9th Std Science Solution in Tamil | Lesson.20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

பாடம் 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் வினா விடை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை?

  1. நாடிச் சுரப்பி
  2. லாக்ரிமால்
  3. கீழ்தாடைச் சுரப்பி
  4. மேலண்ணச் சுரப்பி

விடை: லாக்ரிமால்

2. மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை ________ ஆகும்.

  1. கார்போஹைட்ரேட்டுகள்
  2. புரதங்கள்
  3. காெழுப்பு
  4. சுக்ராேஸ்

விடை: புரதங்கள்

3. மூச்சுகுழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது _______ ஆகும்.

  1. குரல்வளை மூடிகள்
  2. குரல்வளை முனை
  3. கடின அண்ணம்
  4. மிருதுவான அண்ணம்

விடை: குரல்வளை மூடிகள்

4. பித்த நீர் __________ செரிக்க உதவுகிறது.

  1. புரதங்கள்
  2. சர்க்கரை
  3. கொழுப்புகள்
  4. கார்போஹைட்ரேட்டுகள்

விடை: கொழுப்புகள்

5. சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு _________ ஆகும்.

  1. குடலுறுஞ்சிகள்
  2. கல்லீரல்
  3. நெஃப்ரான்
  4. சிறுநீரகக்குழாய்

விடை: நெஃப்ரான்

6. கீழ்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?

  1. யூரியா
  2. புரதம்
  3. நீர்
  4. உப்பு

விடை: புரதம்

7. ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை ___________ ஆகும்.

  1. சிறுநீர்க்குழாய்
  2. சிறுநீர்ப்புறவழி
  3. விந்துக்குழாய்
  4. விதைப்பை

விடை: சிறுநீர்ப்புறவழி

8. கீழ்காண்பனற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?

  1. அண்டம்
  2. கருப்பை
  3. விந்தகம்
  4. அண்டக்குழாய்

விடை: விந்தகம்

5. கழிவுநீக்கம் என்பது ___________ ஆகும்.

  1. காற்றிலிருந்துஆக்ஸிஜனை உள்ளெடுத்து கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியிடல்.
  2. உடலிலிருந்து தீமைதரும் கிருமிகளையும் புழுக்களையும் வெளியேற்றல் .
  3. இரத்தத்தின் வழியாக செரிமானமாக்கப்பட்ட உணவினை உடற்திசுக்களுக்கு கடத்துதல்.
  4. உடலிலிருந்து உருவான நைட்ரஜன் சார்ந்த கழிவுகளை வெளியேற்றல்.

விடை: உடலிலிருந்து உருவான நைட்ரஜன் சார்ந்த கழிவுகளை வெளியேற்றல்.

II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

1. சிறுகுடலாேடு இரைப்பை இணையும் பகுதி ………………….. ஆகும்.

விடை: பைலோரஸ்

2. உமிழ்நீராேடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாலான, உணர்வு உறுப்பு ……………. ஆகும்.

விடை: நாக்கு

3. கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக ………………………ல் சேமித்து வைக்கப்படுகிறது.

விடை: பித்தப்பை

4. உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி ……………………… ஆகும்.

விடை: சிறுகுடல்

5. மனித உடலானது ………………………… வெப்ப நிலையில் இயல்பாக செயல்படுகிறது.

விடை: 37°C

6. பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் ………………. ஆகும்.

விடை: கருமுட்டை

7. சிறுநீர் உருவாதல், சேர்த்து வைக்கப்படுதல் மற்றும் வெளியேற்றுதல் போன்றவற்றாேடு இணைந்துள்ள உறுப்புகள் அடங்கியது ……………………. எனப்படுகிறது.

விடை: கழிவுமண்டலம்

8. சிறுநீர் உருவாதல் செயல்பாட்டில் கிளாமருலார் வடிகட்டியிலிருந்து அதிகப்படியான நீரானது ………………….. மீண்டும் உறிஞ்சப்படுகிறது.

விடை: சேய்மை சுருள் நுண்குழல்

9. கருமுட்டையானது அண்டகத்திலிருந்து வெளியேறும் செயல் ………………….. எனப்படுகிறது.

விடை: கருமுட்டை வெளிப்படுதல்

10. …………………… என்பது விந்தகங்களில் உற்பத்தியாகும் ஆண்பால் உயிரணுவாகும்.

விடை: விந்து

11. 20 பற்கள் அடங்கிய பால் பற்கள் …………………… ஆகும்.

