Tamil Nadu 9th Standard Tamil Book Term 1 தொடர் இலக்கணம் Solution | Lesson 1.5

பாடம் 1.5. தொடர் இலக்கணம்

மதிப்பீடு

I. பலவுள் தெரிக.

1. குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க.

குழு – 1குழு – 2குழு – 3குழு – 4
நாவாய்மரம்துறைதன்வினை
…………….…………….…………….…………….
தோணிமரவிருத்தம்காரணவினை
  1. 1- வங்கம், 2- மானு, 3- தாழிசை, 4- பிறவினை
  2. 1- தாழிசை, 2- மானு, 3- பிறவினை, 4- வங்கம்
  3. 1- பிறவினை, 2- தாழிசை, 3- மானு, 4- வங்கம்
  4. 1- மானு, 2- பிறவினை, 3- வங்கம், 4- தாழிசை

விடை : 1- வங்கம், 2- மானு, 3- தாழிசை, 4- பிறவினை

II. குறு வினா

1. செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

  • உண் – சான்று : கோவலன் கொலையுண்டான்.
  • ஆயிற்று – சான்று : வீடு கட்டியாயிற்று

2. வீணையோடு வந்தாள், கிளியே பேசு – தொடரின் வகையைச் சுட்டுக.

  • வீணையோடு வந்தாள் – வேற்றுமைத்தொடர்,
  • கிளியே பேசு – விளித்தொடர்

III. சிறு வினா

தன்வினை, பிறவினை, காரணவினைகளை எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

தன் வினை:-

வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும்.

சான்று : பந்து உருண்டது

பிற வினை:-

வினையின் பயன் எழுவாயை அன்றி பிறிதொன்றைச் சேருமாயின் பிறவினை எனப்படும்.

சான்று : பந்தை உருட்டினான்

காரண வினை:-

எழுவாய் தானே வினையை நிகழ்த்தாமல் , வினை நிகழ்வதற்குக் காரணமாக இருப்பது காரண வினை எனப்படும்

சான்று : பந்தை உருட்டவைத்தான்

கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. எட்வர்டு வந்தான் இத்தொடரில் எட்வர்டு என்பது _________

  1. எழுவாய்
  2. பயனிலை
  3. தோன்றா எழுவாய்
  4. வினைப்பயனிலை

விடை: எழுவாய்

2. கனகாம்பரம் பூத்தது இத்தொடரில் பூத்தது என்பது _________

  1. எழுவாய்
  2. பயனிலை
  3. தோன்றா எழுவாய்
  4. வினைப்பயனிலை

விடை: பயனிலை

3. அன்பரசன் நல்ல பையன் இத்தொடரில் நல்ல என்பது _________

  1. பிறவினை
  2. நல்வினை
  3. பெயரை
  4. வினையடை

விடை: பெயரடை

4. மன்னன் வந்தான் அமைந்துள்ள சொற்றொடர் வகை

  1. வினைமுற்றுத்தொடர்
  2. வேற்றுமைத்தொடர்
  3. விளித்தொடர்
  4. எழுவாய்த்தொடர்

விடை: எழுவாய்த்தொடர்

5. அண்ணணோடு வருவான் அமைந்துள்ள சொற்றொடர் வகை

  1. வினைமுற்றுத்தொடர்
  2. வேற்றுமைத்தொடர்
  3. விளித்தொடர்
  4. எழுவாய்த்தொடர்

விடை: வேற்றுமைத்தொடர்

6. நண்பா கேள் அமைந்துள்ள சொற்றொடர் வகை

  1. வினைமுற்றுத்தொடர்
  2. விளித்தொடர்
  3. வேற்றுமைத்தொடர்
  4. எழுவாய்த்தொடர்

விடை: விளித்தொடர்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ஒரு சொற்றொடர் அமைவதற்கு அடிப்படையாக அமைந்து பெயர்ச்சொல் _________

விடை : எழுவாய்

2. ஒரு சொற்றொடரில் அமையும் வினைச்சொல் _________ ஆகும்

விடை : பயனிலை

3. ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடம் _________ என்கிறோம்

விடை : பயனிலை

4. எழுவாய் அடிப்படையாகத் தேர்தெடுக்கப்பட்ட பொருளே _________ ஆகும்.

