பாடம் 6. உயிர்க்கோளம்
பாடம் 6. உயிர்க்கோளம்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக. .
1. விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினைப் புரிந்து கொண்டு வாழுமிடம் ____________ எனப்படும்.
விடை : சூழ்நிலை மண்டலம்
2. பிறச்சார்பு ஊட்ட உயிர்கள் (Hetrotrophs) என அழைக்கப்படுபவை ____________.
விடை : நுகர்வோர்
3. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சிக்கலான உணவுச் சங்கிலி அமைப்பினை ____________ என அழைக்கின்றோம்.
விடை : உணவு வலை
4. மிகப்பரந்த புவிச்சூழ்நிலை மண்டலத்தை ____________ என்கிறோம்.
விடை : பல்லுயிர்த் தொகுதி
5. பாலைவனப் பல்லுயிர்த்தொகுதிகளில் வளரும் தாவரங்கள் ____________ எனப்படும்.
விடை : பாலைவனத்தாவரங்கள்
6. ____________ நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி நன்னீர் மற்றும் கடல் நீர் கலக்கும் இடத்தில் காணப்படும்.
விடை : கடல்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி
- தூந்திரா
- டைகா
- பாலைவனம்
- பெருங்கடல்கள்
விடை : தூந்திரா
2. உயிர்க் கோளத்தின் மிகச் சிறிய அலகு.
- சூழ்நிலை மண்டலம்
- பல்லுயிர்த் தொகுதி
- சுற்றுச்சூழல்
- இவற்றில் எதுவும் இல்லை
விடை : சூழ்நிலை மண்டலம்
3. வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்
- உற்பத்தியாளர்கள்
- சிதைப்போர்கள்
- நுகர்வோர்கள்
- இவர்களில் யாரும் இல்லை
விடை : இவர்களில் யாரும் இல்லை
4. பாலைவனத்தாவரங்கள் வளரும் சூழல்
- உவர்ப்பியமுள்ள மணற்பகுதி
- குறைந்த அளவு ஈரப்பசை
- குளிர் வெப்பநிலை
- ஈரப்பதம்
விடை : உவர்ப்பியமுள்ள மணற்பகுதி
5. மழைக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி அதிகளவு விவசாயத்திற்குப் பயன்படுத்த இயலாததற்குக் காரணம்
- மிக அதிகப்படியான ஈரப்பதம்
- மிக அதிகமான வெப்பநிலை
- மிக மெல்லிய மண்ணடுக்கு
- வளமற்ற மண்
விடை : மிக அதிகமான வெப்பநிலை
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து 6 முதல் 8 வரை உள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்
வழிமுறைகள்:
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு
6. கூற்று : பிறச்சார்பு ஊட்ட உயிரிகள் தங்கள் உணவை தாங்களே தயாரித்துக் கொள்ளாது
காரணம் : ஊட்டச்சத்திற்காக இவை உற்பத்தியாளர்களைச் சார்ந்து இருக்கும்.
விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
7. கூற்று : குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படக்கூடியதும் எளிதில் பாதிக்கப்படும் சூழலில் வாழும் பலவகையான தாவரங்களும் விலங்குகளும் கொண்ட பகுதியே வளமையம் ஆகும்.
காரணம் : இப்பகுதி சிறப்பான கவனம் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும், ஆராய்ச்சியாளர்கள் இதனை அடையாளங் காண்பர்.
விடை : கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு
8. கூற்று : கடந்த இருபது ஆண்டுகளில் 60 சதவீத ஆப்பிரிக்க கொரில்லாக்கள் எண்ணிக்கையில் குறைந்துள்ளன.
காரணம் : காடுகளில் மனிதனின் குறுக்கீடு இல்லை.
விடை : கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு
III. சுருக்கமான விடையளி
1. உயிர்க்கோளம் என்றால் என்ன?
பாறைக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிக்கோளத்தை உள்ளடக்கி உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற கோளம் உயிர்கோளம் ஆகும்.
2. சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன?