விடை: இரட்டைப் பல்வரிசை

12. 32 பற்கள் காெண்ட அமைப்பு …………………………………. எனப்படுகிறது.

விடை: கலப்புப் பல்வரிசை

III. சரியா தவறா எனக் கூறுக. தவறு எனில் சரியா கூற்றை எழுதுக.

1. இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்கிறது.

விடை: தவறு

சரியான விடை: இரைப்பையில் காணப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்கிறது.

2. செரிமானத்தின் போது, புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன.

விடை: சரி 

3. கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள், உப்புகள், குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.

விடை: சரி 

4. இயல்பாக உட்கூறுகளைத் தவிர, சிறுநீரானது உயிர் எதிரியை விட (ஆண்டிபயோடிக்), வைட்டமின்களை அதிகம் வெளியேற்றுகிறது.

விடை: சரி 

5. அண்டகத்திலிருந்து முட்டையானது வெளியேறும் நிகழ்வு கருவுறுகாலம் எனப்படும்.

விடை: தவறு

சரியான விடை: அண்டகத்திலிருந்து முட்டையானது வெளியேறும் நிகழ்வு கருமுட்டை வெளிப்படுதல் எனப்படும்.

IV. பொருத்துக.

உறுப்புநீக்குதல்
1. தோல்சிறுநீர்
2. நுரையீரல்கள்வியர்வை
3. பெருங்குடல்கார்பன் டை ஆக்ஸைடு
4. சிறுநீரகங்கள்செரிக்காத உணவு
விடை: 1 – ஆ, 2 – இ, 3 – இ, 4 – அ

V. கீழ்கண்டவற்றை வேறுபடுத்துக

அ. கழிவுநீக்கம் மற்றும் சுரத்தல்

கழிவுநீக்கம்

உடலில் ஏற்படும் நைட்ரஜன் அடங்கிய கழிவுகளை கழிவு மண்டலம் மூலம் அகற்றுவது கழிவு நீக்கம் எனப்படுகிறது.

சுரத்தல்

ஹார்மாேன்கள், என்ஸைம்கள், எண்ணெய், வியர்வை போன்றவை உடலின் பல்வேறு சுரப்பிகளால் சுரக்கப்பட்டு குறிப்பிட்ட ஒவ்வொன்றும் வேலையைச் செய்கின்றன. இதற்கு சுரத்தல் எனப் பெயர்.

ஆ) உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்

உறிஞ்சுதல்

செரிக்கப்பட்ட உணவு சிறுகுடலில் உள்ள குடலுறிஞ்சிகளால் ஈர்க்கப்படுவது உறிஞ்சுதல் எனப்படுகிறது.

தன்மயமாதல்

உறிஞ்சப்பட்ட உணவுப் பொருள்கள் இரத்தத்தின் மூலம் செல்களைச் சென்றடைவதற்கு தன்மயமாதல் எனப் பெயர்

இ) உட்காெள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல்

உட்காெள்ளுதல்

வாயில் வழியே உணவு உண்பது உட்காெள்ளல் எனப்படுகிறது.

வெளியேற்றுதல்

உடலில் தாேன்றும் கழிவுகள் மலக்குடலைக் கடந்து குதத்தின் வழியே வெளியேற்றப்படுவது வெளியேற்றுதல் எனப்படுகிறது.

ஈ) இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்பு பல்வரிசை

இரட்டைப் பல்வரிசை

மனிதர்களின் ஆயுட் காலத்தில் இரண்டு விதமான பல்வரிசைகள் தாேன்றுகின்றன.

கலப்பு பல்வரிசை

குழந்தைப் பருவத்தில் உண்டாகும் 20 பற்கள் அடங்கிய பால்பற்கள் இரட்டைப் பல்வரிசை அதன் பின் நிலையாக அமையும் 32 பல் காெண்ட அமைப்பு கலப்புப் பல்வரிசை எனப்படுகிறது.

உ) வெட்டுப்பற்கள் மற்றும் காேரைப்பற்கள்

வெட்டுப்பற்கள்

வெட்டுப்பற்கள் மாெத்தம் 8 உள்ளன. இவை உணவை வெட்டுவதற்கும் கடிப்பதற்கும் பயன்படுகின்றன.

காேரைப்பற்கள்

காேரைப் பற்கள் நான்கு உள்ளன. இவை உணவைக் கிழிக்கப் பயன்படுகின்றன.