விடை : செயப்படுபொருள்

II. குறு வினா

1. எழுவாயை சான்றுடன் எழுதுக

சொற்றொடர் அமைவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச் சொல்லையே எழுவாய் என்கிறோம்.

சான்று : எட்வர்டு வந்தான். இதில் “எட்வர்டு” எழுவாய்

2. பயனிலையை சான்றுடன் எழுதுக

ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்தைப் பயனிலை என்கிறோம். வினைச்சொல்லே பயனிலை ஆகும்.

சான்று : கனகாம்பரம் பூத்தது. இதில் “பூத்தது” பயனிலை

3. தோன்றா எழுவாயைச் சான்றுடன் விளக்குக

வாக்கியத்தில் எழுவாய் வெளிப்படையாகத் தோன்றாது காணப்படுமாயின் அது ‘தோன்றா எழுவாய்’ எனப்படும்.

சான்று : படித்தாய்.

இத்தொடரில் படித்தாய் என்பது பயனிலை. நீ என்ற எழுவாய் வெளிப்படையாக தோன்றவில்லை

4. வினைப் பயனிலை என்றால் என்ன?

தொடரில் வினைமுற்று பயனிலையாக வருவது வினைப் பயனிலை எனப்படும்.

சான்று : நான் வந்தேன்.

5. பெயர்ப் பயனிலை என்றால் என்ன?

தொடரில் பெயர்ச்சொல் பயனிலையாக வருவது பெயர்ப் பயனிலை எனப்படும்.

சான்று : சொன்னவள் கலா.

6. வினாப் பயனிலை என்றால் என்ன?

தொடரில் வினாச்சொல் பயனிலையாக வருவது வினாப் பயனிலை எனப்படும்.

சான்று : விளையாடுபவன் யார்?

II. சிறு வினா

1. பகுபத உறுப்புகள் வகையினை விவரி?

பகுதி (முதனிலை)

சொல்லின் முதலில் நிற்கும்; பகாப் பதமாக அமையும்; வினைச்சொல்லில் ஏவலாகவும், பெயர்ச் சொல்லில் அறுவகைப் பெயராகவும் அமையும்.

விகுதி (இறுதிநிலை)

சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் காட்டுவதாகவும் அமையும்.

இடைநிலை

பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும்.

சந்தி

பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும்; பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.

சாரியை

பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும்; பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.

விகாரம்

தனி உறுப்பு அன்று; மேற்கண்ட பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றம்

2. இடைநிலைஉறுப்புகளை சான்றுடன் விளக்குக

இறந்தகால இடைநிலை

த், ட், ற், இன்வென்றார் – ற்

நிகழ்கால இடைநிலை 

கிறு, கின்று, ஆநின்றுஉயர்கிறான் – கிறு

எதிர்கால இடைநிலை

ப், வ், க்புகுவான், செய்கேன் – வ், க்

எதிர்மறை இடைநிலை

இல், அல், ஆபறிக்காதீர் – ஆ

பெயர் இடைநிலை

ஞ், ந், வ், ச், தமகிழ்ச்சி, அறிஞன் – ச், ஞ்

3. சந்தி-யின் உருபுகள் யாவை? சான்று தருக

பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும்; பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.

த், ப், க்உறுத்தும்த் – சந்தி
ய், வ்பொருந்தியய் – உடம்படுமெய் சந்தி

4. சாரியை உருபுகள் யாவை? 

அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன்

5. எழுத்துப்பேறு என்றால் என்ன? சான்று தருக

பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும். பெரும்பாலும் ‘த்’ மட்டுமே வரும். சாரியை இடத்தில் ‘த்’ வந்தால் அது எழுத்துப்பேறு.