- சூழ்நிலை மண்டலம் என்பது பல்வேறு உயிரினங்களின் தொகுதி ஆகும்.
- இச்சூழ்நிலை மண்டல அமைப்பில் வாழ்கின்ற உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதோடு, பிற உயிரற்ற சுற்றுச்சூழல் காரணிகளான நிலம், மண், காற்று, நீர் போன்றவற்றோடு தொடர்பு கொள்கின்றன.
3. உயிரினப் பன்மை என்றால் என்ன?
உயிரினப்பன்மை என்பது ஒரு வாழ்விடத்தில் வாழ்கின்ற பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிப்பதாகும்.
4. “உயிரினப் பன்மை இழப்பு” என்பதன் பொருள் கூறுக?
மனித மற்றும் இயற்கைக் காரணிகளின் செயல்பாடுகளினால் தாவர மற்றும் விலங்கினங்களில் ஏற்படும் இழப்பு உயிரினப்பன்மையின் இழப்பு என்கிறோம்.
5. பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளைக் குறிப்பிடுக.
உலகின் முக்கிய நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளாவன.
- வெப்ப மண்டலக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி
- வெப்ப மண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி
- பாலைவனப் பல்லுயிர்த் தொகுதி
- மித வெப்ப மண்டல புல்வெளி பல்லுயிர்த் தொகுதி
- தூந்திரப் பல்லுயிர்த் தொகுத
IV வேறுபடுத்துக
1. உற்பத்தியாளர் – சிதைப்பவர்
உற்பத்தியாளர் | சிதைப்பவர் |
1. சூழ்நிலை மண்டலத்தில் தமக்கு வேண்டிய உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உயிரினங்கள் உற்பத்தியாளர்கள் எனப்படும். | சூழ்நிலை மண்டலத்தில் தங்களுக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்க இயலாதவை சிதைப்பவர் ஆகும். |
2. தற்சார்பு ஊட்டஉயிரி என்று அழைக்கப்படுகின்றன. | சாறுண்ணிகள் என்று அழைக்கப்படுகின்றன. |
இவை நிலத்திலும் நீரிலும் காணப்படுகின்றன. | இவை நிலத்தில் மட்டும் காணப்படுகின்றன. |
உணவைத் தானே உற்பத்தி செய்து கொள்கின்றன | இறந்த, அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழக்கூடியவை ஆகும். |
(எ.கா.) தாவரங்கள், பாசி, பாக்டீரியா போன்றவை. | (எ.கா.) பூஞ்சைகள், காளான்கள் போன்றவை. |
2. நிலவாழ் பல்லுயிர்த் தொகுதி – நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி
நிலவாழ் பல்லுயிர்த் தொகுதி | நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி |
1. நிலவாழ் பல்லுயிர்த் தொகுதி என்பது ஒரு குழுவாக வாழும் உயிரினங்கள் | நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியில் என்பது ஒன்றுடனொன்று தொடர்பு கொண்டு வாழும் |
2. வாழும் நிலச்சூழலுக்கு ஏற்றவாறு வாழும் தன்மை கொண்டது. | வாழுகின்ற சூழலுக்கும் சக்தி மூலங்களுக்கும் மற்றும் இடத்திற்கும் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன. |
3. வெப்பமும்,மழையும் வாழும் சூழ்நிலையை தீர்மானிக்கின்றன. | சூழ்நிலையே தீர்மானிக்கின்றன. |
4. ஐந்து தொகுதிகளை கொண்டது | இரண்டு தொகுதிகளை கொண்டது |
