9th Std Social Science Term 3 Solution | Lesson.7 அரசாங்கங்களின் வகைகள்

பாடம் 7. அரசாங்கங்களின் வகைகள்

9th Standard Social Science Book Term 3 - அரசாங்கங்களின் வகைகள்

பாடம் 7. அரசாங்கங்களின் வகைகள்

I. கோடிட்டஇடங்களை நிரப்புக.

1. ________,_________ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.

விடை : ஜப்பான், பிரான்ஸ்

2. பாராளுமன்ற ஆட்சி முறை________ என்றும் அழைக்கப்படுகின்றது.

விடை : அமைச்சரவை அரசாங்கம் | பொறுப்பு அரசாங்கம் | வெஸ்ட் மினிஸ்டர்

3. பாராளுமன்ற ஆட்சிமுறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர்________ஆவர்.

விடை : பிரதமர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

எண்நாடுகள்நாடாளுமன்றத்தின் பெயர்
1.அமெரிக்க ஐக்கிய நாடுகள்காங்கிரஸ்
2.நார்வேஸ்டார்டிங்
3.டென்மார்க்ஃபோக்டிங்

III. வேறுபடுத்துக:

1. ஒற்றையாட்சி முறை மற்றும கூட்டாட்சி முறை

ஒற்றையாட்சி முறை கூட்டாட்சி முறை
1. ஒரேயொரு அரசு அல்லது துணைக் குழுக்கள்இரண்டு நிலையில் அரசாங்கம்
2. பெரும்பாலும் ஒரே குடியுரிமைஇரட்டைக் குடியுரிமை
3. துணைக் குழுக்கள் தன்னிச்சையாகச் செயல்பட இயலாதுகூட்டாட்சியின் குழுக்கள் மத்திய அரசுக்கு உட்பட்டவை
4. அதிகாரப் பகிர்வு இல்லைஅதிகாரப் பகிர்வு
5. மையப்படுத்தப்பட்ட அதிகாரம்அதிகாரப் பரவல்

2. நாடாளுமன்ற ஆட்சிமுறை மற்றும் அதிபர் மக்களாட்சி.

நாடாளுமன்ற ஆட்சிமுறை அதிபர் மக்களாட்சி
1. பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் பிரதம மந்திரியாவார்குடியரசுத்தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
2. மத்திய சட்டமன்றம் அதிகாரம் படைத்ததுஅதிபரே அதிகாரம் படைத்தவர்
3. அதிகாரப் பிரிவினை மையப்படுத்தப் படாமல் இருப்பதுஅதிகாரப் பிரிவினை
4.  தனித்தனியான சார்புடைய செயல்பாடுகளைக் கொண்ட பிரிவுகள்சுதந்திரமாகச் செயல்படும் பிரிவுகள்
5. அரசின் தலைவர் – குடியரசுத் தலைவர்மாகாணத்தின் தலைவர் அதிபர் ஆவார்
6. அரசாங்கத்தின் தலைவர் – பிரதம அமைச்சர்அரசாங்கத்தின் தலைவரும் அதிபரே
7. கூட்டுத் தலைமைதனிநபர் தலைமை
8. கூட்டு மற்றும் தனித்தனியான பொறுப்புகள் உண்டுமகா சபையின் செயல்களுக்கு அதிபர் பொறுப்பை ஏற்க மாட்டார்.

IV. சுருக்கமாக விடையளி:

1. நேபாள மக்களாட்சி

  • ஏப்ரல் 2006ல் நேபாளத்தின் துடிப்பான, ஜனநாயகம் சார்ந்த மக்கள் சமூக இயக்கத்தின் தலைவர்கள் ‘ஏழு கட்சிகள் கூட்டமைப்பின்’ சார்பில் மக்களுக்கு அழைப்பு விடுத்தனர் (Seven Party Alliance). தலைநகர் காத்மண்டுவின் சுற்றுச் சாலையின் நெடுகிலும் ஏழு இடங்களில் பத்து இலட்சம் மக்கள் பங்கு பெறுமாறு ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
  • இந்த இமாலய அரசின் எதேச்சதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களாட்சிக்குப் புத்துயிர் அளிக்கப் பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் கோரினர்.
  • முன் எப்போதுமில்லாத இது போன்ற ஒரு நிகழ்வினால் அரசர் ஞானேந்திராவின் முடியாட்சி முடிவு பெற்று, மக்களாட்சிக்கு வழிவகுத்தது.

