பாடம் 5. நீர்க்கோளம்
பாடம் 5. நீர்க்கோளம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ‘சுந்தா அகழி’ காணப்படும் பெருங்கடல் ______________
- அட்லாண்டிக் பெருங்கடல்
- பசிபிக் பெருங்கடல்
- இந்தியப் பெருங்கடல்
- அண்டார்டிக் பெருங்கடல்
விடை : இந்தியப் பெருங்கடல்
2 பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல __________
- அதிகரிக்கும்
- குறையும்
- ஒரே அளவாக இருக்கும்
- மேற்கண்ட எதுவுமில்லை
விடை : குறையும்
3. கடல் நீரோட்டங்கள் உருவாகக் காரணம்
- புவியின் சுழற்சி
- வெப்பநிலை வேறுபாடு
- உவர்ப்பிய வேறுபாறு
- மேற்கண்ட அனைத்தும்
விடை : மேற்கண்ட அனைத்தும்
4. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
1. மீன்பிடித்தளங்கள் பெரும்பாலும் அகலமான கண்டத்திட்டு பகுதிகளில் காணப்படுகிறன்றன
2. மிதவெப்ப மண்டலப்பகுதிகளில் மீன்பிடித்தொழில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது
3. மீனின் முதன்மை உணவான தாவர ஊட்டச்சத்து வளர்வதற்கு வெப்ப நீரோட்டமும் குளிர் நீரோட்டமும் இணைவதே காரணமாகும்.
4. இந்தியாவின் உள்நாட்டு மீன்பிடித்தொழில் குறிப்பிடத்தக்கது ஆகும்
- 1 மற்றும் 2 சரி
- 1 மற்றும் 3 சரி
- 2,3 மற்றும் 4 சரி
- 1,2 மற்றும் 3 சரி
விடை : 1,2 மற்றும் 3 சரி
5. கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்
- புவித்தட்டுகள் இணைதல்
- புவித்தட்டுகள் விலகுதல்
- புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம்
- மேற்கண்ட எதுவுமில்லை
விடை : புவித்தட்டுகள் விலகுதல்
6) கடல்மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கிரமமாக உள்ளவை எவை ?
- கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி சமவெளி, கடல் அகழி
- கண்டச்சரிவு, கண்டத்திட்டு, கடலடிச்சமவெளி, கடல் அகழி
- கடலடி சமவெளி, கண்டச்சரிவு, கண்டத்திட்டு, கடல் அகழி
- கண்டச்சரிவு, கடலடிச்சமவெளி, கண்டத்திட்டு, கடல் அகழி
விடை : கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி சமவெளி, கடல் அகழி
7) பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது ?
- வளைகுடா நீரோட்டம் – பிசிபிக் பெருங்கடல்
- லேப்ரடார் கடல்நீரோட்டம் – வட அட்லாண்டிக் பெருங்கடல்
- கேனரி கடல் நீரோட்டம் – மத்திய தரைக்கடல்
- மொசாம்பிக் கடல்நீரோட்டம் – இந்தியப் பெருங்கடல்
விடை : லேப்ரடார் கடல்நீரோட்டம் – வட அட்லாண்டிக் பெருங்கடல்
8) கடலில் காணப்படும் ‘பிளாங்டனின்’ அளவைத் தீர்மானிக்கும் காரணி
1. நீரின் ஆழம் | 2. கடல் நீரோட்டம் |
3. வெப்பநிலை மற்றும் உவர்ப்பியம் | 4. பகல் மற்றும் இரவின் நீளம் |
- 1 மற்றும் 2 சரி
- 1,2 மற்றும் 3 சரி
- 1,3 மற்றும் 4 சரி
- அனைத்தும் சரி
விடை : 1,2 மற்றும் 3 சரி
கேள்வி எண் 9 முதல் 13 வரை கூற்று (A) காரணம் (R)
- A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
- A மற்றும் R சரி ஆனால் ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம் இல்லை
- A சரி ஆனால் R தவறு
- A தவறு ஆனால் R சரி
9) கூற்று (A) :- வரைபடங்களில் கடல்கள் எப்பொழுதும் நீல நிறத்தில் கொடுக்கப்படும்.
