9th Std Social Science Term 1 Solution | Lesson.1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு  முந்தைய காலம்

பாடம் 1. மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு  முந்தைய காலம்

9th Standard Social Science Book Term 1 - மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

பாடம் 1. > வரலாற்றுக்கு  முந்தைய காலம்

I. சரியான வி்டையைத் தேர்வு செய்க. 

1. மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமோக இருப்பது.

  1. கொரில்லோ
  2. சிம்பன்ஸி
  3. உரோங் உட்டோன்
  4. கிரேட் ஏப்ஸ்

விடை : சிம்பன்ஸி

2. விவசாயம் மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்

  1. பழைய கற்காலம்
  2. இடைக் கற்காலம்
  3. புதிய கற்காலம்
  4. பெருங் கற்காலம்

விடை : புதிய கற்காலம்

3. பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ………………. ஆவர்

  1. ஹோமோ ஹேபிலிஸ்
  2. ஹோமோ எர்க்டஸ்
  3.  ஹோமோ சேபியன்ஸ்
  4. நியாண்டர் தால் மனிதன்

விடை : ஹோமோ சேபியன்ஸ்

4. தமிழகத்துக்கு அப்பால் சேர, சோழ, பாண்டியர்கள் குறித்து அறிந்து கொள்ள பொ.ஆ.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த …………………….. கல்வெட்டுக் குறிப்புகள் உதவுகின்றன.

  1. புலிகேசி
  2. அசோகர்
  3. சந்திரகுப்தர்
  4. தனநந்தர்

விடை : அசோகர்

5. எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி …………………. எனப்படுகிறது.

  1. கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு
  2. பிறைநிலப்பகுதி
  3. ஸோலோ ஆறு
  4. நியாண்டர் பள்ளத்தாக்கு

விடை : பிறைநிலப்பகுதி

6. சர் இரோபர்ட் புருஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் ………………………. கருவிகளை முதன்முறையான கண்டுபிடித்தார்.

  1. கற்காலம்
  2. பழங்கற்காலம்
  3. இடைக் கற்காலம்
  4. புதிய கற்காலம்

விடை : பழங்கற்காலம்

7. i) எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தையதாகும்.

ii) வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் மொழியை வளர்த்நதெடுத்தார்கள்; அழகான ஓவியங்களையும் கலைப்பொருட்களையும் உருவாக்கினோர்கள்.

iii) வரலாற்றுக்கு முந்தைய காலச் சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாகக்  கருதப்படுகின்றன.

iv) விலங்குகளை வளர்த்தனர், பயிர் செய்தல் ஆகியவை கடந்த காலகட்டம் இடைக்கற்காலம் எனப்படுகிறது.

  1. 1 – சரி
  2. 1 மற்றும் 2 சரி
  3. 1 மற்றும் 4 சரி
  4. 2 மற்றும் 3 சரி

விடை : 1 மற்றும் 4 சரி

8. i) செல்ட் எனப்பட்ட தீட்டப்பைட்ட கற்காேடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள்.

ii) புதிய கற்காலக கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது.

iii) புதிய கற்காலத்தைத் தொடரந்து வந்த பண்பாட்டுக்காலம் வெண்கலக் காலம் எனப்படுகிறது.

iv) விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலக் கட்டம் இடைக்கறாகாலம் எனப்படுகிறது

  1. (i) சரி
  2. (ii) சரி
  3. (ii) மற்றும் (iii) சரி
  4. (iv) சரி

விடை : (i) சரி

9. கூற்று – தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக்கற்கால  வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காரணம் – நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது.

  1. கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
  2. கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
  3. கூற்று சரி; காரணம் தவறு.
  4. கூற்றும் காரணமும் தவறானது.

விடை : கூற்றும் காரணமும் தவறானது.

10. கூற்று – பொ.ஆ.மு.3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுக் குறிப்புகள் அவரது பேரரசுக்கு வெளியே இருந்த சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.

காரணம் – தமிழகத்தைச் சேர்ந்த பழங்கால அரசர்கள் அரசியல் நோக்கில் அவர்கள் ஆட்சியை இரும்புக்காலத்தில் துவக்கினார்கள்.

  1. கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
  2. கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
  3. கூற்று சரி; காரணம் தவறு.
  4. கூற்றும் காரணமும் தவறானவை.

விடை : கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

1. மனிதர்கள் உருவாக்கிய அல்லது மாற்றியமைத்த ஒரு பொருள் அல்லது கருவி _____________________ எனப்படுகிறது.

