9th Std Social Science Term 3 Solution | Lesson.4 மனிதனும் சுற்றுச் சூழலும்

பாடம் 4. மனிதனும் சுற்றுச் சூழலும்

9th Standard Social Science Book Term 3 - மனிதனும் சுற்றுச் சூழலும்

பாடம் 4. மனிதனும் சுற்றுச் சூழலும்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச் செல்வாக்குகளை ________ என்கிறோம்.

  1. சுற்றுச்சூழல்
  2. சூழலமைப்பு
  3. உயிர்க் காரணிகள்
  4. உயிரற்றக் காரணிகள்

விடை : சுற்றுச்சூழல்

2. ஒவ்வோர் ஆண்டும் உலக மக்கள் தொகை தினம்________ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

  1. ஆகஸ்டு 11
  2. செப்டம்பர் 11
  3. ஜுலை 11
  4. ஜனவரி 11

விடை : ஜுலை 11

3. மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____________ஆகும்.

  1. மக்கள் தொகையியல்
  2. புற வடிவமைப்பியல்
  3. சொல் பிறப்பியல்
  4. நிலநடுக்க வரைவியல்

விடை : மக்கள்தொகையியல்

4. விலை மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களைச் சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுப்பது ____________ஆகும்.

  1. மீன்பிடித்தல்
  2. மரம் வெட்டுதல்
  3. சுரங்கவியல்
  4. விவசாயம்

விடை : சுரங்கவியல்

5. பொருளாதார நடவடிக்கையில் இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப்பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவன ____________.

  1. பாதி முடிக்கப்பட்ட பொருள்கள்
  2. முடிக்கப்பட்ட பொருள்கள்
  3. பொருளாதார பொருள்கள்
  4. மூலப்பொருள்கள்

விடை : பாதி முடிக்கப்பட்ட பொருள்கள்

6. வளிமண்டலத்திலுள்ள பசுமைக் குடில் வாயுக்களால் படிப்படியாக அதிகரிக்கும் புவி வெப்பத்தை ____________ என்கிறோம்.

  1. அமிலமழை
  2. வெப்ப மாசுறுதல்
  3. புவி வெப்பமாதல்
  4. காடுகளை அழித்தல்

விடை : புவி வெப்பமாதல்

II. கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. உறுதிப்படுத்துதல் (A): படுக்கை அடுக்கில் உள்ள ஓசோன் படலத்தை பாதுகாப்பு கேடயம் என்கிறோம்.
காரணம் (R): புற ஊதாக்கதிர் வீச்சு புவியை அடையாமல் தடுக்கிறது.

  1. Aவும் Rம் சரி மற்றும் A என்பது Rன் சரியான விளக்கம்.
  2. A மற்றும் R இரண்டும் சரி. ஆனால், Aவானது Rன் சரியான விளக்கமல்ல.
  3. A தவறு. ஆனால், R சரி.
  4. A மற்றும் R இரண்டும் தவறு.

விடை : Aவும் Rம் சரி மற்றும் A என்பது Rன் சரியான விளக்கம்.

2. உறுதிப்படுத்துதல் (A): மூன்றாம் நிலைத் தொழிலில், பொருள்கள் நேரடியாக உற்பத்தி செய்யப்படாமல் உற்பத்தி செய்வதற்கான செயல்முறைகளில் உறுதுணையாக உள்ளது.

காரணம் (R): மூன்றாம் நிலைத்தொழிலில் ஈடுபடும் மக்கள் முழுமையாக சுற்றுச் சூழலுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்கள்.

  1. A மற்றும் R இரண்டும் தவறு.
  2. A மற்றும் R இரண்டும் சரி. ஆனால், Aவானது Rக்கு விளக்கம் தரவில்லை.
  3. A சரி. ஆனால், R தவறு.
  4. A மற்றும் R இரண்டும் சரி. Aவானது Rக்கு சரியான விளக்கம் தருகிறது.

விடை :  A மற்றும் R இரண்டும் தவறு.