ஊ) விந்து மற்றும் அண்டம்

விந்து

விந்து என்பது விந்தங்களில் உற்பத்தியாகும் ஆண் பால் உயிரணுவாகும். இது நகரக் கூடியது.

அண்டம்

அண்டம் என்பது கருமுட்டையாகும். இது பெண் பாலின உயிரணு.

V. மிகவும் சுருக்கமாக விடையளி

1. செரிக்கப்பட்ட உணைவை உட்கிரகிக்க எவ்வாறு சிறுகுடலானது அமைக்கப்பட்டுள்ளது?

சிறுகுடலின் அடிப்குதியாக இருக்கும் இப்பகுதி பெருங்குடலில் திறக்கிறது. இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும். இவைகளில் மிகச்சிறிய விரல் போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் 1 மி.மீ நீளமுடைய குடல் உறிஞ்சுகள் என அழைக்கப்படும். இவற்றில் தான் உணவானது உட்கிரகிக்கப்படுகிறது.

2. நமக்கு ஏன் வியர்க்கிறது?

நம் உடலில் வியர்த்தல் என்பது முக்கியமான பணியாகும். எப்பொழுது வெளிப்புற பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கின்றதோ அப்பொழுது நமது உடலின் வெப்பநிலையை சீராக்க செய்வதற்காக வியர்க்கின்றது.

3. மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டு முக்கிய பணிகளைக் குறிப்பிடுக.

  1. சிறுநீரகங்கள் நம் உடலில் உள்ள பாய்மங்கள் மற்றும் மின் பகுதிகள் சமநிலையில் இருக்க உதவுகின்றன.
  2. இவை இரத்தத்தின் அமில – காரத்தன்மையை ஒழுங்குப்படுத்துகின்றன.
  3. இரத்தத்திலும் திசுக்களிலும் ஏற்படும் சவ்வூடுபரவல் அழுத்தத்தை நிலை நிறுத்துகின்றன.
  4. பிளாஸ்மாவின் முக்கியக் கூறுகளான குளுக்காேஸ், அமினாே அமிலங்களைத் தக்க வைத்துக் காெள்ள உதவுகின்றன.

4. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதலை எவ்வாறு கட்டுப்படுத்த முடிகிறது?

நமது வயிற்றுப்பகுதி தசையை உள்புறமாக அழுக்கி பிடித்துக் கொண்டால் சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த முடியும்.

5. முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும் பற்களின் பெயர்களை எழுதி, அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.

பற்களின் வகைகள்பற்களின் எண்ணிக்கைபணிகள்
வெட்டுப்பற்கள்8வெட்டவும் கடிக்கவும்
காேரைப் பற்கள்4கிழிக்கவும் துளைக்கவும்
முன் கடைவாய்ப் பற்கள்8நசுக்கவும் அரைக்கவும்
பின் கடைவாய்ப் பற்கள் 12நசுக்கவும் அரைக்கவும் மெல்லவும்

6. நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.

ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒரு மில்லியனை விட அதிகமான நெஃப்ரான்கள் அமைந்துள்ளன. இந்த நெஃப்ரான்கள் அல்லது சிறுநீரைக் கொண்டு வரும் நுண்குழல்கள் சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகுகள் ஆகும். ஒவ்வொரு நெஃப்ரானிலும் சிறுநீரக கார்ப்பசல் அல்லது மால்பீஜியன் உறுப்பு மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் ஆகிய இரு பகுதிகள் காணப்படுகின்றன. இச்சிறுநீரக கார்ப்பசலில் கிண்ண வடிவில் காணப்படும பெளமானின் கிண்ணத்தில் இரத்த நுண் நாளங்களின் தொகுப்பாகிய கிளாமருலஸ் என்ற பகுதி காணப்படுகிறது. இரத்தமானது கிளாமரூலஸில் உள்ள நுண்நாளத் தொகுப்பில் உட்செல் நுண் தமனி வழியாக உட்சென்று வெளிச்செல் நுண் தமனி வழியாக வெளியேறுகிறது.

7. கீழ்காணும் செரிமான செயல்முறையின் ஐந்து படிநிலைகளை சரியாக வரிசைப்படுத்துக. (செரிமானம், தன்மயமாதல், உட்கொள்ளுதல், வெளியேற்றுதல், உறிஞ்சுதல்)

  1. உட்காெள்ளுதல்
  2. செரிமானம்
  3. உறிஞ்சுதல்
  4. தன்மயமாதல்
  5. வெளியேற்றுதல்.

