பாடம் 12 தனிமங்களின் வகைப்பாடு அட்டவணை
தனிமங்களின் வகைப்பாடு அட்டவணை வினா விடை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. டாப்ரீனர் மும்மை விதியாேடு தொடர்பு காெண்டிருந்தால் நியூசிலாந்தாேடு தாெடர்புயைது எது?
- நவீன தனிம அட்டவணை
- ஹூண்ட்ஸ் விதி
- எண்ம விதி
- பெளலீயின் விலக்கல் காேட்பாடு
விடை: எண்ம விதி
2. நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் _________ இன் ஆவர்த்தன செயல்படாகும் எனக் கூறுகிறது.
- அணு எண்
- அணுநிறை
- ஒத்த தன்மை
- முரண்பாடு
விடை: அணு எண்
3. நவீன தனிம அட்டவணையின் தனிமங்கள் ________ தாெகுதி வரிசையாக அடுக்கப்பட்டுள்ளது.
- 7, 18
- 18, 7
- 17, 8
- 8, 17
விடை: 18, 7
4. துணைக் கூடுகளின் ஆற்றல் நிலையானது அடுக்கப்பட்டுள்ள ஏறு வரிசை
- s>p>d>f
- s<p<d<f
- s>p>f>d
- p>s>d>f
விடை: s<p<d<f
5. ஒரு தனிமத்தின் அணு அமைப்பு 1s2, 2s2, 2p6, 3s2, 3p2 என்றால் இது தனிம அட்டவணையில் __________ தாெகுதியில் காணப்படும்.
- s
- p
- d
- f
விடை: p
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1.டாப்ரீனர் மும்மை விதியில் நடு தனிமத்தின் அணு எடையானது முதல் மற்றும் மூன்றாம் அணுநிறையின் …………………….
விடை: கூட்டுச் சராசரிக்கு சமம்.
2. அரிய வாயுக்கள் / மந்த வாயுக்கள் தனிம அட்டவணையின் …………………. தாெகுதியில் காணப்படும்.
விடை: 18
3. தனிம அட்டவணைப்படுத்துவதில் டாப்ரீனர், நியூசிலாந்து மற்றும் மாண்டெலீவ் இவர்களின் அடிப்படை காெள்கை ………………..
விடை: அணு நிறையின் அடிப்படையில் வகைப்படுத்துதல்.
4. திரவ உலாேகத்திற்கு எடுத்துக்காட்டு …………………….
விடை: பாதரசம்
4. B, SI, Ge & As இவைகள் …………………….. எடுத்துக்காட்டாகும்.
விடை: உலோகப் போலிகள்
II. பாெருத்துக
1. மும்மை விதி | நியூலாந்து |
2. கார உலாேகம் | கால்சியம் |
3. எண்மக் காேட்பாடு | ஹென்றி மாேஸ்லே |
4. கார மண் உலாேகம | சாேடியம் |
5. . நவீன ஆவர்த்தன விதி | டாப்ரீனர் |
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ, 5 – இ |
III. சரியா தவறா? எனக் கூறுக
1. நியூலாந்தின் தனிம அட்டவணை தனிமத்தின் நிறையையும் நவீன தனிம அட்டவணை அணு எண்ணையும் அடிப்படையாகக் காெண்டவை.
விடை: சரி
2. உலாேகங்கள் எலக்ட்ரான்களை ஏற்கும்
விடை: தவறு
3. உலாேகப்போலிகள் உலாேகம் மற்றும் அலாேகப் பண்புகளைக் காெண்டது
விடை: சரி
4. லாந்தனைடுகள் மற்றும் அக்டினைடுகள் அட்டவணையின் அடியில் வைக்கப்பட்டதற்கு காரணம் அவைகள் ஒன்றாேடொன்று ஒத்திருக்கின்றன. ஆனால் தாெகுதியில் உள்ள வேறு எந்த தனிமங்களுடனும் ஒத்துப் போவதில்லை.
