பாடம் 5. நிலவரைபடத் திறன்கள்
பாடம் 5. நிலவரைபடத் திறன்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. 20ம் நூற்றாண்டில் தலப்பரப்பு அளவிடுதலின் புதிய நிலை
- தலப்படங்கள்
- வானவியல் புகைபடங்கள்
- நிலவரைபடங்கள்
- செயற்கைக்கோள் பதிமங்கள்
விடை : செயற்கைக்கோள் பதிமங்கள்
2. ஒரு நிலவரைபடத்தின் கருத்து (அல்லது) நோக்கத்தைக் குறிப்பிடுவது
- தலைப்பு
- அளவை
- திசைகள்
- நிலவரைபடக் குறிப்பு
விடை : தலைப்பு
3. நிலவரைபடத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள்
- முறைக்குறியீடுகள்
- இணைப்பாய புள்ளிகள்
- வலைப்பின்னல் அமைப்பு
- திசைகள்
விடை : முறைக்குறியீடுகள்
4. மிகப்பரந்த நிலப்பரப்பில் குறைந்த விவரத்தை தரக்கூடிய நிலவரைபடம்
- பெரிய அளவை நிலவரைபடம்
- கருத்துசார் வரைபடம்
- இயற்கை வரைபடம்
- சிறிய அளவை நிலவரைபடம்
விடை : சிறிய அளவை நிலவரைபடம்
5. உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் (GPS) பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள்
- 7
- 24
- 32
- 64
விடை : 24
II. கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கூற்று (A): செங்குத்துக் கோடுகளும் இடைமட்டக் கோடுகளும் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் உருவாக்கும் வலை அமைப்பிற்கு இணைப்பாயங்களின் அமைப்பு.
காரணம் (R): கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் செல்லும் கோடுகள் முறையே வடக்கைக்கோடுகள், கிழக்கைக்கோடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
- A மற்றும் R இரண்டும் சரி Rஆனது Aவிற்கு சரியான விளக்கம்
- A மற்றும் R இரண்டும் சரி ஆனால் Rஆனது Aவிற்கு சரியான விளக்கமல்ல
- A சரி R தவறு
- A தவறு R சரி
விடை : A மற்றும் R இரண்டும் சரி Rஆனது Aவிற்கு சரியான விளக்கம்
2. கூற்று (A): ஒரு நிலவரைபடத்தில் உள்ள வரைபடக் குறிப்புகள் வரைபடத்தில் உள்ள செய்திகளைப் புரிந்துகொள்ளப் பயன்படாது.
காரணம் (R): இது பொதுவாக நிலவரைபடத்தின் அடிப்பகுதியில் இடது அல்லது வலது புற ஓரத்தில் காணப்படும்.
- A தவறு R சரி
- A மற்றும் R இரண்டும் சரி ஆனால் Rஆனது Aவிற்கு சரியான விளக்கமல்ல
- A சரி ஆனால் R தவறு
- A மற்றும் R இரண்டும் சரி
விடை : A மற்றும் R இரண்டும் சரி
III) பொருத்துக.
1. நிலவரைபடங்களை உருவாக்கும் அறிவியல் கலை | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
2. கருத்துச்சார் வரைபடம் | ஜியாய்டு |
3. புவியின் வடிவம் | இன்மார்சாட் |
4. செயற்கைக்கோள் | அரசியல் வரைபடம் |
5. நவ்ஸ்டார் | நிலவரைபடக் கலையியல் |
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 5 – அ |
IV. சுருக்கமான விடையளி .
1. புவியை குறித்துக் காட்டுவதற்கான முறைகள் யாவை?
- நிலவரைபடங்கள்
- வானவியல் புகைபடங்கள்
- தலப்படங்கள்
- செயற்கைக்கோள் பதிமங்கள்
- வலை நிலவரைபடங்கள்
2. நிலைவரைபடம் என்றால் என்ன?
நிலவரைபடம் ஒரு புவியியலாளரின் அடிப்படைக் கருவியாகும். இது வரைபடங்கள், வார்த்தைகள் மற்றும் குறியீடுகள் மூலம் புவியின் மேற்பரப்பினைத் தெள்ளத்தெளிவாகவும் திறம்படவும் விளக்குகிறது.