5. உயிரினங்கள் மீது உயிரற்ற காரணிகளின் தாக்கம் காணப்படுகிறது. | இவற்றின் மீது உயிரற்ற காரணிகளின் தாக்கம் காணப்படுகிறது. |
6. புவியின் மொத்தப் பரப்பில் 71% உள்ளது | புவியின் மொத்தப் பரப்பில் 29% உள்ளது |
3. வெப்பமண்டலத் தாவரங்கள் – பாலைவனத்தாவரங்கள்
வெப்பமண்டலத் தாவரங்கள் | பாலைவனத் தாவரங்கள் |
1. வெப்ப மண்டலப் புல்வெளிகள் பெரும்பாலும் வெப்ப மண்டலக் காடுகளுக்கும், பாலைவனங்களுக்கும் இடையே காணப்படுகின்றன. | பாலைவனப் பகுதிகள் பெரும்பாலும் கண்டங்களின் மேற்கு விளிம்புகளில் காணப்படுகின்றன. |
2. இப்பல்லுயிர்த் தொகுதி பொதுவாக வெப்பமாகவும் வறண்டும் காணப்படுவதோடு மிதமான மழைப் பொழிவையும் பெறுகிறது. எனவே, இங்கு வளரும் புற்கள் உயரமாகவும் கூர்மையாகவும் காணப்படுகின்றன. | மழைப்பொழிவு பற்றாக்குறை மற்றும் வறண்ட காலநிலையின் காரணமாக இங்குத் தாவரங்கள் அரிதாக வளர்கின்றன. |
3. புல்லுருவி, ரெட், ஓட்ஸ் புல், லைமன் கிராஸ் போன்ற தாவரங்கள் இப்பல்லுயிர்த் தொகுதியில் காணப்படுகின்றன. | வறட்சியைத் தாங்கக் கூடிய முட்புதர்கள், குறுங்காடுகள் மற்றும் பனை போன்ற தாவரங்கள் இங்குக் காணப்படுகின்றன. |
4. சவானா – தூந்திரா
சவானா | தூந்திரா |
1. வெப்ப மண்டலக் காடுகளுக்கும், பாலைவனங்களுக்கும் இடையே காணப்படுகின்றன. | பரந்த தாழ்நிலைப் பகுதியென்பதால் பெரும்பாலும் பனியால் உறைந்தே காணப்படுகிறது |
2. பொதுவாக வெப்பமாகவும் வறண்டும் காணப்படுவதோடு மிதமான மழைப் பொழிவையும் பெறுகிறது. | வெற்று நிலப்பகுதி அல்லது தரிசு நிலப்பகுதி என அழைக்கப்படுகிறது |
3. இங்கு வளரும் புற்கள் உயரமாகவும் கூர்மையாகவும் காணப்படுகின்றன. | குறுகிய கால பருவத் தாவரங்கள் காணப்படுகின்றன. |
4. மக்களின் முக்கிய தொழல் கால்நடை மேய்த்தல் | வேட்டையாடுதல், மீன்பிடித்தல் |
5. பழங்குடியின மக்கள் நாடோடிகளாக உள்ளன | மக்கள் நாடோடிகளாக வாழ்கின்றன. |
6. புல்லுருவி, ரெட், ஓட்ஸ் புல், லைமன் கிராஸ் போன்ற தாவரங்கள் காணப்படுகின்றன. | பாசி இனத் தாவரங்கள் வாழ்கின்றன. |
V காரணம் அறிக
1. உற்பத்தியாளர்கள், தற்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
சூழ்நிலை மண்டலத்தில் தமக்கு வேண்டிய உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உயிரினங்கள் உற்பத்தியாளர்கள் எனப்படும். இவை தற்சார்பு ஊட்டஉயிரி என்று அழைக்கப்படுகின்றன.
2. உயிர்க்கோளம் ஒரு நிலையான சூழல் மண்டலத்தைக் கொண்டுள்ளது.
உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாகும். இக்கோளம் பாறைக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிக்கோளத்தை உள்ளடக்கியதாகும். மேலும் உயிருள்ள மற்றும் உயிரற்ற சூழல்களுக்கு இடையே உள்ள ஆற்றல் ஓட்டத்தை கொண்டுள்ளதால் உயிர்க்கோளம் ஒரு நிலையான சூழல் மண்டலத்தைக் கொண்டுள்ளது.
VI பத்தியளவில் விடையளி
1. சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு கூறுகளை விவரி.
