9th Std Science Solution in Tamil | Lesson.14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

பாடம் 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் வினா விடை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. Zn + 2 HCl → ZnCl2 + …↑ (H2, O2, CO2)

விடை: H2

2. ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் அமிலம் ஆரஞ்சில் உள்ள அமிலம் _______ (சிட்ரிக் அமிலம், அஸ்கார்பிக அமிலம்)

விடை:  அஸ்கார்பிக அமிலம்

3. தாவரங்கள் மறறும் விலங்குகளில் காணப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள். அதே போல் பாறைகளிலும், கனிமப் பொருள்களிலும் இருககும் அமிலம் ________ (கனிம அமிலம், வலிமை குறைந்த அமிலம்)

விடை: கனிம அமிலம்

4. அமிலமானது நீல லிட்மஸ் தாளை _______ ஆக மாற்றும் (பச்சை, சிவப்பு, ஆரஞ்சு)

விடை: சிவப்பு

5. உலோக கார்பனேட்டுகள், உலோக பை கார்பனேட்டுகள் காரத் தன்மை பெற்றிருந்தாலும், அமிலத்துடன் வினைபுரிநது உப்பையும், நீரையும் தந்து _______ ஐ வெளியேற்றுகிறது (NO2, SO2, CO2)

விடை: CO2

6. நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம் ________ (சிவப்பு, வெள்ளை, நீலம்)

விடை: நீலம்

7. மனித இரத்தத்தின் pH மதிப்பு ________ (7.0, 7.4, 7.6)

விடை: 7.4

8. பொதுவாக பற்பசை ______ தன்மை பெற்றிருக்கும் (அமில, கார, நடுநிலை)

விடை: கார

9. pH மதிப்பினைக் காண தூய நீர் உன்னிடம் கொடுக்கப்படுகிறது. அது காட்டும் நிறம் _________ (வெள்ளை, கறுப்பு, பச்சை)

விடை: பச்சை

II. சிறு வினாக்கள்

1. சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினை புரியாத இரண்டு உலோகங்களைக் கூறுக.

Cu, Ag (தாமிரம், வெள்ளி)

2. அமிலங்களின் பயன்கள் ஏதேனும் நான்கினை எழுதவும்.

  • கந்தக அமிலம் (சல்பியூரிக் அமிலம்) வேதிப்பொருட்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது.
  • சிட்ரிக் அமிலம் உணவுப் பொருட்களைப் பதப்படுத்தப் பயன்படுகிறது.
  • நைட்ரிக் அமிலம் விவசாயத்தில் உரமாகப் யன்படுகிறது.
  • கார்பானிக் அமிலம் காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படுகிறது.
  • டார்டாரிக் அமிலமானது ராெட்டிச் சாேடாவின் ஒரு பகுதிப் பொருளாகும்.
  • ஆக்ஸாலிக் அமிலம் குவார்ட்ஸ் படிகத்தில் இரும்பு மற்றும் மாங்கனீசு படிவுகளை சுத்தம் செய்யவும், மரப்பொருட்களைத் தூய்மையாக்கவும், மற்றும் கருப்புக்கறைகளை நீக்கவும் பயன்படுகிறது.

3. விவசாயத்தில் மண்ணின் pH மிக முக்கியமானது. சிட்ரஸ் பழங்கள், அரிசி மற்றும் கரும்பு விளைய தேவைப்படும் மண்ணின் தன்மையை எழுதவும்.

சிட்ரஸ் பழங்களுக்கு காரத் தன்மையுட மண்ணும், அரிசிக்கு அமிலத்தன்மையுடைய மண்ணும், கரும்பு விளைய நடுநிலைத் தன்மையுடைய மண்ணும் தேவைப்படுகிறது.

4. அமில மழை எப்பொழுது ஏற்படும்?

இயற்கை நிகழ்வுகள் மற்றும் தொழிற்சாலைகளால் காற்றில் கலந்துள்ள கந்தக ஆக்ஸைடுகள், நைட்ரஜன் ஆக்சைடுகள் மழைநீரில் கலந்து அமிலமாக மாறுகிறது. இவ்வாறு மாசுபாட்டின் காரணமாக அமில மழை ஏற்படுகிறது.

5. பாரிஸ் சாந்தின் பயன்களைக் கூறு.

  • முறிந்த எலும்புகளை ஒட்ட வைப்பதற்குப் பயன்படுகிறது.
  • சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்யப் பயன்படுகிறது.

6. A மறறும் B என அடையாளமிடப்பட்ட இரண்டு அமிலஙகள் உன்னிடம் கொடுக்கப்படுகின்றன. A யில் உள்ள அமிலம் நீர்ககரைலில் ஒரு மூலக்கூறு அமிலத்திறகு ஒரு ஹைட்ரஜன் அயனியைத் தருகின்றது. B யில் உள்ள அமிலம், நீரக்கரைலில் ஒரு மூலக்கூறு அமிலத்திறகு இரு ஹைட்ரஜன் அயனிகளைத் தருகின்றன.

i. A மற்றும் B யில் உள்ள அமிலத்தைக கண்டுபிடி.

  • A – HCl (ஹைட்ரோ குளோரிக் அமிலம்)
  • B – H2SO4 (கந்தக அமிலம்)

ii. “வேதிப் பொருள்களின் அரசன்” என்றழைக்கப்படும் அமிலம் எது?

  • H2SO4 (கந்தக அமிலம் அல்லது சல்ஃப்யயூரிக் அமிலம்)

7. இராஜ திராவகம் வரையறு.

இராஜ திராவகம் என்பது மூன்று பங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும், ஒரு பங்கு நைட்ரிக் அமிலமும் கலந்த கலவை ஆகும்.

8. தவற்றை திருத்தி எழுதவும்.

