பாடம் 27 கணினியின் பாகங்கள்
கணினியின் பாகங்கள் வினா விடை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. உள்ளீட்டுக்கருவி அல்லாதது எது?
- சுட்டி
- விசைப்பலகை
- ஒலிப்பெருக்கி
- விரலி
விடை: ஒலிப்பெருக்கி
2. மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி ___________.
- ஈதர்நெட்
- வி.ஜி.ஏ
- எச்.டி.எம்.ஐ
- யு.எஸ்பி
விடை: வி.ஜி.ஏ
3. கீழ்காண்பனவற்றுள் எது உள்ளீட்டுக்கருவி?
- ஒலிப்பெருக்கி
- சுட்டி
- திரையகம்
- அச்சுப்பொறி
விடை: சுட்டி
4. கீழ்காண்பனவற்றுள் கம்பி இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?
- ஊடலை
- மின்னலை
- வி.ஜி.ஏ
- யு.எஸ்.பி
விடை: ஊடலை
5. விரலி ஒரு _________ ஆகப் பயன்படுகிறது.
- வெளியீட்டுக்கருவி
- உள்ளீட்டுக்கருவி
- சேமிப்புக்கருவி
- இணைப்புக்கம்பி
விடை: சேமிப்புக்கருவி
II. பாெருத்துக
1.வி.ஜி.ஏ | உள்ளீட்டுக்கருவி |
2. அருகலை | இணைப்புவடம் |
3. அச்சுப்பொறி | எல்.இ.டி. தொலைக்காட்சி |
4. விசைப்பலகை | கம்பி இல்லா இணைப்பு |
5. எச்.டி.எம்.ஐ | வெளியீட்டுக்கருவி |
விடை : 1 – ஆ, 2 –ஈ, 3 – உ, 4 – அ, 5 – இ |
III. சிறுவினாக்கள்:
1. கணினியின் கூறுகள் யாவை?
கணினியின் மூன்று பாகங்களான :
- உள்ளீடகம் (Input Unit)
- மையச்செயலகம் (CPU)
- வெளியீட்டகம் (Output Unit)
2. உள்ளீட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.
உள்ளீட்டகம் | வெளியீட்டகம் |
கணினி செயலகத்துக்கு தரவுகளையும் உள்ளீடுகளையும் உள்ளீடு செய்யும் அலகு | மையச் செயலகத்திலிருந்து பெறப்படும் குறிப்புகள் பயனருக்கு கொண்டு செல்லும் அலகு |
எகா : சுட்டி, வருடி, விசைப்பலகை | எகா : அச்சபபொறி, கணினித்திரை |
3. பல்வேறு இணைப்பு வடங்களைக் கூறி, எவையேனும் மூன்றினை விளக்குக.
- வி.ஜி.ஏ (VGA – Video Graphics Array)
- எச்டிஎம்ஐ (HDMI – High Definition Multimedia Interface)
- யுஎஸ்பி (USB – Universal Serial Bus)
- தரவுக்கம்பி (Data Cable)
- ஒலி வடம் (Audio Cable)
- மின் இணைப்புக் கம்பி (Power Cord)
- ஒலி வாங்கி இணப்புக்கம்பி (Mic cable)
- ஈதர் நெட் இணைப்புக்கம்பி (Ethernet cable)
வி.ஜி.ஏ (VGA) இணைப்புக்கம்பி :
கணினியின் மையச் செயலகத்தைத் திரையுடன் இணடிக்க வி.ஜி.ஏ யன்படுகிறது.
யுஎஸ்பி (USB) புகைப்படம் :
அச்சுப்பொறி, வருடி, விரலி, சுட்டி, விசைப்பலகை, இணைப்புக்கருவி, திறன்பேசி, போன்றவற்றைக் கணினியு்ன் இணைக்கப் பயன்படுகிறது.
எச்டிஎம்ஐ (HDMI) புகைப்படம் :
உயர் வரையற்ற வீடியாே, டிஜிட்டல் ஆடியாே ஆகியவற்றை ஒரே ஒரு கேபிள் வழியாக எல்.இ.டி. கடத்துகிறது. தாெலைக்காட்சிகள், ஒளி வீழ்த்தி , கணினித் திரை ஆகியவற்றைக் கணினியுடன் இணைக்க யன்படுகிறது.
தரவுக்கம்பி (Data cable) :
கணினியின் மையச் செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி ஆகியவற்றை இணைக்க, தரவுக்கம்பி பயன்படுகிறது.
ஒலி வடம் (Audio Jack) :
ஒலி வடம் கணினியை ஒலிபெருக்கியுடன இணைக்கப் பயன்படுகிறது.
மின் இணைப்புவடம் (Power Cord) :
மையச் செயலகம், கணினித்திரை, ஒலிபெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின் இணைப்பை வழங்குகிறது.
ஒலி வாங்கி (Mic) இணைப்புவடம் :
ஒலிவாங்கியை மையச்செயலகத்துடன் இணைப்தற்கு ஒலிவாங்கி இணைப்பு வடம் உதவுகிறது.
ஈதர்நெட் (Ethernet) இணைப்புவடம்:
கணினியுடன் இணையவழித் தாெடர்பை ஏற்படுத்த ஈதர்நெட் இணைப்புவடம் பயன்படுகிறது.