III) பொருத்துக.

1. ஒலிபெருக்கிதள்ளு காரணிகள்
2. ரியோடி ஜெனிரோ பிரேசில்இழு காரணிகள்
3. சிலுவை வடிவக் குடியிருப்புகள்ஒலி மாசுறுதல்
4. இயற்கை பேரிடர்T வடிவ குடியிருப்பு
5. சிறந்த வாழும் சூழல்புவி உச்சி மாநாடு
விடை : 1 – இ, 2 – உ, 3 – ஈ, 4 – அ 5 – ஆ

IV. கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி.

1. மக்கள் அடர்த்தி என்றால் என்ன?

ஒரு சதுர கி.மீ. நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கையை மக்களடர்த்தி என்கிறோம்.

மக்களடர்த்தி = மொத்த மக்கள்தொகை / மொத்த நிலப்பரப்பு

2. கொள்ளை நோய் என்றால் என்ன?

  • பல ஆயிரம் மக்கள் நோயினால் மடிதலை கொள்ளை நோய் என்கிறோம்.
  • 14-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் “பிளேக்” என்ற கொள்ளை நோயினால் 30-60 மக்ள இறந்தனர் என கணக்கிடப்பட்டுள்ளது

3. அதிக மக்களடர்த்தி மற்றும் குறைந்த மக்களடர்த்தி உள்ள பகுதிகளை எழுதுக.

அதிக மக்களடர்த்தி உள்ள பகுதிகள்

கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, வடமேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதி.

குறைந்த மக்களடர்த்தி உள்ள பகுதிகள்

மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு ஆஸ்திரேலியா, வடக்கு ரஷ்யா மற்றும் கனடா.

4. பசுமை குடில் விளைவு என்றால் என்ன?

பசுமைக்குடில் வாயுக்களான கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நீர் மூலக்கூறுகள், குளோரோ புளோரோ கார்பன் (CFC), கார்பன் மோனாக்சைடு, ஒளிப்பட வேதியியல் தனிமங்கள் மற்றும் ஹைட்ரோகார்பன் போன்றவை வளிமண்டலத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றாமல் தக்க வைக்கிறது. இதனால் புவியின் வெப்பம் அதிகரிக்கரிக்கிறது. இதனையே பசுமை குடில் விளைவு என்கிறோம்.

5. பாக் வளைகுடாவை உள்ளூர் மக்களும், அரசாங்கமும் மீட்டெடுத்த வழிமுறைகளில் இரண்டை எழுதுக.

  • இப்பகுதிகளில் வளரும் தாவர இனங்களின் நாற்றுகளைநட்டு கவனமாக வளர்க்கப்படுகின்றன.
  • மன்னார் வளைகுடா பல்லுயிர்த் தொகுதியிலிருந்து முருகைப் பாறைகளைக் கொண்டு வந்து பாக் வளைகுடாவில் வளர்க்கப்படுகிறது

6. வரையறு.

அ) மக்கள்தொகை வளர்ச்சி

ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பையே மக்கள் தொகை வளர்ச்சி என்கிறோம்.

ஆ) குழந்தை இறப்பு வீதம்

ஓர் ஆண்டில் உயிருடன் பிறந்த 1000 குழந்தைகளில் ஒரு வயதிற்குட்பட்ட இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஆகும்.

இ) மக்கள்தொகை கணக்கெடுப்பு

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசாங்கம் மக்கள்தொகை பற்றிக் கணக்கெடுப்பு நடத்தி தகவல்களைச் சேகரிக்கின்றது. இக்கணக்கெடுப்பு மக்களின் வயது, பாலினம், கல்வியறிவு விகிதம் மற்றும் தொழில் போன்ற விவரங்களைப் பதிவு செய்கிறது.

ஈ) வளம் குன்றா வளர்ச்சி

“வளம் குன்றா வளர்ச்சி என்பது எதிர்காலச் சந்ததியினரின் தேவைகளுக்கான வள இருப்பை உறுதி செய்வதோடு நிகழ்காலத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்வதாகும்”.