செய்யாதே: செய் + ய் + ஆ + த் + ஏ

  • செய் – பகுதி
  • ய் – சந்தி
  • ஆ – எதிர்மறை இடைநிலை
  • த் – எழுத்துப்பேறு
  • ஏ – முன்னிலை ஒருமை ஏவல்
  • வினைமுற்று விகுதி

கற்றவை கற்றபின்

I. தொடர்களை மாற்றி உருவாக்குக.

அ) பதவியை விட்டு நீக்கினான் – இத்தொடரைத் தன்வினைத் தொடராக மாற்றுக.

  • பதவியை விட்டு நீக்குவித்தான்.

ஆ) மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர்– இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக.

  • மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர

இ) உண்ணப்படும் தமிழ்த்தேனே – இத்தொடரை செய்வினைத் தொடராக மாற்றுக.

  • உண்ணும் தமிழ்த்தேனே

ஈ) திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுத்துள்ளனர் – இத்தொடரை செயப்பாட்டுவினைத் தொடராக மாற்றுக.

  • திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுப்பட்டுள்ளன

உ) நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார் – இத்தொடரைக் காரணவினைத் தொடராக மாற்றுக.

  • நிலவன் சிறந்த பள்ளியில் படிபித்தான்.

II. சொற்களைத் தொடர்களாக மாற்றுக.

அ) மொழிபெயர் – தன்வினை, பிறவினைத் தொடர்களாக.

  • தன்வினை – மொழி  பெயர்த்தாள்
  • பிறவினை – மொழி பெயர்ப்பித்தாள்

ஆ) பதிவுசெய் – செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக.

  • செய்வினை – பதிவு செய்தான்
  • செயப்பாட்டு வினை – பதிவு செய்யப்பட்டது

இ) பயன்படுத்து – பிற வினை, காரண வினைத் தொடர்களாக.

  • பிற வினை – பயன்படுத்துவித்தாள்
  • காரண வினை – பயன்படுத்தினாளா

ஈ) இயங்கு – செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக.

  • செய்வினை – இயங்கினாள்
  • செயப்பாட்டு வினை – இயக்கப்பட்டாள்

III. செயப்படுபொருள் சொற்களை எழுதுக.

(தமிழிலக்கிய நூல்களை, செவ்விலக்கியங்களை , நம்மை, வாழ்வியல் அறிவை)

அ) தமிழ் ____________ கொண்டுள்ளது.

விடை : செவ்விலக்கியங்களை

ஆ) நாம் ____________ வாங்கவேண்டும்.

விடை : தமிழிலக்கிய நூல்களை

இ) புத்தகங்கள் ____________  கொடுக்கின்றன.

விடை : வாழ்வியல் அறிவை

ஈ) நல்ல நூல்கள் ____________ நல்வழிப்படுத்துகின்றன.

விடை : நம்மை

IV. பொருத்தமான பெயரடைகளை எழுதுக.

(நல்ல, பெரிய, இனிய, கொடிய)

அ) எல்லோருக்கும் ________ வணக்கம்.

விடை : இனிய

ஆ) அவன் ________ நண்பனாக இருக்கிறான்.

விடை : நல்ல

இ) ________ ஓவியமாக வரைந்து வா.

விடை : பெரிய

ஈ) ________ விலங்கிடம் பழகாதே.

விடை : கொடிய

V. பொருத்தமான வினையடைகளைத் தேர்வுசெய்க.

(அழகாக, பொதுவாக, வேகமாக, மெதுவாக)

அ) ஊர்தி ________சென்றது.

விடை : மெதுவாக

ஆ) காலம் ________ ஓடுகிறது.

விடை : வேகமாக

இ) சங்க இலக்கியம் வாழ்க்கையை ________ காட்டுகிறது.

விடை : அழகாக

ஈ) இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும் ________ காட்டு.

விடை : பொதுவாக

VI. தொடர்களை மாற்றி எழுதுக.

அ) நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். (வினாத்தொடராக)

  • நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினரா?