8. இரைப்பையானது ஹைட்ரோகுளோரிக் அமிலம் அடங்கிய இரப்பை நீரைச் சுரக்கிறது. இதனுடைய பணி என் ?

இரப்பையிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவிலுள்ள நுண்கிருமிகளைக் காெல்கிறது. அத்துடன் உணவை அமிலத்தன்மை உள்ளதாக மாற்றுகிறது.

9. ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.

  • ஆண் – ஆண்ட்ரோஜன் (டெஸ்டோஸ்டீரான்)
  • பெண் – ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டீரான்

VII. விரிவாக விடையளி.

1. மனிதனின் உணவுப் பாதையை விவரி

உணவுப் பாதைதசையாலான, சுருண்ட மற்றும் குழாய் வடிவ அமைப்பாகும். இவ்வுணவுப் பாதை, வாய், வாய்க்குழி, தொண்டை, உணவுக் குழல், இரைப்பை, சிறுகுடல் (முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல் மற்றும் பின் சிறுகுடல் உள்ளடங்கியது), பெருங்குடல் (குடல்வால், கோலன் மற்றும் மலக்குடல் உள்ளடங்கியது) மற்றும் மலவாய் போன்ற உறுப்புகளைக் கொண்டுள்ளது.

வாய்:

வாய், உணவுப் பாதையின் ஆரம்பத் துவாரமாகும். இது வாய்க்குழிக்குள் திறக்கிறது. இது இரு மென்மையான அசையும் மேல் மற்றும் கீழ் உதடுகளால்  பிணைக்கப்பட்டுள்ளது. வாய்க்குழியானது பெரிய இடைவெளியோடு மேல் பகுதியில் அண்ணம் என்ற பகுதியாலும், கீழ்ப்பகுதியில் தொண்டையாலும், பக்கப்பகுதியில் தாடைகளாலும் பிணைக்கப்பட்டுள்ளன. தாடைகள் பற்களைத் தாங்குகின்றன.

பற்கள்:

கடினமான கட்டமைப்பைக் கொண்ட பற்கள் உணவைப் பிடித்துக் கொள்வதற்கும், வெட்டுவதற்கும், அரைப்பதற்கும் மற்றும் நசுக்குவதற்கும் உதவுகின்றன.

உமிழ்நீர்ச் சுரப்பிகள்:

வாய்க் குழிக்குள் மூன்று இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன. அவையாவன: மேலண்ணச் சுரப்பி, நாவடிச் சுரப்பி மற்றும் தாடைச் சுரப்பி

i. மேலண்ணச் சுரப்பி

இச்சுரப்பிதான் மிகப்பெரிய சுரப்பியாகும். இவை இரு கன்னங்களிலும், காதுக்குக் கீேழ அமைந்துள்ளன.

ii. நாவடிச் சுரப்பி

இது மிகச் சிறிய சுரப்பியாகும். நாவின் அடிப்புறத்தில் அமைந்துள்ளது.

iii. கீழ் மற்றும் மேல் தாடைச் சுரப்பிகள்

இவை கீழ் தாடையின் கோணங்களில் காணப்படுகின்றன

நாக்கு:

நாக்கு தசையாலான, உணர்ச்சி உறுப்பு ஆகும். இது உமிழ்நீருடன் உணவானது கலக்க உதவுகிறது. உணவின் சுவையை உணர்வதற்கு நாவில் உள்ள சுவை மொட்டுகள் உதவுகின்றன. உணவுக்கவளம் என்றழைக்கப்படுகிற மென்மையாக்கப்பட்ட உணவானது நாக்கின் மூலம் உருட்டப்பட்டு தொண்டை வழியாக விழுங்கப்பட்டு உணவுக் குழாய்க்குள் கடந்து செல்கிறது. இவ்வாறு உணவானது விழுங்கப்படும்போது குரல்வளை மூடியானது (தசையாலான மடல் போன்ற அமைப்புடைய தசையாலான குரல் வளையின் முனை மற்றும் மூச்சுக் குழலின் துவக்கத்தில் அமைந்துள்ளது) மூச்சுக்குழலுக்குள் உணவு போய்விடாதபடி தடுக்கிறது.