V. வேறுபடுத்துக.

1. பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம்.

பிறப்பு வீதம்ஏகாதிபத்தியம்
1. ஓர் ஆண்டில் 1000 பேருக்கு உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை.ஓர் ஆண்டில் உயிருடன் பிறந்த 1000
குழந்தைகளில் ஒரு வயதிற்குட்பட்ட இறந்த குழந்தைகளின் எண்ணிக்க
2. 15.4% (2014)17/1000 (2016)

2. குடியேற்றம் மற்றும் குடியிறக்கம்

குடியேற்றம்குடியிறக்கம்
ஓர் இடத்தில் வசிக்கும் மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது,
குடியேற்றமாகும்.
ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து இருப்பிடத்தை அமைத்துக் கொள்வது குடியிறக்கமாகும்.
இறப்பு மற்றும் குடியேற்றம் காரணமாக மக்கள் தொகை குறைகிறது.பிறப்பு மற்றும் குடியிறக்கம் காரணமாக மக்கள் தொகை அதிகரிக்கிறது.

3. கிராமக் குடியிருப்பு மற்றும் நகரக் குடியிருப்பு.

கிராமக் குடியிருப்புநகரக் குடியிருப்பு
முதன்மை தொழில்களை மேற்கொண்டிருக்கும் குடியிருப்புகள் கிராமக் குடியிருப்புகள் எனப்படுகின்றன.மக்கள் வேளாண்மை அல்லாத பிற தொழில்களான இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலைத் தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
எ.கா. வேளாண்மை, வனத்தொழில், கனிமத்தொழில் மற்றும் மீன் பிடித்தல்எ.கா. தொழிற்சாலைகள், போக்குவரத்து, வங்கிகள்

4. பெருநகரம் மற்றும் மிகப்பெருநகரம்.

பெருநகரம்மிகப்பெருநகரம்
பெருநகரங்கள் நகரங்களைவிடப் பெரியதாகவும் மிக அதிகப் பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்டதாகவும் இருக்கும். இஃது ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும்மீப்பெருநகரம் ஐம்பது இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும்.
எ.கா. கோயம்புத்தூர்.எ.கா. சென்னைப் பெருநகரம்

5. தள்ளு காரணிகள் மற்றும் ஈர்ப்புக் காரணிகள்.

தள்ளு காரணிகள்ஈர்ப்புக் காரணிகள்
மக்களைப் புதிய வாழ்விடத்தை நோக்கி வலிந்து இடம் பெயரச் செய்யும் காரணிகள் தள்ளு காரணிகள் எனப்படும்.ஈர்ப்பின் காரணமாக புதிய வாழ்விடத்தை நோக்கி மக்கள் இடம் பெயர்வது ஈர்க்கும் காரணிகள் ஆகும்.

6. முதல்நிலைத் தொழில் மற்றும் இரண்டாம் நிலைத்தொழில்.

முதல்நிலைத் தொழில்இரண்டாம் நிலைத்தொழில்
1. முதல்நிலைத் தொழில் என்பது மூலப் பொருள்களை பூமியிலிருந்து பயன்பாட்டிற்கு செய்யப்படும் தொழில்.இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப்பொருள்கள் முடிவுற்ற பொருள்களாக மாற்றம் செய்யப்படுகின்றன.
உதாரணம் : உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், மரம் வெட்டுதல், மீன் பிடித்தல், கால்நடைகள் மேய்த்தல், கனிமங்களை வெட்டி எடுத்தல் மற்றும் வேளாண்மை செய்தல் ஆகிய தொழில்கள் அடங்கும்.உதாரணம் : இரும்பு எஃகு தொழிற்சாலைகள், வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள்

7. நீர் மாசடைதல் மற்றும் ஒளி மாசடைதல்.

