பாடம் 3.2. இராவண காவியம்
நூல் வெளி
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம். இந்நூல் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என ஐந்து காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது. இந்நூல் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது. தமிழ்க்காண்டத்திலுள்ள பாடல்ங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார். |
இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்டது இராவண காவியம். |
தெரிந்து கொள்வோம்
கோர்வை / கோவை : ‘கோ’ என்பது வேர்ச்சொல் கோப்பு, கோவை, கோர்த்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி எ.கா.
|
I. சொல்லும் பொருளும்
- மைவனம் – மலைநெல்
- முருகியம் – குறிஞ்சிப்பறை
- பூஞ்சினை – பூக்களை உடைய கிளை
- சிறை – இறகு
- சாந்தம் – சந்தனம்
- பூவை- நாகணவாய்ப் பறவை
- பொலம்- அழகு
- கடறு – காடு
- முக்குழல் – கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்;
- பொலி – தானியக்குவியல்
- உழை – ஒரு வகை மான்.
- கல் –மலை
- முருகு – தேன், மணம், அழகு
- மல்லல் – வளம்
- செறு – வயல்
- கரிக்குருத்து – யானைத்தந்தம்
- போர்- வைக்கோற்போர்
- புரைதப- குற்றமின்றி
- தும்பி – ஒருவகை வண்டு
- துவரை – பவளம்
- மரை – தாமரை மலர்
- விசும்பு – வானம்
- மதியம் – நிலவு
II. இலக்கணக் குறிப்பு
- மரைமுகம், இடிகுரல் – உவமைத்தொகை
- கருமுகில், இன்னிளங்குருளை, பெருங்கடல், பைங்கிளி, இன்னுயிர் – பண்புத்தொகை
- பிடிபசி – வேற்றுமைத் தொகை
- முதிரையும் சாமையும் வரகும், பூவையும் குயில்களும் – எண்ணும்மை
- அவருமலை, திர்குரல் – வினைத்தொகை
- மன்னிய – பெயரெச்சம்
- வெரீஇ – சொல்லிசை அளபெடை
- கடிகமழ் – உரிச்சொற்றொடர்
- மலர்க்கண்ணி – மூன்றாம் வேற்றுமைஉருபும் பயனும் உடன் தொக்க தொகை
- எருத்துக்கோடு – ஆறாம் வேற்றுமைத்தொகை
- கரைபொரு – இரண்டாம் வேற்றுமைத் தொகை
III. பகுபத உறுப்பிலக்கணம்
1. பருகிய = பருகு+இன்+ ய்+அ;
- பருகு – பகுதி
- இன்- இறந்த கால இடைநிலை (ன் கெட்டது விகாரம்)
- ய் -உடம்படுமெய்; அ –பெயரெச்ச விகுதி
2. பூக்கும் = பூ + க் + க் + உம்;
- பூ – பகுதி
- க் – சந்தி
- க் – எதிர்கால இடைநிலை
- உம் – வினைமுற்று விகுதி
IV. பலவுள் தெரிக.
பொதுவர்கள் பொலிஉறப் போர்அடித்திடும் நிலப் பகுதி _______
- குறிஞ்சி
- நெய்தல்
- முல்லை
- பாலை
விடை : முல்லை
V. குறு வினா
1. பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?
எருதின் கொம்புகளைப் போன்றிருந்த பாலைக் காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அவர்கள் கோலினால் அடித்து விளையாடினர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின. |
2. இடிகுரல், பெருங்கடல் இலக்கணக்குறிப்பு தருக?
- இடிகுரல் – உவமைத்தொகை
- பெருங்கடல் – பண்புத்தொகை
VI. சிறு வினா
1. இராவண காவியத்தில் இடம் பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக
எருதின் கொம்புகளைப் போன்றிருந்த பாலைக் காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அவர்கள் கோலினால் அடித்து விளையாடினர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின. தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி, கடற்கரை மணலிடை உலவி, காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும். பின்னர்த் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் கா ட்சி போல் உள்ளது. |
2. குறிஞ்சி மணப்பதற்கு நிகழ்வுகளைக் குறிப்பிடுக?
தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும் உலையில் இட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும் காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரவித் தோய்ந்து கிடந்தத னால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் மணம் கமழ்ந்து காணப்பட்டன. |
VII. நெடு வினா
இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரி.
