9th Std Social Science Term 2 Solution | Lesson.3 இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

பாடம் 3. இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

9th Standard Social Science Book Term 2 - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

பாடம் 3. இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. விரிவடைந்துவரும் அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம் .

  1. தௌலதாபாத்
  2. டெல்லி
  3. மதுரை
  4. பிடார்

விடை : தௌலதாபாத்

2. தக்காண சுல்தானியங்கள் …………………………………………… ஆல் கைப்பற்றப்பட்டன.

  1. அலாவுதீன் கில்ஜி
  2. அலாவுதீன் பாமன் ஷா
  3. ஔரங்கசீப்
    மாலிக்காபூர்

விடை : ஔரங்கசீப்

3. …………………………………………… பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியது.

  1. பாமினி
  2. விஜயநகர்
  3. மொகலாயர்
  4. நாயக்கர்

விடை : விஜயநகர்

4. ஐநூற்றுவர் என்றறியப்பட்ட வணிகக் குழு தனது தலைமையிடம் …………………………………………… ல் கொண்டிருந்தது.

  1. நாகபட்டிணம்
  2. அஜந்தா
  3. கோழிக்கோடு
  4. ஐஹோல்

விடை : ஐஹோல்

5. கிருஷ்ணதேவராயர் ……………………………………………. ன் சமகாலத்தவர்.

  1. பாபர்
  2. ஹுமாயுன்
  3. அக்பர்
  4. ஷெர்

விடை : பாபர்

II. சரியான கூற்றை கண்டுபிடிக்கவும். 

1. அ) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.

ஆ) சாளுவ அரச வம்சம் நீண்டகாலம் ஆட்சி செய்தது.

இ) விஜயநகர அரசர்கள் பாமினி சுல்தானியத்துடன் சுமுகமான உறவுகளைக் கொண்டிருந்தனர்.

ஈ) ரஜபுத்திர அரசுகள் பாரசீகத்திலிருந்தும் அராபியாவிலிருந்தும் குடிபெயர்பவர்களை ஈர்த்தன.

விடை :  அ) மட்டும் சரி

2. அ) செஞ்சியில் நாயக்க அரசு உருவானது.

ஆ) தெலுங்கு நாயக்கர்கள் பணியமர்த்தப்பட்டதன் விளைவாக தெலுங்கு பேசும் மக்கள் மதுரையிலிருந்து குடிபெயர்ந்தனர்.

இ) ஜஹாங்கீரின் காலத்திலிருந்தே மொகலாயப் பேரரசு சரியத் துவங்கியது.

ஈ) ஐரோப்பியர்கள் அடிமைகளைத் தேடி இந்தியாவிற்கு வந்தனர்.

விடை :  அ) மட்டும் சரி

3. அ) புராணக்கதைகளைக் கொண்ட கற்பனையான வம்சாவளிகள் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

ஆ) அவுரி என்பது இந்தியாவில் மிக முக்கியமான பானப்பயிராகும்.

இ) மகமுத் கவான் அலாவுதின் கில்ஜியின் அமைச்சர் ஆவார்.

ஈ) போர்ச்சுகீசியர்கள் தங்கள் முதல் கோட்டையை கோவாவில் கட்டினர்.

விடை :  அ) மட்டும் சரி

4. கூற்று (கூ): கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை நீண்டிருந்த கடல் வணிகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா இருந்தது.

காரணம் (கா): இந்தியாவின் நிலவியல் அமைப்பு இந்தியப் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ளது.

  1. கூற்று சரி; காரணம் கூற்றை விளக்குகிறது
  2. கூற்று தவறு; காரணம் சரி
  3. கூற்றும் காரணமும் தவறானவை
  4. கூற்று சரி; காரணம் கூற்றை விளக்கவில்லை

விடை :  கூற்று சரி; காரணம் கூற்றை விளக்குகிறது

5. i) பேரழகும் கலைத்திறனும் மிக்க தங்கச் சிலைகளைச் சோழர்கள் வடித்தனர்.

ii) சோழர்களின் கட்டடக் கலைக்கு சிறந்து எடுத்துக்காட்டு. சிவனின் மறுவடிவான நடராஜரின் பிரபஞ்ச நடனம்.

