பாடம் 2.2. நான்மாடக் கூடல்
நூல்வெளி
சிந்து என்பது ஓசைநயத்துடன் பாடக்கூடிய பாவகை. நாட்டுப்புறப் பாடல் அமைப்பிலிருந்து தோன்றிய இவ்வடிவம் சிலப்பதிகாரக் காலத்திலிருந்து வழக்கில் இருக்கிறது. சிந்துவகைப் பாடல்களை ஆராய்ந்தால், அவை சந்தமும் இயைபுத் தொடையும் அமைந்த கண்ணிகளைக் கொண்டவை என்பதை அறிய முடிகிறது. இதே காலத்தில் கும்மிப்பாடல்களும் காவடிச்சிந்து, வழிநடைச்சிந்து, நொண்டிச்சிந்து போன்ற சந்தப்பாடல்களும் ஆனந்தக்களிப்பு, தெம்மாங்கு (தென்பாங்கு) முதலிய நாட்டுப்பாடல் வடிவங்களும் புதிய பாவடிவங்களாகத் தோன்றியுள்ளன. பாடப் பகுதியான மதுரை பற்றிய சிந்துப் பாடல் ஆசிரியர் குழுவால் இயற்றப்பட்டது. |
சிந்து பாவகை – குறிப்புகள்
ஓரெதுகை பெற்ற இரண்டு அடிகள் அளவொத்து வருவது சிந்துப் பாவகையாகும். பாரதியார் சிந்து வகையினை அதிகமாகக் கையாண்டிருக்கிறார். அவர் சிந்துக்குத் தந்தை என்று போற்றப்படுகிறார். சிந்து என்பது இசைத்தமிழ்ப் பாகுபாடுகளில் ஒன்று. பல்லவி (எடுப்பு), அனுபல்லவி (தொடுப்பு) இன்றிச் சரணங்களுக்குரிய (முடிப்பு) கண்ணிகளுடன் உடைய பாக்கள் சிலவகைச் சிந்துகளில் சித்தர் பாடல்கள் பல சிந்துவகையில் அமைந்திருப்பதை நாம் காணலாம். எ.கா. கடுவெளிச் சித்தரின் ‘பாபம் செய்யா திருமனமே’ என்னும் பாடல். |
I. இலக்கணக்குறிப்பு
- செங்கோல் – பண்புத்தொகை
- பேரழகு – பண்புத்தொகை
- எழுந்த – பெயரச்சம்
- பாடாத – எதிர்மறைப் பெயரச்சம்
- பாடு – ஏவல் வினைமுற்று
II. பகுபத உறுப்பிலக்கணம்
வாழ்ந்திருக்கும் = வாழந்திரு + க் + க் + உம்
- வாழ்ந்திரு – பகுதி
- க் – சந்தி
- க் – எதிர்கால இடைநிலை
- உம் – வினைமுற்று விகுதி
III. சிறு வினா
நாலுமலை கொண்ட பெருநகரம் – இவ்வடிகளில் குறிக்கப்படும் மலைகள் யாவை?
நாலுமலை கொண்ட பெருநகரம் என்னும் அடிகளில் குறிக்கப்படும் மலைகள்
- யானை மலை
- நாக மலை
- பசு மலை
- சமண மலை
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மதுரையில் _________ மணம் சூழந்திருக்கும்
விடை : மல்லிகைப்பூ
2. தமிழகத்தின் தொன்மையான நகரம் _________
விடை : மதுரை
3. பாண்டிய மன்னர்களின் தலைமையிடம் _________
விடை : மதுரை
4. சிந்து என்பது ஓசைநயத்துடன் பாடக்கூடிய _________
விடை : பாவகை
5. ஓரெதுகை பெற்ற இரண்டு அடிகள் அளவொத்து வருவது _________ பாவகை ஆகும்.
விடை : சிந்து
6. சிந்து என்பது _________ தமிழ்ப் பாகுபாடுகளில் ஒன்று.
விடை : இசைத்
7. _________ சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இடம் ஆகும்.
விடை : மதுரை
8. சித்தர் பாடல்கள் பல _________ வகையில் அமைந்திருக்கின்றன
விடை : சிந்து
II. குறு வினா
1. தமிழகத்தின் தொன்மையான நகரம் எது?
தமிழகத்தின் தொன்மையான நகரம் மதுரை.
2. இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து மக்கள் வாழ்ந்து வரும் நகரங்களுள் ஒன்றினை கூறு
இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து மக்கள் வாழ்ந்து வரும் நகரங்களுள் ஒன்று மதுரை ஆகும்
3. மதுரை நகரம் எவ்வாறு விளங்குகிறது?
பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாகவும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இடமாகவும் மதுரை நகரம் விளங்குகிறது.
4. மதுரையின் சிறப்பினைக் குறிப்பிட்டுள்ள வெளிநாட்டுப் பயணிகள் யாவர்?
- கௌடில்யர் (பொ.ஆ.மு. 370)
- கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் (பொ.ஆ.மு. 350)
போன்ற வெளிநாட்டுப் பயணிகள் மதுரையின் சிறப்பினை குறிப்பிடப்பட்டுள்ளனர்
5. சிந்து என்பது என்ன?
சிந்து என்பது ஓசைநயத்துடன் பாடக்கூடிய பாவகை .
நாட்டுப்புறப் பாடல் அமைப்பிலிருந்து தோன்றிய இவ்வடிவம் சிலப்பதிகாரக் காலத்திலிருந்து வழக்கில் இருக்கிறது.
6. சிந்துவகைப் பாடல்களை ஆராய்ந்தால் எவற்றை கொண்டவை என்பதை அறிய முடிகிறது?
சிந்துவகைப் பாடல்களை ஆராய்ந்தால், அவை சந்தமும் இயைபுத் தொடையும் அமைந்த கண்ணிகளைக் கொண்டவை என்பதை அறிய முடிகிறது.
7. சிந்துப் பாவகை என்றால் என்ன?
ஓரெதுகை பெற்ற இரண்டு அடிகள் அளவொத்து வருவது சிந்துப் பாவகையாகும்.
III. சிறு வினா
1. மதுரை நகரம் பற்றி குறிப்பு வரைக
தமிழகத்தின் தொன்மையான நகரம் மதுரை. இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து மக்கள் வாழ்ந்து வரும் நகரங்களுள் இதுவும் ஒன்று. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாகவும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இடமாகவும் இந்நகரம் விளங்குகிறது. கௌடில்யர் (பொ.ஆ.மு. 370), கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் (பொ .ஆ.மு 350) போன்ற வெளிநாட்டுப் பயணிகளாலும் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கது நான்மாடக்கூடலாம் மதுரை. செவ்விலக்கியத்தின் தலைநகராகத் திகழ்கிறது. |
2. சிந்துவகைப் பாடல்கள் காலத்தில் புதிய பாவடிவங்களாகத் தோன்றியவை எவை?
|
3. சிந்துக்குத் தந்தை யார்? எதனால் அவர் அவ்வாறு அழைக்கப்படுகிறார்?
சிந்துக்குத் தந்தை எனப்படுபவர் பாரதியார் ஆவார். பாரதியார் சிந்து வகையினை அதிகமாகக் கையாண்டிருப்பதால் அவர் சிந்துக்குத் தந்தை என்று போற்றப்படுகிறார். |
4. எவ்வகை பாக்கள் சிந்துகளில் காணப்படுகின்றன?
சிந்து என்பது இசைத்தமிழ்ப் பாகுபாடுகளில் ஒன்று. பல்லவி (எடுப்பு), அனுபல்லவி (தொடுப்பு) இன்றிச் சரணங்களுக்குரிய (முடிப்பு) கண்ணிகளுடன் உடைய பாக்கள் சிலவகைச் சிந்துகளில் காணப்படுகின்றன. |
5. சித்தர் பாடல்கள் எந்த வகையில் அமைந்திருப்பதற்கு சான்று தருக.
சித்தர் பாடல்கள் பல சிந்துவகையில் அமைந்திருப்பதை நாம் காணலாம். எ.கா. கடுவெளிச் சித்தரின் ‘பாபம் செய்யா திருமனமே’ என்னும் பாடல். |
நான்மாடக்கூடல் – பாடல் வரிகள்
சந்தம் தன்னன்ன னாதினம் தன்னானே – தனத் பாடல் பாவலர் பாடிய வையைநதி –தமிழ்ப் காவியம் எழுந்த தென்ம துர – விழாக் பாரதி போதிச்ச பாடசாலை – திருப் சீரான வண்டியூர்த் தெப்பக்குளம் – மிகச் நாயக்கர் மகாலின் தூணழகு- பொன் ஆனமலை நல்ல நாகமலை – சுத்தி எல்லா இனமும் மதமும்உண்டு –இங்கு |
சில பயனுள்ள பக்கங்கள்