தொண்டை:

தொண்டை என்பது, மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பு ஆகும். இது வாய்ப் பகுதியை உணவுக் குழலுடன் இணைக்கிறது. இது வாயிலிருந்து உணவானது உணவுக் குழலுக்கு கடந்து செல்லும் ஒரு பாதையாக பயன்படுகிறது.

உணவுக் குழல்:

இது 22 செ.மீ நீளமுடைய தசைப்படலக் குழலாகும். இது தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் குடல் தசைச் சுவரின் சீரான சுருங்குதல் மற்றும் தளர்தல் (அலை போன்ற இயக்கம்) போன்ற நிகழ்வால் கடத்துகிறது.

இரைப்பை:

இரைப்பையானது உணவுக் குழலுக்கும் சிறுகுடலுக்குமிடையே ‘J’ போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும். இரைப்பையின் உள்ளடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து இரைப்பை நீர் சுரக்கிறது. இந்த இரைப்பை நீர் நிறமற்றதாகவும், அதிக அமிலத் தன்மையுடைய ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும், நொதிகளான ரென்னின் (பச்சிளம் குழந்தைகளில்) மற்றும் பெப்சின் ஆகியவற்றையும் கொண்டதாக உள்ளது.

சிறுகுடல்:

உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான பகுதி சிறுகுடல் ஆகும். இது 5 – 7 மீட்டர் நீளமுள்ள சுருண்ட குழலாகும். இக்குடல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை முன்சிறு குடல் (டியோடினம்), நடுச்சிறுகுடல் (ஜுஜினம்) மற்றும் பின்சிறுகுடல் (இலியம்) ஆகும்.

கல்லீரல்:

உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி கல்லீரல் ஆகும். இது செம்மண் நிறத்தில் காணப்படுகிறது. இது வலது மற்றும் இடது என இரண்டு கதுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வலது கதுப்பானது, இடது கதுப்பைவிட பெரிதானதாகும். கல்லீரலின் கீழ்பகுதியில் பித்தப்பையானது அமைந்துள்ளது. கல்லீரல் செல்கள் பித்தநீரைச் சுரக்கின்றன. அது தற்காலிகமாக பித்தப்பையில் சேகரிக்கப்படுகிறது. பித்தநீரானது உணவு உட்புகும் நேரத்தில் சிறுகுடலுக்குள் வெளியிடப்படுகிறது. பித்தநீரில் பித்தஉப்புகளும் பித்த நிறமிகளும் காணப்படுகின்றன. பித்தஉப்புகள், பால்மமாக்கல் என்ற செயலின் அடிப்படையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.

உணவு உறிஞ்சப்படுதல்

உறிஞ்சுதல் என்பது செரிமானத்திற்குப் பின்னர் பெறப்பட்ட ஊட்டச் சத்துக்களானவை குடலுறுஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு, இரத்தம் மற்றும் நிணநீர் மூலம் உடல் முழுவதும் விநியோகிக்கப்பட்டு, ஒவ்வொரு உடல் செல்களின் தேவைகளுக்கு ஏற்ப வழங்கப்படுதல் ஆகும்.

உணவு தன்மயமாதல்

தன்மயமாதல் என்பது உறிஞ்சப்பட்ட உணவுப்பொருட்களை உட்புறமுள்ள மற்றும் ஒத்திசைவான திசுக்களோடு இணைப்பதாகும்.

பெருங்குடல்

உறிஞ்சப்படாத மற்றும் செரிக்காத உணவு பெருங்குடலுக்குள் செலுத்தப்படுகிறத

2. சிறுநீரகத்தின் அமைப்பினையும், சிறுநீர் உருவாதலிலுள்ள படிநிலைகளையும் விளக்குக.

சிறுநீரகம் அடர் சிவப்பு நிறங்கொண்ட அவரை வடிவ உறுப்பாகும். இது முதுகெலும்பின் இரு பக்கத்திலும் வயிற்றுப் பகுதியின் அடிப்பாகத்திலுள்ள சுவர் பகுதியோடு ஒட்டிக் காணப்படுகிறது. கல்லீரலானது வலது புறத்தில் அதிக இடத்தில் படர்ந்திருப்பதால் வலது புறமுள்ள சிறுநீரகமானது இடதுபுற சிறுநீரகத்தைவிட சற்று கீழே காணப்படுகிறது.

 

சிறுநீர் உருவாகும் முறை

கீழ்காணும் மூன்று படிநிலைகளில் சிறுநீரானது உருவாகிறது.