காரணம் (R) : – இது கடல்களின் இயற்கையான நிறத்தைக்காட்டுகிறது
விடை : A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
10) கூற்று (A) : – ஆழ்கடல் மட்டக்குன்றுகள், கயாட் என்று அழைக்கப்படுகின்றன.
காரணம் (R) : – அனைத்து கயாட்டுகளும் எரிமலை செயல்பாடுகளால்
உருவானவை.
விடை : A சரி ஆனால் R தவறு
11. கூற்று (A) : – கடலடித்தளத்தில் காணப்படும் ஆழமான குறுகிய பகுதி கடலடிப் பள்ளத்தாக்குகள் ஆகும்.
காரணம் (R) : – இவைகள் கண்டத்திட்டடு, சரிவு மற்றும் உயர்ச்சிகளினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
விடை : A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
12. கூற்று (A) : – வட்டப் பவளத்திட்டு (Attols), அட்லாண்டிக் பெருங்கடலில் பரவலாகக் காணப்படுகின்றன.
காரணம் (R) : – ஆழமான பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் குறைவாக உள்ளன.
விடை : A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
13. கூற்று (A) : – நிலத்தால் சூழப்பட்டப் பகுதிகளில் உவர்ப்பியம் அதிகமாக உள்ளது.
காரணம் (R) : – நிலத்தால் சூழப்பட்ட கடலில் விரிந்த கடற்பரப்பைவிட (open ocean) நன்னீர் சிறிதளவே கலக்கின்றது.
விடை : A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
II. பொருத்துக.
1. மரியானா அகழி | கடலில் உவர்ப்பியம் குறைவுவர்த்தகம் |
2. கிரேட் பேரியர் ரீப் | ஜப்பான் கடற்கரையோரம் |
3. சர்கோசா கடல் | ஆஸ்திரேலியா |
4. உயர் ஓதம் | சமூக பொருளாதார அமைப்பின் படிநிலை |
5. அதிக மழை | இரண்டாம் நிலை நிலத்தோற்றம் |
6. குரோசியோ நீரோட்டம் | வட அட்லாண்டிக் பெருங்கடல் |
7. கண்டச்சரிவு | அமாவாசை மற்றும் முழு நிலவு நாள் |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஊ, 4 – எ, 5 – அ, 6 – ஆ, 7 – உ |
III குறுகிய விடையளி
1) ‘நீர்க்கோளம்’ பொருள் கூறுக.
புவியின் அனைத்து நீர் நிலைகளையும் தன்னுள் கொண்டது நீர்க்கோளம் ஆகும
2) நீரியல் சுழற்சி என்றால் என்ன?
புவியின் மீது மேலும், கீழும் நீரின் இயக்கம் தொடர்ச்சியாக நடைபெறுவதே நீரியல் சுழற்சி எனப்படும்.
நீரியல் சுழற்சியின் முக்கிய செயல்பாடுகள்
- ஆவியாதல்
- நீர்சுருங்குதல்
- மழைப்பொழிவு
3) கடலடி நிலத்தோற்றங்கள் யாவை?
- கண்டத்திட்டு
- கண்டச்சரிவு
- கண்ட உயர்ச்சி
- கடலடி சமவெளிகள் அல்லது அபிசல் சமவெளி
- கடல் பள்ளம் அல்லது அகழிகள்
- கடலடி மலைத்தொடர்கள்
4) கடல் நீரோட்டங்களைத் தோற்றுவிக்கும் காரணிகள் யாவை?
- புவியின் சுழற்சி
- வீசும் காற்று
- கடல் நீரின் வெப்பம்
- உவர்ப்பியத்தில் உள்ள வேறுபாடு
5) கடல் அலைகளைப் பற்றிச் சுருக்கமாக விடையளி
கடலின் மேற்பரப்பில் வீசும் காற்றால் அலைகள் உருவாக்கின்றன. காற்றின் வேகத்தை பொறுத்து அலைகளின் உயரம் அமைகின்றது. நில நில அதிர்வுகளால் பெரும் அலைகள் உருவாகின்றன.
6) ‘கடல் உவர்ப்பியம்’ என்றால் என்ன?
கடல் நீரில் கரைந்துள்ள உப்பின் விகித அளவு உவர்ப்பியம் எனப்படும்.
