பாடம் 2.1. வணிக வாயில்
I. குறு வினா
1. எதன் பொருட்டுக் கடற்பயணம் மேற்கொள்ளப்பட்டது?
வணிகம் செய்யும் பொருட்டுக் கடற்பயணம் மேற்கொள்ளப்பட்டது
2. பண்டைத் தமிழர்களின் துறைமுகப் பயன்பாடு யாது?
பண்டைத் தமிழர்களின் போர், வணிகம் போன்று காரணங்களுக்காக துறைமுகம் பயன்படுத்தினர்.
II. சிறு வினா
1. கொற்கை – சிறுகுறிப்புத் தருக
தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்த இயற்கைத் துறைமுகம் கொற்கை. பாண்டியர்களில், ஆளும் மன்னரை அடுத்து அரசாள வரும் பட்டத்து இளவரசர்கள் இத்துறைமுக நகரிலேயே தங்கி நிருவாகம் கற்றனர். பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர்துறந்தபின் கொற்கை யில் இருந்த பட்டத்து இளவரசன் வெற்றிவேற்செழியன் மதுரை வந்து அரியணை ஏறினான் என்னும் செய்தியைச் சிலப்பதிகாரத் தின் நீர்ப்படைக் காதையிலுள்ள
ஆகிய அடிகள் குறிப்பிடுகின்றன . பாண்டியர்களின் கப்பற்படைத் தளமாகவும் கொற்கை விளங்கியது. |
2. காவிரிப்பூம்பட்டினம் குறித்து இலக்கியங்களில் இடம்பெற்ற கருத்துகள் யாவை?
சோழவள நாட்டில் காவிரியாறு கடலில் கலக்கின்ற இடத் தில் வடகரையின் மேல் காவிரிப்பூம்பட்டினம் என்னும் இயற்கைத் துறைமுகம் அமைந்திருந்தது. காவிரிப்பூம்பட்டினம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இரண்டு பிரிவுகளுக்கும் இடையில் நாளங்காடி இருந்தது. கடற்கரை ஓரமாகக் காவிரியாற்றின் கரைமேல் கலங்கரை விளக்கம் அமைந்திருந்தது. காவிரியாற்றின் கழிமுகம் ஆழமாகவும் அகலமாகவும் பல கப்பல்கள் தங்குவதற்கு ஏற்றதாகவும் இருந்தது. கப்பல்கள் பாய்களைச் சுருட்டாமலும் பாரத்தைக் குறைக்காமலும் நேரே ஆற்றினுள் புகுந்து துறைமுகத்தை அடைந்தன. காவிரிப்பூம்பட்டினத்தில் சோழ இளவரசர்கள் வாழ்ந்திருந்தனர். சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காப்பியங்களின் தலைமை மாந்தர்களான கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை ஆகியோர் இளவரசன் கிள்ளிவளவன் ஆட்சிக்காலத்தில் இப்பட்டினத்தில் வாழ்ந்திருந்தனர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. |
III. நெடு வினா
பண்டைய துறைமுகங்கள் பற்றி விவரித்து எழுதுக.
