பாடம் 1.3. முத்தொள்ளாயிரம்
நூல் வெளி
வெண்பாவால் எழுதப்பட்ட நூல் மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாக பாடுகிறது. மூவேந்தர்களைப் பற்றிய பாடப்பட்ட தொள்ளாயிரம் பாடல்களை கொண்ட நூல் என்பதால் முத்தெள்ளாயிரம் என்று பெயர் பெற்றது. நூல் முழுமையாக கிடைக்கவில்லை புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன. அவை முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில பதிப்பிக்கப்பட்டுள்ளன. எழுதியவர், தொகுத்தவர் பெயர் அறிய இயலவில்லை. இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். சேர நாட்டை அச்சமில்லாத நாடாகவும், சோழ நாட்டை ஏர்களச் சிறப்பும், போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும், பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் பாடப்பகுதி காட்டுகிறது. |
I. சொல்லும் பொருளும்
- அள்ளல் – சேறு
- பழனம் – நீர் மிக்க வயல்
- வெரீஇ – அஞ்சி
- பார்பபு – குஞ்சு
- நாவலோ – நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து
- இசைத்தால் – ஆரவாரத்தோடு கூவுதல்
- நந்து – சங்கு
- கமுகு – பாக்கு
- முத்தம் – முத்து
II. இலக்கணக் குறிப்பு
- அஞ்சி – பெயரச்சம்
- வெண்குடை – பண்புத்தொகை
- இளங்கமுகு – பண்புத்தொகை
- கொல்யானை – வினைத்தொகை
- குவிமொட்டு – வினைத்தொகை
III. பகுபத உறுப்பிலக்கணம்
கொண்ட = கொள்(ண்) + ட் + அ
- கொள் – பகுதி
- ண் – ஆனது விகாரம்
- ட் – இறந்தகால இடைநிலை
- இ – பெயரெச்ச விகுதி
IV. பலவுள் தெரிக
1. சாெல்லும் பாெருளும் பாெருந்தியுள்ளது எது?
- வருக்கை – இருக்கை
- புள் – தாவரம்
- அள்ளல் – சேறு
- மடிவு – தொடக்கம்
விடை : மடிவு – தொடக்கம்
2. நச்சிலைவேல் காேக்காேதை நாடு, நல்யானைக் காேக்கிள்ளி நாடு இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே,
- பாண்டிய நாடு, சேர நாடு
- சாேழ நாடு, சேர நாடு
- சேர நாடு, சாேழ நாடு
- சாேழ நாடு, பாண்டிய நாடு
விடை : சேர நாடு, சாேழ நாடு
V. குறு வினா
1. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்ககள் யாவை?
- சேறு – அள்ளல்
- வயல் – பழனம்
2. கொற்கை நகரில் முத்துக்களைப் போல் உள்ள பொருள்களாக் காட்டப்பட்டுவன எவை?
- சங்குவின் முட்டைகள்
- புன்னை மொட்டுகள்
- பாக்கு பாளையில் இருந்து சிந்தும் மணிகள்
VI. சிறு வினா
சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.
சேரர்:-வயல்களில் செவ்வாம்பல் மெல்ல விரிந்தன. அதனைக் கண்ட நீர்ப்பறைவகள் தண்ணீர் தீப்பிடித்து விட்டது என்று நினைத்து தம் குட்டிகளை சிறகில் மறைத்து வைத்தன. பகைவர் அஞ்சும் சேர நாட்டில் இந்த அச்சமும் இருக்கின்றது. சோழர்:-உழவர்கள் நெய்போர் மீது ஏறி “நாவலோ” என்று கூறி மற்ற உழவர்களை அழைப்பர். இது போரில் யானை மீது நின்று “நாவலோ” என்று கூவி மற்ற வீரர்களை அழைப்பது போல் இருந்தது. இத்தகு வளம் சோழ நாட்டில் காணப்பட்டது. பாண்டியர்:-கொற்கை நகரில் முத்துகளைப் போல் சங்குவின் முட்டைகள், புன்னை மொட்டுகள், பாக்கு பாளையில் இருந்து சிந்தும் மணிகள் ஆகியவை. இத்தகைய வளம் பாண்டியர் நாட்டில் காணப்பட்டது. |
2. தற்குறிப்பேற்ற அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
இலக்கணம்:-இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் மனக்கருத்தை ஏற்றிக் கூறவது தற்குறிப்பேற்ற அணி ஆகும். சான்று:-அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ விளக்கம்:-இயல்பான நிகழ்வு – வயலில் ஆம்பல் மலர்தல். கவிஞர் மனக்கருத்து – நீர் பறவைகள் வெள்ளத்தில் தீப்பற்றியதாக எண்ணி வருந்தி தன் குஞ்சுகளை காத்தல். ஆகையால் இச்செய்யுள் தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று. |
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ஒரு நாட்டின் வளத்தை பாடுவதை புலவர்கள் _________ கொண்டிருந்தனர்.
