பாடம் 2.3. தாவோ தே ஜிங்
நூல்வெளி
லாவோர்ட்சு சீனாவில் பொ.ஆ.மு 2-ம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர். கன்பூசியஸ் இவரது சம காலத்தவர். அக்காலம், சீன சிந்தனையின் பொற்காலமாகத் திகழ்ந்தது. லாவேட்சு “தாவோவியம்” என்ற சிந்தனைப் பிரிவை சார்ந்தவர். ஒழுக்கத்தை மையமாக வைத்துக் கன்பூசியஸ் சிந்தித்தார். லாவோட்சுவாே இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்னும் சிந்தனையை முன் வைத்தார். தாவோவியம் அதையே வலியுறுத்துகிறது. பாடப்பகுதியிலுள்ள கவிதையை மொழிபெயர்த்தவர் சி.மணி |
தத்துவ விளக்கம்
இல்லை என்பது வடிவத்தை வரையறை செய்கிறது. குடம் செய்ய மண் என்பது உண்டு. குடத்திற்குள்ளே வெற்றிடம் என்பது இல்லை. இந்த உண்டும் இல்லையும் சேர்வதால்தான் குடத்தில் நீரை நிரப்ப முடியும். வெற்றிடம் இல்லாத குடத்தில் நீரை நிரப்ப முடியாது. இவை முரண்களாகத் தெரிந்தாலும் இவை முரண்களல்ல. அதை வலியுறுத்தவே இன்மையால் தான் நாம் பயனடைகிறோம் என்கிறார் கவிஞர். ஆரங்களைவிட நடுவிலுள்ள வெற்றிடம் சக்கரம் சுழல உதவுகிறது. குடத்து ஓட்டினைவிட நடுவிலுள்ள சக்கரம் சுழல உதவுகிறது. குடத்து ஓட்டினை விட உள்ளே இருக்கும். வெற்றிடமாக இருக்கும் இடமே பயன்படுகிறது. ஆகவே ‘இன்மை’ என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பது அவர் கருத்து. |
I. இலக்கணக் குறிப்பு
- பாண்டம் பாண்டமாக – அடுக்குத் தொடர்
- வாயிலும் சன்னலும் – எண்ணும்மை
II. பகுபத உறுப்பிலக்கணம்
இணைகின்றன – இணை + கின்று + அன் + அ
- இணை – பகுதி
- கின்று – நிகழ்கால இடைநிலை
- அ – சாரியை
- அ – பலவின்பால் வினைமுற்று விகுதி
III. பலவுள் தெரிக
விடைக்கேற்ற வினாவைத் தேர்க
விடை – பானையின் வெற்றிடமே நமக்கு பயன்படுகிறது
- பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
- பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
- பானை எதனால் பயன்படுகிறது
- பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது
விடை : பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
IV. குறு வினா
தாவோ நே ஜிங் இன்னொரு பக்கம் என்று எதைக் குறிப்பிடுகிறார்?
தாவோ நே ஜிங் “இன்னொரு பக்கம்” என்று இருத்தலின்மையைப் பயன்படுத்திக் கொள்வதை (வெற்றிடமே பயன்படுகிறது) குறிப்பிடுகிறார்.
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. லாவோர்ட்சு இயற்றிய நூல் _________
விடை : தாவோ தே ஜிங்
2. லாவோர்ட்சு _________ -ம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்
விடை : பொ.ஆ.மு 2
3. _________ என்ற சிந்தனைப் பிரிவை சார்ந்தவர் லாவோர்ட்சு
விடை : தாவோவியம்
4. _________ லாவோர்ட்சு
விடை : சீனமொழிக் கவிஞர்
5. அழகிய பானையானாலும் _________ பயன்படுகிறது.
விடை : வெற்றிடமே
6. இல்லை என்பது _________ வரையறை செய்கிறது.
விடை : வடிவத்தை
7. லாவோர்ட்சு சீனாவில் பொ.ஆ.மு ________ நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்.
விடை : இரண்டாம்
8. ________ லாவோர்ட்சுவின் சம காலத்தவர்.
விடை : கன்பூசியஸ்
9. ________ மையமாக வைத்துக் கன்பூசியஸ் சிந்தித்தார்.
விடை : ஒழுக்கத்தை
10. தாவோ தே ஜிங் கவிதையை ________ மொழிபெயர்த்துள்ளார்
விடை : சி.மணி
II. குறு வினா
1. வாழ்க்கை என்பது யாது?