3. நிலவரைபடத்தின் கூறுகள் யாவை?
- தலைப்பு
- அளவை
- திசை
- வலைப்பின்னல் அமைப்பு,
- கோட்டுச் சட்டம்
- நிலவரைபடக் குறிப்பு
- முறைக்குறியீடுகள்
4. A மற்றும் B ஆகிய இரு நகரத்துக்கு இடையான தூரம் 5 கி.மீ. ஆகும். இது நிலவரைபடத்தில் 5 செ.மீ இடையாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த தூரத்தை கணக்கிட்டு பிரதி பின்ன முறையில் விடை தருக.
பிரதி பின்ன முறை | = நிலவரைபடத்தூரம் / புவிபரப்பின் தூரம் |
R.F. பி | = 5 செ.மீ/5 கி.மீ |
= 5 செ.மீ/500000 கி.மீ | |
1கி.மீ = 1,00,000 செ.மீ எனவே R.F. 1 : 1,00,000 | |
5கி.மீ = 5,00,000 செ.மீ எனவே R.F. 5 : 5,00,000 |
5. நிலஅளவை செய்யப் பயன்படும் கருவிகளைக் கூறுக.
- சங்கிலி
- பட்டகக் காந்தவட்டை
- சமதளமேசை
- மட்டமானி
- அப்னேமட்டம்
- சாய்வுமானி
- தியோடலைட்
6. தொலைநுண்ணுர்வு – வரையறு.
தொலை நுண்ணுணர்வு என்பது புவியில் உள்ள பொருட்களை நேரிடையாகத் தொடர்பு கொள்ளாமல் தொலைவிலிருந்து உற்று நோக்கி அவற்றின் தகவல்களைச் சேகரிப்பது ஆகும்.
7. தொலைநுண்ணர்வின் கூறுகள் யாவை?
- ஆற்றல் மூலம்
- இலக்கு
- அனுப்பும் வழி
- உணர்விகள்
V. காரணம் கூறுக.
1. நிலவரைபடம் வரைதலில் செயற்கைக்கோள் பதிமங்கள் துணைபுரிகின்றன.
நில வரைபடம் வரைவதில் வான்வழி புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை பல நேரங்களில் தெளிவற்றதாகவும், நிறம் குறைந்தும் காணப்பட்டது. ஆனால் செயற்கைக்கோள் பதிமங்கள் தெளிவுடையதாகவும், அனைத்து தகவல்களுடன், நிலவரைபடம் வரைய உதவுகின்றன.
2. புவியியல் வல்லுநர்களின் அடிப்படைக் கருவி நிலைவரைபடம்.
நிலவரைபடங்கள், வரைபடங்கள், வார்த்தைகள், குறியீடுகள் மூலம் புவியின் மேற்பரப்பினைத் தெள்ளத் தெளிவாகவும், திறம்படவும் விளக்குகிறது.
3. நிலவரைபடத்தில் ஒரு குறிப்பிட்ட இடங்களைச் சுட்டிக்காட்ட புவி வலைப்பின்னல் அமைப்புப் பயன்படுகிறது.
நிலவரைபடம் உலகளாவிய மொியாகும். சர்வதேச அளவில் உலகின் ஒர் இடத்தை சுட்டிக்காட்ட, அட்ச, தீர்க்க கோடுகளின் அளவையே பயன்படுத்துகின்றன. எனவே நில வரைபடத்தில் புவி வலைப்பின்னல் அமைப்பு மிக முக்கியமானதாகும்.
4. நவீன வரைபட தொழில் நுட்பத்தில் வலை நிலவரைபடவியல் முக்கிய அங்கமாகும்.
வலைப்பின்னல் என்பது தலப்படத்தில் பல கோடுகள் இணைந்து ஒரு இடத்தின் அமைவிடத்தை துல்லியமாக காட்டும் நுட்பம் ஆகும். ஒரு நில வரைபடம் என்னும் பதம் இன்றைய வலை மெய்நிகர் நிலவரைபடங்கள் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் விளக்குவது ஆகும்.
VI. வேறுபடுத்துக.
1. புவிமாதிரி மற்றும் நிலவரைபடம்.