விடை : செய்பாெருள்

2. தொடக்க நிலை பல செல் உயிரினம் முதல் முதலில் _________________ காலத்தில் தோன்றியது.

விடை : தொல்லுயிரூழி

3. கோடரிகளும் பிளக்கும் கருவிகளும் _________________ பண்பாட்டைச் சேர்ந்த முக்கியமான கருவி வகைகளாகும்.

விடை : கீழ் பழங்கற்கால

4. கற்கருவிகளை உருவாக்குவதற்குத் தேவையான வழிமுறைகளும் நுட்பமும் _________________ தொழில் நுட்பம் என அளழக்கப்படுகிறது.

விடை : கற்கருவி

5. பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் ______________ எனப்படும்.

விடை : இடைக்காலம்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்க. 

அ) மனிதர்கள் தோற்றத்தை அறிவியில் நோக்கில் புரிந்து கொள்ள “தகுதியுள்ளது பிழைக்கும்” என்ற கருத்து உதவுகிறது

ஆ) உயிர்களின் தோற்றம் குறித்த நூலை ஹெர்பரட் ஸ்பென்சர் பதிப்பித்தார்

இ) உயிரியில் பரிணாம வளர்ச்சி குறித்த டார்வின் கோட்பாடு இயற்கைத்தேர்வு என்ற  வழிமுறையுடன் தொடர்பு உடையது.

ஈ) கல் தொழில்நுட்பம் குறித்து ஆராய்வது நிலவியல் ஆகும்

சரியான கூற்று :அ) மனிதர்கள் தோற்றத்தை அறிவியில் நோக்கில் புரிந்து கொள்ள “தகுதியுள்ளது பிழைக்கும்” என்ற கருத்து உதவுகிறது

அ) குரங்கினங்களில் உராங் உட்டான் மனித மரபுக்கு மிக நெருக்கமான குரகினமாகும்.

ஆ) மனிதர்களின் முன்னோர்களை ஹோமினின் என்கிறோம், அவர்களின் தோற்றம் குறித்த சான்றுகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.

இ) இரு பக்கமும் கூர்மையாகச் செதுக்கப்பட்ட சிறு சில்லு சீவல் எனப்படுகிறது.

ஈ) பெரிய கற்களைச் செதுக்கி தயாரிக்கப்படும் கைக்கோடாரிகள் அச்சூலியன் கருவிகள் எனப்படும்

சரியான கூற்று : ஆ) மனிதர்களின் முன்னோர்களை ஹோமினின் என்கிறோம், அவர்களின் தோற்றம் குறித்த சான்றுகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.

IV. பொருத்துக

1. பழங்கால மானுடவியல்டெரிஸ்
2. கோடரிக்கருவிகள்வீனஸ்
3. கல்லிலும் எலும்பிலும் காணப்பட்ட உருவங்கள்அச்சூலியன்
4. செம்மணல் மேடுகள்நுண்கற்காலம்
5. சிறு அளவிலான கல்லால் ஆன செய்பொருள்கள்மனித இன முன்னோர்கள் குறித்த ஆய்வு
விடை : 1 – உ, 2 – இ, 3 – ஆ. 4 – அ, 5 – ஈ

V. சுருக்கமான விடை தருக.

1. சிந்தனைகளின் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது.

  • உலகம் மற்றும் பேரண்டம் குறித்து புரிந்துமு கொள்ளவும் அவைப்பற்றிய அறிவை சேகரித்து விளக்கவும் இயன்ற ஒரே உயிரினம் மானுட இனம் மட்டும் தான்.
  • பரிணாமா வளர்ச்சியில் அறிவாற்றலுடன் இயற்கை, தம்மை சுற்றியுள்ள உயிரினங்கள் குறித்து சிந்தித்து கேள்வி எழுப்பவும் தொடங்கினர்.
  • இயற்கை பற்றிய அவனது சுயபுரிதலே, இயற்கையை வழிபட வைத்தது.

2. வரலாற்றுக்கு முந்தைய காலத் தமிழக மக்களின் வாழ்வில் கால்நடை வளர்த்தல் ஏற்படுத்திய தாக்கம் பற்றி குறிப்பு தருக.

  • கீழப் பழங்காலப் பண்பாட்டில் தமிழக மக்கள் காட்டு விலங்குளை வேட்டையாடினர்.
  • புதிய கற்காலப் பண்பாட்டில் கால்நடை மேய்த்தல் அவர்களது முக்கியமான தொழிலாக இருந்தது.
  • இரும்புக்கால மக்கள் ஆடு, மாடுகளை வளர்த்தனர். கால்நடைவளர்த்தல் அவர்கள் வாழ்வின் அங்கமானது.

