பாடம் 13 வேதிப்பிணைப்பு
வேதிப்பிணைப்பு வினா விடை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. கார்பன் அணுவில் உள்ள இணைதிறன் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?
- 2
- 4
- 3
- 5
விடை: 4
2. சாேடியத்தின் அணு எண் 11, அது _____________ நெருக்கமான மந்த வாயுக்களின் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது.
- ஒரு எலக்ட்ரானை ஏற்று
- இரண்டு எலக்ட்ரானை ஏற்று
- ஒரு எலக்ட்ரானை இழந்து
- இரண்டு எலக்ட்ரானை இழந்து
விடை: ஒரு எலக்ட்ரானை இழந்து
3. வேதிவினைகளில் எலக்ட்ரான்களை ஏற்று எதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம்
- பொட்டாசியம்
- கால்சியம்
- புளூரின்
- இரும்பு
விடை: புளூரின்
4. உலாேகங்களுக்கும் அலாேகங்களுக்கும் இடைய தாேன்றும் பிணைப்பு
- அயனிப் பிணைப்பு
- சகப் பிணைப்பு
- ஈதல் சகப் பிணைப்பு
விடை: அயனிப் பிணைப்பு
5. __________ சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் காெதிநிலை காெண்டவை.
- சகப் பிணைப்பு
- ஈதல் சகப் பிணைப்பு
- அயனிப் பிணைப்பு
விடை: அயனிப் பிணைப்பு
6. சகப்பிணைப்பு _____________ மூலம் உருவாகிறது.
- எலக்ட்ரான் பரிமாற்றத்தின்
- எலக்ட்ரான் பங்கீடு
- ஒரு இணை எலக்ட்ரான்களின் பங்கீடு
விடை: எலக்ட்ரான் பங்கீடு
7. ஆக்ஸிடனேற்றிகள் ____________ எனவும் அழைக்கப்படுகின்றன.
- எலக்ட்ரான் ஈனி
- எலக்ட்ரான் ஏற்பி
விடை: எலக்ட்ரான் ஏற்பி
8. வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பைபற்ற தனிமங்கள் _______
- ஹாலாேன்களை
- உலாேகங்கள்
- மந்த வாயுக்கள்
- அலாேகங்கள்
விடை: மந்த வாயுக்கள்
9. இணைதிறன் ஆற்றல் மட்டத்தில் 1,2 அல்லது 3 எலக்ட்ரான்களைக் காெண்டுள்ள அணுக்கள் _________ அயனியாக மாற வல்லவை
- நேர் அயனி
- எதிர் அயனி
விடை: நேர் அயனி
10. ஓர் அணு எலக்ட்ரானை இழந்து _________
- நேர் அயனி
- எதிர் அயனி
விடை: நேர் அயனியாகிறது
11. ஓர் அணு எலக்ட்ரானை ஏற்று _________
- நேர் அயனி
- எதிர் அயனி
விடை: எதிர் அயனியாகிறது
II. சிறுவினாக்கள்
1. தனிமங்கள் எவ்வாறு மந்த வாயுக்களின் எலக்டரான் அமைப்பிறகு மாறுகின்றன?
தனிமங்கள் இணைதிறன் கூட்டில் உள்ள எலக்ட்ரானை ஏற்றோ (அல்லது) வழங்கியோ நிலையான மந்த வாயவின் எலக்ட்ரான் அமைப்பை பெறுகிறது.
2. CCl4 நீரில் கரைவதில்லை. ஆனால் NaCl நீரில் கரைகிறது. காரணம் கூறு.
- CCl4 – சகபிணைப்பு சேர்மம் ஆனால்
- NaCl – அயனி சேர்மம்
- நீர் ஒரு முனைவுற்ற கரைப்பான்
எனவே NaCl முனைவுற்ற கரைப்பானில் கரையும்
CCl4 முனைவற்ற கரைப்பானில் கரையும்
3. எண்ம விதியை எடுத்துக்காட்டுடன் கூறுக.
ஒவ்வொரு அணுவும் எலக்ட்ரானை இழந்தோ (அல்லது) ஏற்றோ தன் இணைதிறன் கூட்டில் 8 – எலக்ட்ரான்கள் பெற்று நிலையா மந்த வாயுவின் அமைப்பை பெறுகிறது.
எகா – NaCl
மேற்கண்ட படத்தில் சோடியம் அணு ஒரு எலக்ரானை இழந்து தன் இணைதிறன் கூட்டில் 8 எலக்ட்ராகளை பெற்று மந்த வாயு நியானின் எலக்ட்ரானின் அமைப்பை பெறுகிறது.
4. பிணைப்பின் வகைகள் யாவை?
- அயனிப் பிணைப்பு
- சகப் பிணைப்பு
- ஈதல் சகப் பிணைப்பு
5. பொருந்தாததைத் தேர்ந்தெடு
a. H2, Cl2, NaCl, O2, N2
NaCl
b. H2O2, MnO4–, LiAlH4, Cr2O22–
LiAlH4
7. அட்டவணையை நிரப்புக
தனிமம் | அணு எண் | எலக்ட்ரான் அமைப்பு | இணைதிறன் எலக்ட்ரான் | லூயிஸ் புள்ளி அமைப்பு |
லித்தியம் | 3 | 2,1 | 1 | |
போரான் | 5 | 2,3 | 3 | |
ஆக்சிஜன் | 8 | 2,6 | 6 |
7. கார்பன்-டை-ஆக்ஸைடு (CO2) உருவாதல் வினையின் எலக்டரான் அமைப்பை வரைக.