  1. கிளாமருலார் வடிகட்டுதல்
  2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்
  3. குழல்களில் சுரத்தல்

கிளாமருலார் வடிகட்டுதல்:

கிளாமருலஸ் மற்றும் பெளமானின் கிண்ணம் ஆகியவற்றின் எப்பித்தீலிய சுவர்களின் மூலமாக இரத்தமானது வடிகட்டப்படுவதால் சிறுநீரானது உருவாக்கப்படுகிறது. இவ்வாறாக வடிகட்டப்பட்ட திரவமானது கிளாமருலார் வடிதிரவம் எனப்படும். இரத்தத்தில் காணப்படும் தேவையான
மற்றும் தேவையற்ற பொருள்கள் இங்கு வடிகட்டப்படுகின்றன.

குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்:

அண்மைச் சுருள் நுண்குழலில் காணப்படும் வடிதிரவத்தில்
தேவையான பொருள்களான குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகியவை ‘தேர்ந்தெடுத்து மீள உறிஞ்சுதல்’ என்ற நிகழ்வால் மீண்டும் உறிஞ்சப்படுகின்றன.

குழல்களில் சுரத்தல்:

ஹைட்ரஜன் அல்லது பொட்டாசியம் அயனி போன்ற பொருள்கள் நுண் நாளங்களுக்குள் சுரக்கின்றன. பொட்டாசியம் மற்றும் பிற வேதிப்பொருள்களை பெனிசிலின் மற்றும் ஆஸ்பிரின் போன்ற பொருள்கள் சேய்மை சுருள் நுண்குழல்களில் வடிதிரவமாக சுரக்கின்றன. இந்த நுண்குழல் வடிதிரவமே இறுதியாக சிறுநீர் எனப்படுகிறது. இது மனிதனில் உயர் உப்படர்வுத் (hypertonic) தன்மையுடைய திரவமாக இருக்கிறது. இறுதியாக சேகரிப்பு நாளத்தில் சிறுநீரானது சேர்ந்து பெல்விஸ் பகுதிக்குச் சென்று சிறுநீர்க்குழாய்கள் வழியாக சிறுநீர்பையை அடைந்து பெரிஸ்டால்ஸிஸ் இயக்கத்தின் மூலம் வெளியேறுகிறது. சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேற்றப்படும் நிகழ்வே மைக்டியூரிஷன் (அ) சிறுநீர் வெளியேற்றமாகும். ஒரு ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளைக்கு ஒன்றுமுதல் இரண்டு லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகின்றன.

VIII. கூற்று மற்றும் காரணம்

கீழ்காணும் ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு வழிகாட்டி கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ளள நான்கு வாக்கியஙகளில் ஒன்றை சரியான பதிலாகக் குறிககவும்.

  1. கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
  2. கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை
  3. கூற்றும் சரி அதற்கான காரணம் தவறானது.
  4. கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு.

1. கூற்று : சிறுநீரகங்களின் வழியே யூரியா வெளியேற்றப்படுகிறது.
    காரணம் : யூரியா ஒரு நச்சுத் தன்மையுடைய பொருள். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக யூரியா குவிந்தால் இறப்புககு வழிவகுக்கும்.

விடை: கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

2. கூற்று : இரு பாலினங்களிலும் பாலினச் சுரப்பிகள் (gonads) இரட்டை வேலையைச் செய்கின்றன.
   காரணம் : பாலினச் சுரப்பிகள் (gonads) முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன

விடை: கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

IX. கீழ் காெடுக்கப்பட்டுள்ள படத்தின் பாகங்களை சரியான விருப்பத் தேர்விலிருந்து எடுத்து பாெருத்துக.

12345
கருப்பை நாளம்கருக்குழல்கர்ப்பப்பைசெர்விக்ஸ்யோனி
கருக்குழல்செர்விக்ஸ்யோனிஅண்டகம்விந்துக்குழல்
அண்டகம்கருக்குழல்கர்ப்பப்பையோனிசெர்விக்ஸ்
கருப்பை நாளம்அண்டகம்செர்விக்ஸ்கர்ப்பப்பையோனி

X. கீழ்காண்பவற்றின் பகுதிகளைக் கண்டறிக:

1. இது உணவினை தொண்டையிலிருந்து இரைப்பைக்கு குடல் தசை அசைவு மூலம் கடத்துகிறது.

