Tamil Nadu 9th Standard Tamil Book Term 1 மணிமேகலை Solution | Lesson 3.2

பாடம் 3.2. மணிமேகலை

நூல் வெளி

தொடர்நிலைச் செய்யுள் வரிசையில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலை சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன.

மணிமேகலை  ஐப்பெருங்காப்பியங்களுள் ஒன்றானது,

மணிமேகலையின் துறவு வாழக்கையைக் கூறுவதால் மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயருண்டு.

இது பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக்காப்பியம், பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ்க்காப்பியம் சொற்சுவையும், பொருட்சுவையும் இயற்கை வருணைனைகளும் நிறைந்தது.

பெளத்த சமயம் சார்புடையது.

மணிமேகலை கதை அடிப்படையில் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என்று கூறுவர்.

இது 30 காதையாக அமைந்துள்ள மணிமேகலையின் முதல் காதையே விழாவறை காதை

மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர்  சீத்தலைச் சாத்தனார்.

சாத்தன் என்பது இவரது இயற்பெயர்.

இவர், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்று கூறுவர்.

கூல வணிகம் (கூலம் – தானியம்) செய்ததால் கூல வாணிகன் சீத்தலை சாத்தனார் என்பர்.

இவரின் வேறுபெயர் –  தண்டழிச் சாத்தன், தண்டமிழ்ப்புலவன்.

கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.

இவரும் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் சமகாலத்தவர் என்பர்

I. சொல்லும் பொருளும்

  • சமயக் கணக்கர் – சமயத் தத்துவவாதிகள்
  • பாடைமாக்கள் – பல மொழிபேசும் மக்கள்
  • குழீஇ – ஒன்றுகூடி
  • தோம் – குற்றம்
  • கோட்டி – மன்றம்
  • பொலம் – பொன்
  • வேதிகை – திண்ணை
  • தூணம் – தூண்
  • தாமம் – மாலை
  • கதலிகைக் கொடி – சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது,
  • காழூன்று கொடி – கொம்புகளில் கட்டும் கொடி
  • விலோதம் – துணியாலான கொடி
  • வசி – மழை
  • செற்றம் – சினம்
  • கலாம் – போர்
  • துருத்தி – ஆற்றிடைக்குறை (ஆற்றின் நடுவே இருக்கும் மணல்திட்டு).

II. சொல்லும் பொருளும்

  • தோரணவீதியும் தோமறு கோடடியும் – எண்ணும்மை
  • காய்க்குலை கழுகு, பூக்கொடிவல்லி, முத்துத்தாமம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • மாற்றுமின், பரப்புமின் – ஏவல் வினைமுற்று
  • உறுபொருள் – உரிச்சொல் தொடர்
  • தாழ்பூந்துறை – வினைத்தொகை
  • பாங்கறிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • நன்பொருள், தண்மணல், நல்லுரை – பண்புத்தொகை

III. பகுபத உறுப்பிலக்கணம்.

1. பரப்புமின் = பரப்பு +மின்

  • பரப்பு – பகுதி
  • மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி

2. அறைந்தான் = அறை + த்(ந்) + த் +அன் + அன்

  • அறை – பகுதி
  • த் – சந்தி (ந்) ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • அன் – சாரியை
  • அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

IV. பலவுள் தெரிக.

ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

  1. திசைச்சொற்கள்
  2. வடசொற்கள்
  3. உரிச்சொற்கள்
  4. தொகைச்சொற்கள்

விடை : தொகைச்சொற்கள்.

V. சிறு வினா

1. பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் – இடஞ்சுட்டி பொருள் விளக்குக

இடம்:-

மணிமேகலை விழாவறைக் காதையில் முரசு கொட்டுபவன் இவ்வரிகளை கூறினான்

பொருள் விளக்கம்:-

புகார் நகரில் 28 நாட்கள் இந்திர விழா நடைபெறுவதால், தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புது மணலைப் பரப்புங்கள் என்று முரசு கொட்டுபவன் தெரிவித்தான்.