8. கீழ்க்கண்ட மூலக்கூறுகளில் உள்ள பிணைப்பின் வகையின் அடிப்படையில் அட்டவணையை நிரப்புக.
CaCl2, H2O, CaO, CO, KBr, HCl, CCl4, HF, CO2, Al2Cl6
அயனிப் பிணைப்பு | சகப் பிணைப்பு | ஈதல் சகப் பிணைப்பு |
CaCl2 | H2O, CCl4 | CO |
CaO, KBr | HF, CO2 | ………… |
HCl | Al2Cl6 | …………. |
9. சரியாகப் பாெருந்துவதைத் தேர்ந்தெடு
அயனிச் சேர்மங்களின் பாெதுவான பண்புகள்
அ. இவை அறை வெப்பநிலையில் வாயுக்கள்
ஆ. இவை கடினமான மற்றும் நாெறுஙகும் தன்மை காெண்டவை
இ. இவை மூலக்கூறு வினைகளுக்குட்படுகிறது.
ஈ. இவற்றின் உருகுநிலை குறைவு.
விடை: இவை கடினமான மற்றும் நாெறுஙகும் தன்மை காெண்டவை
10. கீழ்க்கண்ட வினைகள் ஆக்ஸிஜனேற்ற / ஒடுக்க வினைகளா எனக் காண்க.
a. Na → Na+ + e–
ஆக்ஸிஜனேற்ற வினை
b. Fe3+ + 2e– → Fe+
ஒடுக்க வினை
11. காெடுக்கப்பட்ட பண்புகளின் அடிப்படையில் சேர்மங்களின் வகையைக் கண்டறிக
(அயனி / சக / ஈதல் சகப்பிணைப்பு)
அ. முனைவற்ற கரைப்பான்களில் கரையும்
சகப்பிணைப்பு
ஆ. வினையின் வேகம் மிக அதிகம்
அயனி பிணைப்பு
இ. மின்சாரத்தைக் கடத்துவதில்லை
சகப்பிணைப்பு
ஈ. அறை வெப்பநிலையில் திண்மங்கள்
ஈதல் சகப்பிணைப்பு
12. அணு எண் 20 காெண்ட X என்ற தனிமம், அணு எண் 8 காெண்ட Y என்ற தனிமத்துடன் இணைந்து XY என்ற மூலக்கூறை உருவாக்குகிறது என்க. XY மூலக்கூறு உருவாதலின் புள்ளி அமைப்பு வரைபடம் வரைக.
14. MgCl2வை அயனிசேர்மமாகவும், CH4 சகப்பிணைப்புச் சேர்மமாகவும் காெண்டு, இவ்விரு சேர்மங்களுக்கும் உள்ள ஏதேனும் இரண்டு வேறுபாடுகளை எழுதுக.
அயனிசேர்மம் | சகப்பிணைப்புச் சேர்மம் |
1. எலக்ட்ரான் இடம் பெயர்வு | எலக்ட்ரான் பங்கீடு |
2. அறை வெப்ப நிலையில் திண்மங்கள் | வாயு, நீர்மம், மென்மையானவை |
15. மந்த வாயுக்கள் ஏன் மந்தத் தன்மையுடன் காணப்படுகின்றன?
மந்த வாயுக்கள் அனைத்தும் தன் இணைதிறன் கூட்டில் எட்டு எலக்ட்ரான்களைப் பெற்று மந்தத் தன்மையுடன் காணப்படுகின்றன
16. தவறான கூற்றைக் கண்டறிந்து அவற்றை சரி செய்க
அ. அயனிச் சேர்மங்கள் முனைவற்ற கரைப்பான்களில் கரையும்.
அயனிச் சேர்மங்கள் முனைவுற்ற கரைப்பான்களில் கரையும்
ஆ. சகப் பிணைப்புச் சேர்மங்கள் உருகிய நிலையிலும், கரைசல் நிலையிலும் மின்சாரத்தைக் கடத்தும்
சகப் பிணைப்புச் சேர்மங்கள் உருகிய நிலையிலும், கரைசல் நிலையிலும் மின்சாரத்தைக் கடத்தாது
III. விரிவாக விடையளி.
1. அயனிச் சேர்மங்களுக்கும் சகப்பிணைப்புச் சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.
