பாடம் 3.2. அக்கறை
நூல்வெளி
கல்யாண்ஜியன் இயற்பெயர் கல்யாணசுந்தரம். சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனத் தொடர்ந்து எழுதி வருபவர். வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்பு செய்து வருகிறார். புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியன இவரின் கவிதை படைப்புகள். இவர் எழுதிய கட்டுரை தொகுப்பு “அகமும் புறமும்” என்பதாகும். பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு “சில இறகுகள் சில பறவைகள்” என்ற பெயரில் வெளியானது. கலைக்க முடியாத ஒப்பனை. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது போன்றவை இவர் எழுதிய சிறுகதை தொகுப்பு ஆகும் ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்காக 2016-ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசினை பெற்றார். |
ஹைக்கூ கவிதைகள்
இந்தக் கோட்டில் எந்த மூஙகில் புல்லாங்குழல்? – அமுதோன் |
பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள் – நh. முத்துக்குமார் |
வெட்டுக்கிளியின் சப்தத்தில் மலையின் மெளனம் ஒரு கணம் அசைந்து திரும்புகிறது. – ஜப்பானியக் கவிஞர் பாஷோ |
I. இலக்கணக் குறிப்பு
- உருண்டது – ஒன்றன் பால் வினைமுற்று
- போனது – ஒன்றன் பால் வினைமுற்று
- சரிந்தது – வினையெச்சம்
- அனவரும் – முற்றுமை
II. பகுபத உறுப்பிலக்கணம்
சரிந்து – சரி + த்(ந்) + த் + உ
- சரி – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால் இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
III. பலவுள் தெரிக
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்?
- ஒரு சிறு இசை
- முன்பின்
- அந்நியமற்ற நதி
- உயரப் பறத்தல்
விடை :ஒரு சிறு இசை
I. சிறு வினா
1. பழங்களை விடவும் நசுங்கிப் பாேனது – இடம் சுட்டிப் பாெருள் விளக்குக தருக.
கல்யான்ஜியின் “அக்கறை” என்னும் கவிதைத் தலைப்பில் இவ்வரிகள் இடம் பெற்றுள்ளது. விளக்கம் மிதி வண்டியில் இருந்து விழந்த தக்காளிகள் சாலையில் விழந்து நசுங்கின. அங்குப் போவோர் வருவோர் தலைக்கு மேல் வேலை இருப்பதாய் செல்வதைப் பார்க்கையில் பழங்களை விடவும் நசுங்கிப் போனது எது மற்ற மனிதர்கள் மீது அக்கைற இல்லாததால் தான் என்கிறார் கல்யாண்ஜி |
2. மணல் விளையாட்டு என்னும் தலைப்பில் சிறு கவிதை படைக்க.
மண்ணில் பிறந்தோம் மண்ணில் தவழ்ந்தோம் மண்ணில் நடந்தோம் அதானல் தானோ என்னவோ விளையாட்டையும் கூட மண்ணில் தொடங்கினோம் மதங்களை மறந்து மனிதநேயத்தோடு இறை இல்லங்களை கட்டினோம் சாதிப்புயல் அதை சூறையாடிவிட்டது |
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. கல்யாண்ஜியன் இயற்பெயர் ____________
விடை : கல்யாணசுந்தரம்.
2. ____________ என்ற சிறுகதை தொகுப்பிற்காக சாகித்திய அகாதெமி பரிசினை பெற்றார்.
விடை : ஒரு சிறு இசை
3. கல்யாண்ஜி ____________ -ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசினை பெற்றார்.
விடை : 2016
4. புதுக்கவிதைகள் ____________ வலியுறுத்துவனவாக இருக்கின்றன.
விடை : மனித நேயத்தை
5. வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்பு செய்து வருபவர் ____________.
விடை : கல்யாண்ஜி
6. கல்யாண்ஜி எழுதிய கட்டுரைத் தொகுப்பு ____________.
விடை : அகமும் புறமும்
7. கல்யாண்ஜியின் பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு ____________ என்ற பெயரில் வெளியானது.
விடை : சில இறகுகள் சில பறவைகள்
II. குறு வினா
1. புதுக்கவிதைகள் என்பது யாது?
உரைநடையில் கவிதை எழுதுவதைப் பாரதி தம் வசன கவிதைகளின் வழியாகத் தொடங்கினார். அவற்றின் தொடர்ச்சியான கவிதைகளே புதுக்கவிதைகள்.
2. புதுக்கவிதைகள் எதனை வலியுறுத்துவனவாக இருக்கின்றன?
புதுக்கவிதைகள் மனித நேயத்தை வலியுறுத்துவனவாக இருக்கின்றன
3. எதன் வாயிலாகக் கவிஞர் பலர் பல படிநிலைகளில் மனிதம் நசுங்கிவிடக் கூடாது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்?
மனிதம் நசுங்கிவிடக்கூடாது என்பதைப் புதுக்கவிதைகளின் வாயிலாகக் கவிஞர் பலர் பல படிநிலைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
4. கல்யாண்ஜி எழுதிய கவிதை நூல்கள் எவை?
- புலரி
- முன்பின்
- ஆதி
- அந்நியமற்ற நதி
- மணல் உள்ள ஆறு
5. கல்யாண்ஜி எழுதிய கட்டுரை தொகுப்பு எது?
கல்யாண்ஜி எழுதிய கட்டுரை தொகுப்பு “அகமும் புறமும்” என்பதாகும்.
6. கல்யாண்ஜி எழுதிய சிறு கதை தொகுப்பு எது?
- கலைக்க முடியாத ஒப்பனை
- தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
- உயரப் பறத்தல்
- ஒளியிலே தெரிவது
7. எந்த சிறுகதை தொகுப்பிற்காக கல்யாண்ஜிக்கு சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது?
ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்காக கல்யாண்ஜிக்கு சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது.
8. கல்யாண்ஜிக்கு எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது?
கல்யாண்ஜிக்கு 2016-ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது.
அக்கறை – பாடல் வரிகள்
சைக்கிளில் வந்த தக்காளிக் கூடை சரிந்து முக்கால் சிவப்பில் உருண்டது அனைத்துத் திசைகளிலும் பழங்கள் தலைக்கு மேலே வேலை இருப்பதாய்க் கடந்தும் நடந்தும் அனைவரும் போயினர் பழங்களை விடவும் நசுங்கிப் போனது அடுத்த மனிதர்கள் மீதான அக்கறை |
சில பயனுள்ள பக்கங்கள்