அ) சலவைசோடோ, கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்றுகிறது.

கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்றுவது சமையல் சோடோவாகும்

ஆ) கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட் என்பது துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.

கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட் எனப்படும் பாரிஸ் சாந்து முறிந்த எழும்புகளை ஒட்டவைக்க பயன்படுகிறது

கால்சியம் ஆக்ஸிகுளோரைடு எனப்படும் சலவைத்தூள் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.

9. நடுநிலையாக்கல் வினை என்றால் என்ன? உதாரணம் கொடு.

அமிலமும், காரமும் வினைபட்டு உப்பையும், நீரையும் தரும் வினை நடுநிலையாக்கல் வினை எனப்படும்

HCl  +  NaOH——>NaCl + H2O
அமிலம் + காரம் ——>உப்பு + நீர்

10. பொருந்தாததை கண்டுபிடி.

எலுமிச்சை சாறு, தக்காளிச் சாறு, வீட்டு உபயாேக அம்மாேனியா, காபி

விடை: வீட்டு உபயாேக அம்மாேனியா

III. விரிவாக விடையளி.

1. நீரற்ற மற்றும் நீரேறிய உப்பை விளக்குக.

பல உப்புகள் நீர் மூலக்கூறுகளுடன் இணைந்து படிகமாகக் காணப்படுகின்றன. இந்த நீர் மூலக்கூறுகள் படிக நீர் எனப்படும். படிக நீரைக் கொண்ட உப்புகள் நீரேற்ற உப்புகள் எனப்படும். உப்புடன் இணைந்து நீரேற்றம் கொண்ட நீர் மூலக்கூறுகளை வேதி வாய்பாட்டிற்குப் பின் ஒரு புள்ளி வைத்து அதன் அளவு குறிப்பிடப்படும்.  CuSO4.5H2O.

படிக நீர் அற்ற உப்புகள் நீரேற்றம் அற்ற உப்புகள் எனப்படும். இவை தூளாகக் காணப்படும்.

2. அமிலம் மற்றும் காரம் ஆகியவற்றைக் கண்டறியும் சோதனையை விவரி

லிட்மஸ் தாளுடன் சோதனை

அமிலம் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும். காரம் சிவப்பு லிட்மஸ் தாளை நீலமாக மாற்றும்.

நிறங்காட்டி பினாப்தலீனுடன் சோதனை

அமிலத்தில் பினாப்தலீன் நிறமற்றது. காரத்தில் இளஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கும்.

நிறங்காட்டி மெத்தில் ஆரஞ்சுடன் சோதனை

அமிலத்தில் மெத்தில் ஆரஞ்சு இளஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கும். காரத்தில் மெத்தில் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தை உருவாக்கும்.

நிறங்காட்டிஅமிலத்தில் நிறம்காரத்தில் நிறம்
லிட்மஸ்நீலம் – சிவப்புசிவப்பு – நீலம்
பினாப்தலீன்நிறமற்றதுஇளஞ்சிவப்பு
மெத்தில் ஆரஞ்சுஇளஞ்சிவப்புமஞ்சள்

3. காரங்களின் பயன்கள் நான்கினை எழுதுக.

  1. சோப்பு தயாரிக்க சோடியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.
  2. கட்டிடங்களுக்கு சுண்ணாம்பு பூச கால்சியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.
  3. வயிற்றுக் கோளாறுக்கு மருந்தாக மெக்னீசியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.
  4. துணிகளில் உள்ள எண்ணெய்க் கறைகளை நீக்குவதற்கு அம்மோனியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.

4. உப்புகளின் பயன்களில் ஏதேனும் ஐந்து எழுது.

சாதாரண உப்பு – சோடியம் குளோரைடு (NaCl)

இது நம் அன்றாட உணவிலும், உணவைப் பாதுகாப்பதிலும் பயன்படுகிறது.

சலவை சோடா – சோடியம் கார்பனேட் (Na2CO3)

  1. இது கடின நீரை மென்னீராக்கப் பயன்படுகிறது.
  2. இது கண்ணாடித் தொழிற்சாலை, சோப்பு மற்றும் பேப்பர் தொழிற்சாலைகளில் பயன்படுகிது.

சமையல் சோடா – சோடியம் பைகார்பனேட்(NaHCO3)

  1. இது ரொட்டிச் சோடா தயாரிக்கப் பயன்படுகிறது. ரொட்டிச் சோடா என்பது சமையல் சோடாவும், டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவையாகும்.
  2. இது சோடா – அமில தீயணைப்பான்களில் பயன்படுகிறது.
  3. கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்றுகிறது.
  4. இது அமில நீக்கியில் உள்ள ஒரு பகுதிப்பொருள் இந்தக் கரைசல் காரத் தன்மை பெற்றிருப்பதால் வயிற்றிலுள்ள அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்குகிறது.

சலவைத் தூள் – கால்சியம் ஆக்ஸிகுளோரைடு (CaOCl2)

  1. கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.
  2. பருத்தி மற்றும் லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.

பாரிஸ் சாந்து – கால்சியம் சல்பேட்ஹெமிஹைட்ரேட் (CaSO4 .½H2O)

  1. முறிந்த எலும்புகளை ஒட்ட வைப்பதற்குப் பயன்படுகிறது.
  2. சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்யப் பயன்படுகிறது.

5. சல்பியூரிக் அமிலம் “வேதிப் பொருள்களின் அரசன்” என்றழைக்கப்படுகிறது. ஏன்?

சல்பியூரிக் அமிலம் வேதிப் பொருள்களின் அரசன் என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் பல சேர்மங்கள் தயாரிப்பதற்கு இது பயன்படுகிறது. வாகன மின்கலங்களிலும் இது பயன்படுகிறது.

பயனுள்ள பக்கங்கள்