Tamil Nadu 9th Standard Tamil Book Term 1 நீரின்றி அமையாது உலகு Solution | Lesson 2.1

பாடம் 2.1. நீரின்றி அமையாது உலகு

I. பலவுள் தெரிக.

1. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது ?

  1. அகழி
  2. ஆறு
  3. இலஞ்சி
  4. புலரி

விடை : புலரி

2. பொருத்தமான விடையைத் தேர்க.

அ. நீரின்று அமையாது உலகு – திருவள்ளுவர்
ஆ. நீரின்று அமையாது யாக்கை – ஔவையார்
இ. மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்

  1. அ, இ
  2. ஆ, இ
  3. அ, ஆ
  4. அ, ஆ, இ

விடை : அ, இ

II. குறு வினா

1. கூவல் என்று அழைக்கப்படுவது எது?

கூவல் என்று அழைக்கப்படுவது உவர் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை என்பதாகும்.

2. உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

  • ஆறு
  • குளம்
  • வாய்க்கால்
  • கிணறு

3. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண் – இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?

  • அகழிநீர்
  • வெறுநிலம்
  • நீளமான மலை
  • குளிர்ந்த நிழல் தரும் காடு

III. சிறு வினா

1. அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்யவேண்டியவற்றை எழுதுக.

அதிகப்படியான் நிலத்தடி நீரை மக்கள் பயன்படுத்தி விட்டனர். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் நிலத்தடி நீரை சிக்கனமாகவே பயன்படுத்த வேண்டும்.

மழைநீர் சேமிப்புத் தொட்டி மூலம் நிலத்தடியில் மழை நீரைச் சேமிக்க வேண்டும்.

மிகுதியா தடுப்பணைகளை உருவாக்க வேண்டும்.

இப்படிச் செய்வதால் அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

2. சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

பயன்பாட்டுக்குத் தேவையான நீலை வெளியேற்றவும், சேற்றை வெளியேற்றவும் சோழர் காலக் குமிழித் தூம்பு பயன்படுத்தப்பட்டது.

சோழர் காலக் குமிழித் தூம்பினைப் பயன்படுத்துவதன் மூலம் தூர் வார வேண்டிய அவசியம் இல்லை.

IV. நெடு வினா

1. நீரின்று அமையாது உலகு – என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக்காட்டுடன் விவரி

நீர்இன்று அமையாது உலகு என்னும் தம் கருத்தை வள்ளுவர் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

மனித வாழ்வின் அடித்தளம் நீரே!

மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க் கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகிறது.

மழை உழவுக்கு உதவுகிறது.

விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது.

நிலமும், மரமும், உயிர்களும் நோயின்றி வாழ நீரே அவசியம்.

உடலை குளரிவிப்பதற்கும், சாமியாடிகளுக்கு மஞ்சள் நீர் கொடுப்பதும், திருமணமான பின் கடலாடுதலும், இறப்பு சடங்கிலும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களை நீர் கொடுத்து வரேவற்பதற்கும், விவசாய நிலத்திற்கு உழைக்கச் செல்வோர் குடிப்பதும் என அனைத்து செயல்களுக்கும் நீரே அவசியம்.

அதனால் தான் வள்ளுவர் “நீர்இன்று அமையாது உலகு” என்று அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. இயற்கை உணவெனப்படுவது நிலத்தோடு நீரே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

  1. அகநானூறு
  2. பரிபாடல்
  3. பதிற்றுபத்து
  4. புறநானூறு

விடை : புறநானூறு

2. ஜான் பென்னி குவிக் ________ அணையை கட்டியுள்ளார்

  1. முல்லை பெரியாறு
  2. வைகை
  3. கும்பவருட்டி
  4. கல்லணை

விடை : முல்லை பெரியாறு

3. உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை

  1. ஏரி
  2. இலஞ்சி
  3. கூவல்
  4. கண்மாய்

விடை : கூவல்

4. நீராடல் பருவம் இடம் பெற்றுள்ள சிற்றிலக்கியம்

  1. பிள்ளைத்தமிழ்
  2. பள்ளு
  3. கலம்பகம்
  4. இலம்பகம்

விடை : பிள்ளைத்தமிழ்

5. சனி நீராடு என்பது ________ வாக்கு

  1. ஒளவையார்
  2. வள்ளுவர்
  3. கம்பர்
  4. பாரதியார்

விடை : ஒளவையார்

6. குளித்தல் என்ற சொல்லின பொருள்

  1. குடித்தல்
  2. குளிர்வித்தல்
  3. உண்ணல்
  4. ஊறல்

விடை : குளிர்வித்தல்

7. நீர்நிலைகளில் பொருந்தாதது.