ஆ) பாடினான். (எழுவாய்த் தொடராக)

  • அவன் பாடினான்

இ) இசையின்றி அமையாது பாடல். (உடன்பாட்டுத் தொடராக)

  • இசையோடு அமையும் பாடல்

ஈ) நீ இதைச் செய் எனக் கூறினேன் அல்லவா? (கட்டளைத் தொடராக)

  • நீ இதைச் செய்

VII. வேர்ச்சொற்களை வைத்துச் சொற்றொடர்களை உருவாக்குக.

அ) தா (அடுக்குத் தொடர், உடன்பாட்டுவினைத் தொடர், பிறவினைத் தொடர்)

  • அடுக்குத் தொடர் – தா தா
  • உடன்பாட்டுவினைத் தொடர் – தந்தேன்
  • பிறவினைத் தொடர் – தருவித்தேன்

ஆ) கேள் (எழுவாய்த் தொடர், வினைமுற்றுத் தொடர், வினாத் தொடர்)

  • எழுவாய்த் தொடர் – மாணவன் கேட்டான்
  • வினைமுற்றுத் தொடர் – கேட்டர் ஆரிசியர்
  • வினாத் தொடர் – யார் கேட்பவர்?

இ) கொடு (செய்தித் தொடர், கட்டளைத் தொடர், தெரிநிலை வினையெச்சத் தொடர்)

  • செய்தித் தொடர் – பாரி நெல்லிக்கனி கொடுத்தான்
  • கட்டளைத் தொடர் – ஏழைக்குப் பொருளைக் கொடு
  • வினாத் தொடர் – மன்னர் நிறைய கொடுத்தார்

ஈ) பார் (செய்வினைத் தொடர், செயப்பாட்டுவினைத் தொடர், பிறவினைத் தொடர்)

  • செய்வினைத் தொடர் – பார்த்தான்
  • செயப்பாட்டுவினைத் தொடர் – பார்க்கப்பட்டான்
  • பிறவினைத் தொடர் – பார்க்கச் செய்தான்

VIII. சிந்தனை வினா

அ) கீழ்கண்ட சொற்றொடர்கள் சரியானவையா? விளக்கம் தருக.

சொற்றொடர்சரி/தவறுவிளக்கம்
அவை யாவும் இருக்கின்றனதவறுஅவை – பன்மை, யாவும் – ஒருமை
அவை யாவையும் இருக்கின்றனசரிஅவை – பன்மை, யாவையும் – பன்மை
அவை யாவும் எடுங்கள்தவறு(இதற்கு அவை யாவும் எடு என்பதே சரி)

அவை – பன்மை, யாவும் – ஒருமை, எடு – ஒருமை

அவை யாவையும் எடுங்கள்தவறு(இதற்கு அவை யாவையும் எடு என்பதே சரி)

அவை – பன்மை, யாவையும் – பன்மை, எடு – ஒருமை

அவை யாவற்றையும் எடுங்கள்சரிஅவை – பன்மை, யாவற்றையும் – பன்மை

ஆ) புதிய வார இதழ் ஒன்று வெளிவரப் போகிறது. அதற்காக நாளிதழில் விளம்பரம் தருவதற்குச் சொற்றொடர்களை வடிவமைத்து எழுதுக.

“காற்று” புதிய வார இதழ் வெளியீடு – நாளிதழ் விளம்பரம்

காற்று – வார இதழ்

(தமிழக இதழ்களின் முன்னோடி)

தமிழ் இலக்கிய முன்னோடிகளின்

கட்டுரைகள், கவிதைகள், பேட்டி, விளையாட்டுச் செய்திகள், விளம்பரங்கள்

முகவர்கள் அணுகவும் : 94434 19040

சென்னை, மதுரை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, மதுரை, திருச்சி

பதிப்புகள், படைப்புகள், துணுக்குள் அனுப்ப வேண்டிய முகவரி

ஆசிரியர், காற்று வார இதழ், 507, பூந்தமல்லி நெடுஞ்சாலை போரூர் – 600 116.