உணவுக்குழல்.

2. சிறுகுடலின் உறிஞ்சும் தன்மையை அதிகப்படுத்தும் விரல் போன்ற நீட்சியுடையது.

குடல் உறிஞ்சிகள்.

3. பெளமானின் கிண்ணத்தினுள் உள்ள நுண்குழாய்களின் கொத்து.

கிளாமரூலஸ்.

4. சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைக் கொண்டு செல்லும் மெல்லிய தசையாலான குழாய்.

சிறுநீர்க் குழாய்.

5. விந்தகத்தைச் சுற்றியுள்ள சிறிய பை போன்ற தசையாலான அமைப்பு.

விரைப்பை

XI. சுருக்கமாக விடையளி

1. கீழ்காணும் சொற்கூறுகளை வரையறுக்க

அ. செரித்தல்

உணவின் கூட்டுப் பொருள்கள் எளிய பொருள்களாக மாற்றப்படுதல்

ஆ. சவ்வூடு பரவலை சீராக்கல்

இரத்தம், திசக்களில் உப்பின் செறிவை சமநிலைப்படுத்தல்

இ. பால்மமாக்குதல்

பித்த உப்புகள், பால்மாக்கல் (பெரிய கொழுப்பு திவளைகளாக மாற்றப்பட்டு செரிக்க வைக்கப்படுகிறது) என்ற செயலின் அடிப்படையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.

ஈ. கருமுட்டை வெளிப்படுதல்

கருமுட்டையானது அண்டகத்திலிருந்து வெளியேறும் செயல் கருமுட்டை வெளிப்படுதல் என்று அழைக்கப்படுகிறது.

2. ஸ்டார்ச், புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்தின் இறுதி விளைபொருட்கள் யாவை?

ஸ்டார்ச் – குளுக்கோஸ்

புரதங்கள் – அமினோ அமிலங்கள்

காெழுப்பு – காெழுப்பு, அமிலங்கள், கிளிசரால்

3. பெண் இனப்பெருக்க மண்டலத்திலுள்ள அண்டகஙகள் மற்றும் கரப்பப்பை ஆகியவற்றின் பணிகள் யாவை?

அண்டகங்கள் பெண் இனப்பெருக்க சுரப்பிகள் ஆகும். இதிலிருந்து பெண் பாலின உயிரணு (கருமுட்டை அல்லது அண்டம்) மற்றும் பெண் பாலின ஹார்மோன்கள் (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான்) உற்பத்தி செய்யப்படுகின்றன.

கருவின் வளர்ச்சியானது கர்ப்பப்பையின் உள்ளே நடைபெறுகிறது.

4. கீழ்காண்பனவற்றிக்கான காரணங்கள் யாவை?

அ. மனித இனத்தில் ஆண்களின் விதைப்பையானது உடலுக்கு வெளியே உள்ளது.

விரைப்பை வெப்ப சீராக்கியாக செயலாற்றும் உறுப்பாகும். விந்துக்களை உருவாக்குவதற்குத் தேவையான உகந்த வெப்பநிலையை விட 1 முதல் 3oC குறைவான வெப்பநிலையில் விந்தணுவின் வளர்ச்சி ஏற்படுகிறது.

ஆ. இரைப்பையின் சுவரானது அதனுடைய நொதியால் செரிக்கப்பட மாட்டாது.

இந்த இரப்பை நீர் நிறமற்றதாவும், அதிக அமிலத் தன்மையுடைய ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும், நொதிகளான ரென்னின் மற்றும் பெப்சின் ஆகியவற்றை கொண்டதாகவும் உள்ளது.

5. கீழ்காணும் அட்டவணையப் பூர்த்தி செய்க

நொதிகள்மூலக்கூறுசெரிமான விளைபொருள்கள்
டிரிப்ஸீன்புரதங்கள் மற்றும் பெப்டோன்கள்அமினோ அமிலம்
மால்டேஸ்கார்போ ஹைட்ரேட்குளுக்கோஸ்
சுக்ரேஸ்சுக்ரோஸ்குளுக்கோஸ் மற்றும் ப்ரெக்டோஸ்
லாக்டேஸ்லாக்டோஸ்குளுக்கோஸ் மற்றும் காலக்டோஸ்
லிப்பேஸ்கொழுப்புகள்கொழுப்பு அமிலங்கள் மற்றும் கிளிசாரல்

 

பயனுள்ள பக்கங்கள்