நீர் மாசடைதல்ஒளி மாசடைதல்
நீர் மாசுறுதல் என்பது நன்னீரின் தரத்தில ஏற்படும் வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் மாற்றங்களாகும்.ஒளி மாசுபாடு என்பது அதிகப்படியான ஒளியினை திறந்தவெளியில் ஏற்படுத்துவதால் உண்டாகும் ஒரு வேண்டத்தகாத நிகழ்வாகும்.
குளங்கள், ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர் மற்றும் பெருங்கடல்கள் போன்ற நீர்நிலைகள் தாெழிற்சாலை இரசாயன கழிவுகள், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் சாக்கடைகள் போன்றவற்றால் நீர் மாசடைகிறதுவானம் ஒளிர்தல், ஒளிமீறல் மற்றும் கண்களை உறுத்தும் போன்றவை ஒளிமாசு ஆகும். தெரு விளக்குகள், வாகன நிறுத்துமிட விளக்குகள், ஒளி வெள்ளம், சமிக்ஞை விளக்குகள், விளையாட்டுத்திடல் விளக்குகள், அலங்கார விளக்குகள் போன்ற பல்வகைப்பட்ட செயற்கை ஒளி விளக்குகளால் ஒளி மாசுபாடு ஏற்படுகிறது.

V. காரணம் கூறுக.

1. காடுகளை மீட்டெடுத்தல் உலகம் முழுவதும் ஊக்கப்படுத்தப்படுகிறது.

காடுகள் அழிக்கப்படுவதால் வெள்ளம் மற்றும் வறட்சி, மண் வளம் இழத்தல், காற்று மாசடைதல், உயிரினங்கள் அழிதல், உலகம் வெப்பமயமாதல், பாலைவனங்கள் விரிவடைதல், நீர்வளம் குறைதல், பனி உருகுதல், கடல் மட்டம் உயருதல் மற்றும் ஓசோன் படலத்திலுள்ள ஓசோன் செறிவு குறைதல் போன்ற பலவிளைவுகள் ஏற்படுகின்றன.

எனவே காடுகளை மீட்டெடுத்தல் உலகம் முழுவதும் ஊக்கப்படுத்தப்படுகிறது

2. அமில மழை சுற்றுச்சூழலை அழிக்கிறது.

மாசுப் பொருள்கள் நீராவியோடு சேர்ந்து சூரியஒளி மற்றும் உயிர்வளித் துணையோடு நீர்த்த கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலமாக மாறி  மழை நீரில் கரைந்து மழையாகப் பெய்கிறது. அமில மழையின் அமிலத்தன்மை தாவரங்கள் மற்றும் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றது.

3. நான்காம் நிலை பொருளாதார நடவடிக்கை ஓர் அறிவுசார் பொருளாதாரம்.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, அறிவுசார் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கைகளை நான்காம் நிலைத்தொழில் என்கிறோம். ஆலோசனை வழங்குதல், கல்வி மற்றும் வங்கி சார்ந்த சேவைகள் இதில் அடங்கும்.

4. மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவேண்டும்.

மனிதகுல வரலாற்றில், எப்போதும் இறப்பைவிட பிறப்பு சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. ஆனால் வளங்களின் அளவு குறைந்து வருகின்றது. மாசுபாடு அதிகரிக்கின்றது. எனவே இயற்கை சமநிலைக்கு மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவேண்டும்.

5. வளம் குன்றா வளர்ச்சியின் இலக்குகள் புவியைப் பாதுகாப்பதாக இருக்கிறதா?

ஆம், வளம் குன்றா வளர்ச்சியின் இலக்குகள் எதிர்காலச் சந்ததியினரின் தேவைக்கான வன இருப்பை உறுதி செய்வதோடு நிகழ்காலத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்வதாக உள்து

V. ஒரு பத்தியில் விடையளிக்கவும்.

1. மக்கள்தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?

புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவிக் காணப்படுகிறார்கள் என்பதைப் பற்றி குறிப்பிடுவதே மக்கள்தொகை பரவல் ஆகும்.