  1. i) சரி ii) தவறு
  2. i), ii) ஆகிய இரண்டும் சரி
  3. i), ii) ஆகிய இரண்டும் தவறு
  4. i) தவறு ii) சரி

விடை : i) தவறு ii) சரி

III. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு வந்த ஐரோப்பியர் ……………………………….. .

விடை : போர்ச்சுக்கீசியர்கள்

2. கி.பி. (பொ.ஆ.) 1565ஆம் ஆண்டு தக்காண சுல்தான்களின் கூட்டுப்படைகள் விஜயநகரை ……………………………………… போரில் தோற்கடித்தது.

விடை : தலைக்கோட்டை

3. விஜயநகரம் ஓர் ……………………………………………. அரசாக உருவானது.

விடை : ராணுவ தன்மை

4. நகரமயமாதலின் போக்கு ……………………………………. காலத்தில் அதிகரித்தது.

விடை : விஜயநகர அரசுகள்

5. ………………………………….. காலம் தமிழக வரலாற்றின் உன்னத ஒளிபொருந்தியக் காலம்.

விடை : சோழர்கள்

IV. பொருத்துக.

1. போர்ச்சுகீசியர்கள்வங்காளம்
2. தான்சேன்கோட்டம்
3. பட்டுவளர்ப்புஅக்பரின் அரச சபை
4. அங்கோர்வாட்கோவா
5. மாவட்டம்கம்போடியா
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – உ, 5 – ஆ

V. கீழ்க்கண்ட தலைப்பில் உள்ள எல்லா வினாக்களுக்கும் விடையளி:

1. ஐரோப்பியரின் வருகை

அ) இந்தியாவிலிருந்து நடைபெற்ற நறுமணப் பொருட்கள் வணிகத்தை கட்டுப்படுத்தியது யார்?

முஸ்லிம்கள்

ஆ) அனைத்துப் பகுதியிலுமான கடல் வணிகத்தை போர்ச்சுகீசியர்களால் கட்டுப்படுத்த முடிந்தது. எவ்வாறு?

கடற்படையின் வலிமையால்

இ) இந்தியாவில் ஐரோப்பியரின் வணிக நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன?

கிழக்கிந்திய கம்பெனிகள் மூலம்

ஈ) இந்தியாவில் டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், டேனியர் ஆகியோரின் இடங்கள் எவை?

  • டச்சுக்காரர்கள் – புலிகாட் (பழவேற்காடு) மற்றும் நாகப்பட்டினம்
  • ஆங்கிலேயர் – மெட்ராஸ் (சென்னை)
  • பிரஞ்சுக்காரர் – பாண்டிச்சேரி
  • டேனியர்கள் – தரங்கம்பாடி

2. சமூகம், மதம் பண்பாடு

அ) இந்தியச் சமூகத்தின் மிகவும் தனித்தன்மை வாய்ந்த அம்சம் எது?

இந்தியச் சமூகத்தின் மிகவும் தனித்தன்மை வாய்ந்த அம்சம் சாதி முறை

ஆ) ‘கில்டு’ என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்து வருபவர் அத்தொழில் சார்ந்த குழுவில் அல்லது அமைப்பில் உறுப்பினராக சேர்வது கில்டு முறையாகும்.

இ) சைவ இயக்கங்கள் சிலவற்றை குறிப்பிடுக.

  1. சைவசித்தாந்தம்
  2. வீரசைவம்
  3. வர்க்கரி சம்பிரதயா

ஈ) அக்பரின் அவையிலிருந்த இசை விற்பன்னர் யார்?

அக்பரின் அவையிலிருந்த இசை விற்பன்னர் தான்சேன்

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமான விடையளி.

