பாடம் 1.4. இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
பேராசிரியர் மா.சு.அண்ணாமலை: “இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு” என்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசு பெற்றவர்.இவர் தலைமையில் எடுக்கபட்ட குறும்படங்கள் சர்வதேச அளவில் பரிசுகள் பெற்றன. |
I. பலவுள் தெரிக
1. இந்திய தேசிய இராணுவம் ________ இன் தலைமையில் ________ உருவாக்கினர்.
- சுபாஷ் சந்திரபோஸ், இந்தியர்
- சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பானியனர்
- மோகன் சிங், ஜப்பானியர்
- மோகன் சிங், இந்தியர்
விடை : மோகன் சிங், ஜப்பானியர்
2. கூற்று – இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான், “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்தான்” என்றார்.
காரணம் – இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்த்த பெருமைக்குரியவர்கள் தமிழர்கள்.
- கூற்றும், காரணமும் சரி
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று தவறு, காரணம் சரி
- கூற்றும், காரணமும் தவறு
விடை : கூற்றும், காரணமும் சரி
II. குறு வினா
1. இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழர்கள் யாவர்?
- பசும்பொன் முத்துராமலிங்கனார்
- ஜானகி
- இராஜமணி
- கேப்டன் லட்சுமி
- சிதம்பரம் லோகநாதன்
2. தாய் நாட்டுக்காக உழைக்க விரும்பினால் எப்பணியைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
தாய் நாட்டுக்காக உழைக்க விரும்பினால் இராணுவப் பணியைத் தேர்ந்தெடுப்பேன். காரணம் – என் தாய்நாட்டையும், தாய்நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக. |
3. டெல்லி நோக்கிச் செல்லுங்கள் என்ற முழுக்கம் யாரால் எப்போது செய்யப்பட்டது?
சிங்கப்பூரில் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பு ஏற்க வந்தபோது 1943-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி மாபெரும் கூட்டத்தில் டெல்லி நோக்கி செல்லுங்கள் என்ற முழக்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் செய்யப்பட்டது. |
III. சிறு வினா
குறிப்பு வரைக – “டோக்கியோ கேடட்ஸ்”
இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஐப்பானில் உள்ள இம்பீரிலியல் மிலிட்டரி அகாடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த 45 பேர் கொண்ட பயிற்சிப் பிரிவின் பெயர் தான் டோக்கியோ கேடட்ஸ். |
2. பனியிலும், மலையிலும் எல்லைக் காக்கும் இந்திய வீரர்களின் பணியைப் பாராட்டி உங்கள் கையெழுத்து இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக
இந்திய இராணுவ வீரர்களின் தியாகம்நாட்டையும் தன் நாட்டு மக்களையும் காக்க தன் குடும்பம் மறந்து பணி செய்வோர் இராணுவ வீரர்கள். கடும் வெயில், கடுங்குளிர், புயல் மழை, சூறாவளி, சுனாமி, பூகம்பம் என எது வந்தாலும் தாய்நாட்டு மக்களைக் காக்கும் தகைசால் மாமனிதர்கள் இராணுவ வீரர்கள். குண்டு மழை பொழியும் போர்களத்தில் நெஞ்சம் நிமிர்த்திப் பேராடும் பண்பாளர்கள் அவர். தன் நாட்டுக்காகத் தன்னுயிரைக் கொடுக்கும் தியாக வள்ளல்கள். மெழுகுவர்த்தி போல தன்னைத் தன் நாட்டிற்காக உருக்கிக் கொள்பவர்கள். அவர்கள் பணிக்கு எங்கள் நெஞ்சார்ந்த வணக்கங்கள். |
IV. நெடு வினா
இந்திய தேசிய இராணுவததின் தூண்களாக திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதை கட்டுரை வழி நிறுவுக.
முன்னுரை:-இந்திய விடுதலைப்போரில் இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்தவர்கள் தமிழர்கள். அவர்களைப் பற்றி இங்கு காண்போம். பசும்பொன் முத்துராமலிங்கனார்:-1943 இல் அன்றைய ஆங்கில அரசை இந்திய தேசிய இராணுவப்படை எதிர்த்தபோது, பசும்பொன் முத்துராமலிங்கனார் விடுதலை உணர்வு கொண்ட வலிமை மிக்க தமிழர்ப் பட்டாளங்களை ஒன்றிணைத்து, இந்திய இராணுவத்திற்கு வலு சேர்த்தார். அதனால், இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் தமிழர்கள் என்றால் தில்லான். இரண்டாம் உலகப்போர்:-தமிழர் துணையுடன் போராடிய நேதாஜியை, ஆங்கிலப் பிரதமர் சர்ச்சில் கோபம் அடைந்து, “மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது” என்றார். அதற்கு நேதாஜி ” தமிழினம் தான் ஆங்கிலேயரை அழிக்கும்” என்றார். மகளிர்ப்படை:-ஜான்சி ராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் டாக்டர் லட்சுமி. இதில் தமிழகப் பெண்கள் பலர் பங்கேற்றனர். தலைசிறந்தவர்களாக ஜானகி, இராஜாமணி ஆகியோர் விளங்கினார். நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் கேப்டன் லட்சுமி, சிதம்பர லோகநாதன் முதலான தமிழர்கள் அமைச்சர்களாக விளங்கினர். வான் படை:-இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஐப்பானில் உள்ள இம்பீரிலியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த 45 பேர் கொண்ட பயிற்சிப் பிரிவின் பெயர் தான் டோக்கியோ கேடட்ஸ். இதில் பெரும்பாலானோர் தமிழர்கள். அதில் சிறந்து விளங்கியவர் கேப்டன் தாசன். இவர் இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராகப் பணியாற்றியவர். முடிவுரை-நாட்டிற்காக உயிர் கொடுத்த முகம் தெரியாத தமிழர்களின் உணர்வைப் போற்றி வழிபடுவோம் அவர்தம் உன்னத செயல்களை உலகறிய செய்வோம். |
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. _________ மோகன்சிங்கிற்கு பிறகு இந்திய இராணுவத்திற்கு பொறுபேற்றார்.