3. நியாண்டர்தால்களின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளைக் கூறு.

  • நியாண்டர்தால் மனிதன் உயரத்தில் குட்டையாகவும், அளவில் சிறியதாகவும் காணப்படுவான்.
  • வேட்டையாடுவதற்கு கற்கருவிகளையும், நெருப்பையும் பயன்படுத்தினர்.
  • இறந்தவர்களைப் புதைத்தார்கள்
  • குளிர்காலத்தை தாக்குபிடிக்கும் கதகதப்பான வீடுகள், தைக்கப்பட்ட ஆடைகள், ஊசிகள் ஆகியவற்றை பெற்றிருக்கவில்லை

4. பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு

பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்

  1. டோல்மென் எனப்படும் கற்திட்டை
  2. சிஸ்ட் எனப்படும் கல்லறை
  3. மென்ஹிர் எனப்படும் நினைவுச்சின்ன குத்துக்கல்
  4. தாழி, பாறையைக் குடைந்து உருவாக்கிய குகைகள்
  5. சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள்

5. விலங்குகளை மனிதன் பழக்கிய நிகழ்வு மனித வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும் விளக்குக

  • பயிர்களை விளைவித்தலும், விலங்குகளை பழக்கப்பபடுத்தலும் புதிய கற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • நாய்கள் தான் முதலில் பழக்கபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.
  • செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் பொ.ஆ.மு 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்மேற்கு ஆசியாவில் பழக்கப்படுத்தப்பட்டன.
  • சுமேரிய நாகரிகத்தில் நிலத்தை உழுவதற்கு காளைகள் பயன்படுதப்பட்டன.
  • புதிய கற்கால மெஹர்கரில் ஆடுகள், மாடுகள் பழக்கபடுப்பட்டதற்கான சாற்றுகள் கிடைத்துள்ளன.

6. கருவிகள் செய்வதில் கீழப் பழைய கற்கால மக்களிடமிருந்த தொழில்நுடப்த்தை திறனாய்வு செய்க.

  • பெரிய கற்களைச் செதில்களாகச் சீவி கைக்கோடாரி உள்ளிட்ட பல வகைக்கருவிகளை வடிவைத்தார்கள்.
  • வாழ்க்கைத் தேவைகளுக்காக கைக்கோடாரி, வெட்டுக்கத்தி உள்ளிட்ட கருவிகளைச் செய்தார்கள். இவை இருமுகக் கருவிகள்  அழைக்கப்படுகின்றன.

VI. தலைப்பு வினாக்கள்

ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளி

1. ஹோமினிட் மற்றும் ஹோமினின்ஸ்

அ) ஹோமினிட் என்போர் யாவர்?

நவீன மற்றுமு் அழிந்து போன அனைத்து பெருங்குரங்கு இனங்களும் ஹோமினிட் என்று அழைக்கப்படுகின்றன.

ஆ) ஆப்பிரிக்காவில் கருவிகளை உருவாக்கிய முதல் மனித இனம் எது?

ஹோமோ ஹேபிலிஸ் என்ற மனித இனம்

இ) நவீன கால மனிதர்கள் எந்தப் பெயரால் குறிக்கப்படுகிறார்கள்?

ஹோமோ சேப்பியன்ஸ்

ஈ) இந்த இனத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு வகையைக் கூறு

  1. ஹோமோ ஏரக்டஸ்
  2. நியாண்டர்தால் இனம்
  3. ஹோமோ ஹெபிலிஸ்

1. ஹோமினிட் மற்றும் ஹோமினின்ஸ்

அ) ஹோமினிட் என்போர் யாவர்?

நவீன மற்றுமு் அழிந்து போன அனைத்து பெருங்குரங்கு இனங்களும் ஹோமினிட் என்று அழைக்கப்படுகின்றன.

ஆ) ஆப்பிரிக்காவில் கருவிகளை உருவாக்கிய முதல் மனித இனம் எது?

ஹோமோ ஹேபிலிஸ் என்ற மனித இனம்

இ) நவீன கால மனிதர்கள் எந்தப் பெயரால் குறிக்கப்படுகிறார்கள்?

ஹோமோ சேப்பியன்ஸ்

ஈ) இந்த இனத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு வகையைக் கூறு

  1. ஹோமோ ஏரக்டஸ்
  2. நியாண்டர்தால் இனம்
  3. ஹோமோ ஹெபிலிஸ்

1. மனித முன்னோர்களின் தொடக்க காலக் கற்கருவிகளின் தொகுப்பு

அ) அச்சூலியக் கருவிகள் கர்நாடகத்திலும் மத்தியப்பிரதேசத்திலும் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன?