2. பட்டிமண்டபம், பட்டிமன்றம் இரண்டும் ஒன்றா? விளக்குக எழுதுக

பட்டிமன்றம், பட்டிமண்டபம் இரண்டும் ஒன்றே!

விளக்கம்:-

புலவர்கள் சொற்போரிட்டு வாதிடும் இடம் பட்டிமண்டபம் ஆகும். இவையே இன்று பட்டிமன்றம் என்றும் அழைக்கப்டுகிறது.

VI. குறு வினா

உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.

ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகள்:-

  • தோரணம் கட்டுதல், தெருக்களையும், கோவில் மண்டபங்களையும் தூய்மைப்படுத்தி வண்ணம் அடித்தல், கோலமிடுதல் போன்றவற்றை செய்தனர்.
  • பனையோலை, மாவிலை தோரணங்களை கட்டுவர். வாழை மரங்களை கட்டி வைப்பர்.
  • நாடகம், இசைக்கச்சேரி, பட்டிமன்றம் ஆகியவை நடக்க ஏற்பாடு செய்வர்.

இந்திரவிழா நிகழ்வுகள்:-

  • தெருக்கள், மன்றங்கள் ஆகியவற்றில் அழகுப் பொருட்கள் பலவற்றை அழகுபடுத்தினர்.
  • பாக்கு, வாழை, வஞ்சிக் கொடி, பூங்கொடி, கரும்பு ஆகியவற்றை நட்டு வைத்தனர்.
  • தெருக்கள், மன்றங்கள் ஆகியவற்றில் புது மணலைப் பரப்பினர்.
  • பட்டிமண்டபத்தில் வாதிட ஏற்பாடு செய்தனர்.

கூடுதல் வினாக்கள்

I. பலவுள் தெரிக

1. பல மொழி பேசும் மக்களை குறிக்கும் சொல்

  1. பன்மொழியாளர்
  2. பாடை மாக்கள்
  3. சமய கணக்கர்
  4. எண்பேராயம்

விடை : பாடை மக்கள்

2. இந்திர விழா _______ நகரில் நடைபெற்றது.

  1. மதுரை
  2. காஞ்சி
  3. இந்திரலோகம்
  4. புகார்

விடை : புகார்

3. எண்பேராயத்தைச் சாராதவர்

  1. அமைச்சர்
  2. தூதர்
  3. இவுளி மறவர்
  4. கரணத்தியலவர்

விடை : கரணத்தியலவர்

4. ஆற்றின் நடுவே இருக்கும் மணல் திட்டு

  1. வசி
  2. துருத்தி
  3. விலோதம்
  4. கோட்டி

விடை : துருத்தி

5. மணிமேகலையின் முதல் காதை

  1. உவவனம் புக்காதை
  2. விழாவறை காதை
  3. பவத்திறம் காதை
  4. அறுகெனக் காதை

விடை : விழாவறை காதை

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. அல்லும் பகலும் உழைப்பில் திளைக்கின்ற மக்களை உற்சாகப்படுத்தி ஓய்வு தரும் வாயில் ____________

விடை : விழா

2. மக்களின் வாழ்வின் நிகழ்வுகளில் விழா தனக்கென ஒரு ____________ பெறுகிறது.

விடை : தனியிடம்

3. மணிமேகலை பெண்மையை முதன்மைபடுத்தும் ____________

விடை : முதற்காப்பியம்

4. மணிமேகலை கதை அடிப்படையில் ____________ தொடர்ச்சி என்று கூறுவர்

விடை : சிலப்பதிகாரத்தின்

II. சிறு வினா

1. மனித மாண்புகளை எடுத்துரைக்கும் விழா எவ்வாறு திகழ்கிறது?

மனித மாண்புகளை எடுத்துரைக்கும் விழா, பண்பாட்டின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது.

2. பூம்புகாரில் இந்திர விழா எத்தனை நாட்கள் நடைபெறும்?

பூம்புகாரில் இந்திர விழா 28 நாட்கள் நடைபெறும்

3. இந்திர விழாவினைக் காண வந்தோர் யாவர்?

