பாடம் 4.2. ஓ, என் சமகாலத் தாேழர்களே!
நூல்வெளி
கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர். இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருதினைப் பெற்றவர். கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும், மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர். இவருடைய கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இப்பாடப்பகுதி “வைரமுத்து கவிதைகள்” என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. |
இலக்கியங்களில் அறிவியல்
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் புறநானூறு அந்தரத் தார்மய னேஎன ஐயுறும் சீவக சிந்தாணி |
I. இலக்கணக்குறிப்பு
- பண்பும் அன்பும் – எண்ணும்மை
- இனமும் மொழியும் – எண்ணும்மை
- சொன்னோர் – வினையாலணையும் பெயர்
II. பகுபத உறுப்பிலக்கணம்
பொருத்துங்கள் = பொருத்து + உம் + கள்
- பொருத்து – பகுதி
- உம் – முன்னிலைப் பன்மை விகுதி
- கள் – விகுதி மேல் விகுதி
III. பலவுள் தெரிக
பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான்’ யார் என்று கண்டுபிடிக்க.
அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்
எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்
இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்
- இணையம்
- தமிழ்
- கணினி
- ஏவுகணை
விடை : தமிழ்
IV. குறு வினா
கூட்டுப்புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துக்களை எழுதுக.
கூட்டுப்புழு தான் பட்டுப்பூச்சியாய் மாறும். அவை கொண்ட பொறுமையும் அடக்கமும் தான்.
V. சிறு வினா
“ஓ, என் சமகாலத் தோழர்களே” கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?
- அறிவியல் வாகனத்தில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்
- கரிகாலன் புகழைக் கணினியுள்ளே பொறுத்துங்கள்.
- திசையில் ஏவும் அன்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள்.
- ஏவுகணையில் தமிழை எழுதி அனைத்து கோள்களிலும் ஏற்றுங்கள்.
என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் வைக்கிறார்
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டம் __________ என்னும் ஊரில் பிறந்தவர்.
விடை : மெட்டூர்
2. கவிஞர் வைரமுத்து __________ புதினத்துக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
விடை : மெட்டூர் கள்ளிக்காட்டு இதிகாசம்
3. கவிஞர் வைரமுத்து __________ விருதினைப் பெற்றவர்.
விடை : பத்மபூஷன்
4. ________ ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
விடை : 2003
5. அறவியலும் அறிவியலும் இணைந்து வளர்த்தது ___________
விடை : தமிழ்ச்சமூகம்
6. பண்பும் ___________ பழையவை
விடை : அன்பும்
7. அறிவியல் வானத்தில் ஆளும் ___________ நிறுத்த வேண்டும்.
விடை : தமிழை
8. கூட்டுப்புழு ___________ ஆக மாறும்
விடை : பட்டுப்பூச்சியாய்
9. வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை _______ பெற்றுள்ளார்
விடை : ஏழு
10. _______ கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
விடை : கவிஞர் வைரமுத்து
II. குறு வினா
1. எதனால் வளர்ந்தது தமிழ்ச்சமூகம்?
அறவியலும் அறிவியலும் இணைந்து வளர்ந்தது தமிழ்ச்சமூகம்.
2. தற்காலப் படைப்பாளர்கள் எதனை வலியுறுத்துகின்றன?
அறவியலாேடு அறிவியல் கண்ணோட்டமும் வளர்க்கப்பட வேண்டும் என தற்காலப் படைப்பாளர்கள் வலியுறுத்துகின்றன.
3. கரிகாலன் எந்த நாட்டின் மன்னன் ஆவான்?
கரிகாலன் சோழ நாட்டின் மன்னன் ஆவான்
4. கரிகாலன் பெருமைகள் எதில் பொருத்தப்பட வேண்டும்?
கரிகாலன் பெருமைகள் கணிப்பொறியினுள் பொருத்தப்பட வேண்டும்
5. உணர்ச்சி தொலைந்த அறிவு எதைப் போன்றது?
உணர்ச்சி தொலைந்த அறிவு எரியும் தீயை இழந்த திரி போன்றது
6. புதியவை என வைரமுத்து கூறுவது என்ன?
இனமும் மொழியும் புதியவை என வைரமுத்து கூறுகிறார்
7. பழையவை என வைரமுத்து கூறுவது என்ன?
பண்பு, அன்பு பழையவை என வைரமுத்து கூறுகிறார்
8. அறிவை மறந்த உணர்ச்சி எதைப் போன்றது?
அறிவை மறந்த உணர்ச்சி திரியை மறந்த தீயைப் போன்றது
9. எல்லாக் கோள்களிலும் எதனை ஏற்ற வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறுகிறார்?
ஏவுகணைகளில் தமிழை எழுதி எல்லாக் கோள்களிலும் ஏற்ற வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறுகிறார்
III. சிறு வினா
1. கவிஞர் வைரமுத்து கவிதைகள் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
- இந்தி
- தெலுங்கு
- மலையாளம்
- வங்காளம்
- ஆங்கிலம் – உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
2. கவிஞர் வைரமுத்து – குறிப்பு வரைக
கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர். இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருதினைப் பெற்றவர். கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும், மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர். இவருடைய கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. |
சில பயனுள்ள பக்கங்கள்