புவிமாதிரி | நிலவரைபடம் |
சிறு வகுப்பில் மாணவர்கள் புவியின் வடிவம், அமைப்பு, சுழற்சி, நாடுகளின் அமைவிடம், கடல்கள், பெருங்கடல்கள் போன்றவற்றை பார்த்து புரிந்து கொள்ள பயன்படுத்தப்படும் உபகரணம் புவி மாதிரி ஆகும். | வரைபடங்கள், வார்த்தைகள் மற்றும் குறியீடுகள் மூலம் புவியின் மேற்பரப்பினை திறம்பட விளக்க நில வரைபடம் உதவுகிறது. |
2. பெரிய அளவை நிலவரைபடம் மற்றும் சிறிய அளவை நிலவரைபடம்.
பெரிய அளவை நிலவரைபடம் | சிறிய அளவை நிலவரைபடம் |
சிறிய பகுதியை அதிக விவரங்களுடன் காட்ட முடியும | ஒரு பெரிய பகுதியைக் குறைவான விவரங்களுடன் காட்ட முடிய |
இறப்பு மற்றும் குடியேற்றம் காரணமாக மக்கள் தொகை குறைகிறது. | பிறப்பு மற்றும் குடியிறக்கம் காரணமாக மக்கள் தொகை அதிகரிக்கிறது. |
3. வான்வழி புகைப்படங்கள் மற்றும் செயற்கைக்கோள் பதிமங்கள்
வான்வழி புகைப்படங்கள் | செயற்கைக்கோள் பதிமங்கள் |
1. பலூன்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்டு தகவல்களைப் பெறுதல் | செயற்கைக்கோள் தொலை நுண்ணுணர்வின் நுட்பத்தால் தொலைவிலுள்ள இலக்கை எளிதாக அடைந்து தகவல்களை பெறுதல் |
2. சிறிய பகுதிகளை படம் பிடிக்கக்கூட உயர் அதிகாரிகளின் அனுமதி தேவை | உலகாளவிய செய்தி சேகரிப்பிற்கு அனுமதி பெறத் தேவையில்லை |
4. புவியியல் தகவல் அமைப்பு மற்றும் உலக அமைவிட கண்டறியும் தொகுதி
புவியியல் தகவல் அமைப்பு | உலக அமைவிட கண்டறியும் தொகுதி |
புவியியல் தகவல் அமைப்பு ஒரு கணினி சார்ந்த கருவியாகும். நிலப்பரப்பைப் பற்றி அதிக புள்ளி விபரங்களைச் சேகரிக்க தொலை நுண்ணுர்வு, GPS மற்றும் பிற ஆதாரங்களை கொண்டு சேகரிக்கின்றனர் | இதன் முக்கிய நோக்கம் பயணத் தகவல்களை மிக துல்லியமாக தருவதே ஆகும். கைப்பேசிகள், கைக்கடிகாரங்கள், தானியங்கி பணப்பரிமாற்றக்கருவி போன்றவற்றில் இத்தொழில் நுட்பம் பயன்படுகிறது |
VII. ஒரு பத்தியில் விடையளிக்கவும்.
1. நிலவரைபடங்களில் அளவை என்பதன் பொருள் என்ன? அதன் வகைகளை விளக்குக.
நிலவரைபடங்கள் உலகினை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வரைந்து காண்பிப்பவையாகும். அளவை மற்றும் திசைகள் கொண்டு நிலவரைபடங்கள் வரையப்படுகின்றன. நிலவரைபடத்தில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் மற்றும் நிறங்களைக் கொண்டு பல விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
சொல்லளவை முறை
நிலவரைபடத்திலுள்ள தூரம் மற்றும் புவியின் உண்மையான தூரத்தினை ஒப்பீடு செய்து சொற்களில் குறிப்பிடுவது சொல்லளவை முறையாகும். அதாவது ஒரு சென்டிமீட்டர் பத்து கிலோமீட்டர்க்குச் சமம்.
பிரதி பின்ன முறை
இம்முறையில் நிலவரைபட மற்றும் உண்மையான தூரங்களின் ஒப்பீடு
விகிதமாகவோ, பின்னமாகவோ வெளிப்படுத்தப்படும். இது வழக்கமாக R.F என
சுருக்கமாகக் கூறப்படுகிறது.