  1. ஆழிக்கிணறு
  2. அகளி
  3. உறைகிணறு
  4. ஊருணி

விடை : அகளி

8. தமிழ் மரபில் நீரும் நீராலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்ற என்றவர்

  1. வ.ராமசாமி
  2. நல்வேட்டனார்
  3. நல்லாதனார்
  4. தொ.பரமசிவன்

விடை : தொ.பரமசிவன்

I. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. இயற்கை _________ கிடைத்த பெரும்பேறு

விடை : உயிர்களுக்கு

2. உலக சுற்றுச்சூழல் நாள் _________

விடை : ஜூன்-5

3. மழைநீரை _________ பாதுகாக்கிறது

விடை : நீர்நிலைகள்

4. பாண்டிய நாட்டில் ஏரியை _________ என்று அழைப்பர்

விடை : கண்மாய்

5. கரிகால சோழன் காலத்தில் _________ கட்டப்பட்டது.

விடை : கல்லணை

6. குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்கிறார் _________

விடை : ஆண்டாள்

7. இந்திய நீர் பாசனத்தின் தந்தை _________

விடை : சர் ஆர்தர் காட்டன்

8. சர் ஆர்தர் காட்டன் _________  காவிரிப் பாசனப் பகுதிக்கு தனிபொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

விடை : 1829-ல்

9. கல்லணைக்கு _________  என்ற பெயரை சூட்டியவர் சர் ஆர்தர் காட்டன்

விடை : கிராண்ட் அணைக்கட்

10. 1873-ல் கேதாவரி ஆற்றின் குறுக்கே _________ அணையைக் கட்டினார்.

விடை : தெளலீஸ்வரம்

11. சனி நீராடு என்பது _________ வாக்கு.

விடை : ஒளவையின்

II. குறு வினா

1. இயற்கையின் கொடைகள் எவை?

  • மலைகள்
  • காடுகள்
  • பசுமைப் புல்வெளிகள்
  • நீர்நிலைகள்
  • வயல்வெளிகள்
  • பசுமையான தோப்புகள்

2. முந்நீர் யாவை?

  • ஆற்று நீர்
  • ஊற்று நீர்
  • மழை நீர்

3. எந்தெந்த நாடுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது?

  • அமெரிக்கா
  • இந்தியா
  • பாகிஸ்தான்
  • சீனா

4. உறை கிணறு என்றால் என்ன?

மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணறு உறைகிணறு ஆகும்.

5. ஊருணி என்றால் என்ன?

மக்கள் பருகும் நீர் உள்ள நீர்நிலை ஊருணி ஆகும்.

6. நமது பொறுப்பு யாது?

இயற்கையின் கொடைகளை உரிய வகையில் பயன்படுத்தியும், பாதுகாத்தும் அடுத்த தலைமுறையினருக்கு அளிப்பதும் நமது பொறுப்பு ஆகும்

7. திருமஞ்சனம் ஆடல் என்று எதனைக் கூறுவர்?

தெய்வச்சிலைகளைக் குளி(ர்)க்க வைப்பதை திருமஞ்சனம் ஆடல் என்று கூறுவர்.

8. நீர்நிலைக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?

  • அகழி
  • ஆழிக்கிணறு
  • உறைக்கிணறு
  • அணை
  • ஏரி
  • குளம்
  • ஊருணி
  • கண்மாய்
  • கேணி

9. நிலமும், மரமும் எந்த நோக்கில் வளர்கின்றன மாங்குடி மருதனார் கூறுகிறார்?

மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப் பெருகிறது. நிலமும், மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என்ற நோக்கில் வளர்கின்றன மாங்குடி மருதனார் கூறுகிறார்.

10. ஜான் பென்னி குவிக் முல்லைப் பெரியார் அணையை எதற்காக கட்டினார்?

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் உதவுவதற்காக முல்லை பெரியார் அணையை ஜான் பென்னி குவிக் கட்டினார்.

11. நீரின் இன்றியமையாமையை எடுத்துரைக்கம் புறநானூறு பாடலை கூறுக

உணவெனப்படுவது நிலத்தோடு நீரே (புறம் 18)

12. நீராடுதல் பற்றி ஆண்டாளின் பாடலை எழுதுக

குள்ளக் குளிரக் குடைநது நீராடி

13. மழை வழங்கிய நீரை பாதுகாத்துத் தருபவை எவை?

ஒவ்வோர் ஆண்டும் பெய்கின்ற மழையின் அளவு கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். ஆனால், மழை வழங்கிய நீரை நீர்நிலைகளே பாதுகாத்துத்
தருகின்றன.

14. உயிர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்பவையாக மாங்குடி மருதனார் கூறுவன யாவை?

நிலம், மரம்

15. வீட்டிற்கு வரும் விருந்தினர்க்கு எதன் அடையாளமாக நீர் வழங்கப்படுகிறது?

வீட்டிற்கு வரும் விருந்தினர்க்கு அன்பான வரவேற்பின் அடையாளமாக நீரே வழங்கப்ப டுகிறது.

III. சிறு வினா

1. கல்லணை குறிப்பு வரைக

கரிகாலனின்  விரிவான வேளாண்மைத் திட்டத்திற்கு சான்று கல்லணை.

கல்லணையின் நீளம் – 1080 அடி

கல்லணையின் அகலம் – 40 அடி முதல் 60 அடி

கல்லணையின் உயரம் – 15 முதல் 18 அடி

வலுவான கட்டுமானத் தொழில் நுட்பத்தால் கட்டப்பட்டுள்ளது.

கல்லணையைக் கட்டிய பொறியாளர் சர் ஆர்தர் காட்டன்.

இவர் கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட் என்ற பெயரைச் சூட்டினார்.

2. கல்லணையை கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில் நுப்டம் பற்றி கூறுக

காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளை கொண்டு வந்து போட்டனர்.

அந்தப் பாறைகள் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்கு சென்றன.

அதன்மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத களிமண்ணை புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதாமாகச் செய்தனர்.

இதுவே கல்லணையைக் கட்ட பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.

3. தொ.பரமசிவன் குளித்தல் என்பதற்கு கூறும் விளக்கம் யாது

குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினை தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல் பொருள்

சூரிய வெப்பத்தாலும், உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் குளிவைத்தல் என்பதே அதன் பொருள்.

குளிர்த்தல் என்பதே குளித்தல் என்று ஆயிற்து

இதுவே தொ.பரமசிவன் குளித்தல் என்பதற்கு தரும் விளக்கம் ஆகும்.

4. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் மூலம் பாசன மேலாண்மைக்கு எவ்வாறு தொண்டாற்றினார்?

இந்திய நீர் பாசனத்தின் தந்தையான சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர்.

கல்லணையைப் பல ஆண்டுக்காலம் ஆராய்ந்தார்.

கல்லணை பல காலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைபட்டு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் வெள்ளத்தாலும், வளர்ச்சியாலும் வளமை குன்றியது.

இந்நிலையில் சர் ஆர்தர் காட்டன் 1829-ல் காவிரிப் பாசனப் பகுதிக்கு தனிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

பயனற்று இருந்த கல்லணையைச் சிறு சிறு பகுதியாக பிரித்து மணல் போக்கிகளை அமைத்தார்

அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழிரின் அணைகட்டும் திறனையும், பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார்

கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட் என்ற பெயரை சூட்டியனார்

கல்லணையின் கட்டுமான உத்திகளை கொண்டு 1873-ல் கேதாவரி ஆற்றின் குறுக்கே தெளலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

சில பயனுள்ள பக்கங்கள்