1. மாலிக்காபூரின் இராணுவப் படையெடுப்புகளைப் பற்றி எழுதுக.

  • மாலிக்கபூர் அலாவுதீன் கில்ஜியின் அடிமையும், படைத் தளபதியும் ஆவார். இவர் தலைமையில் தென்னிந்தியப் படையெடுப்பொன்று மேற்கொள்ளப்பட்டது.
  • மேலும் இந்தியா மீது படையெடுத்து வந்த இலட்சக்கணக்கான மங்கோலியர்களை டெலியில் வைத்து தாக்கி சிதறி ஓடச்செய்தார்

2. விஜயநகர அரசை உருவாக்கியது யார்? அவ்வரசை ஆண்ட வம்சாவளிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

  • ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் விஜயநகர அரசு நிறுவப்பட்டது.
  • அவ்வரசை ஆண்டு வம்சாவளிகள் சங்கம வம்ச அரசர்கள், சாளுவ வம்ச அரசர்கள், துளுவ வம்ச அரசர்கள்

3. பருத்தி நெசவில் இந்தியர் பெற்றிருந்த இயற்கையான சாதகங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.

  • பெரும்பாலும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பருத்தி பயிரிடப்பட்டதால் அடிப்படையான மூலப்பொருள்கள் எளிதாக கிடைத்தது.
  • தாவரச் சாயங்களைப் பயன்படுத்தி பருத்தி இழைகளின் மேல் நிரந்தரமாக வர்ணம் ஏற்றும் தொழில்நுட்பம் இந்தியர்களுக்கு ஆரம்ப காலங்களிலே தெரிந்திருந்தது.

4. நகரமயமாதலுக்கு உதவிய காரணிகள் யாவை?

  • பெரிய நகரங்கள் பொருள் உற்பத்தி, சந்தை, நிதி மற்றும் வங்கிச் சேவைகள் ஆகியவற்றின் மையங்களாகத் திகழ்ந்தன.
  • அவைகள் விரிவான அளவில் வலைப்பின்னலைப்போல் அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்துச் சாலைகள் சந்திக்கின்ற இடங்களில் அமைந்திருந்தன. இச்சாலைகள் இந்நகரங்களை நாட்டின் ஏனைய பகுதிகளோடு இணைத்தன.
  • சிறுநகரங்கள் உள்ளூர் சந்தை மையங்களாகச் செயல்பட்டு அருகேயிருந்த கிராம உட்பகுதிகளு இணைத்தன. புனிதத்தலங்களும் நகரமயமாதலுக்கு காரணிகளாயின.

5. பட்டு வளர்ப்பு என்றால் என்ன?

  • 14, 15-ம் நூற்றாண்டில் பட்டு உற்பத்தி செய்யும் முறை அறிமுகமானது. மல்பெரி பட்டு பூச்சிகளை வளர்த்து பட்டு உற்பத்தி செய்யப்பட்டது.
  • ஏழாம் நூற்றாண்டில் உலகிலேயே அதிக அளவிலான பட்டு உற்பத்தி செய்யும் பகுதியாக வங்காளம் திகழ்ந்தது. இவைகளுக்கு மேலாக ஏனைய வகை பட்டுகளும் உற்பத்தி செய்யப்பட்டன.

VII.கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி:

1. கி.பி. (பொ.ஆ.) 1526 முதல் 1707 வரையிலான அரசியல் மாற்றங்களை விவாதி.