சூழ்நிலை மண்டலம் மூன்று அடிப்படைக் கூறுகளைக் கொண்டுள்ளது.
அவை,
- உயிரற்ற கூறுகள்
- உயிருள்ள கூறுகள்
- ஆற்றல் கூறுகள்
அ) உயிரற்ற கூறுகள்
உயிரற்ற கூறுகள் சுற்றுச் சூழலில் உள்ள உயிரற்ற, கரிம, இயற்பியல் மற்றும் இரசாயன காரணிகளை உள்ளடக்கியதாகும்.
உதாரணம; :- நிலம், காற்று, நீர், சுண்ணாம்பு, இரும்பு போன்றவை.
ஆ) உயிருள்ள கூறுகள்
உயிருள்ள கூறுகள் என்பது தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கியதாகும்.
இவை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1. உற்பத்தியாளர்கள் | 2. நுகர்வோர்கள், | 3. சிதைப்போர்கள் |
உற்பத்தியாளர்கள்
- சூழ்நிலை மண்டலத்தில் தமக்கு வேண்டிய உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உயிரினங்கள் உற்பத்தியாளர்கள் எனப்படும்.
- இவை தற்சார்பு ஊட்டஉயிரி என்று அழைக்கப்படுகின்றன. இவை நிலத்திலும் நீரிலும் காணப்படுகின்றன.
- (எ.கா.) தாவரங்கள், பாசி, பாக்டீரியா போன்றவை.
நுகர்வோர்கள்
- நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தியாளர்களைச் சார்ந்திருக்கும் உயிரினங்கள் நுகர்வோர்கள் எனப்படும்.
எனவே, அவை பிறச்சார்பு ஊட்டஉயிரிஎன்றழைக்கப்படுகின்றன.
நுகர்வோரின் பொதுவான பிரிவுகள்
முதல்நிலை நுகர்வோர்
- உணவிற்காக உற்பத்தியாளர்களைச் சார்ந்திருக்கும் இவைகளைத் தாவர உண்ணிகள் என்கிறோம்.
- (எ.கா.) வரிக்குதிரை, ஆடு போன்றவை
இரண்டாம் நிலை நுகர்வோர்
- இவ்வகை நுகர்வோரை ஊன்உண்ணிகள் என்கிறோம். இவை தாவர உண்ணிககளை உணவாகக் உட்கொள்ளும்.
- (எ.கா.) சிங்கம், பாம்பு போன்றவை.
மூன்றாம்நிலை நுகர்வோர்
- ஊன்உண்ணிகளில் உயர்நிலையில் உள்ளவையாகும்.
- அவை தாவர உண்ணிகளையும், ஊன்உண்ணிகளையும் உணவாகக் கொள்ளக் கூடியவை ஆகும்.
- (எ.கா.) ஆந்தை, முதலை ஆகியவை.
சிதைப்போர்கள்
- இவ்வுயிரினங்கள் தங்களுக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்க இயலாதவை ஆகும்.
- அவை இறந்த, அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழக்கூடியவை ஆகும். எனவே, அவை சாறுண்ணிகள் என்று அழைக்கப்படுகின்றன.
- (எ.கா.) பூஞ்சைகள், காளான்கள் போன்றவை.
இ) ஆற்றல் கூறுகள்
- உயிர்க்கோளத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் தம் பணியினைச் செய்வதற்கும், ஓர் ஆற்றலை மற்றோர் ஆற்றலாக மாற்றுவதற்கும் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.
- உயிர்க்கோளம் முழுமைக்கும் சூரியனே ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது.
- சூழ்நிலை மண்டலத்தில் உள்ள பல்வேறு கூறுகளின் வழியாக, சூரிய ஆற்றல் பிற ஆற்றல் வடிவங்களாக மாற்றப்படுகிறது.
- சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றல் ஓட்டத்தில் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள் மற்றும் சிதைப்போர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்
2. சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகளை எழுதுக.
- அனைத்து உயிரினங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு ஆற்றல் மட்டம், உணவுச் சங்கிலி மற்றும் உணவு வலையினை உருவாக்குகின்றன. சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகள் ஆற்றல் ஓட்டத்தின் அமைப்பைச் சார்ந்துள்ளன.