பிரதிபின்ன முறை = நிலவரைபடத் தூரம் / புவிபரப்பின் தூரம்
கோட்டளவை முறை
நில வரைபடங்களில் ஒரு நீண்டகோடு பல சமப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் நிலப்பரப்பில் எவ்வளவு தூரத்தைக் காட்டுகிறது என்பதைக் காட்டுவதே (முதன்மை மற்றும் இரண்டாம்நிலை) நேர்க்கோட்டு அல்லது கோட்டளவை முறையாகும். இந்த அளவை முறையின் மூலம் நிலவரைபடத்திலுள்ள தூரத்தினை நேரடியாக அளக்க உதவுகிறது.
2. திசைகள் – தகுந்த படம் வரைந்து விளக்குக.
பொதுவாக நிலவரைபடங்கள் வடதிசையை அடிப்படையாகக் கொண்டு வரையப்படுகின்றன. ஒரு நிலவரைபடத்தில் வடக்குத்திசை எப்போதும் புவியின் வட துருவத்தை நோக்கியே உள்ளது. நீ வட துருவத்தைப் பார்த்து நின்றால், உனது வலக்கை கிழக்குத் திசையையும், இடக்கை மேற்குத் திசையையும் உன் பின்புறம் தெற்குத் திசையையும் காட்டும். இவை அடிப்படை திசைகளாகும். பொதுவாக, நிலவரைபடத்தின் மீது காணப்படும் அம்புமுனை வடக்குத் திசையைக் குறிப்பிடும்.
3. உலக அமைவிடத் தொகுதியின் (GPS) பயன்களை விவரி?
- கைப்பேசிகள், கைக்கடிகாரங்கள், புல்டோசர்கள், கப்பல் கொள்கலன்கள் மற்றும் தானியிங்கி பணபரிமாற்ற கருவிகள் (ஏ.டி.எம்) என அனைத்திலும் உலக அமைவிட கண்டறியும் தொகுதி தொழில்நுட்பம் பெரிதும் பயன்படுகின்றது.
- உலக அமைவிட கண்டறியும் தொகுதியின் முக்கிய நோக்கம் பயண தகவல்களை (தூரம், வழி மற்றும் திசை) மிக துல்லியமாக தருவதே ஆகும். இராணுவ போர்த் தேடல்கள் மற்றும் போர்க்கால மீட்பு நடவடிக்கைகளிலும் உறுதுணையாகத் திகழ்கின்றது. நம்பிக்கையான சுற்றுலா வழிக் காட்டியாகவும் உள்ளது.
- விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகள், நெருக்கடிகாலத் தேவைகளைத் துரிதமாக வழங்குதல் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கும் ஜி.பி.எஸ் பெரிதும் உதவுகிறது.
- வானிலை முன்னறிவிப்பு, நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் சூற்றுசூழல் பாதுகாப்பு உலக அமைவிட கண்டறியும் தொகுதிகளின் உதவியுடன் சிறப்பாக செயல்படுகிறன்றன.
4. புவன் (BHUVAN), அறிவியல் அறிஞர்கள், கொள்கை வகுப்பவர்கள் மற்றும்
பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மிக அதிக அளவில் பயன்படுகிறது என்பதை நியாயப்படுத்துக.
- புவன் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ‘புவி’ என்று பொருள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தினால் (ISRO) ஆகஸ்ட் 12ம் நாள், 2009 ஆண்டு பயனுக்கு வந்தது
- இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ள புவன் மூலம் ஒருவர் விரும்பிய இடங்களையோ செய்திகளில் இடம்பெறும் நிகழ்வுகள் நடைபெற்ற இடங்களையோ, தாங்கள் செல்லவே இயலாத உலகின் எந்த ஒரு பகுதி அல்லது ஓர் இடத்தின் பெயர்களையோ அட்ச தீர்க்கப் பரவலைக் கொண்டு ஆராய்ந்து அறியலாம்.
- விஞ்ஞானிகள், அறிஞர்கள், கல்வியாளர்கள் கொள்கை வகுப்பாளர்கள் அல்லது பொதுமக்கள் ஆகியோருக்கு புவன் மிகுந்த பயனை அளிக்கிறது
பயனுள்ள பக்கங்கள்