  • கி.பி. (பொ.ஆ.) 1526-ஆம் ஆண்டு பானிபட் போர்களத்தில் இப்ராகிம் லோடியை வெற்றிக் கொண்ட பின்னர் பாபர் மொகாலாயப் பேரரசை நிறுவினார்.
  • கி.பி. (பொ.ஆ.) 1565-ல் தலைக்கோட்டைப் போரில் தக்காண சுல்தான்களின் கூட்டுப் படையினர் விஜயநகரப் பேரரசை தோற்கடித்தனர்.
  • ராஜஸ்தானத்து சமயம் சார்ந்த அரசர்களாேடு நல்லுறவை பேணியதின் மூலம் அக்பர் தனது பேரரசை வலிமைப்படுத்தினார்.
  • விஜய நகரப் பேரரசுக்ககு விசுவாசமான மூன்று முக்கிய நாயக்க அரசுகள் உருவாயின.
  • சோழர்கள் காலத்தில் நிர்வாக இயந்திரமான மறுசீரமைக்கப்பட்டது. பல நிர்வாகப் பிரிவுகளை உருவாக்கியதன் மூலம் வருவாய்துறை நிர்வாகத்தில் புதுமைகளை புகுத்தியது. வேளாண்மை மற்றும் வணிகத்துறையில் பல புதிய வரிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
  • கேரள கடற்கறையில் குடியேறிய அராபிய முஸ்லீம் வணிகர்கள் உள்ளூர் பெண்களை திருமணம் செய்தனர் இதனால் ஒரு கலப்பு பண்பாடு உருவானது. இந்த பண்பாடு வடக்கேயும் உருவானது.
  • விஜய நகர பேரரசுக்கு “நாயக்” என்ற இராணுவ அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் பாளையகாரர்கள் இருந்தன.
  • டெல்லி மற்றும் தக்காணத்திலிருந்து முஸ்லீம் அரசுகள் அராபியாவிலிருந்தும், பாரசீகத்திலிருந்து குடிபெயர்வர்களை இந்தியாவில் குடியேர கவர்ந்திருந்தன.
  • போர்ச்சுகீசியரைத் தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை இந்தியாவிற்கு நுழைந்தன.
  • வணிக நிறுவனங்கள் உருவாயின. இந்த நிறுவனங்கள் மொகலாய அரசுடன் வரத்தகம் செய்தன. இதன் விளைவாக பிற்காலத்தில் பல அரசியல் மாற்றங்கள் உருவாக வழி செய்தன.

2. இடைக்கால இந்தியாவில் ஏற்பட்ட வணிக வளர்ச்சிகளை விளக்குக.

  • இடைக்கால இந்தியாவில் வணிகம் மூன்று வகையிலான சந்தைகள் மூலம் ஒரே நேரத்தில் ஏறுமுக வரிசையில் பரிமாற்றச் சுற்றில் செயல்பட்டன.
  • பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு இந்தியா வரிவான சந்தையை பெற்றிருந்தது.
  • கடைகேளாடும், கடை வீதிகளோடும் நகரங்கள் எப்போதும் முக்கிய வணிக மையங்களாக செயல்பட்டன.
  • நகரங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளோடு பல சாலைகளால் இணைக்கப்பட்டிருந்தன.
  • நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கலைப் பகுதியில் வணிகத்திற்கு சிறு கப்பல்களும் படகுகளும் பயன்படுத்தப்பட்டன.
  • பஞ்சாரா என்ற நாடோடி சமுகத்தினர் பொருள்காளை சுமந்துச் சென்று விற்றனர்.
  • நாட்டின் முக்கிய துறைமுகங்களாக சூரத், மசூலிப்பட்டிணம், கோழிக்கோடு ஆகியவை கடல்சார் வணிக முனையங்களாகவும், பன்னாட்டு வணிக முனையங்களாவும் செயல்பட்டன.
  • மலாக்கா, கோழிக்கோடு துறைமுகங்ள் இடைநிலை முனையங்களாக செயல்பட்டன.
  • குஜராத்தில் சூரத், கோல்கொண்டா, ஆந்திராவில் மசூலிப்பட்டினம், வங்காளத்தில் சிட்டகாங்,, சோழமண்டல கடற்கரையில் புலிக்காட் (பழவேற்காடு) நாகப்பட்டினம் முக்கிய துறைமுகங்களாக செயல்பட்டன.
  • மஸ்ஸின், சின்ட் துணி, மிளகு, விலை மதிப்புமிக்க நவரத்தின கற்கள், சற்றே விலை குறைந்த நவரத்தின கற்கள் மற்றும் விலை உயர்ந்த வைரம், அதிலும் இந்தியாவில் மட்டும் கிடைக்கும் வைரம், இரும்பு எஃகு, பருத்தி துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
  • சீனாவிலிருந்து ஏனைய கீழ்த்திசை நாடுகளிலிருந்து பட்டு, சீனசெராமிக் ஓடுகள், தங்கம், நறுமணப் பொருட்கள், நறுமண மரங்கள், கற்பூரம், மருந்து வகைகள், சர்க்கரை,தந்தம், அரக்கு, பிசின் ஆகிய இறக்குமதி செய்யப்பட்டன.
  • அடிமைகளும் இறக்குமதி செய்யப்பட்டனர். இந்தியா முழுவதும் நடைபெற்ற வணிகத்தை மேலாண்மை செய்யவும், முறைப்படுத்தவும், ஏராளமான வணிகர்களும், வியாபாரிகளும் இருந்தன. வங்கியாளர்களும் பணம் மாற்றுவோரும் கூட இருந்தனர்.