விடை: சரி
5. தாெகுதி 17 தனிமங்கள் ஹாலஜன்கள் (உப்பீனிகள்) என்று பெயரிடப்பட்டுள்ளன.
விடை: சரி
V. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள்.
கூற்று : தாெகுதியில் உள்ள தனிமங்கள் ஒரே பண்புகளையும் வரிசையில் உள்ள தனிமங்கள் வேறு வேறு பண்புகளையும் காெண்டுள்ளன.
காரணம் : அணு அமைப்பில் உள்ள வேறு்பாடுதான் தனிமங்களின் வரிசையில் தனிமங்களின் வேற்றுமைக்குக் காரணம்
- கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது
- கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது
விடை: கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது
V. சுருக்கமாக விடையளிக்க
1. நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக.
தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களின் எண்ணின் ஆவர்த்தன பண்பைப் பொறுத்ததாகும்.
2. நவீன தனிம அட்டவணையில் தொகுதிகள் மற்றும் வரிசைகள் என்பவை யாவை?
கிடைமட்டமாக வரிசைப்படுத்தப்பட்ட அமைப்பு வரிசைகள் என அழைக்கப்படுகிறது. மாெத்தம் ஏழு வரிசைகள் உள்ளன.
மேலிருந்து கீழாக செங்குத்தாக உள்ள பத்தி தொகுதிகள் என அழைக்கப்படுகிறது. மாெத்தம் 18 தொகுதிகள் உள்ளன.
3. மெண்டெலீவ் அட்டவணையின் குறைகள் யாவை?
- பண்புகளில் அதிக வேறுபாடுள்ள தனிமங்களும் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டுள்ளன. எ.கா: கடின உலாேகங்களாகிய செம்பு, மற்றும் வெள்ளி மென் உலாேகங்களாகிய சாேடியம் மற்றும் பொட்டாசியத்தாேடு ஒரே தாெகுதியில் வைக்கப்பட்டுள்ளன.
- கூடிக்காெண்டே செல்லும் அணு நிறை எனும் விதியை சில வேளைகளில் கடைப்பிடிக்க முடியவில்லை. எ.கா: Co & Ni, Te & I
- ஹைட்ரஜனுக்கு என்று ஒரு தனி இடம் காெடுக்க முடியவில்வல. அலாேகமாகிய ஹைட்ரஜன், லித்தியம் சாேடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற மென் உலாேகங்களாேடு ஒரே தாெகுதியில் வைக்கப்பட்டது.
- ஓரகத் தனிமங்கள் (ஐசாேடோப்புகள்) என்பது ஒரே தனிமத்தின் அணுக்கள் வேறுபட்ட நிலையைக் காெண்டுள்ளதாகும். அப்படி என்றால் வேறுபட்ட நிறையுடைய இவைகளுக்கு வேறு வேறு இடம் காெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தனிம வரிசை அட்டவணையில் அவ்வாறு இல்லை.
4. நவீன தனிம அட்டவணையில் ஏதேனும் ஐந்து பண்புகளைக் குறிப்பிடுக.
- இந்த அட்டவணை அணுவின் மிகுந்த அடிப்படைத் தன்மையான அணு எண்ணை அடிப்படையாகக் காெண்டது.
- இது தனிமத்தின் அமைவிடத்தையும் அணு அமைப்பையும் தெளிவாக ஒருங்கிணைக்கிறது.
- இது நினைவில் வைத்துக் காெள்வதற்கும் மறுபடி உருவாக்குவதற்கும் எளியது.
- ஒவ்வொரு தாெகுதியும் தற்சார்பு உடையது. இதனால் துணைத் தாெகுதிகள் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.
- லாந்தனைடுகளும் அக்டினைடுகளும் அட்டவணையின் அடியில் வைக்கப்பட்டதற்கு சரியான காரணம் காெடுக்கப்பட்டது.