IV வேறுபடுத்துக
1) உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம்.
உயர் ஓதம் | தாழ் ஓதம் |
1. புவி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்பொழுது, சூரியன் மற்றும் சந்திரனின் கூட்டு ஈர்ப்பு விசையானது கடலின் மேற்பரப்பு அலைகளை வலுவடையச் செய்து உயர் அலைகளை உருவாக்குகின்றன. இவ்வுயரமான அலைகள் உயர் ஓதங்கள் எனப்படுகின்றன. | புவி, சூரியன் மற்றும் சந்திரன் செங்குத்துக் கோணத்தில் வரும்போது இவற்றின் ஈர்ப்பு விசையானது ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படுவதினால் உயரம் குறைவான அலைகள் உருவாகின்றன. இவ்வுயரம் குறைவான அலைகள், தாழ் ஓதங்கள் எனப்படுகின்றன. |
2. அமாவாசை மற்றும் முழு நிலவு தினங்களில் ஏற்படுகின்றன. | சந்திரனின் முதல் மற்றும் இறுதி கால் பகுதியில் அதாவது மாதத்தில் இரண்டு முறை இவ்வோதங்கள் ஏற்படுகின்றன |
2) கடலடிச் சமவெளி மற்றும் கடலடிப்பள்ளம்.
கடலடிச் சமவெளி | கடலடிப்பள்ளம் |
1. ஆழ்கடல் சமவெளி அல்லது அபிசெல் சமவெளி என்பது ஆழ்கடலில் காணப்படும் கடலடிச் சமவெளி ஆகும். | பெருங்கடலின் மிக ஆழமானப் பகுதி அகழி ஆகும். |
2. இவை கண்ட உயர்ச்சியிலிருந்து மத்தியக் கடலடி மலைத் தொடர்கள் வரை பரவி உள்ளது | இது மொத்தக்கடலடிப் பரப்பில் 7 சதவீதத்திற்கு மேல் காணப்படுகிறது. |
3. மேலும், சீராக உள்ள எவ்விதத் தோற்றங்களும் அற்ற மென் சரிவைக் கொண்ட பகுதியாகும். | அகழியில் நீரின் வெப்பநிலை உறைநிலையை விட சற்று அதிகமாக இருக்கும். |
4. பொதுவாக இச்சமவெளிகள் ஆறுகளினால் கொண்டு வரப்பட்ட களிமண், மணல் மற்றும் வண்டல்களால் உருவாக்கப்பட்ட அடர்ந்த படிவுகளால் ஆனது. | படிவுகள் ஏதும் இல்லாததினால், பெரும்பாலான அகழிகள் வன்சரிவுடன் ‘v’ வடிவத்தில் காணப்படுகின்றன. |
3) ஓத மின்சக்தி மற்றும் நீர் மின்சக்தி.
ஓத மின்சக்தி | நீர் மின்சக்தி. |
1. அலை நீர் வீழும் போது ஏற்படும் ஆற்றலை விசைப்பொறி உருளை கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது. | அணைகளின் மூலம் நீரைத் தேக்கி குழாய்கள் மூலம் உருளை மீது விழுச் செய்து மின்சாரம் எடுக்கப்படுகிறது |
2. இந்தியாவில் கேரளக் கடற்கரையில் உள்ள விழிஞ்சியம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அலையாற்றல் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. | பக்ராநங்கல் அணை, கோதாவரி, மகாநதி, மேட்டூர் மேலும் பல அணைகளில் நீர் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது |
V காரணம் அறிக
1) வட அரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும் தென் அரைக்கோளம்.
நீர்அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.
வட அரைக்கோளம் 61% நிலப்பரப்பை கொண்டுள்ளதால் நில அரைக்கோளம் எனப்படுகிறது
தென் அரைகோளம் 81% நீர்ப்பரப்பை கொண்டுள்ளதால் நீர் அரைக்கோளம் எனப்படுகிறது
2) இயற்கையாகவே கடல்நீர் உவர்நீராக உள்ளது.