முசிறி:-தமிழ்நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் சேரர்களின் ஆட்சி எல்லைக்குள் அமைந்த புகழ்பெற்ற துறைமுகம் முசிறி. இது மேற்குத் தொட ர்ச்சி மலையிலிருந்து உருவான பேரியாறு கடலில் கலக்குமிடத்தில் இயற்கையாய் உருவான துறைமுகமாகும். அக்காலத்தில் சேரநாட்டுத் தலைநகரானவஞ்சி, பேரியாற்றின் கரையிலுள்ள முசிறித் துறைமுகப் பட்டினத்திற்கு அருகிலேயே அமைந்திருந்தது. முசிறித் துறைமுகத்தில் மிளகு ஏற்றுமதி சிறப்புடன் நடைபெற்றது. யவனர் விரும்பி வாங்கியதால் மிளகிற்கு ’யவனப்பிரியா’ என்ற பெயர் ஏற்பட்ட து. யவனக் கப்பல்கள் பொன்னைத் தந்து மிளகை வாங்குவதற்காக முசிறிக்கு வந்தன. இதனை, சுள்ளியம் பேர்யாற்று வெண்ணுரை கலங்க என்கிறது அகநானூறு (149) அரேபியர் சேரநாட்டு மிளகைக் கொண்டு போய்ச் செங்கடல் துறை முகங்களிலும் எகிப்தின் நைல் நதி கடலில் கலக்கும் இடத்திலுள்ள அலெக்சாண்டிரியா துறைமுகப்பட்டினத்திலும் விற்றனர். முசிறித் துறைமுகப்பட்டினத்தில் அரேபியர் வணிகம் செய்த இடத் திற்குப் பந்தர் (கடைவீதி) என்று பெயர் இடப்பட்டிருந்தது. முசிறித் துறைமுகப் பந்தரில் முத்துகளும் விலையுயர்ந்த நகைகளும் விற்கப்பட்டன பவளம், கண்ணாடி, செம்பு, தகரம், ஈயம் முதலிய பொருள்கள் முசிறி துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன நறுமணப் பொருள்கள், விலை உயர்ந்தகற்கள், முத்து, வைரம், நீலமணி, தந்தம், சீனப்பட்டு, ஆமை ஓடுகள் போன்றவை யவனர்களால் இறக்குமதி செய்யப்பட்டன. காவிரிப்பூம்பட்டினம்:-சோழவள நாட்டில் காவிரியாறு கடலில் கலக்கின்ற இடத் தில் வடகரையின் மேல் காவிரிப்பூம்பட்டினம் என்னும் இயற்கைத் துறைமுகம் அமைந்திருந்தது. காவிரிப்பூம்பட்டினம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இரண்டு பிரிவுகளுக்கும் இடையில் நாளங்காடி இருந்தது. கடற்கரை ஓரமாகக் காவிரியாற்றின் கரைமேல் கலங்கரை விளக்கம் அமைந்திருந்தது. காவிரியாற்றின் கழிமுகம் ஆழமாகவும் அகலமாகவும் பல கப்பல்கள் தங்குவதற்கு ஏற்றதாகவும் இருந்தது. கப்பல்கள் பாய்களைச் சுருட்டாமலும் பாரத்தைக் குறைக்காமலும் நேரே ஆற்றினுள் புகுந்து துறைமுகத்தை அடைந்தன. காவிரிப்பூம்பட்டினத்தில் சோழ இளவரசர்கள் வாழ்ந்திருந்தனர். சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காப்பியங்களின் தலைமை மாந்தர்களான கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை ஆகியோர் இளவரசன் கிள்ளிவளவன் ஆட்சிக்காலத்தில் இப்பட்டினத்தில் வாழ்ந்திருந்தனர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கொற்கை:-தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்த இயற்கைத் துறைமுகம் கொற்கை. பாண்டியர்களில், ஆளும் மன்னரை அடுத்து அரசாள வரும் பட்டத்து இளவரசர்கள் இத்துறைமுக நகரிலேயே தங்கி நிருவாகம் கற்றனர். பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர்துறந்தபின் கொற்கை யில் இருந்த பட்டத்து இளவரசன் வெற்றிவேற்செழியன் மதுரை வந்து அரியணை ஏறினான் என்னும் செய்தியைச் சிலப்பதிகாரத் தின் நீர்ப்படைக் காதையிலுள்ள
ஆகிய அடிகள் குறிப்பிடுகின்றன . பாண்டியர்களின் கப்பற்படைத் தளமாகவும் கொற்கை விளங்கியது. பாண்டிய மன்னர்களின் குதிரைப்படைகளுக்காக ஆண்டுதோறும் கொற்கைத் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பாய்மரக் கப்பல்களில் 16,000 அரேபியக் குதிரைகள் வந்து இறங்கின என்கிற கொற்கைப் பட்டினத்தில் பாண்டிய நாட்டு நாணயங்களை அச்சிடுவதற் கான பட்டறைகள் பாண்டியர்கள் வெளியிட்ட மீன்முத்திரை பதித்த வெள்ளி நாணயங்கள் இங்குக் கிடைத்துள்ளன |
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. கப்பல்களும் படகுகளும் வந்து தங்கிச் செல்வதற்குரிய இடம் ____________ ஆகும்.
விடை : துறைமுகம்
2. யவனர் விரும்பி வாங்கியதால் மிளகிற்கு ____________ என்ற பெயர் ஏற்பட்டது.