விடை : நேதாஜி
2. நேதாஜி ________ -ல் இந்திய இராணுவத்திற்கு தலைமையேற்றார்.
விடை : 1943
3. ________ பெயரில் இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது
விடை : ஜான்சிராணி
4. மா.சு. அண்ணாமலை ________ என்னும் நூலை எழுதினார்.
விடை : இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு
5. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற ஆண்டு _______ முதல் _______ வரை நடைபெற்றது.
விடை : 1939 முதல் 1945
6. இந்திய தேசிய இராணுவ படைத் தலைவராக இருந்தவர் _______
விடை : தில்லான்
7. இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்று கூறியவர் _______
விடை : தில்லான்
8. தமிழ் மக்கள் துணையுடன் போராடிய நேதாஜியைக் கண்டு ஆங்கிலப் பிரதமர் _______ கோபம் கொண்டார்
விடை : சர்ச்சில்
9. _______ ஆம் ஆண்டு இராமு என்பவர் தூக்கிலிடப்பட்டார்.
விடை : 1944
10. இந்திய தேசிய இராணுவம் _______ என்ற இடத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியது.
விடை : மொய்ராங்
V. குறு வினா
1. இந்திய தேசிய இராணுவம் – குறிப்பு வரைக
இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஆங்கிலேயப் படைகள் ஜப்பானியரிடம் சரணடைந்தன். இப்படையில் இந்திய வீரர்களும் இருந்தனர். அவ்வீரர்களை கொண்டு ஜப்பானியர்கள். மோகன்சிங்க என்பவர் தலைமையில் உருவாகியதே இந்திய தேசிய இராணுவம் ஆகும். |
2. பசும்பொன் முத்துராமலிங்கனால் இந்திய தேசிய இராணுவத்திற்கு செய்த பணி யாது?
1943 இல் அன்றைய ஆங்கில அரசை இந்திய தேசிய இராணுவப்படை எதிர்த்தபோது, பசும்பொன் முத்துராமலிங்கனார் விடுதலை உணர்வு கொண்ட வலிமை மிக்க தமிழர்ப் பட்டாளங்களை ஒன்றிணைத்து, இந்திய இராணுவத்திற்கு வலு சேர்த்தார்.. |
4. நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் அமைச்சர்களாக இருந்த தமிழர்கள் யாவர்?
- கேப்டன் லட்சுமி
- சிதம்பர லோகநாதன்
5. நேதாஜி தமிழக வீரர்களைப் பற்றி என்ன கூறியதாக பசும்பொன் முத்துராமலிங்கனார் கூறுகிறார்?
நேதாஜி தமிழக வீரர்களைப் பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று நேதாஜி கூறியதாகப் பசும்பொன் முத்துராமலிங்கனார் கூறுகிறார்
6. இந்திய தேசிய இராணுவத்தில் உருவாக்கிய மகளிர் படை குறித்து எழுதுக.
- ஜான்சிராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.
- இதன் தலைவர் டாக்டர் லட்சுமி.
- இதில் தமிழகப் பெண்கள் பலர் பங்கேற்றனர்.
- தலைசிறந்தவர்களாக ஜானகி, இராஜாமணி ஆகியோர் விளங்கினர்.
7. நேதாஜியின் பொன் மொழிகள் சிலவற்றை எழுதுக
- அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம் தருதல் மிகப் பெரிய குற்றமாகும். நீங்கள் நல்வாழ்வைத் தந்தே ஆக வேண்டும் என்ப துதான் காலத்தா ல் மறையாத சட்டமாகும். எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்குப் போராடுவதே மிகச்சிறந்த நற்குணமாகும்.
- மனதை மலரவைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள்.
- விடுதலையினால் உ ண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனைநிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு. அவற்றுக்கானை விலை துன்பமும் தியாகமும்தான்.
8. தூக்கிலிடும் முதல் நாள் இரவு இராமு கூறிய கருத்து யாது?
“நான் உயிரைக் கொடுப்பதற்குக் கொஞ்சமும் கவலைப்படவில்லை ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக நான் ஒன்றும் செய்யவில்லை” என்று கூறினார்
9. மரணதண்டனை பெற்ற அப்துல்காதரின் கூற்றினை கூறுக
வாழ்வின் பொருள் தெரிந்தால் தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர்நீத்த முழுநிலவினைப் போன்ற தியாகங்கள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்
சில பயனுள்ள பக்கங்கள்