விடை : கவிமரபாக
2. பிற்காலக் காப்பியங்களில் _______ தவறாது இடம் பெற்றது.
விடை : நாட்டுவளம்
3. வெண்பாவால் எழுதப்பட்ட நூல் _________
விடை : முத்தெள்ளாயிரம்
4. முத்தெள்ளாயிரம் மூவேந்தர்கள் பற்றிய _________ பாடல்களை கொண்ட நூல்
விடை : தொள்ளாயிரம்
5. முத்தெள்ளாயிரத்தில் புறத்திரட்டு வாயிலாக கிடைத்துள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை _______
விடை : 108
6. முத்தெள்ளாயிரத்தில் பழைய உரை நூல்களின் மேற்கொள்ளாக கிடைத்துள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை _______
விடை : 22
7. முத்தெள்ளாயிரத்தின் _______ நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
விடை : 5
I. பொருத்துக
- சேர நாடு – முத்துடைத்த சிறப்புடையது
- சோழ நாடு – அச்சமில்லாத நாடு
- பாண்டிய நாடு – ஏர்களச் சிறப்புடையது
விடை; 1 – ஆ, 2 – இ, 3 -அ
III. குறு வினா
1. நீர் பறவைகள் அஞ்சக் காரணம் என்ன?
வயல்களில் செவ்வாம்மல் மலர்கள் மலர்ந்திருந்ததைக் கண்டு, நீரில் தீப்பிடத்தது என்று எண்ணி நீர்ப் பறவைகள் அஞ்சியது.
2. நாவலோ என்பதன் பொருள் யாது?
நாள் வாழ் என்பது போன்ற வாழ்த்து
3. முத்தெள்ளாயிரம் குறிப்பிடும் சோழ நாட்டு வளம் யாது?
உழவர்கள் நெய்போர் மீது ஏறி “நாவலோ” என்று கூறி மற்ற உழவர்களை அழைப்பர். இது போரில் யானை மீது நின்று “நாவலோ” என்று கூவி மற்ற வீரர்களை அழைப்பது போல் இருந்தது. இத்தகு வளம் சோழ நாட்டில் காணப்பட்டது.
4. முத்தெள்ளாயிரம் குறிப்பிடும் சேர நாட்டு வளம் யாது?
வயல்களில் செவ்வாம்பல் மெல்ல விரிந்தன. அதனைக் கண்ட நீர்ப்பறைவகள் தண்ணீர் தீப்பிடித்து விட்டது என்று நினைத்து தம் குட்டிகளை சிறகில் மறைத்து வைத்தன. பகைவர் அஞ்சும் சேர நாட்டில் இந்த அச்சமும் இருக்கின்றது.
5. முத்தெள்ளாயிரம் குறிப்பிடும் பாண்டிய நாட்டு நாட்டு வளம் யாது?
கொற்கை நகரில் முத்துகளைப் போல் சங்குவின் முட்டைகள், புன்னை மொட்டுகள், பாக்கு பாளையில் இருந்து சிந்தும் மணிகள் ஆகியவை. இத்தகைய வளம் பாண்டியர் நாட்டில் காணப்பட்டது.
6. முத்தெள்ளாயிரம் – குறிப்பு வரைக
- வெண்பாவால் எழுதப்பட்ட நூல்
- மூவேந்தர்களைப் பற்றிய 900 பாடல்களை கொண்ட நூல் முத்தெள்ளாயிரம்
- நூல் முழுமையாக கிடைக்கவில்லை
- எழுதியவர், தொகுத்தவர் பெயர் அறிய இயலவில்லை.
7. காவல் உழவர் களத்துஅகத்துப் போர்ஏறி
நாவலோஓ என்றிைசக்கும் நாளோதை – காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசை த்தால் போலுமே
நல்யானைக் கோக்கிள்ளி நாடு. – இப்பாடலில் அமைந்திருக்கும் அணி யாது?
உவமையணி
முத்தெள்ளாயிரம் – பாடல்வரிகள்
1. சேரநாடு அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ (தற்குறிப்பேற்ற அணி) 2. சோழநாடு காவல் உழவர் களத்துஅகத்துப் போர்ஏறி (உவமை அணி) 3. பாண்டியநாடு நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும் (உவமை அணி) |
சில பயனுள்ள பக்கங்கள்