3. “தமிழக வரலாற்றில் சோழர்களின் காலம் ஒரு உன்னதக் காலம்” விளக்கவும்.

  • சோழர்கள் காலம் தமிழ்நாட்டு வரலாற்றில் செழிப்பு மிக்க காலமாகும். இக்காலத்தின் வணிகமும், பொருளாதாரம் வரிவடைந்தன.
  • நகரமயமாதலும் இவற்றுடன் இணைந்து கொண்டது. சோழர்கள் காலத்தில் நிர்வாகம் மறுசீரமைக்கப்பட்டது.
  • உள்ளாட்சி நிர்வாகத்தின் அடிப்படை கிராமம் ஆகும். அதற்கு அடுத்தவை ஊர் (கிராமம்)களின் தொகுப்பான நாடு மற்றும் கோட்டம் (மாவட்டம்) என்பதாகும்.
  • பிராமணர்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்ட கிராமங்கள் ‘பிரம்மதேயம்’ என்றறியப்பட்டன. சந்தை கூடுமிடங்களும் சிறுநகரங்களும் ‘நகரம்’ என்றழைக்கப்பட்டன.
  • ஊர், நாடு, பிரம்மதேயம், நகரம் ஆகிய ஒவ்வொன்றும் தனக்கென ஒரு மன்றத்தைக் (சபை) கொண்டிருந்தது.
  • நிலங்களையும் நீர்நிலைகளையும் கோவில்களையும் பராமரித்து மேலாண்மை செய்வது. உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பது அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரிகளை வசூல் செய்வது ஆகியவை, இம்மன்றங்களின் பொறுப்புகளாகும்.
  • (மண்டலம், வளநாடு) உருவாக்கியதன் மூலம் வருவாய்த்துறை நிர்வாகத்தில் புதுமைகளைப் புகுத்தியது.
  • வேளாண்மை மற்றும் வணிகத் துறைகளில் பல புதிய வரிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
  • புதிய கோவில்கள் கட்டப்பட்டன. பழைய கோவில்கள் வழிபாட்டிற்கான இடங்களாககு மட்டுமல்லாமல் பொருளாதார பண்புகளைக் கொண்ட நிறுவனங்களாக மாறின.
  • அவைபொருட்களைக் கொள்முதல் செய்பனவாகவும் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனமாகவும் நில உடமையாளராகவும் மாறின.
  • சோழர் காலத்தில் பொருளாதார் செழிப்பாய் இருந்தது. இதனாலே சோழர்காலம் தமிழக வராற்றில் ஒரு உன்னத காலம் என கூறப்படுகிறது.

 

பயனுள்ள பக்கங்கள்