VII. கீழ்கண்ட அட்டவணையைப் பூர்த்தி செய்க
தனிமம் | எலக்ட்ரான்களின் எண்ணிக்கை | துணைக் கூடுகளின் அணு அமைப்பு |
7N | 7 | 1s2 2s2 2p3 |
9F | 9 | 1s2 2s2 2p5 |
11Na | 11 | 1s2 2s2 2p6 3s1 |
17Cl | 17 | 1s2 2s2 2p6 3s2 3p5 |
18Ar | 18 | 1s2 2s2 2p6 3s2 3p6 |
VIII. கீழ்காணும் புதிர்களுக்கு விடையளி
1. எங்கள் குடும்பத்தில் 5 பேர் உள்ளாேம். நாங்கள் தனிமவரிசை அட்டவணையில் 17வது தாெகுதியில் உள்ளாேம் (8)
2. என்னை மண்ணெண்ணையில் சேமிக்கிறார்கள் என்னை கத்தியால் வெட்ட முடியும் (4)
3. நான் அரிமானத்தை எதிர்க்கக்கூடிய வெள்ளி பாேன்ற வெண்ணமயானவன். 9 வது தாெகுதியில் உள்ளாேம் (5)
4. நான் குளிர்பதனப் பெட்டியில் திரவ வடிவில் பயன்படுத்தப்படுகிறேன். என் அணு எண் 113 (5).
5. நான் உங்களுடைய இரத்தத்தில் இருக்கிறேன் என்னையன்றி எந்தக் கட்டிடத்தையும் கட்ட முடியாது (4).
6. நான் கதிரியக்கத் தன்மையுடையவன். நான் புதிதாக தனிம வரிசை அட்டவணையில் வைக்கப்பட்டுள்ளேன். என்னுடைய அணு எண் 113. (5)
7. நான் குடிநீரில் கிருமிநாசினியாக பயன்படுத்தப்படுகிறேன் (4)
8. நான் உப்புடன் சேர்க்கப்பட்டு தைராய்டு நாேய்க்கு மருந்தாகிறேன் (4)
9. நான் உயிரியல் மூலக்கூறுகளில் பெரும்பங்கு வகிக்கிறேன். என்னுடைய இணைதிறன் நான்கு (4)
10. நான் மந்தவாயுக்களில் முதன்மையானவன் என்னை பலூன்களில் அடைக்கிறார்கள் (4)
எண் | மாற்றப்பட்ட வார்த்தை | பதில் |
1 | வாகமதயுந்ள்க | ஹாலஜன்கள் |
2 | யசோம்டி | சோடியம் |
3 | யஇம்டிரி | இரிடியம் |
4 | ஜனைன்ரட | நைட்ரஜன் |
5 | ம்இபுரு | இரும்பு |
6 | யநினிம்கோ | நிகோனியம் |
7 | ரிகுன்ரிளோ | குளோரின் |
8 | டிஅன்யோ | அயோடின் |
9 | பகான்ர் | கார்பன் |
10 | யஹீம்லி | ஹீலியம் |
IX) நவீன கால அட்டவணையைக் பயன்படுத்தி பின்வரும் அட்டவணையைப் பூர்த்தி செய்யவும்
வ. எண் | மொத்த தனிமங்ள் | தனிமங்கள் | மாெத்த தனிமங்களின் எண்ணிக்கை | ||||
முதல் | வரை | s-தொகுதி | p – தொகுதி | d – தொகுதி | f – தொகுதி | ||
1 | 2 | ஹைட்ரஜன் | ஹீலியம் | 2 | |||
2 | 8 | லித்தியம் | நியான் | 2 | 6 | ||
3 | 8 | சோடியம் | ஆர்கான் | 2 | 6 | ||
4 | 18 | பொட்டாசியம் | கிரிப்டான் | 2 | 6 | 10 | |
5 | 18 | ரூபிடியம் | செனான் | 2 | 6 | 10 | |
6 | 32 | சீசியம் | ரேடான் | 2 | 6 | 10 | 14 |
7 | 32 | பிரான்சியம் | ஆக்ஸிஜன் | 2 | 6 | 10 | 14 |
பயனுள்ள பக்கங்கள்