- இந்த ஆற்றல் ஓட்டம் சூழ்நிலை மண்டலத்திலுள்ள கரிமமற்ற மற்றும் கரிமப் பொருட்களின் பரவலுக்கும், சூழற்சிக்கும் உதவி செய்கிறது.
- ஆற்றல் ஓட்டம் பெரும்பாலும் சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு நிலைகளில் படிநிலை ஒழுங்கு முறையில் நடைபெறுகிறது. இந்நிலைகள் ஆற்றல் மட்டம் எனப்படுகிறது.
- உயிரினங்களில் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு ஆற்றல் மாற்றம் பல்வேறு ஆற்றல் மட்டத்தின் வழியாகத் தொடர்ச்சியாக நடைபெறுவதை உணவுச் சங்கிலி என்று அழைக்கிறோம். உணவுச் சங்கிலிகள் ஒன்றினையொன்று சார்ந்து, பிணைக்கப்பட்ட அமைப்பு உணவு வலைஎனப்படுகிறது.
3. புவியில் உள்ள நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியை விவரி.
நீர்வாழ் பல்லுயிரித்தொகுதியினை நன்னீர்வாழ் பல்லுயிரித்தொகுதி மற்றும் கடல்நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி என இரண்டு வகைகளாக வகைப்படுத்துகிறோம்.
அ) நன்னீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி
- நன்னீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியானது ஏரிகள், குளங்கள், ஆறுகள், ஓடைகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- இத்தொகுதி நீரின் கொள்ளளவு, நீரோட்டம், ஆக்சிஜன் அளவு, வெப்பநிலை ஆகிய உயிரற்ற காரணிகளின் தாக்கத்திற்கு உள்ளாகிறது.
- மனிதர்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர், நீர்ப்பாசனம், சுகாதாரம் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நீரைப் பெறுவதற்கு நன்னீர்வாழ் பல்லுயிர்த்தொகுதியைச் சார்ந்தே உள்ளனர்.
- இதில் அல்லி, தாமரை, பாசியினத் தாவரங்கள் வளர்கின்றன. ஆமை, முதலை, மற்றும் மீன் இனங்கள் இத்தொகுதியில் காணப்படுகின்றன.
ஆ) கடல்நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி
- புவியில் காணப்படும் மிகப்பெரிய நீர்வாழ்பல்லுயிர்த்தொகுதி கடல்நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியாகும்.
- கடல்நீரில் காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வாழ்விட ஆதாரமாக இத்தொகுதி உள்ளது. பவளப்பாறைகள் (coral reefs) போன்ற இரண்டாம் வகை கடல்வாழ் உயிரினங்கள் இதில் உள்ளன.
- கடற்கரைப்பகுதிகள் மற்றும் கழிமுகங்களில் நன்னீர் மற்றும் கடல்நீர் கலந்த சூழலில் வளரும் நீர்வாழ் பல்லுயிர்களும் உள்ளன.
- நீர்நிலையானது கடல்வாழ் உயிரினங்களின் வேகமான இடமாற்றத்திற்கு உதவியாக உள்ளது. நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளைவிட மிக வேகமாவும், சிறப்பாகவும் அனைத்துப்பகுதிகளுக்கும் நீர்வாழ் உயிரினங்கள் இடம் பெயர்கின்றன.
- விலங்குகளைத்தவிர, தாவர இனங்களான
பெரிய கடற்பூண்டு, கடற்பாசிகள் மற்றும் நீரில் மிதக்கும் தாவரங்களும் அதிகளவில் இத்தொகுதியில் காணப்படுகின்றன. - நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியானது தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு மட்டுமல்லாமல் மனித இனத்திற்கும் மிக முக்கியமானதாக உள்ளது. மனித இனம் இத்தொகுதியை நீர், உணவு, பொழுதுபோக்கு அம்சங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
பயனுள்ள பக்கங்கள்