2. ஒற்றையாட்சி முறை

ஒற்றை ஆட்சி முறை என்பது இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகும்

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி:

1. அரசமைப்பின் வகைகளைப் பட்டியலிடுக.

  1. எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத அரசமைப்பு
  2. கூட்டாட்சி முறை மற்றும் ஒற்றையாட்சி முறை
  3. நெகிழும் தன்மையுடைய அரசமைப்பு மற்றும் நெகிழும் தன்மையற்ற அரசமைப்பு

2. கூட்டாட்சி முறையின் நிறைகள் யாவை?

  • உள்ளூர் சுய ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையே சமரசம் ஏற்படுத்துதல்
  • மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, நிர்வாகத் திறன்கள் மேம்பட வழிவகுக்கிறது.
  • மிகப் பெரிய நாடுகள் தோன்றுவதற்கு வழி செய்கிறது.
  • அதிகாரம் பகிர்ந்து அளிக்கப் படுவதால் மத்திய அரசின் சர்திவதிகாரப் போக்கைத் தடுக்கிறது.
  • மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமானது
  • பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மை அளிக்கிறது.

3. ஒற்றையாட்சி முறைக்கும் கூட்டாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.

ஒற்றையாட்சி முறை கூட்டாட்சி முறை
1. ஒரேயொரு அரசு அல்லது துணைக் குழுக்கள்இரண்டு நிலையில் அரசாங்கம்
2. பெரும்பாலும் ஒரே குடியுரிமைஇரட்டைக் குடியுரிமை
3. துணைக் குழுக்கள் தன்னிச்சையாகச் செயல்பட இயலாதுகூட்டாட்சியின் குழுக்கள் மத்திய அரசுக்கு உட்பட்டவை
4. அதிகாரப் பகிர்வு இல்லைஅதிகாரப் பகிர்வு
5. மையப்படுத்தப்பட்ட அதிகாரம்அதிகாரப் பரவல்

VI. விரிவான விடையளி:

1. ஒற்றையாட்சி முறையின் நிறைகளை விவரி.

  • சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது
  • அதிகாரம் மற்றும் பொறுப்புகளுக்கு இடையில் மோதல்கள் இருப்பதில்லை.
  • ஒற்றை ஆட்சி முறை உடனடியாக முடிவெடுத்துத் துரிதமாகச் செயல்படுகிறது.
  • ஒற்றை ஆட்சி குறைந்த செலவுடையது.
  • அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்.
  • ஒற்றுமை, சீரான சட்டம், கொள்கை மற்றும் நிர்வாகத்தினை உள்ளடக்கியது.

2. அதிபர் மக்களாட்சி முறை பற்றிக் குறிப்பு வரைக. மேலும் அதிபர் மக்களாட்சி முறைக்கும் நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கும் உள்ள வேறுபாட்டினை எழுதுக.

  • அதிபர் மக்களாட்சி முறை என்பது சட்டமன்றத்திற்கு பொறுப்பில்லாததாகவும், நாடானுமன்றம் அற்றதாகவும் நிலைத்த நிர்வாகம் அற்றதாகவும், நிலைத்த நிர்வாக அமைப்பு உடையதாகவும் இருக்கும்.
  • இம்முறை அதிகாரப்பகிர்வு கொள்கைளயின் அடிப்டையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இலங்கை
நாடாளுமன்ற ஆட்சிமுறை அதிபர் மக்களாட்சி
1. பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் பிரதம மந்திரியாவார்குடியரசுத்தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
2. மத்திய சட்டமன்றம் அதிகாரம் படைத்ததுஅதிபரே அதிகாரம் படைத்தவர்
3. அதிகாரப் பிரிவினை மையப்படுத்தப் படாமல் இருப்பதுஅதிகாரப் பிரிவினை
4.  தனித்தனியான சார்புடைய செயல்பாடுகளைக் கொண்ட பிரிவுகள்சுதந்திரமாகச் செயல்படும் பிரிவுகள்
5. அரசின் தலைவர் – குடியரசுத் தலைவர்மாகாணத்தின் தலைவர் அதிபர் ஆவார்
6. அரசாங்கத்தின் தலைவர் – பிரதம அமைச்சர்அரசாங்கத்தின் தலைவரும் அதிபரே
7. கூட்டுத் தலைமைதனிநபர் தலைமை
8. கூட்டு மற்றும் தனித்தனியான பொறுப்புகள் உண்டுமகா சபையின் செயல்களுக்கு அதிபர் பொறுப்பை ஏற்க மாட்டார்.

பயனுள்ள பக்கங்கள்