வெப்பமடைதலும் குளிர்தலும் நிலத்தைவிட கடலில் மெதுவாக நடைபெறும். வெப்பமண்டலப் பகுதியில் ஆவியாதல் அதிகமாக நடைபெறுவதினால் உவர்ப்பியம் அதிகமோகக் காணப்படுகிறது. உவர்பியத்தின் அளவு வெப்ப மண்டலப் பகுதியில் அதிகமாகவும், நிலநடுக்கோடு மற்றும் துருவப் பகுதிகளில் குறைவாகவும் உள்ளன.
3) கண்டத்திட்டுகள் சிறந்த மீன்பிடித்தளங்களாகும்.
கண்டத்திட்டு ஆழமற்ற பகுதியாக இருப்பதினால் சூரிய ஒளி நன்கு ஊடுருவிச் செல்கின்றது. இது கடற்புற்கள், கடற்பாசி மற்றும் பிளாங்டன் போன்றவை நன்கு வளர்வதற்குச் சாதகமாக உள்ளது. இதனால் இப்பகுதிகள் உலகின் செழிப்பான மீன்பிடித்தளங்களுள் ஒன்றாக உள்ளது.
(எ.கா.) நியூபவுண்ட்லாந்தில் உள்ள ‘கிராண்ட் பாங்க்’
4) அரபிக் கடலைக்காட்டிலும் வங்காள விரிகுடாவில் உவர்ப்பியம் அதிகமாக உள்ளது.
வங்காள விரிகுடாவில் அரபிக்கடலைக் காட்டிலும் நதிகள் அதிகளவில் கலக்கின்றன. அக்கடலில் கலக்கும் ஆறுகள் மூலம் அதிகளவு உவர்ப்பியம் அதிகமாக உள்ளது.
VI பத்தியளவில் விடையளி
1) பெருங்கடலின் தோற்றம் பற்றி ஒரு பத்தியில் விடை தருக.
- சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக புவியின் மீது பெருங்கடல்கள் உருவாகி இருக்கலாம் எனப் புவி அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
- தொடக்க காலத்தில் நீர் இல்லாத கோளாக புவி இருந்தது என்பதை நம்ப முடியாமல் இருந்தது.
- காலப்போக்கில், புவி குளிரத் தொடங்கியபோது புவியின் உட்பகுதியில் இருந்த நீராவி வெளியேறி வளிமண்டலத்தை அடைந்து மேகங்களாக உருவாகி இடைவிடாத மழையைப் பொழிந்தன.
- பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெய்த இந்த மழை பள்ளங்களை நிரப்பி நாளடைவில் பெருங்கடலை உருவாக்கின.
2) கண்டத்திட்டு மற்றும் கண்டச் சரிவு பற்றிக் குறிப்பு வரைக.
கண்டத்திட்டு
- நிலத்திலிருந்து கடலை நோக்கி மென்சரிவுடன் கடலில் முழ்கியுள்ள ஆழமற்ற பகுதியே கண்டத்திட்டு எனப்படுகிறது.
- பெரும்பாலும் இப்பகுதிகள் மென்சரிவைக் கொண்ட சீரான கடற்படுகையாகும்.
- கண்டத்திட்டு ஆழமற்ற பகுதியாக இருப்பதினால் சூரிய ஒளி நன்கு ஊடுருவிச் செல்கின்றது. இது கடற்புற்கள், கடற்பாசி மற்றும் பிளாங்டன் போன்றவை நன்கு வளர்வதற்குச் சாதகமாக உள்ளது. இதனால் இப்பகுதிகள் உலகின் செழிப்பான மீன்பிடித்தளங்களுள் ஒன்றாக உள்ளது.
- (எ.கா.) நியூபவுண்ட்லாந்தில் உள்ள ‘கிராண்ட் பாங்க்’
- கண்டத்திட்டுகள் மிக அதிக அளவு கனிமங்களையும் எரிசக்தி கனிமங்களையும் கொண்டுள்ளது.
- இப்பகுதி ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எண்ணெய் எடுப்பதற்கும் சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் சிறந்த இடமாக விளங்குகின்றது.
- (எ.கா.) அரபிக் கடலில் அமைந்துள்ள ‘மும்பைஹை
கண்டச்சரிவு
- கண்டத்திட்டின் விளிம்பிலிருந்து வன் சரிவுடன் ஆழ்கடலை நோக்கிச் சரிந்து காணப்படும் பகுதியே கண்டச்சரிவாகும்.