குறிஞ்சி மணம்:- தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும் உலையில் இட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும் காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரவித் தோய்ந்து கிடந்தத னால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் மணம் கமழ்ந்து காணப்பட்டன. பறவைகளின் அச்சம்:- எருதின் கொம்புகளைப் போன்றிருந்த பாலைக் காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அவர்கள் கோலினால் அடித்து விளையாடினர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின. தும்பியின் காட்சி:- தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி, கடற்கரை மணலிடை உலவி, காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும். பின்னர்த் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது. |
கூடுதல் வினாக்கள்
I. பலவுள் தெரிக
1. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் ________
- இராவண காவியம்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- இராமாயாணம்
விடை: இராவண காவியம்
2. இராவண காவியம் ________ காண்டங்களை கொண்டது
- 2
- 5
- 25
- 15
விடை: 5
3. இராவண காவியம் ________ காண்டங்களை கொண்டது
- 2
- 5
- 25
- 15
விடை: 5
4. _________ -ன் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.
- அறிஞர் அண்ணா
- பாரதிதாசன்
- தந்தை பெரியார்
- பாரதியார்
விடை: தந்தை பெரியார்
5. இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி.
உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் என்று கூறியவர்
- அறிஞர் அண்ணா
- பாரதிதாசன்
- தந்தை பெரியார்
- பாரதியார்
விடை: அறிஞர் அண்ணா
6. பொருந்தாததை தேர்க
- கரிக்குருத்து – யானைத்தந்தம்
- முருகியம் – குறிஞ்சிப்பறை
- பூஞ்சினை – வானம்
- சிறை – இறகு
விடை : பூஞ்சினை – வானம்
7. பொருந்தாததை தேர்க
- புரைதப- குற்றமின்றி
- பூவை- நாகணவாய்ப் பறவை
- கடறு – காடு
- பொலம் – மணம்
விடை : பொலம் – மணம்
8. பொருந்தாததை தேர்க
- முருகு – வளம்
- போர்- வைக்கோற்போர்
- உழை – ஒரு வகை மான்.
- கல் -மலை
விடை : முருகு – வளம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. இராவண காவியத்தின் பாட்டுத்தலைவன் ___________
விடை : இராவணன்
2. அழகைச் சுவைத்தால் மனம் ___________ பெறும்
விடை : புத்துணர்வு
3. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் ___________
விடை : இராவண காவியம்.
4. இராவண காவியம் ஆசிரியர் ___________
விடை : புலவர் குழந்தை
5. இராவண காவியம் ___________ பாடல்களையும் கொண்டது.
விடை : 3100
III. பாெருத்துக
1. குறிஞ்சி | அ. தாமரை |
2. முல்லை | ஆ. மயில் |
3. பாலை | இ. மான் |
4. மருதம் | ஈ. பருந்து |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ |
IV. பாெருத்துக
1. மல்லல் | அ. வயல் |
2. முல்லை | ஆ. பவளம் |
3. துவரை | இ. நிலவு |
4. மதியம் | ஈ. வளம் |
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ |
V. குறு வினா
1. இராவண காவியம் பற்றி பேரறிஞர் அண்ணா கூறுவதென்ன?
இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்”
2. இராவண காவியம் எத்தனை காண்டங்களை கொண்டது?
இராவண காவியம் ஐந்து காண்டங்களை கொண்டது
- தமிழகக் காண்டம்
- இலங்கைக் காண்டம்
- விந்தக் காண்டம்
- பழிபுரி காண்டம்
- போர்க்காண்டம்
3. புலவர் குழந்தை படைப்புகள் எவை?
இராவண காவியம். யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
4. இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்ட நூல் எது?
இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்டது இராவண காவியம்.
5. முக்குழல் என்பது என்ன?
முக்குழல் – கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்
இராவணகாவியம் – பாடல் வரிகள்
குறிஞ்சி அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி அடுப்பிடு சாந்தமோடு அகிலின் நாற்றமும் |
முல்லை பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும் முதிரையும் சாமையும் வரகும் பொய்மணிக் |
பாலை மன்னிய முதுவெயில் வளைப்ப வாய்வெ ரீஇ கடிக்கமழ் மராமலர்க் கண்ணி அம்சிறார் |
மருதம் கல்லிடைப் பிறந்த ஆறும் மரைமலர்க் குளத்தில் ஆடும் |
மருதம் பசிபட ஒருவன் வாடப் வருமலை அளவிக் கானல் வருமலை அளவிக் கானல் |
சில பயனுள்ள பக்கங்கள்