பாடம் 4.4. விண்ணையும் சாடுவோம்
I. பலவுள் தெரிக
விடை வரிசையைத் தேர்க.
அ) இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்.
ஆ) இது கடல்பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி.
- நேவிக், சித்தாரா
- நேவிக், வானூர்தி
- வானூர்தி, சித்தாரா
- சித்தாரா, நேவிக்
விடை : சித்தாரா, நேவிக்
II. குறு வினா
செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும் செயலிையப் பற்றி திரு.சிவன் கூறுவது யாது?
சித்தாரா செயலி செயற்கைக்கோள் ஏவுஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும். வாகனத்தின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதை முன் கூட்டியே கணிக்கலாம். கல்லைத் தூக்கி வீசும் போகு, அது விழும் திசை, கோணம், நேரம், அழுத்தம் ஆகியவற்றை தெரிவிப்பது சித்தாராவின் பணி எனலாம். |
III. சிறு வினா
மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக்கோளின் பங்கு யாது?
ஆண்டு விவசாயம் மூலம் விளைச்சலைக் கண்டுபிடித்தல், நிலத்திற்கு ஏற்ற நீரின் அளவு எவ்வளவு இருக்கும் என்பதைக் கண்டறிதல். கடலில் மீனவர்களுக்கு மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் இடத்தைச் சொல்கின்றது. திறன்பேசி, தானியக்கப் பண இயந்திரம், அட்டைப் பயன்படுத்தும் இயந்திரம் ஆகியவற்றிகுச் செயற்கைக்கோள் பயன்படுகிறது. |
IV. நெடு வினா
இந்திய விண்வெளித்துறை பற்றிய செய்திகளை விவரிக்க
இந்திய விண்வெளித்துறைமுன்னுரை:- இந்திய விண்வெளித் துறையில் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாத்துரை, வளர்மதி, சிவன் ஆகியோரன் பங்கு அளப்பரியதாகும். இந்தியர்கள் வானியியல் வல்லமையை வலுப்படுத்தும் பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளித்துறை படைத்துள்ளது. இஸ்ரோ:-
சாதனைகள்:-
இஸ்ரோ:- நம் நாட்டிற்கு தேவையான செயற்கைக் கோளை விண்ணில் அனுப்பி நம் தேவைகளை நிறைவு செய்வதே இஸ்ரோவின் செயல்பாடு |
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர் _______
விடை: சிவன்
2. இஸ்ரோவின் தலைவர்பதவியை ஏற்றிருக்கும் முதல் தமிழர் _______
விடை: சிவன்
3. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை _______
விடை: விக்ரம் சாராபாய்
4. ஆரியபட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்குக் காரணமானவர் _______
விடை: விக்ரம் சாராபாய்
5. இந்திய ஏவுகணை நாயகன் _______
விடை: அப்துல்கலாம்
6. இந்திய இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றியவர் _______
விடை: அப்துல்கலாம்
7. மயில்சாமி அண்ணாதுரை _______ ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்தவர்
விடை: 1982
II. குறு வினா
1. இந்திய வானியல் அறிவியல் துறையில் பங்கு ஆற்றிய தமிழர்கள் யார்?
- அப்துல் கலாம்
- மயில்சாமி அண்ணாதுரை
- வளர்மதி
- சிவன்
2. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முதல் தமிழர் யார்?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முதல் தமிழர் சிவன் ஆவார்.
3. அப்துல்கலாம் ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என போற்றப்பட காரணம் யாது?
ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவு ஊர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமி ன் ஈடுபாட்டினால் அவர் ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படுகின்றார்.
4. இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் யார்?
இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் வளர்மதி ஆவார்.
5. இளைய கலாம் என்று அழைக்கப்படுபவர் யார்?
இளைய கலாம் என்று அழைக்கப்படுபவர் மயில்சாமி அண்ணாதுரை ஆவார்.
6. கையருகே நிலா என்ற நூலினை எழுதியவர் யார்?
மயில்சாமி அண்ணாதுரை
7. பி.எஸ்.எல்.வி (PSLV) திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
பி.எஸ்.எல்.வி (PSLV) திட்டம் 1983-ல் தொடங்கப்பட்டது.
8. PSLV, SITARA விரிவாக்கம் தருக
- PSLV – Polar Satellite Launch Vehicle
- SITARA – Software for Integrated Trajectory Analysis with Real time Application
9. சித்தாரா-வின் பயன் யாது?
‘சித்தாரா’. செயற்கைக்கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் (Digital) சேகரிக்கும். அதைப் பயன்படுத்தி, வாகனத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கலாம்.
10. செயற்கைக்கோள்களும். ஏவு ஊர்திகளும் எதனை பயன்படுத்தித்தான் விண்ணில் ஏவப்படுகின்றன?
செயற்கைக்கோள்களும், ஏவு ஊர்திகளும் ‘சித்தாரா’ செயலியைப் பயன்படுத்தி விண்ணில் ஏவப்படுகின்றன.
11. அப்துல்கலாம் மென்பொறியாளர் என்று யாரை அழைப்பார்? எதற்காக?
‘சித்தாரா’ போன்ற தொழில்நுட்ப மென்பொருள் உருவாக்கியதால், இஸ்ரோ தலைவர் சிவனை மென்பொறியாளர் என்றே அழைப்பார்.
12. இந்தியாவிற்காக இதுவரை எத்தனை செயற்கைகோள்கள் செலுதப்பட்டதாகவும் எத்தனை கோள்கள் தேவைபட்டதாகவும் இஸ்ரோ தலைவர் கூறினார்?
இதுவரை இந்தியாவுக்காக 45 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால் நம்முடைய தேவைகளுக்கு மேலும் 45 செயற்கைக்கோள்கள் தேவையென இஸ்ரோ தலைவர் கூறினார்.
II. சிறு வினா
1. விக்ரம் சாராபாய் பற்றிய குறிப்பு வரைக
|
2. அப்துல்கலாம் பற்றிய குறிப்பு வரைக
|
3. வளர்மதி பற்றிய குறிப்பு வரைக
|
4. அருணன் சுப்பையா பற்றிய குறிப்பு வரைக
|
5. மயில்சாமி அண்ணாதுரை பற்றிய குறிப்பு வரைக
|
சில பயனுள்ள பக்கங்கள்