இ) சொற்றொடர் வகைகளை அறிந்து, அவை எவ்வாறு பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படுகின்றன என்பதைப் பதிவு செய்க.

சொற்றொடர் வகைகளை அறிந்தால் தான் பிழையின்றி பேசுவதற்கும் மரபு மாறாமல் எழுதுவதற்கும் பயன்படுகின்றன.

வகைகள்பயன்பாடு
வா – ஒரு சொல் தொடர்வா – கட்டளைத் தொடராக
வந்தான் –  வினைமுற்றுத் தொடர்வந்த – பள்ளிக்கு வந்த மாணவன்
வரச்சொன்னான் – வினையெச்ச தொடர்வந்து – பள்ளிக்கு வந்து சென்ற மாணவன்
வாவா – அடுக்குத்தொடர்வரச்சொன்னான் – அவன் தான் வரச் சொன்னான்
வந்த மாணவன் – பெயரச்ச தொடர்வருக வருக என வரேவற்றான்

ஈ) வந்திருப்பவர்கள் அனைவரும் இருக்கையில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தொடர் ஆங்கிலத்திலிருந்து நேரடியான தமிழ் மொழிபெயர்ப்பாக இருந்தாலும் மொழி மரபை இத்தொடரில் பேணுகிறோமா?

விடை :- வந்திருப்பவர் அனைவரும் இருக்கையில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தொடர் ஆங்கிலத்தின் நேரடியான தமிழ் மொழி பெயர்ப்பு. இதைக் கேட்டுக் கொள்கிறோம் – என்ற தொடரில் எழுதுவது தான் சிறந்தது. இதே போன்று வருகையைத் தர முடியாது. ஆனாலும் அழைப்பிதழ்களிலும் மேடை நாகரிகம் கருதி “வருைக தர வேண்டுகிறோம்” என்னு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். நம்மொழி மரபைப் பேணவில்லை. மொழி நடைமுறையைப் பின்பற்றகிறோம்.

IX. தமிழ் எண்கள் அறிவோம்.

12345678910
௧௦/ ௰

தமிழ் எண்களில் எழுதுக.

  1. பன்னிரண்டு – கஉ
  2. பதின்மூன்று – க௩
  3. நாற்பத்து மூன்று – ௪௩
  4. எழுபத்தெட்டு – ௭௮
  5. தொண்ணூறு – ௯௦

X. கலைச்சொல் அறிவோம்

  1. உருபன் – Morpheme
  2. ஒலியன் – Phoneme
  3. ஒப்பிலக்கணம் – Comparative Grammar
  4. பேரகராதி – Lexicon

மொழியை ஆள்வோம்!

I. மொழிபெயர்க்க.

  1. Linguistics – மொழி ஆராய்ச்சி
  2. Literature – இலக்கியம்
  3. Philologist – மொழியியற்புலமை
  4. Polyglot – பன்மொழியாளர்கள்
  5. Phonologist – ஒலிச்சின்ன வல்லுநர்
  6. Phonetics – ஒலிப்பியல்

II. வினைமுற்றாக மாற்றி எழுதுக.

1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் ____________ (திகழ்)

விடை : திகழ்கிறது

2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் ____________  (கலந்துகொள்)

விடை : கலந்துகொள்வாள்

3. உலகில் மூவாயிரம் மொழிகள் ____________ (பேசு)

விடை : பேசப்படுகின்றன

3. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா ____________ (செல்)

விடை : சென்றனர்

4. தவறுகளைத் ____________ (திருத்து)