விடை : யவனப்பிரியா
3. காந்த ஊசி பற்றிய செய்தியினைக் கூறும் நூல் ____________
விடை : மணிமேகலை
4. ________ வணிகம் செய்த இடத்திற்கு பந்தர் என்று பெயர்
விடை : அரேபியர்
5. சோழவள நாட்டில் ____________ இயற்கைத் துறைமுகம் அமைந்திருந்தது.
விடை : காவிரிப்பூம்பட்டினம்
6. ____________ நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விடை : அழகன்குளத்தில்
7.____________ செய்ய கடற்பயணம் மேற்கொள்ளப்பட்டது
விடை : வணிகம்
II. குறு வினா
1. துறைமுகம் என்றால் என்ன?
கப்பல்களும் படகுகளும் வந்து தங்கிச் செல்வதற்குரிய இடம் துறைமுகமாகும்.
2. யவனப்பிரியா என பெயர் ஏற்படக் காரணம் என்ன?
முசிறித் துறைமுகத்தில் மிளகு ஏற்றுமதி சிறப்புடன் நடைபெற்றது. யவனர் விரும்பி வாங்கி சென்றதால் மிளகிற்கு ’யவனப்பிரியா’ என்ற பெயர் ஏற்பட்டது.
3. காவிரிப்பூம்பட்டினம் எத்தனை கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது?
காவிரிப்பூம்பட்டினம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
4. ஒரு துறைமுகத்தின் செயல் திறனை எவ்வாறு கணக்கிடுகின்றன?
ஒரு துறைமுகத்தின் செயல் திறனைக் கணக்கிடுவதற்கு, கப்பல்கள் ஏற்றுமதி இறக்குமதிக்கென வந்து செல்லும் நேரத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர்.
5. உரோமப் பேரரசை ஆண்ட யாரெல்லாம் தமிழர் வணிகத்தை விரிவுபடுத்தினார்?
ரோமப் பேரரசை ஆண்ட அகஸ்தஸ் சீஸர், யவனர் தமிழர் வணிகத்தை விரிவுபடுத்தினார்.
6. அஃகசாலை என்பது என்ன?
கொற்கைப் பட்டினத்தில் பாண்டிய நாட்டு நாணயங்களை அச்சிடுவதற்கான பட்டறைகள்
நிறைந்த தெருவிற்கு அஃகசாலை என்று பெயர்.
7. முசிறி – அலெக்சாண்டிரியா ஒப்பந்தம் என்பது என்ன?
முசிறி – அலெக்சாண்டிரியா ஒப்பந்தம் என்பது முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகர் ஒருவருக்கும் எகிப்தின் நைல் நதிக்கரையிலுள்ள அலெக்சாண்டிரியா நகரில் வாழ்ந்த கிரேக்க வணிகர் ஒருவருக்கும் பொ.ஆ. 150 அளவில் ஏற்படுத்தப்பட்டதாகும்.
8. யவனப்பிரியா எனப் பெயர் வரக்காரணம் என்ன?
முசிறித் துறைமுகத்தில் மிளகு ஏற்றுமதி சிறப்புடன் நடைபெற்றது. யவனர் விரும்பி வாங்கியதால் மிளகிற்கு ’யவனப்பிரியா’ என்ற பெயர் ஏற்பட்டது.
9. யவனக் கப்பல்கள் எதற்காக முசிறிக்கு வந்தன? அதனை அகநானூறு எவ்வாறு எடுத்துரைக்கிறது?
யவனக் கப்பல்கள் பொன்னைத் தந்து மிளகை வாங்குவதற்காக முசிறிக்கு வந்தன.
இதனை ,
சுள்ளியம் பேர்யாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங் கெழு முசிறி
என்கிறது அகநானூறு (149)
9. யவனர்களால் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?
முசிறி துறைமுகத்திலிருந்து நறுமணப் பொருள்கள், விலை உயர்ந்த கற்கள், முத்து, வைரம், நீலமணி, தந்தம், சீனப்பட்டு, ஆமை ஓடுகள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
பவளம், கண்ணாடி, செம்பு, தகரம், ஈயம் முதலிய பொருள்கள் யவனர்களால் இறக்குமதி செய்யப்பட்டன.
