ஈ, 4 – அ, 5 – ஆ |
V. கருத்துரு வினாக்கள்
1. உயர் மின்திறன் கம்பியில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை பாதுகாப்பாகவே உள்ளது எப்படி?
பறவையின் கால்களுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு மிகக்குறைவு. ஆகவே பறவைகள் உயர்மின் அழுத்த கம்பியில் பாதுகாப்பாக இருக்கிறது.
பறவையின் காலில் உள்ள தோல் கடினமாக உள்ளது.
2. சூரிய மின்கலத்தின் மின்னழுத்தம் எப்போதும் மாறாமல் இருக்குமோ? கலந்தாய்வு செய்க.
சூரிய மின்கலத்தின் மின்னழுத்தம் சூரிய ஒளியின் செறிவை பொறுத்து மாறும்.
அதிக வெப்பத்தின் போது அதிகமான மின்னழுத்தத்தையும் குறைந்த வெப்பத்தின் பாேது குறைந்த மின்னழுத்தையும் கொடுக்கும்.
3. மாறு மின்னோட்டத்தின் மூலம் மின் முலாம் பூச முடியுமா? காரணம் கூறு.
முடியாது
காரணம் : மின்புலத்திலன் திசை மாறிக்கொண்டே செல்வதால் அயனிகள் முன்னும் பின்னும் அலைவுறுகிறது
4. 12 :, 6 : மின்தடை மதிப்புள்ள இரு மின் தடையங்கள் முதலில் தொடரிணைப்பிலும் பின்னர் பக்க இணைப்பிலும் இணைக்கப்படுகின்றன. அவற்றின் மின்னோட்ட – மின்னழுத்த வேறுபோடு வரைபடம் எக் கோட்டினால் குறிக்கப்படும்?
A-தொடர் இணைப்பை குறிக்கிறது
B-பக்க இணைப்பை குறிக்கிறது
5. பின்வரும் மின்தடையை அமைப்பில், புள்ளிகள் a மற்றும் b ஆகியவற்றுக்கு இடையே பயனுறு மின்தடை எவ்வளவு?
தொடரிணைப்பில் தொகுபயன் மின்தடை | = Rs = R1+R2 = 2R |
பக்க இணைப்பில் தொகுபயன் மின்தடை 1/Rp | = 1/R1 +1/R2 |
= 1/R +1/R+ 1/2R | |
1/Rp | = 2+2+1/2R |
= 5/2R | |
R | =2/5 R Ω |
VI. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
1. இரு மின்னூட்டங்களுக்கு இடையேயான நிலைமின்னியல் விசை எந்த காரணிகளைச் சார்ந்தது?
- மின்னூட்ட மதிப்பு
- மின்னூட்டங்களுக்கு இடையிலான தாெலைவு
- அவற்றுக்கிடையேயான ஊடகத்தின் தன்மை
2. மின்விசைக் கோடுகள் என்றால் என்ன?
மின்விசைக் கோடுகள் ஒரு ஓரலகு நேர் மின்னூட்டம் மின்புலம் ஒன்றில் நகர முற் டும் திசையில் வரயப்படும் நேர் அல்லது வளைவுக் காேடுகளாம்.
3. மின்புலம் – வரையறு.
ஒரு மின்னூட்டத்தைச் சுற்றி இன்னாெரு சாேதனை மின்னூட்டம் மின்விசையை உணரக்கூடிய பகுதியே மின்புலம் எனப்படும்.
4. மின்னனோட்டம் வரையறு. அதன் அலகினைத் தருக.
ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பை மின்னாேட்டம் என்கிறாேம். மின்னூட்டத்தின் SI அலகு ஆம்பியர்.
5. ஜீலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள் ஏதேனும் இரண்டினைக் கூறுக
நீர் சூடேற்றி, மின் சலவைப் பெட்டி
6. வீட்டு உபயோக மின் பொருட்கள் எவ்வாறு இணைக்கப்படுகின்றன: தொடரிணைப்பிலோ? பக்க இணைப்பிலோ? காரணங்களைத் தருக.
வீட்டு உபயோக மின் பொருட்கள் பக்க இணைப்பில் இணைக்கப்படுகின்றன. பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது ஒரு மின் சாதனம் பழுதுபட்டாலும் மற்ற மின் சாதனங்கள் இயங்கும்.
7. மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்களைக் கூறுக
1) தரையிணைப்பு 2) முறிசாவி 3) மின் உருகு இழை.
8. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு கம்பியின் மின்தடை எந்த காரணிகளைச் சார்ந்தது?
குறிப்பிட்ட வெப்ப நிலையில் ஒரு பொருள் அளிக்கும் மின்தடை
- பொருளின் வடிவமைப்பையும்
- பொருளின் இயல்பையும் சார்ந்தது.
9. 2 : மற்றும் 5 : மின் தடைகள் கொண்ட இரு மின் தடையங்கள் தொடரிணைப்பில் உள்ளவாறு மின்சுற்று ஒன்றை வரைக. அதனுடன் பக்க இணைப்பில் உள்ளவாறு ஒரு 3 : மின்தடை கொண்ட மின்தடையத்தை இணைக்கவும்.
10. ஓமின் விதியைக் கூறுக.
ஒரு மின்சுற்றில் இரு புள்ளிகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு அதன் வழியே பாயும் மின்னாேட்டத்திற்கு நேர்த்தகவில் இருக்கும். அதாவது
V = RI (or) V = IR
VII. பயிற்சிக் கணக்குகள்
1. நெகிழிச் சீப்பு ஒன்றை தலைமுடியில் தேய்ப்பதனால் அது – 0.4 C மின்னூட்டத்தைப் பெறுகிறது எனில்,
(அ) எந்தப் பொருள் எலக்ட்ரானை இழந்தது? எது எலக்ட்ரானைப் பெற்றது?
தலைமுடி எலக்டரானை இழந்து நெகிழி சீப்பு எலக்ட்ரானைப் பெற்றது.
(ஆ) இந்நிகழ்வில் இடம்பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?
No. of electrons transferred = – 0.4 C
1 C-லுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = | 6.25 × 1018 electron |
– 0.4 C-லுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = | 0.4 × 6.25 × 1018 electrons |
= – 2.5 × 1018 electrons |
2. 2.5 A அளவு மின்னோட்டம் மின் விளக்கு ஒன்றின் வழியே 2 மணி நேரம் பாய்ந்தால், அதன் வழியே செல்லும் மின்னூட்டத்தின் மதிப்பைக் கணக்கிடுக.
மின்னோட்டதின் அளவு I = | 2.5 A |
நேரம் t = | 2 hours |
= 2 × 3600 s | |
t = | 7200 s |
மின்னோட்டத்தின் மதிப்பு Q = | I × t |
Q = | 18,000 C |
3. மின்தடையம் ஒன்றில் பாயும் மின்னோட்டம் (I) மற்றும் அதன் குறுக்கே உருவாகும் மின்னழுத்த வேறுபாடு (V) ஆகியவற்றின் மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மின்தடையத்தின் மின்தடை மதிப்பு என்ன?
I (ஆம்பியர்) | 0.5 | 1.0 | 2.0 | 3.0 | 4.0 |
V (வோல்ட்) | 1.6 | 3.4 | 6.7 | 10.2 | 13.2 |
மின்தடையின் மதிப்பு R | = V2-V1/I2-I1 |
= 13.2-10.2/ 4-3 | |
= 3/1= 3Ω | |
R | = 3Ω |