- இது கண்ட மேலோட்டிற்கும், கடலடி மேலோட்டிற்கும் இடையில் ஒரு எல்லையை உருவாக்குகின்றது. வன்சரிவினைக் கொண்டிருப்பதால் படிவுகள் எதுவும் இங்குக் காணப்படுவதில்லை.
- கடலடிப் பள்ளத்தாக்குகள் மற்றும் அகழிகள் காணப்படுவது இப்பகுதியின் சிறப்பம்சங்களாகும். சூரிய ஒளி மிகக் குறைந்த அளவே ஊடுருவிச் செல்வதால் வெப்பநிலை மிகக்குறைவாகவே உள்ளது.
- இதனால் இப்பகுதியில் வாழும் கடல்வாழ் உயிரினங்களில் வளர்சிதை மாற்றம் மெதுவாகவே நடைபெறுகிறது.
3) கடல் நீரோட்டங்கள் என்றால் என்ன ? அதன் வகைகளை விவரி.
- பெருங்கடல்களின் மேற்பரப்பிலும் அதன் அடி ஆழத்திலும் ஒரு குறிப்பிட்ட திசையில் நகரும் நீரினை நீரோட்டம் என்று அழைக்கின்றோம்.
- பெருங்கடல் நீரோட்டங்கள் வட அரைக்கோளத்தில் கடிகார திசையிலும் தென் அரைக் கோளத்தில் எதிர்க் கடிகார திசையிலும் நகருகின்றன.
- கடல் நீரோட்டங்கள் வெப்பத்தின் அடிப்படையில் வெப்ப நீரோட்டம் மற்றும் குளிர் நீரோட்டம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
வெப்ப நீரோட்டங்கள்
- தாழ் அட்சக்கோட்டுப் பகுதிகளிலிருந்து (வெப்ப மண்டலம்) உயர் அட்சக் கோட்டுப் பகுதிகளை
(மிதவெப்ப மண்டலம், துருவ மண்டலம்) நோக்கி நகரும் நீரோட்டங்கள் வெப்ப நீரோட்டங்கள்
என அழைக்கப்படுகின்றன. - எடுத்துக்காட்டு: அட்லாண்டிக் பெருங்கடலின் வளைகுடா நீரோட்டம் மற்றும் பசிபிக் பெருங்கடலின் வட புவியிடைக் கோட்டு நீரோட்டம் ஆகும்.
குளிர் நீரோட்டங்கள்
- உயர் அட்சப் பகுதிகளிலிருந்து (மிதவெப்ப மண்டலம் மற்றும் துருவ மண்டலம்) தாழ் அட்சப் பகுதிகளை (வெப்ப மண்டலம்) நோக்கி நகரும் நீரோட்டங்கள் குளிர் நீரோட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.
- எ.கா அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள லாப் ரடார் நீரோட்டம் மற்றும் பசிபிக் பெருங்கடலின் பெருவியன் நீரோட்டம் ஆகும
4) கடல்வளங்கள் மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் யாவை?
- கடல்நீர் மற்றும் கடலில் அடிப்பகுதியில் காணப்படக்கூடிய உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளை நாம் கடல்வளங்கள் என்கிறோம்.
- சமுகத்தின் நீடித்த தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கடல்வளங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன .
- பலதரப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் உணவு, மருத்துவம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தொழில்துறைகளில் பயன்படுகின்றன.
- ஆற்றல், கனிமவளம் மற்றும் நீர் ஆகியவற்றின் உலகத்தேவைகள் உயிரற்ற கடல்வளங்களையே அதிகம் சார்ந்துள்ளன.
கடல்வளங்களின் மூன்று வகைகள்
உயிரியில் வளங்கள்
- மீன்கள், பிளாங்டன், கடற்புற்கள், பவளப்பாறைகள்
கனிம வளங்கள்
- பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, உலோகத்தாதுக்கள், மணல், சரளைக்கற்கள்
ஆற்றல் வளங்கள்
- எரிசக்தி, கனிமங்கள், ஓத ஆற்றல், அலை ஆற்றல்
பயனுள்ள பக்கங்கள்