உலகில் எல்லா இடங்களிலும் மக்கள்தொகை சீராகப் பரவிக் காணப்படுவதில்லை. அதற்கான காரணிகள் பின்வருமாறு:

அ. இயற்கை காரணிகள்

இயற்கை காரணிகளான வெப்பநிலை, மழை, மண், நிலத்தோற்றம், நீர், இயற்கைத் தாவரங்கள், கனிம வளங்களின் பரவல் மற்றும் ஆற்றல் வளங்களின் இருப்பு உள்ளிட்டவை மக்கள் தொகை பரவலுக்கான இயற்கை காரணிகள் ஆகும்.

ஆ. வரலாற்றுக் காரணிகள்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரிகங்கள், போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆகியவை மக்கள்தொகை பரவலுக்கான முக்கியமான வரலாற்றுக் காரணிகளாகும்.

இ. பொருளாதாரக் காரணிகள் 

கல்விக்கூடங்கள், வேலைவாய்ப்புகள், உற்பத்தித் தொழிற்சாலைகள், ஆடம்பர வசதிகள், வியாபாரம், வணிகம் மற்றும் பிற வசதிகளும் ஓரிடத்தின் மக்கள் தொகைப் பரவுவதற்க்கு காரணமாகின்றன.

2. கிராமக் குடியிருப்பு வகைகளைப் படத்துடன் விளக்குக.

செவ்வக வடிவக் குடியிருப்புகள்

சமவெளிப் பகுதிகளிலும், பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காணப்படும் குடியிருப்புகள் செவ்வக வடிவக் குடியிருப்புகளாகும். இங்குச் சாலைகள்செவ்வக வடிவில் காணப்படுவதோடு ஒன்றையொன்று செங்கோணங்களில் வெட்டிச் செல்லும்.

நேர்க்கோட்டுக் குடியிருப்புகள்

இவ்வகையான குடியிருப்புகள் சாலை, தொடர்வண்டிப் பாதை, ஆற்றங்கரை மற்றும் அணைகட்டு ஓரங்களில் காணப்படுகின்றன.

வட்டவடிவக் குடியிருப்பு அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்புகள் 

இவ்வகையான குடியிருப்புகள் ஏரிகள், குளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளைச் சுற்றி வட்டமாகவோ அல்லது அரைவட்டமாகவோ காணப்படுகின்றன.

நட்சத்திர வடிவக் குடியிருப்புகள்

நட்சத்திர வடிவ குடியிருப்புகள் கப்பியிடப்பட்ட அல்லது கப்பியிடப்படாத சாலை சந்திப்புகளின் ஓரங்களில் காணப்படுகின்றன. இவை நட்சத்திர வடிவத்தில் எல்லாத் திசைகளிலும் பரவிக் காணப்படும்.

முக்கோண வடிவக் குடியிருப்புகள்

ஆறுகள் ஒன்றாக சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள் முக்கோண வடிவக் குடியிருப்புகளாகும்.

T வடிவ, Y வடிவ, சிலுவை வடிவ (அ) குறுக்கு வடிவக் குடியிருப்புகள்

T வடிவ குடியிருப்புகள் மூன்று சாலைகள் சந்திக்கும் இடங்களில் வளர்ச்சியடையும். Y வடிவக் குடியிருப்புகள் இரண்டு சாலைகள் மூன்றாவது சாலையுடன் சேரும் இடங்களில் காணப்படுகிறது. குறுக்கு வடிவக் குடியிருப்புகள் நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களில் காணப்படுகின்றன.

மூலக்கரு வடிவக் குடியிருப்புகள் 

இங்குச் சாலைகள் வட்ட வடிவமாகவும் ஒரு மையத்தில் முடிவடையக் கூடியதாகவும் இருக்கும். கிராமத்தின் குடியிருப்புகள் செல்வந்தரின் குடியிருப்பைச் சுற்றியோ அல்லது மசூதி, கோவில், தேவாலயங்களைச் சுற்றியோ அமைந்திருக்கும்.

 

பயனுள்ள பக்கங்கள்