  • கர்நாடகம் – இசாம்பூர்
  • மத்தியப்பிரதேசம் –  பிம்பெத்கா

ஆ) பியாரின் என்றால் என்ன?

கூரிய வெட்டுமுனை உள்ள கல்லால் ஆன உளி

இ) இருமுகக் கருவிகள் என்றால் என்ன?

இருபுறமும் செதுக்கப்பட்ட கருவிகளுக்கு இருமுகக் கருவிகள் என்று பெயர்

ஈ) மனித இன முன்னோடிகள் பயன்படுத்திய கல்லால் ஆன ஆயுதங்கள் சிலவற்றை கூறு?

  1. கைக்கோடாரி
  2. வெட்டுக்கத்தி
  3. அளைப்பான்
  4. பிளக்கும் கருவி
  5. சுரண்டும் கருவி
  6. கூர்முனைக் கருவி

VII. விரிவான விடையளிக்கவும்

1. விவசாயம், பானை செய்தல், உலோகக்கருவிகள் செய்தல் ஆகிய துறைகளில் நிகழந்த வளரச்சி பெருங்கற்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும் உறுதிப்படுத்தவும்.

மண்பாண்டங்கள்

  • கருப்பு மற்றும் சிகப்பு நிறங்களைக் கொண்ட மண்பாண்டங்களைப் பயன்படுத்தினார்
  • மண்பாண்டங்கள் சமைக்க, பொருட்களை சேமிக்க, உணவை சாப்பிட பயன்பட்டன.
  • மண்பாண்டங்கள் உள்ளே கருப்பாகவும், வெளியே சிவப்பாகவும் மற்றும் வெளிப்புறம் பளபளப்பாகவும் இருந்தன.

உலோகக் கருவிகள்

  • ஈமப்பொருள்களாக ஏராளமான இரும்புப் பொருட்கள் வைக்கப்பட்டன.
  • வாள்,குறுவாள், கோடாரிகள், உளிகள், விளக்குகள், முக்காலிகள் பயன்படுத்தப்பட்டன.
  • இதில் சிலவற்றிற்கு எலும்பு அல்லது மரத்திலான கைப்பிடி பொருத்தப்பட்டிருந்தது.
  • இரும்புக்கருவிகள் வேளாண்மைக்கும், வேட்டையாடவும், உணவு சேகரிக்கவும், போர்களுக்கும் பயன்பட்டன.
  • வெண்கலக் கிண்ணங்கள், வெண்கல முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும்

  • இரும்புக்கால மக்கள் வேளாண்மையும், கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டனர்.
  • திணையும் நெல்லும்பயிரிடப்பட்டன.
  • பாசன நிர்வாகம் மேம்பட்டது.
  • ஆற்றுப் படுகைகளில் பாசன தொழில் நுட்பம் வளர்ந்தது.

2. மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக

  • மனிதனின் வரலாற்றைப் புவியின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது.
  • புவியின் மேலடுக்குகளில் தொல்லியில், உயிரியல் பதிவுகள் பொதிந்து கிடக்கின்றன.
  • இப்பதிவுகள் வரலாற்றுக் காலக்கட்டங்களையும் பல்வேறு உயரினங்களின் வரலாற்றையும் அறிய சான்றாக உள்ளன.
  • இவ்வடுக்குகளில் மனித மூதாதையர்களின் எலும்புகளின் புதைபடிவங்களும் புதைந்துள்ளன.
  • தொல்லியல் அறிஞர்கள் புவியின் மண் மற்றும் பாறை அடுக்களை அகழ்ந்து மனித மூதாதையர்களைக் குறித்த சான்றுகளைக் சேகரிக்கின்றார்கள்.
  • மனிதனின் பரிணாமம், தொல்பழங்காலம், மண்ணடுக்குகளின் அறிவியல் பூர்வமான காலக்கணிப்பு ஆகியவை ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றது.
  • நுண்ணுயிர்கள் தோற்றம், பல செல் உயரினங்கள் தோற்றம், மீன்கள், ஊர்வன, பல்வேறு தாவங்கள் தோற்றம் தொடர்நது டைனோஸ்கர்கள் வாழ்ந்த காலம், பாலுட்டிகளான மனித குரங்குகள் அதைத்தொடர்ந்து குருங்கினத்த்திலிருந்து நவீன மனித இனம் – என பூமியின் வரலாற்றுடன் நெருக்கிய தொடர்பு உடையது.

சில பயனுள்ள பக்கங்கள்