அயனிச் சேர்மங்கள் | சகப்பிணைப்புச் சேர்மங்கள் |
1. உலோக அணுவிலிருந்து அலோக அணுவிற்கு ஒரு எலக்ட்ரான் இடம் பெயர்வதால் உருவாகின்றன. | அலோக அணுக்களுக்கிடையே எலக்ட்ரான்கள் பங்கிடப்படுவதால் உருவாகின்றன. |
2. நேர் மற்றும் எதிர் அயனிகளுக்கிடையே வலிமையான நிலைமின் கவர்ச்சி விசை காணப்படுகிறது. | எலக்ட்ரான்களின் பகிர்வு எனவே அணுக்களிடையே வலிமை குறைந்த கவர்ச்சி காணப்படுகிறது. |
3. அறை வெப்பநிலையில் திண்மங்கள் | வாயுக்கள், நீர்மங்கள், மென்மையான திண்மங்கள் |
4. உருகிய நிலையிலும் கரைசல் நிலையிலும் மின்சாரத்தை கடத்தும் | மின்சாரத்தை கடத்துவதில்லை |
5. உருகுநிலையும், கொதிநிலையும் அதிகம் | உருகுநிலையும், கொதிநிலையும் குறைவு |
6. முனைவுள்ள கரைப்பான்களில் கரையும் | முனைவற்ற கரைப்பான்களில் கரையும் |
7. கடினமானது, நொறுங்கும் தன்மையுடையது | மென்மையானது, மெழுகுத் தன்மையுடையது. |
8. அயனிகள் வினைகளில் பங்கேற்பதால் வினைகள் உடனடியாகவும், மிக வேகமாகவும் நடைபெறும் | மூலக்கூறுகள் வினைகளில் பங்கேற்பதால் வினையின் வேகம் குறைவு |
2. கீழ் உள்ள கூற்றுகள் ஒவ்வொன்றிற்கும் ஓர் எடுத்துக்காட்டு தருக.
அ. இரண்டு சகப்பிணைப்பு உள்ள ஒரு சேர்மம்
O2 O = O
ஆ. ஒரு அயனிப் பிணைப்பு உள்ள ஒரு சேர்மம்
HCL
இ. இரண்டு சகப்பிணைப்பும், ஒரு ஈதல் சகப்பிணைப்பும் உள்ள ஒரு சேர்மம்
CO
ஈ. மூன்று சகப்பிணைப்பு உள்ள ஒரு சேர்மம்
N=N 7N 1S2 2S2 2p3
3. தவறான கூற்றைக் கண்டறிந்து சரி செய்க.
அ. சகப்பிணைப்புச் சேர்மங்களைப் போலவே, ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களும் மின் சுமை கொண்ட (அயனிகள்) துகள்களைப் பெற்றுள்ளன. எனவே அவை நல்ல மின்கடத்திகள்
அரிதிற் கடத்தி
ஆ. ஹைட்ரஜன் பிணைப்புடன் ஒப்பிடும் போது அயனிப் பிணைப்பு வலிமை குறைந்த பிணைப்பு ஆகும்.
வலிமை மிக்க பிணைப்பு
இ. அயனிப் பிணைப்பு எலக்ட்ரான்களை சமமாக பங்கீடு செய்வதால் உருவாகிறது.
எலக்ட்ரான்கள் இடம் பெயர்வதால்
ஈ. எலக்ட்ரான் இழப்பு ஆக்ஸிஜனேற்றம் என்றும், எலக்ட்ரான் ஏற்பு ஒடுக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
கூற்று சரி
உ. பிணைப்பில் ஈடுபடாத எலக்ட்ரான்களை இணைதிறன் எலக்ட்ரான்கள் என்கிறோம்.
தனி இரட்டை எலக்ட்ரான்
4. ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களின் பண்புகளை விவரி.
இயற்பியல் நிலைமை:
இச்சேர்மங்கள் வாயுநிலை, நீர்ம நிலை மற்றும் திண்ம நிலைகளில் காணப்படுகின்றன.
மின்கடத்துத் திறன்:
சகப்பிணைப்புச் சேர்மங்களைப் போலவே, ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களிலும் அயனிகள் இல்லை. எனவே, இவை அரிதில் மின்கடத்திகள் ஆகும்.
உருகுநிலை:
ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களின் உருகுநிலை மற்றும் கொதிநிலை சகப்பிணைப்புச் சேர்மங்களை விட அதிகமாகவும் அயனிச் சேர்மங்களை விட குறைவாகவும் காணப்படுகின்றன.
கரைதிறன்:
நீர் போன்ற முனைவுள்ள கரைப்பான்களில் மிகச்சிறிதளவே கரையும் அல்லது கரைவதில்லை. பென்சீன், டொலுவீன், கார்பன் டெட்ரா குளோரைடு போன்ற முனைவற்ற கரைப்பான்களில் எளிதில் கரைகிறது.
வினைபடுதிறன்:
இச்சேர்மங்கள் மெதுவான மூலக்கூறு வினைகளில் ஈடுபடுகின்றன.
5. பின்வரும் சேர்மங்களில் உள்ள குறிப்பிட்ட தனிமத்தின் ஆக்ஸிஜனேற்ற எண்ணைக் கணக்கிடுக.
அ. CO2 ல் உள்ள C
x + 2(-2) | = 0 |
x -4 | = 0 |
x | = 4 |
C | = +4 |
ஆ. MnSO4 ல் உள்ள Mn
இ. HNO3 ல் உள்ள N
பயனுள்ள பக்கங்கள்