இருப்பதும் இல்லாதிருப்பதும் ஆகிய இரண்டு நிலைகளுக்குள் உள்ளடங்கியது வாழ்க்கை.
2. வாழ்க்கையின் உருவத்தை வரைந்து எது?
ஒன்றைப் பிடித்த பிடியை விட்டுப் பிறிதொன்றை எட்டிப் பிடிக்கும் முன்னே ஏற்படும் வெற்றிட அனுபவங்களே வாழ்க்கையின் உருவத்தை வரைந்து வைத்து விடுகின்றன.
3. எதனை சீனக்கவிஞர் லாவோட்சு மறுக்கிறார்.
உண்டு, இல்லை என்ற சிந்தனைகளுக்கிடையே உண்டு என்பதையே பயனுள்ளதாகக் கருதுவதைச் சீனக்கவிஞர் லாவோட்சு மறுக்கிறார்.
4. வெற்றிடம் பயன்டும் பொருட்கள் என தாவோ ஜிங் கூறும் பொருட்கள் யாவை?
சக்கரம், சன்னல், பானை, சுவர்
5. தாவோவியம் எதைக் கூறுகின்றார்?
வாழ்க்கையை வாழ்வதன் மூலம் தான் யார் என்பதை அறிந்து கொள்ளுதல், வாழ்க்கையின் போக்கோடு செல்லுதல் ஆகிய அடிப்படைகளைத் தாவோவியம் கூறுகின்றது.
III. சிறு வினா
1. வெற்றிடமே பயன்படுகிறது என்பதை தாவோ தே ஜிங் எவ்வாறு விளக்கிறது?
சக்கரம் பல ஆரங்களை கொண்டது. வெற்றிடத்தை நடுவே வைத்து சுழல்கிறது. அழகிய பானையே ஆனாலும் வெற்றிடமே பயன்படுகிறது. சன்னலும், கதவும் கூட வெற்றிடமே. அதுவே நமக்கும் பயன்பாடு. சுவர்களுக்கு இடையே உள்ள வெற்றிடமே அறையாக பயன்படுகின்றது. உருப்பொருள் உண்மையாலும் வெற்றிடமே பயனாகின்றது. வெற்றிடம் பயன்படுகின்ற போது நாம் வெற்றி பெறத் தடையில்லை. என்று தாவோ தே ஜிங் விளக்குகின்றார். |
2. இன்மை என்று எதையும் புறக்கணிக்க வேணடாம் என்பதற்குரிய விளக்கத்தினை கூறுக
இல்லை என்பது வடிவத்தை வரையறை செய்கிறது. குடம் செய்ய மண் உண்டு. குடத்திற்குள்ளே வெற்றிடம் என்பது இல்லை. இந்த உண்டும் இல்லையும் சேர்வதால் தான் குடத்தில் நீரை நிரப்ப முடியும் வெற்றிடம் இல்லாத குடத்தில் நீரை நிரப்ப முடியாது. இவை முரண்களாக தெரிந்தாலும் இவை முரண்களல்ல. அதை வலியுறுத்தவே இன்மையால்தான் நாம் பயனடைகிறோம் என்றார் கவிஞர். ஆரங்களை விட நடுவிலுள்ள வெற்றிடமே சக்கரம் சுழல உதவுகிறது. குடத்து ஓட்டினைவிட உள்ளே இருக்கும் வெற்றிடமே பயன்படுகிறது. சுவர்களை விட வெற்றிடமாக இருக்கும் இடமே பயன்படுகிறது. ஆகவே “இன்மை” என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பதற்குரிய விளக்கம் ஆகும். |
தாவோ தே ஜிங் – பாடல் வரிகள்
ஆரக்கால் முப்பதும் சக்கரத்தின் மையத்தில் இணைகின்றன; ஆனால், சக்கரத்தின் பயன் அதன் காலிப் பகுதியால் கிடைக்கிறது. பாண்டம் பாண்டமாகக் களிமண் வனையப்படுகிறது; ஆனால், பாண்டத்தின் பயன் அதன் காலிப் பகுதியால் கிடைக்கிறது. வீட்டுச் சுவர்களில் வாயிலுக்காகவும் சன்னலுக்காவும் வெற்றுவெளியை விடுகிறோம்; ஆனால், வாயிலும் சன்ன லும் வெற்றுவெளி என்பதால் பயன்ப டுகின்றன. எனவே, ஒரு பக்கம் இருத்தலின் பலன் கிடைக்கிறது; இன்னொரு பக்கம் இருத்தலின்மையைப் பயன்படுத்திக்கொள்கிறோம். |
சில பயனுள்ள பக்கங்கள்