  • சமயவாதிகள்
  • காலக்கணிதர்
  • மக்கள் உருவில் கடவுளர்
  • பல மொழி பேசும் அயல்நாட்டின் ஐம்பெருங்குழு
  • எண்பேராயம்

4. இந்திர விழா நடைபெறும் இடங்கள் யாவை?

  • வெண்மையான மணற்குன்றுகள்
  • பூஞ்சோலைகள்
  • ஆற்றிடைக் குன்றுகள்
  • மரக்கிளைகள் நிழல் தரும் தண்ணீர்த் துறைகள்

5. விழா கொண்டாடுவதன் நோக்கம் யாது?

  • ஒன்று கூடுதல்
  • கொண்டாடுதல்
  • கூடி உண்ணுதல்
  • மகிழ்ச்சியைப் பகிர்தல்

6. ஐம்பெருங்குழுவில் உள்ளவர்கள் யாவர்?

  • அமைச்சர்
  • சடங்கு செய்விப்பாேர்
  • படைத்தலைவர்
  • தூதர்
  • சாரணனர் (ஒற்றர்)

III. குறு வினா

1. எண்பேராயம் குழுவில் உள்ளவர்கள் யார்?

  • கரணத்தியலவர் (கணக்கு எழுதுபவர்)
  • கருமவிதிகள் (புரோகிதர்)
  • கனகச்சுற்றம் (பொருட்காப்பாளர்)
  • கடைக்காப்பாளர் (வாயிற்காப்பாளர்)
  • நகரமாந்தர் (மக்கள் சார்பாளர்)
  • படைத்தலைவர்
  • யானை வீரர்
  • இவுளி மறவர் (குதிரை வீரர்)

2. மணிமேகலை – குறிப்பு வரைக

  • ஐப்பெருங்காப்பியங்களுள் ஒன்றானது,
  • மணிமேகலைத் துறவு என்பது இதன் வேறு பெயராகும்.
  • பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக்காப்பியம்
  • பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ்க்காப்பியம்
  • சொற்சுவையும், பொருட்சுவையும் இயற்கை வருணைனைகளும் நிறைந்தது.
  • பெளத்த சமயம் சார்புடையது.
  • மணிமேகலை கதை அடிப்படையில் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என்று கூறுவர்.
  • இது 30 காதையாக அமைந்துள்ளது.

3. சீத்தலைச் சாத்தனார் பற்றிய குறிப்புகளை எழுதுக

  • மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர்  சீத்தலைச் சாத்தனார்.
  • சாத்தன் என்பது இவரது இயற்பெயர்.
  • தானிய வணிகம் செய்ததால் கூல வாணிகன் சீத்தலை சாத்தனார் என்பர்.
  • இவரின் வேறுபெயர் –  தண்டழிச் சாத்தன், தண்டமிழ்ப்புலவன்.
  • கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
  • திருச்சி சீத்தலையில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்பர்.

மணிமேகலை – பாடல் வரிகள்

விழாவறை காதை

மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும்
இத்திறம் தத்தம் இயல்பினிற் காட்டும்
சமயக் கணக்கரும் தந்துறை போகிய
அமயக் கணக்கரும் அகலா ராகிக்

கரந்துரு எய்திய கடவு ளாளரும்
பரந்தொருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
வந்தொருங்கு குழீஇ வான்பதி தன்னுள்

(அடிகள் 11-18)

தோரண வீதியும் தோம்அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்
பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்;
காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின்;
பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்;
விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்
பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்;
கதலிகைக் கொடியும் காழ்ஊன்று விலோதமும்
மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்;

(அடிகள் 43-53)

தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின்;
ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்;
பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்;
வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும்
தண்மணல் துருத்தியும் தாழ்பூந் துறைகளும்
தேவரும் மக்களும் ஒத்துடன் திரிதரும்
நாலேழ் நாளினும் நன்கறிந்தீர் என –
ஒளிறுவாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பி
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி;
அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென் .

(அடிகள் 58-72)

சில பயனுள்ள பக்கங்கள்