9. முசிறி – அலெக்சாண்டிரியா ஒப்பந்தம் சிறுகுறிப்பு வரைக
முசிறி – அலெக்சாண்டிரியா ஒப்பந்தம் என்பது முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகர் ஒருவருக்கும் எகிப்தின் நைல் நதிக்கரையிலுள்ள அலெக்சாண்டிரியா நகரில் வாழ்ந்த கிரேக்க வணிகர் ஒருவருக்கும் பொ.ஆ. 150 அளவில் ஏற்படுத்தப்பட்டதாகும். அவ்வணிக ஒப்பந்தப்படி, தமிழ் வணிகர் ஒருவர், கப்பலில் ஒருமுறை கொண்டுசென்ற வணிகப் பொருள்களின் பண மதிப்பீடு 2,94,84,000 கிராம் வெள்ளியின் எடைக்கு ஈடானது என்பது குறிப்பிடத்தக்கது. அன்று எகிப்து நாடு உரோமப் பேரரசின்கீழ் இருந்தது.
III. சிறு வினா
1. கிழக்குக்கரைப் பகுதியிலிருந்த புகழ்பெற்ற துறைமுகங்கள் யாவை?
- கொல்லந்துறை
- எயிற்பட்டினம்
- அரிக்கமேடு
- காவிரிப்பூம்பட்டினம்
- தொண்டி
- மருங்கை
- கொற்கை ஆகியன கிழக்குக்கரைப் பகுதியிலிருந்த புகழ்பெற்ற துறைமுகங்களாகும்.
2. மேற்குக் கடற்கரைப் பகுதியிலிருந்த புகழ்பெற்ற துறைமுகங்கள் யாவை?
- மங்களூர்
- நறவு
- தொண்டி
- மாந்தை
- முசிறி
- வைக்கரை
- விழிஞம் ஆகியன மேற்குக் கடற்கரைப் பகுதியில் புகழ்பெற்று விளங்கிய துறைமுகங்களாகும்.
3. முசிறி துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?
பவளம், கண்ணாடி, செம்பு, தகரம், ஈயம் முதலிய பொருள்கள் முசிறி துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன நறுமணப் பொருள்கள், விலை உயர்ந்தகற்கள், முத்து, வைரம், நீலமணி, தந்தம், சீனப்பட்டு, |
4. முசிறி துறைமுகம் – குறிப்பு வரைக
தமிழ்நாட்டின் மேற் குக் கடற்கரைப் பகுதியில் சேரர்களின் ஆட்சி எல்லைக்குள் அமைந்த புகழ்பெற்ற துறைமுகம் முசிறி. இது மேற்குத் தொட ர்ச்சி மலையிலிருந்து உருவான பேரியாறு கடலில் கலக்குமிடத்தில் இயற்கையாய் உருவான துறைமுகமாகும். அக்காலத்தில் சேரநாட்டுத் தலைநகரானவஞ்சி, பேரியாற்றின் கரையிலுள்ள முசிறித் துறைமுகப் பட்டினத்திற்கு அருகிலேயே அமைந்திருந்தது. |
5. ஹிப்பல்ஸ் பருவக்காற்று குறிப்பு வரைக
பொ.ஆ. முதல் நூற்றாண்டில் ஹிப்பல்ஸ் என்னும் பெயர் கொண்ட கிரேக்க மாலுமி, பருவக்காற் றின் உதவியினால் முசிறித் துறைமுகத்துக்கு நேரே நடுக்கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார். அது முதல், யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்து சென்றன. அந்தப் பருவக்காற்றுக்கு யவனர், அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பல்ஸ் என்பதையே சூட்டினர். ஹிப்பல்ஸ் பருவக்காற்று வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று |
6. கொற்கை துறைமுகத்திற்கு வந்த பொருள்களை கூறுக
வெளிநாடுகளில் இருந்து கடல் வழி வந்தவை
- குதிரைகள்
உள்நாட்டில் இருந்து தரை வழியில் வந்தவை
- கறி (மிளகு)
வடமலையில் இருந்து வந்தவை
- மெருகிடப்பட்ட பொன், மணிக்கற்கள்
மேற்குமலையில் இருந்து வந்தவை
- சந்தனம், ஆரம்
தென் கடலில் இருந்து கிடைத்தவை
- முத்து
கீழ்க்கடலில் விளைந்தவை
- பவளம்
சில பயனுள்ள பக்கங்கள்