விடை : திருத்துவேன்

III. பழமொழிகொண்டு நிறைவு செய்க.

1. இளமையில் கல்வி ____________

விடை : சிலைமேல் எழுத்து

2. சித்திரமும் கைப்பழக்கம் ____________

விடை : செந்தமிழும் நாப்பழக்கம்

3. கல்லாடம் படித்தவரோடு ____________

விடை : சொல்லாடாதே

4. கற்றோர்க்குச் சென்ற ____________

விடை : இடமெல்லாம் சிறப்பு

மொழியை விளையாடு

I. அந்தாதிச் சொற்களை உருவாக்குக.

அத்தி, குருவி, விருது, இனிப்பு, வரிசையா

II. அகராதியில் காண்க.

1. நயவாமை

  • விரும்பாமை

2. கிளத்தல்

  • சிறப்பித்து கூறுதல், புலப்படக் கூறுதல்

3. கேழ்பு

  • உவமை, ஒளி, நிறம்

4. செம்மல்

  • தலைவன், தலைமை, இறைவன், சிவன்

5. புரிசை

  • மதில், அரண், அரணம், இஞ்சி

III. வேர்ச்சொற்களைப் மூலம் விடுபட்ட கட்டங்களில் காலத்திற்கேற்ப வினைமுற்றுகளை நிறைவு செய்க

வா
இறந்த காலம்நிகழ்காலம்எதிர்காலம்
நான்வந்தேன்வருகிறேன்வருவேன்
நாங்கள்வந்தோம்வருகிறோம்வருவோம்
நீவந்தாய்வருகிறாய்வருவாய்
நீங்கள்வந்தீர்கள்வருகிறீர்கள்வருவீர்கள்
அவன்வந்தான்வருகிறான்வருவான்
அவள்வந்தாள்வருகிறாள்வருவாள்
அவர்வந்தார்வருகிறார்வருவார்
அவர்கள்வந்தார்கள்வருகிறார்கள்வருவார்கள்
அதுவந்தவருகிறதுவரும்
அவைவந்தனவருகின்றனவரும்

IV. தா, காண், பெறு, நீந்து, பாடு, கொடு போன்ற வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி மேற்கண்ட கட்டத்தினைப் போன்று காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை அமைத்து எழுதுக.

இறந்த காலம்நிகழ்காலம்எதிர்காலம்
தாதந்தான்தருகிறான்தருவான்
காண்கண்டான்காண்கிறான்காண்பான்
பெறுபெற்றேன்பெறுகிறேன்பெறுவேன்
நீந்துநீந்தினாள்நீந்துகிறாள்நீந்துவாள்
பாடுபாடினாள்பாடுகிறாள்பாடுவாள்
கொடுகொடுத்தார்கொடுக்கிறார்கொடுப்பார்

VI எழுவாய், வினை அடி, வினைக்குப் பொருத்தமான தொடர் அமைக்க.

(திடலில், போட்டியில், மழையில், வேகமாக, மண்ணை)

திடலில்

  1. நான் திடலில் ஓடினேன் (தன்வினை).
  2. திடலில் மிதிவண்டியை ஓட்டினேன் (பிறவினை)
  3. நான் நண்பர்களைத் திடலில் ஓடச்செய்தேன் (காரணவினை).
எழுவாய்/பெயர்வினை அடிதன்வினைபிறவினை
நான்ஓடுநான் திடலில் ஓடினேன்.நான் திடலில் மிதிவண்டியை ஓட்டினேன்.
காவியாவரைகாவியா வேகமாக படம் வரைந்தாள்.காவியா வேகமா படம் வரைவித்தாள்
கவிதைநனைநான் கவிதை மழையில் நனைந்தேன்.நான் கவிதை மழையில் நனைவித்தேன்.
இலைஅசைசெடியில் இலை வேகமாக அசைந்தது.செடியில் இலை வேகமாக அசைவித்தது.
மழைசேர்மழை மண்ணைச் சேர்ந்தது.மழை மண்ணைச் சேர்பித்தது.

கலைச்சொல் அறிவோம்

  1. உருபன் – Morpheme
  2. ஒலியன் – Phoneme
  3. ஒப்பிலக்கணம் – Comparative Grammar
  4. பேரகராதி – Lexicon

அறிவை விரிவு செய்

  • திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – ராபர்ட் கால்டுவெல்
  • மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும், தமிழ்நடைக் கையேடு – மணவை முஸ்தபா
  • மாணவர்களுக்கான தமிழ் – என். சொக்கன்

சில பயனுள்ள பக்கங்கள்